Monday, July 31, 2023

பெற்றோர்



 பெற்றோர்க்கு நிகர் பெற்றோரே!


அம்மா அப்பா தெய்வங்கள்!

அகத்தில் வைத்தே வணங்கிடுவோம்!


பிள்ளை களுக்கு பாதுகாப்பு

பெற்றோர் தவிர யாருள்ளார்?


உழைப்பை இங்கே திரியாக்கி

உடலை நாளும் உருக்கிடுவார்!


கண்ணை இமைபோல் காத்திடுவார்!

அன்பை மழைபோல் பொழிந்திடுவார்!


எதிர்பார்ப் புகளோ எதுவுமின்றி

குழந்தை களுக்குத் தந்திடுவார்!


படிப்பு பட்டம் வாங்கிடவே

பலவழி யாக முயன்றிடுவார்!


சமுதா யத்தின் அரங்கினிலே

முன்னணி யாக நிறுத்திடுவார்!


குழந்தைகள் நாளும் பெற்றோர்க்கு

நற்பெயர் வாங்கித் தரவேண்டும்!


நன்றி உணர்வைக் குழந்தைகள்

காட்டினால் வாழ்வில் உயர்ந்திடலாம்!


மதுரை பாபாராஜ்

நந்தியா வட்டை பூ


ஐயா துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படம்!

நந்தியா வட்டை பூ!

WAX FLOWER!

கண்களுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்தேதான்

கண்கள் சிவந்தால் குணப்படுத்தும்! பார்ப்பதற்கு

இந்த மலர்கள் சிறிதெனினும் ஆற்றலில்

என்றும் பெரிதே உணர்.

மதுரை பாபாராஜ்

 

தீதும் நன்றும் பிறர்தர வாரா!


தீதும் நன்றும் பிறர்தர வாரா!


எல்லோரும் நல்லவரே! சூழ்நிலைக் கைதியாக

நல்லவர் கெட்டவராய் கெட்டவர் நல்லவராய்

இவ்வுலகில் காணப் படுவார்! இயல்புதான்!

நல்லவரை கெட்டவரைப் பண்புகள் காட்டிவிடும்!

நல்லவரை ஏற்ப தறிவு.


மதுரை பாபாராஜ்

 

SBOA SCHOOLS ANNUAL DAY


SBOA SCHOOLS 


44 the Annual day celebration!


வாழ்த்துகள் கார்த்திக்!


மதுரை 04.08.23


தான்படித்த பள்ளியின் ஆண்டுவிழா நாளிலே

தானே தலைமை விருந்தினராய் கார்த்திக்தான்

ஆர்வமுடன் இங்கே கலந்துகொள்ளும் வாய்ப்பேற்றார்!

பார்போற்ற வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

Labels:

மீளாத்துயில்



அம்மாவும் அப்பாவும் மீளாத் துயிலில்!

நினைவேந்தல் பாடல்!

அம்மா அப்பா தூங்குங்க

நிம்மதி யாக தூங்குங்க

வாழ்க்கை முழுதும் போராட்டம்

பட்டது போதும் தூங்குங்க

இல்லற வாழ்க்கை உலகத்தில்

தந்தது ஏற்றத் தாழ்வுகளை

சுமந்தது போதும் தூங்குங்க

அலைந்தது போதும் தூங்குங்க

அன்பு வம்பு துக்கங்கள்

வஞ்சகம் துரோகம் ஏளனங்கள்

எல்லாம் மறந்தே தூங்குங்க

வாழ்வைத் துறந்தே தூங்குங்க

உறவுகள் தந்த இன்பங்கள்

அவர்களே தந்த துன்பங்கள்

நண்பர்கள் தந்த அரவணைப்பு

அவர்கள் தந்த விரிசல்கள்

பிள்ளைகள் தந்த மகிழ்ச்சிகளை

பிள்ளைகள் தந்த வேதனையை

எல்லாம் மறந்தே தூங்குங்க

நொந்ததை மறந்தே தூங்குங்க

எடுத்த பிறவியை முடிச்சாச்சு

கடமை மூச்சும் போயாச்சு

அம்மா அப்பா தூங்குங்க

நிம்மதி யாக தூங்குங்க

மதுரை பாபாராஜ்


Sunday, July 30, 2023

Education is beauty


 ENGLISH TRANSLATION 05.07.23


ஆண்டு 30.01.2008 


படிப்பே அழகு!


