Wednesday, July 31, 2024

டெ--டௌ


 

ட--டு


 

Tuesday, July 30, 2024

ஞ--ஞௌ


 

சை சொ சோ சௌ


 

Monday, July 29, 2024

சு சூ செ சே


 

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


சிக்கலற்ற வாழ்க்கை மகிழ்ச்சியல்ல! சூழலின்

சிக்கலைக் கையாளும் ஆற்றலே வாழ்வாகும்! 

அத்தன்மை கொண்டதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

Rajkumar Birthday


 மருமகன் திரு. ராஜ்குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத்திருநாள்: 29.07.24

அகவை: 53/54


ஐம்பத்து மூன்றை நிறைவுசெய்து இன்றிங்கே

ஐம்பத்து நாலில் அடியெடுத்து வைக்கின்றாய்!

அன்பான நல்ல குடும்பத்தார் சூழ்ந்திருக்க

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.


இவண்

பாபா மாமா

வசந்தா அத்தை

குடும்பத்தார்


ச சா சி சீ


 

Sunday, July 28, 2024

ங முதல் ஙௌ முடிய


 

கொ கோ கௌ


 

Saturday, July 27, 2024

கெ கே கை


 

கீ குகூ


 

கா. கி


 

க கல்வி


 

Friday, July 26, 2024

ஓ ஔ


 

ஐ ஒ


 

Thursday, July 25, 2024

ஏ ஏற்றம்


 

எ எளிமை


 

Wednesday, July 24, 2024

ஊ ஊக்கம்


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உடைமைகள் வாழ்க்கை எளிமைதான் இங்கே!
அவற்றையோ மேலும் எளிதாக்க உங்கள்
மனதிலே தோன்றுகின்ற எண்ணம் உதவும்!
அதனையோ மேலுமிங்கே சிக்கலாக்க வேண்டாம்!
எளிதாக சாதித்தல் நன்று.

மதுரை பாபாராஜ்

Tuesday, July 23, 2024

அ அறவழி


 

உ உழவு


 

நண்பர் சேது மாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


விண்ணில் இதயத்தை வண்ணத்துப் பூச்சிகள்

அன்பின் அடையாள மாக எடுத்துவரும்

கண்கொள்ளாக் காட்சியைத் தூதனுப்பி நல்லிர 

வென்றேதான் நண்பரோ சொல்கின்றார்! வாழ்த்துகிறேன்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

ஈகை


 

Monday, July 22, 2024

இன்சொல்


 

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நிலவின் நிழலோ குளத்தில் தெரிய

மலர்களோ சூழ்ந்தே ரசிக்க இரண்டு

கரைகளில் நிற்கும் மரங்களோ பார்க்க

இரவின் அழகினைப் பார்.


மதுரை பாபாராஜ்

ஆற்றலைக் காட்டு!


 

நண்பர். எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்களது தேவையுடன் உங்கள் செயல்களோ
ஒத்துப்போ னால்தான் இலக்கை குறிக்கோளைப்
பற்றிக் கவலையின்றி நம்செயலை மேற்கொள்ள
வெற்றி முயற்சிகளைச் செய்வோம்! அவைகள்தான்
நம்முடைய தேவை உணர்.

மதுரை பாபாராஜ்

நிம்மதிக்குத் தூது


 

Sunday, July 21, 2024

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


கண்ணாடி யால்செய்த ஓடத்தில் பூங்கொத்தை

நண்பர் அனுப்பினார்! அன்புடன் வாழ்த்துகிறேன்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

மிடுக்கெல்லாம் போகும்


 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

மிடுக்கெல்லாம் போகும்!


திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு

தடையின்றிப் போனால் உடையும் நகையும்

உடலுக்(கு) அழகாகும்! நோய்வந்து மொய்த்தே

தடைகளை ஏற்படுத்தி விட்டால் படுத்த

படுக்கையில் மெய்மறப்போம் நாளும் துடித்து!

மிடுக்கெல்லாம் போகும் துவண்டு.