EDUCATION IS BEAUTY!


ON THE LAP OF THE DAWN

EAST SIDE SUN IS BEAUTY!


ON THE CLOSE OF EYES OF DUSK

WEST SIDE MOON IS BEAUTY!


Yield is beauty for farming,

temple is beauty for village".


FOR A CHILD, LISP IS BEAUTY!

FOR A TANK, WATER IS BEAUTY!


PEAKS BRING BEAUTY TO THE MOUNTAIN!

DECIPLINE BRINGS BEAUTY TO THE MAN!


BEAUTY OF ART IS SKILL AND

BEAUTY IF VISION IS EYE!


FOR A MOON, WAXING IS BEAUTY!

FOR THOUGHTS, PURITY IS BEAUTY!


FOR FRUITS, TASTE IS BEAUTY!

FOR OUR LIFE, EDUCATION IS BEAUTY!


MADURAI BABARAJ

சிறகொடிந்த புள்


சிறகொடிந்த புள்!


உறவுகள் கூடி மகிழ்ந்திருந்த காலம்

குறைகளச் சொல்லியே புண்படுத்தி வாழ்ந்தோம்!

பறவைக ளாகப் பறந்தனர் தங்கள்

கடமைக ளாற்ற திசைகளை நோக்கி!

உறவுகளைப் பார்க்க எதிர்பார்க்கும் ஏக்கம்

சிறகடிக்க வாழும் தனிமையில் வாழ்வு!

சிறகொடிந்து போய்விட்ட புள்.


மதுரை பாபாராஜ்

 

ஒருவிழி பாதிப்பு


ஒருவிழி பாதிப்பு!


இருவிழிகள் நன்றாக உள்ளன என்றே

பெருமிதம் கொண்டே அலைந்திருந்தேன் வாழ்வில்!

கருங்கல் எறிந்தார் ஒருவிழி மீது

விழுந்ததும் நானோ கலங்கிநின்றேன்! அந்தோ!

ஒருவிழி தன்னில் அரைகுறைப் பார்வை!

விரக்தியில் என்னுடைய வாழ்வு


மதுரை பாபாராஜ்

 

மகள் சுபாரவியின் கைவண்ணம்



 மகள் சுபா ரவி எனக்குச் சிகை திருத்தும்  அழகு!


கொரோனா மிரட்டிய காலத்தில் வீட்டில்

அருமையாய் கத்தரிக்கோல் சீப்பால் சிகையைத்

திருத்தம் அழகாகச் செய்யும் மகள்தான்!

உருகவைக்கும் அன்பே இது.


மதுரை பாபாராஜ்

என்னடா வாழ்க்கை?

 என்னடா வாழ்க்கை?


உளைச்சலின் உச்சகட்டம்! வாழ்வை வெறுக்கும்

நிலையிலே வாழ்கின்றோம்! என்னடா வாழ்க்கை?

தலையிலே பாறாங்கல்! கால்களிலே கட்டு!

அழுவதற்கும் தெம்பில்லை யே.


மதுரை பாபாராஜ்


Saturday, July 29, 2023

உப்பு


அளவு மிஞ்சினால்!


உப்பின் அளவு உணவிலே சேர்ப்பதற்குச்

சற்று குறைந்தாலும் இல்லை மிகுந்தாலும்

அந்த உணவினை உண்ண முகஞ்சுழிப்போம்!

எந்தப் பழக்கமும் நாளும் அளவுகளை

மிஞ்சினால் எப்போதும் கேடு.


மதுரை பாபாராஜ்


 

மனிதநேயம்


 மனிதநேயம்!


சொந்தவீட்டை விட்டுவிட்டு நாலுவீட்டில் வேலைபார்க்க

பெண்கள்தான் காலையில் செல்கின்ற காட்சிகள்!

ஒன்று வருமானம் மற்றொன்று நேயமுடன்

இங்கே உதவிகளைச் செய்வதற்கு! வீடுகளில்

பிள்ளைகள் பள்ளிக்கும் நாளும் இணையர்கள்

உள்ளம் உளைச்சலின்றி வேலைக்கும் செல்வதற்கு!

பெண்கள் குடும்பம் அனுசரிக்கும் காரணத்தால்

இப்படி வாழ்கின்றோம் இங்கு.


மதுரை பாபாராஜ்

மருமகன் ராஜ்குமார் பிறந்தநாள்



 அகவை 3ல் எங்களுடன் சிவகங்கையில் இருந்து மதுரை வந்தவர் மருமகன் ராஜ்குமார் பிறந்தநாள்  இன்று!


அகவை 52/53. நாள் 29.97.23


சிவகங்கைச் சீமை நகரிருந்து ராஜா

மழலைச் சிறுவனாக எங்களுடன் வந்தான்!

மதுரை நகரிலே வாழ்க்கைத் தொடர

தமக்கை குடும்பமோ அத்தான் அலுவல்

இடப்பெயர்ச்சி காண மதுரைக்கே வந்தார்!

கடமை படிப்புதான் வாழ்வு.


வளம்பல பெற்றே நலமுடன் வாழ்க!

அழகான இல்லறத்தில் அன்புடன் வாழ்க!

மனைவி மகனுடன் பெற்றோரின் ஆசி

மனதில் மகிழ்ச்சியுடன் வாழ்கபல் லாண்டு!

இணக்கமுடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

அலைபாயாதே


அலைபாயாதே!


படிக்கும் பருவத்தில் நன்கு படித்தால்

படித்தபின் வாழ்க்கைதான் நன்றாய் அமையும்!

படிக்கின்ற காலம் அலைபாய்ந்து வாழ்ந்தால்

படிப்பும்பாழ்! வாழ்க்கையும் பாழ்.


மதுரை பாபாராஜ்

 

ஒதுக்கு; ஒதுங்கு



 ஒதுக்கு! ஒதுங்கு!


தானாக வந்துசேரும் வம்புண்டு வாழ்விலே!

வேண்டுமென்றே நாமாக கொண்டுவரும் வம்புமுண்டு!

தானாக வந்தாலும் நாம்கொண்டு வந்தாலும்

நாமென்றும் வம்பை ஒதுக்கித்தான் வாழவேண்டும்!

நாம்தான் பொறுப்பு! உணர்.


மதுரை பாபாராஜ்

உனக்கு நான்; எனக்கு நீ!


உனக்கு நான்! எனக்கு நீ!


உனக்குநான் என்றும் எனக்குநீ என்றும்

தனிமை அரவணைக்க வாழும் இணையர்

முதுமைப் பருவத்தில் காண்கின்ற கோலம்!

இனிமை, கசப்பு கலந்த நிலைதான்!

மனைதோறும் இக்காட்சி உண்டு.


மதுரை பாபாராஜ்

 

Friday, July 28, 2023

பேத்தி நான்சியை வாழ்த்து


பேத்தி நான்சியை வாழ்த்து!


அன்னையின் அன்புக் கரங்களில் தேன்மழலை!

கொஞ்சி மகிழ்கின்ற ஓவியத்தைத் தீட்டிய

பண்புமகள் நான்சியை வாழ்த்து.