மதுரை பாபாராஜ்

வஞ்சகரை ஒதுக்கு

 வஞ்சகரை ஒதுக்கு!

கூட இருந்தே குழிபறிக்கும் வஞ்சகரின்

வேடம் கலைந்திடும் போது அவமானம்

நாடறிய வாழ்வில் தலைகுனிந்தே வாழ்ந்திருப்பார்!

தூபமிடும் நட்பை ஒதுக்கு.

மதுரை பாபாராஜ்


பிரசாந்த் மருத்துவமனை

 info@prashanthhospitals.org

பிரசாந்த் மருத்துவ மனை! வேளச்சேரி


PRASHANTH HOSPITALS,VELACHERY

DR ANANTHA KRISHNAN TEAM


மருத்துவர்கள்- செவிலியர்கள்- ஊழியர்கள்- துப்புரவுத் தொழிலாளர்கள் குழுவினர்!

அறை எண்:1015A -- B.வசந்தா

பல்வேறு ஊர்களைச் சார்ந்தவர்கள் எல்லோரும்

பல்வகை நோயைக் குணமாக்கும் தொண்டிலே

நல்ல மருத்துவக் கூடத்தில் சேர்கின்றார்!

வல்லமையோ(டு) ஆற்றலைக் காட்டுகின்றார்  வாழ்த்துகின்றோம்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


குழுஉணர்வு மற்றும் கடமை உணர்வால்

நலம்பெற வைப்பதை வாழ்த்து.


சிரித்த முகமும் சினங்கொள்ளாப் பண்பும்

மனிதநேயப் பண்புகளாம்! அத்தகைய பண்பைக்

கனிவுடன் அன்பையும் சேர்த்தேதான் நோயைக்

குணப்படுத்து கின்றார்கள் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

21.07.24

Saturday, July 20, 2024

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!

இருள்சூழ்ந்த வானில் ஒளியோ  சிறிதாய்த்

தெரிந்திருக்க ஒற்றை மலரோ நிலத்தில்

சிரித்திருக்க நல்லிரவை நட்புடன் அன்பாய்த்

தெளிக்கின்ற நண்பரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Friday, July 19, 2024

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!

அழகோ அழகு!

மலையழகும் மேக அழகும் இயற்கைக்

கலையழகும் சூழ்ந்திருக்கும்  வீடு நடுவில்!

மழையிலே பாதை நனைந்த அழகும்!

மலைக்கவைக்கும் பேரழகு! செப்பு.


மதுரை பாபாராஜ்

நண்பர் பென்னர் மாரிசாமி


 

Thursday, July 18, 2024

பிடிவாதம் நல்லதல்ல


 

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!

GOOD NIGHT!

மொட்டுகள் சூழ்ந்திருக்க வண்ணத்துப் பூச்சிகள்

பட்டொளி வீசிப் பறந்திருக்கும் காட்சியை

நண்பர் அனுப்பியதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

தலைகீழ் மாற்றம்


 

Wednesday, July 17, 2024

கண்ணோட்டம் பொருளோட்டம்


 

Tuesday, July 16, 2024

சோர்வு

 சோர்வு!


உளைச்சலின் உச்சம் விரக்தி! விரக்தி

நிலைத்தால் மனத்திலே ஏக்கம்! இரண்டும்

கலைய மறுத்தால் இருள்மயமே வாழ்க்கை!

மலைப்பிலே தள்ளாடும் சோர்ந்து.


மதுரை பாபாராஜ்

Sunday, July 14, 2024

நண்பர் BSNL இராமசாமி-- ஞாயிறு


 நண்பர் BSNL இராமசாமி அனுப்பியதற்குக் கவிதை!

ஞாயிறு!

அமைதியான மற்றும் மகிழ்ச்சியான நாளாய்

அமையட்டும் ஞாயிறென்றே வாழ்த்துகின்ற நண்பர்

தமிழ்போல வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

மனைவி வசந்தா

 மனைவி வசந்தா சாப்பிடுவாளா?