பாபா தாத்தா

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

எதையும் நினைத்துக் கவலைகள் வேண்டாம்!
அவைகளைத் திட்ட செயல்முறைக் கேற்ற
தரவுகளாய் எண்ணிச் செயல்படுங்கள்!  உங்கள்
இலக்குநோக்கி நாளும் செயல்பட வேண்டும்!
செயல்களில் ஆற்றலைக் காட்டு.

மதுரை பாபாராஜ்
 

Thursday, July 27, 2023

தாத்தாவும் பேரன்களும்


தாத்தாவும் பேரன்களும்!


பேரன்கள் தாத்தாவைப் பேசினாலும், தாத்தாவும்

பேரனைப் பேசினாலும், கோபம் மறைந்துவிடும்!

பேரன்கள் தாத்தாவைப் பாசமுடன் பார்ப்பார்கள்!

பேரனைத் தாத்தாவும் அன்பாகப் பார்த்திருப்பார்!

வீடுகளில் நாளும் நடப்பதுதான்! வாழ்வென்னும்

ஊடகத்தின் காட்சிகளைப் பார்.


மதுரை பாபாராஜ்


 

ஏளனமாகப் பேசாதே


ஏழைகளை ஏளனமாய்ப் பேசாதே!


ஏழைகள் என்பதற் காக எடுத்தெறிந்தே

ஏளனமாய்ப் பேசாதே! செல்வந்தர் என்றேதான்

வானளவு போற்றாதே! தேவைக்கே அல்லாடும்

ஏழைகளில் பண்பாளர் உண்டிங்கே! செல்வங்கள்

போதாது என்றேதான் பண்பிழந்த செல்வந்தர்

பாரிலே உண்டிங்கே பார்.


மதுரை பாபாராஜ்

 

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்!


வானொலிப் பூக்களோ ஊதா நிறத்திலே

தேனிசையாய் காலை வணக்கத்தைப் பாடுதம்மா!

பாவாலே நண்பரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

இதுதான் வள்ளுவர் குடும்பம்


இதுதான் வள்ளுவர் குரல் குடும்பம்!

INSPIRATION FROM CR

அறநெறி போற்றிக் குறள்நெறியில் வாழ்வோர்
அறநெறி போற்றியே ஆத்திகத்தில் வாழ்வோர்
அறநெறி போற்றியே நாத்திகத்தில்
வாழ்வோர்
நிறைந்ததே வள்ளுவர் கூட்டுக் குடும்பம்!
குறள்நெறி போற்றினால் வாழ்வு.

மதுரை பாபாராஜ்
 

மேனாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ஐயா நினைவுநாள்



மேனாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ஐயா அவர்களுன் நினைவுநாள் இன்று!


27.07.23


மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அய்யா அவர்கள் நான் அனுப்பிய கவிதை நூல்களை வாழ்த்தி மடல் அனுப்பிய பண்பை மறக்க முடியுமா?.நான்கு மடல்களாவது வந்திருக்கும்.காலஞ்சென்ற பண்பாளர் வி.என்.சிதம்பரம் அய்யா மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களை சென்னை விமான நிலையத்தில் தன் பெரிய மகன் விஎன்.சிடி வள்ளியப்பனுடன்

சந்திக்கச் சென்றார்.என்னையும் அழைத்துச் சென்றார்.அப்பொழுது எனது புத்தகங்களை கொடுத்தேன்.மாண்புமிகு அப்துல் கலாம் அவர்கள்"கவிஞரா" என்று அழைத்ததை மனதில் நினைத்துப் பார்க்கின்றேன்.


மதுரை பாபாராஜ்

 

தனிமையும் கூட்டமும்


தனிமையும் கூட்டமும்!


பள்ளிக்கும் வேலைக்கும் சென்றபின்பு பாட்டிதாத்தா

எல்லைக்குள் வாழ்வார் தனிமையில்! மாலையில்

பள்ளிவிட்டு வீட்டுக்குப் பிள்ளைகள் வந்திடுவார்!

தங்கள் அலுவல்கள் தம்மை முடித்துவிட்டு

எல்லோரும்  வந்திடுவார் வீட்டுக்குள் இன்பமாக!

இப்படித்தான் வாழ்வில் தனிமையும் கூட்டமும்

அங்கங்கே மாறிவரும் காண்.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, July 26, 2023

மனநிலை


உதவிகளில் மனநிலை!


கேட்காமல் செய்யும் உதவி நெகிழ்ச்சிதான்!

கேட்டதும் செய்யும் உதவி மகிழ்ச்சிதான்!

கேட்டாலும் செய்யவில்லை என்றால் உளைச்சல்தான்!

கேட்பவரின் செய்பவரின் பண்பு.


மதுரை பாபாராஜ்

 

தாத்தா பேரன் நிகில்



 தாத்தாவும் பேரனும் ஆர்வமுடன் பார்க்கின்றார்!

பாசமுடன் தாத்தாவோ பக்கத்தில் உட்கார்ந்து

நேசமுடன் பேரன் நிகிலுடன் ஆசையாய்ப் 

பார்க்கிறார் என்னவென்று தான்.


மதுரை பாபாராஜ்

சமையலர் திருமதி உஷா


சமையலர் திருமதி உஷா அவர்களின் கைவண்ணம்!


காலைப் பொழுதில் வருவார் சமையலர்!

கோலங்கள் வண்ணவண்ண மாக அழகாக

வாசலில் ஓவியம்போல் தீட்டுவார் ஆற்றலுடன்!

காணக்கண் கோடிவேண்டும் இங்கு.


மதுரை பாபாராஜ்


 

மருத்துவர் சுப திருப்பதி


 மருத்துவர் சுப திருப்பதி அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை:


சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு


பள்ளிப் படிப்பாலே ஓரளவு முன்னேற்றம்!

கல்வி உயர்கல்வி ஓரளவு முன்னேற்றம்!

கல்லூரிக் கல்வி சிகரத்தைத் தொட்டுவிட்டோம்

என்றுணர்வோம் வாழ்க்கைச் சிகரத்தைக் கண்டதும்

அம்மம்மா என்றேதான் சோர்வில் தளர்ந்திடுவோம்!

முன்னேற்றம் உண்டு உணர்.


மதுரை பாபாராஜ்

மருத்துவர் சுப திருப்பதி


மருத்துவர் சுப திருப்பதி அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை:


சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு


பள்ளிப் படிப்பாலே ஓரளவு முன்னேற்றம்!

கல்வி உயர்கல்வி ஓரளவு முன்னேற்றம்!

கல்லூரிக் கல்வி சிகரத்தைத் தொட்டுவிட்டோம்

என்றுணர்வோம் வாழ்க்கைச் சிகரத்தைக் கண்டதும்

அம்மம்மா என்றேதான் சோர்வில் தளர்ந்திடுவோம்!

முன்னேற்றம் உண்டு உணர்.


மதுரை பாபாராஜ்

 

கண்டபடி வாழாதே



 கண்டபடி வாழாதே!


கண்டதே காட்சியாக கொண்டதே கோலமாக

கண்டபடி வாழாதே! ஏளனத்தை வாங்காதே!

நன்னெறியில் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தால்தான்

என்றும் இனிதாகும் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

Tuesday, July 25, 2023

மனசாட்சி


மனசாட்சி!


மனசாட்சி காட்டுகின்ற நல்வழியில் போனால்

மனதிலே நிம்மதி காணலாம் நாம்தான்!

மனசாட்சி தேவையில்லை என்றாலோ நம்மை

மனசாட்சி என்றும் உறுத்தும் வருத்தும்!

மனசாட்சி சொல்வதைக் கேள்.


மதுரை பாபாராஜ்

 

யானைவிலை! குதிரைவிலை


யானைவிலை! குதிரைவிலை!