சாப்டியா? சாப்டியா? என்றேதான் அன்புடன்

கேட்கின்ற பண்புடைய இல்லாள் வசந்தாவோ

சாப்பிட்டால் தொண்டை  குமட்டுகின்ற காரணத்தால் 

சாப்பிடவே ஏலாமல் இங்கே படுத்துவிட்டாள்!

சாப்பிட வைக்கப் படாதபாடு எங்களுக்கு!

ஏக்கமுடன் பார்க்கிறேன் நான்.


மதுரை பாபாராஜ்

விருந்தோம்பல் குறள் 90


 

முயற்சியே நம்பிக்கை


 

Saturday, July 13, 2024

நண்பர் மொகலீஸ்வரன்


 நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பியதற்குக் கவிதை!


அழகான வீட்டை அனைவருக்கும் கட்டும்

மனமிருக்கும்! கட்டப் பணமிருக்கும்! ஆனால்

அழகாக வாழ்கின்ற பண்போ உலகில்

சிலரிடம்தான் உள்ள துணர்.


மதுரை பாபாராஜ்

குடிசை-- கோலம்-- மகிழ்ச்சி


 

நண்பர் BSNL இராமசாமி-- சனி


 நண்பர் BSNL இராமசாமி அனுப்பியதற்குக் கவிதை!

சனிக்கிழமை!

நாளின் கலைநயத்தைப் பார்த்து ரசியுங்கள்! 

உங்கள் மனது மகிழ்ச்சியின் மெல்லிசையில்

ஒன்றி நடனமாடி வாழ்வைச் சுவைக்கட்டும்!

பண்களை மீட்டப் பழகு.

மதுரை பாபாராஜ்

Friday, July 12, 2024

நண்பர் தம்பா காரைக்குடி

 வணக்கம் தம்பா! வாழ்த்துகிறேன்!


சிகிச்சை முடிந்து நலமுடன் தம்பா

புலனத்தில் காலை வணக்கத்தைக் கூறும்

உளங்கனிந்த நட்பினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


அன்பு! அறம்மட்டும் என்பதல்ல! வாழ்க்கையின்
நன்னெறி காட்டும் வழிமுறையாம்!
உள்ளத்தில்
என்றும் மகிழ்ச்சியைத் தேடும் பெருநெறியாம்!
அன்பை அதிகமாகத் தந்தால் அமைதியும்
நன்மகிழ்வும் வாழ்விலே உண்டு.

மதுரை பாபாராஜ்

Thursday, July 11, 2024

நண்பர் மொகலீஸ்வரன்



 நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பியதற்குக் கவிதை!


முழுநிறைவைக் காட்டிலும் நம்பிக்கை என்றும்

சிறந்தது!  இங்கே நிறைவோ செயலில்

சிறந்ததாகும்! நம்பிக்கை என்றால் குறைகள்

நிறைந்திருக்கும் சூழலை எப்படி இங்கே

முறையாகக் கையாள்த லாம்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வொரு நாளும் எதனையோ செய்வதால்
உள்ளம் மகிழும்! அதுவே பலமடங்காய்ப்
பல்கிப் பெருகுமிங்கே நல்லதைச் செய்திருந்தால்!
நல்லதைச் செய்வோம் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

எப்படியும் வாழவேண்டும்


 

Wednesday, July 10, 2024

நண்பர் BSNL இராமசாமி--வியாழன்


கைவண்ணம் நண்பர் 
தென்காசி கிருஷ்ணன்

 நண்பர் BSNL இராமசாமி அனுப்பியதற்குக் கவிதை!

வியாழன்!

மகிழ்ச்சியான நாளாய் வியாழன் மலர்ந்தே

அகங்குளிர வைக்கட்டும் என்றேதான்  நட்பை

மகத்தாய் வெளிப்படுத்தும் நண்பரை வாழ்த்து!

அகநக நட்பதே நட்பு.


மதுரை பாபாராஜ்