தக்காளி வெங்காயம் பூண்டு இவைமூன்றும் 

அப்பப்பா யானைவிலை மற்றும் குதிரைவிலை

என்றே விலையுயர்ந்த காரணத்தால்

நாள்தோறும்

மக்கள் சமையலில் சேர்க்க முடியாமல்

திண்டாடும் கோலந்தான் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்கு கவிதை!

தவறுகளில் பாடங்கள் கற்பது நன்று!
அவற்றை அடையாளம் கண்டேதான் ஏற்போம்!
கவனமுடன் கற்றதால்  முன்னேற வேண்டும்!
தவறிலே பாடம் உணர்.

மதுரை பாபாராஜ்
 

Monday, July 24, 2023

வாழ்க்கைப் பயணம்


வாழ்க்கைப் பயணம்!


வாழ்க்கைப் பயணத்தில் எங்கெங்கோ யார்யாரோ

வாழ்கின்ற சூழ்நிலைகள் ஏற்படும்!வாழ்ந்திருப்போம்!

ஊர்ப்பாசம் மற்றும் உறவினர்ப் பாசமென்றே

ஆட்டிப் படைக்கின்ற ஏக்கத்தில் வாழ்ந்திருப்போம்!

வாழ்க்கையோ இப்படித்தான் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

தோற்றப் பிழை


தோற்றப் பிழை!


பார்த்தால் அமைதியாய் உள்ள எரிமலைபோல்

நாளும் அமைதியான தோற்றத்தைக் கொண்டிருப்பார்!

சேர்ந்து நெருங்கிப் பழகினால் பின்னணியோ

சீறும் எரிமலையாய், கொந்தளிக்கும் ஆழியாய்

மாறுகின்ற காட்சிகளைப் பார்ப்போம்! நடுங்குவோம்!

தோற்றத்தால் ஏமாந்தால் கேடு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

நம்மைத்தான் தூண்டி நமக்குள்ளே ஊக்கத்தை
பண்புடன் ஏற்படுத்த ஏதோஒன் றிங்கேதான்
தென்படும்! அந்த நிகழ்வு நமக்குத்தான்
நன்கு செயல்பட ஆற்றல் கொடுக்கிறது!
நம்செயலைச் செய்ய தொடர்ந்திடச் செய்கிறது!
அந்த நிலையை அடையாளம் கண்டேதான்
என்றும் செயல்படுத்தல் நன்று

மதுரை பாபாராஜ்
 

பள்ளிக்கூட பரபரப்பு


பள்ளிக்கூட பரபரப்பு!


காலைப் பொழுதிலே பள்ளிக் கனுப்புகின்ற

காலைப் பரபரப்பில் ரத்த அழுத்தமோ

கூடும் மனமோ தவிக்கும் நிலையின்றி!

பாடுபட்டுப் பள்ளிக்குப் பிள்ளைகள் சென்றுவிட்டால்

ஆடி அடங்கும் மனம்


மதுரை பாபாராஜ்

 

Sunday, July 23, 2023

திருமதி கலாவதி

திருமதி கலாவதி அனுப்பியதற்குக் கவிதை!


 அம்மாவின் பக்குவத்தில் இட்லி மெதுவெனினும்

அப்பாவின் வேட்டியங்கே வெந்துகொண் டுள்ளதோ

முற்றும் வெளியே தெரிவதில்லை என்றும்போல்!

கண்ணில் தெரியா தளம்.



கேள்விக் குறி??



 கேள்விக் குறி?

படிக்கும் பொழுது தடம்மாறிப் போனால்
தறிகெட்டுப் போய்விடும் வாழ்க்கைதான்! பெற்றோர்
பதற்றமுடன் புண்பட்டுப் போவார்கள் நாளும்!
எதிர்காலம் கேள்விக் குறி??

மதுரை பாபாராஜ்

Saturday, July 22, 2023

உனக்கென்று


உனக்கென்று உள்ளதை யாரும்

கெடுக்க முடியாது!

உனக்கில்லை என்பதை யாரும் 

கொடுக்க முடியாது!


மதுரை பாபாராஜ்

 

தம்பா , காரைக்குடி

 தம்பா அவர்களுக்கு நன்றி!


காரைக் குடியிலே வாழ்கின்ற தம்பாவின்

காலை வணக்கத்தில் நட்பு மணங்கமழும்!

சேவல் குரல்கூவக் கூட மறந்துவிடும்!

ஆனால் வணக்கத்தைக் கூற மறக்கமாட்டார்

காரை நகர்த்தம்பா தான்.


மதுரை பாபாராஜ்

நண்பர் பன்னீர்செல்வம்


நண்பர் பன்னீர் செல்வம் அவர்களுக்கு நன்றி!


கடலுக்கு மேலெழும்பும் செங்கதிரோன் தோன்ற

கடலில் படகில் வலைவீசி மீனைப்

பிடிக்கின்ற மீனவர் காட்சியைக் காட்டும்.

படமனுப்பிக் காலை வணக்கத்தைக் கூறும்

சிறப்பில் மகிழ்ந்தேன்நான் இன்று


மதுரை பாபாராஜ்

 

Friday, July 21, 2023

நண்பர் ரகுநாத் அனுப்பிய படம்




 நண்பர் ரகுநாத் அனுப்பிய காணொளிக்குக் கவிதை!


தாய்நாட்டைக் காப்பாற்ற தூக்கமின்றி பாடுபடும் 

வீரருக்குத் தூங்கிட தோள்கொடுத்தாள் மங்கைதான்!

தூய்மையான தாய்மை வணக்கத்தை நாம்கண்டோம்!

யார்தருவார் இப்படித்தான் இங்கு.


மதுரை பாபாராஜ்

அம்மா என்றால்


 குறள் விளக்கம்!


அம்மா என்றால் அம்மாதான்!


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.


பள்ளிக்குச் சென்றுவரும் பிள்ளைகள் அம்மாவை

துள்ளித்தான் கட்டிப் பிடித்திருக்கும்! அம்மாவும்

அள்ளி அணைத்தே அகமகிழ்வாள் அன்றாடம்!

பிள்ளை உலகே தனி.


வந்தவுடன் ஆடுவதும் பேசுவதும் பள்ளியில்

என்ன நடந்ததென்று  சொல்வதும் தேன்மழலை

சின்னவாய்ச் சிந்துவதைக் கேட்பதே இன்பமாம்!

கண்குளிரக் கண்டிருப்பாள் தாய்.


மதுரை பாபாராஜ்

Thursday, July 20, 2023

மாறும் மனநிலை




மாறும் மனநிலை!

நண்பர் ரகுநாத் அனுப்பிய காணொளி!

கேட்டதில் பிடித்தது!

பார்வை இழந்தவள்! இங்கே அனைத்தையும்
பார்க்க முடியவில்லை என்றே வெறுத்திருந்தாள்!
தேடிவரும் காதலனை மட்டும் விரும்பினாள்!
பார்வை கிடைத்துவிட்டால் உன்னை மணந்திடுவேன்!
ஆர்வமுடன் சொன்னாள் மகிழ்ந்து.

யாரோ ஒருவரங்கே கண்தானம் செய்தவுடன்
காதலன் சொன்னான் இந்த உலகத்தைக்
காணலாம் இப்போது! என்னை மணப்பாயா?
ஆர்வமுடன் கேட்டான் துடித்து.

காதலனைப் பார்த்தாள்! பார்வை இழந்தவன்!
நானுன்னை ஏற்கமாட்டேன் என்றாள் மறுத்தேதான்!
காதலன் ஏக்கமுடன் சென்றான்! என்னுடைய
ஊடகக் கண்களை நன்றாகப் பார்த்துக்கொள்!
தேனகமே! என்றே மடலெழுதி சொல்லிவிட்டான்!
மான்விழியாள் பார்த்தாள் திகைத்து.

இப்படித்தான் நமது மனதிற்குள் எண்ணங்கள்
அப்படியே மாறுகின்ற கோணத்தில் வாழ்கிறோம்!
நம்நிலை மாறியதும் நாமிங்கே மாறுகிறோம்!
என்றும் ஒரேநிலைதான் நன்று.

மதுரை பாபாராஜ்



பேரன் பாட்டியிடம் படித்தல்


பாட்டி வசந்தாவிடம் பேரன் வருண் படிக்கின்றார்!


வேதியல் பாடத்தைப் பேரன் வருணிங்கே

பாட்டியிடம் கேட்டுப் படிக்கின்றார் ஆர்வமுடன்!

தேர்விலே வெற்றிபெற வாழ்த்து.


பாபா தாத்தா

 

அறவழி அண்ணல் மகாத்மா



 அறவழி அண்ணல் மகாத்மா காந்தி! 


இலக்குமட்டும் முக்கிய மல்ல! அடையும்

வழிகளும் முக்கியம் என்றே மகாத்மா

அறவழிச் சிந்தனைக்கு வித்திட்டார்! அண்ணல்

பிறவழியை நாடவில்லை கூறு.


மதுரை பாபாராஜ்

ஆண்டவருக்கு நன்றி


திரு ஜெயக்குமார் அவர்களின் மனைவி திருமதி மெர்சி இயற்கை எய்திவிட்டார். வருந்துகிறோம்.

நாங்கள் எதிர்வீட்டில் இருந்தபோது தினமும் ஆண்டவருக்கு நன்றி சொன்னதைக்  கேட்டிருக்கிறேன்.

அதைநினைத்து கவிதை எழுதினேன்:


நாள்தோறும் ஆண்டவருக்கு நன்றி!


நேற்றுவரை நன்றாக வாழவைத்த ஆண்டவரே

போற்றி வணங்குகிறேன் நன்றி நவில்கின்றேன்!

ஆற்றலுடன் இன்று விழிக்கவைத்த ஆண்டவரே

வாழ்வில் எனக்கென்ன வேண்டும் அறிவீர்கள்!

நாளும் திருப்தியாய் வாழ்வேன் சரணடைந்து!

நாள்தோறும் சொன்னார் மகிழ்ந்தேதான் வாழ்ந்திருந்தார்!

நேற்றிருந்தார் இன்றில்லை! அம்மாவை எண்ணித்தான்

தேற்றித்தான் வாழ்கிறோம் இங்கு.

மதுரை பாபாராஜ்

வசந்தா

20.07.23


 

Wednesday, July 19, 2023

நண்பர் பன்னீர் செல்வம்



 நண்பர் பன்னீர் செல்வம் அவர்களுக்கு வாழ்த்து!


பச்சை வயலும் அழகாய் அமர்ந்துள்ள

வெள்ளைப் பறவைகளும்  தென்னை மரங்களும்

பச்சைச் செடிவகைகள் கண்குளிரும் காட்சிகள்!

இத்தகைய காட்சியுடன் நண்பர் வணக்கத்தைப்

பற்றுடன் தூதுவிட்டார் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

காதல் பருவம் வரை காத்திரு



 காதல் பருவம்வரை காத்திரு!


படிக்கும் பருவத்தில் கற்பதே வாழ்வு!

படிக்கும் பொழுதிலே காதலென்று மாறி

நெறிபிறழும் வீண்வேலை தேவையில்லை இங்கே!

படிப்பை முடித்துப் பணிக்களம் சேர்ந்து

பருவத்தில் இல்லறத்தை ஏற்றால் விவேகம்!

பருவத்தின் பக்குவம் வந்தபின் காதல்

அரும்பினால்  ஏற்பார் உணர்.


மதுரை பாபாராஜ்