Monday, April 29, 2019

இயற்கை யான வாழ்க்கை!
இயல்பான வாழ்க்கை!

பல்தேய்க்க உப்பைப் போடு
தோலுக்குப் பாசிப் பயறு
முகத்துக்கு மஞ்சள் பூசு
பளிச் சென்று முகமே மாறும்!

காலையில் நீரா காரம்
சுவையாய்நீ குடித்துப் பாரு!
சிற்றுண்டி கம்பங் கூழு
குளிர்ச்சிதான் உடலுக் கிங்கே!

மதியமோ பழைய சோறு
ஊறுகாய் வைத்துத் தின்றால்!
பசிதான் பறந்தே போகும்!
எக்குப்போல் உடலே மாறும்!

இரவிலே களியைத் தின்று
தரையிலே படுத்துத் தூங்கு!
விடியலை எழுப்பி விட்டு
வயலிலே உழைக்க வேண்டும்.

மதுரை பாபாராஜ்





Sunday, April 28, 2019


திருக்குறளும் தெருக்குரலும்!

திருக்குறளை வாழ்வியலாய்ப் போற்றித்தான் வாழ்ந்தால்
பெரும்புள்ளி யாகப் பெருமையுடன் வாழ்வோம்!
தெருக்குரலைப் பேசித்தான் நாள்தோறும் வாழ்ந்தால்
கரும்புள்ளி யாவோம் பகர்.

Thursday, April 25, 2019


by Rabindranath Tagore:

Go not to the temple to put flowers upon the feet of God,
First fill your own house with the Fragrance of love and kindness.

கோயிலுக்குச் சென்று கடவுளின் காலடியில்
தூவிட வேண்டாம் மலர்களை! மக்களே!
பூவிதழ் சிந்தும் நறுமணத்தை உங்களது
நேர்த்தியான  வீட்டில் முதலில் கருணையுடன்
வேரோடும் அன்புடன் தூவி
நிரப்புங்கள்!
பாரே வியக்கும் உணர்ந்து.

Go not to the temple to light candles before the altar of God,
First remove the darkness of sin , pride and ego,
from your heart...

கோயிலுக்குச் சென்று விளக்கேற்ற வேண்டாம்!
பாவியாக்கும் தீச்செயல்,ஆணவம் மற்றும்
சீரழிக்கப் பார்க்கும் செருக்கென்னும் காரிருளை 
ஊரறிய உன்னகத்தை விட்டேதான் நீக்கு!
 பார்போற்றும் உன்னை வியந்து.

Go not to the temple to bow down your head in prayer,
First learn to bow in humility before your fellowmen.
And apologise to those you have wronged.

கோயிலுக்குச் செல்லவேண்டாம்! உந்தன் தலைகுனிந்து
காலில் விழுந்து வழிபாடு செய்யவேண்டாம்!
நீமுதலில் பெற்றோர் பெரியோரைத் தாள்பணிந்தே
நாளும் அடக்கமாக வாழப் பழகவேண்டும்!
நீயாரைப் புண்படச் செய்தாயோ
அன்னாரை
நாடியே மன்னிப்புக் கேள்.

Go not to the temple to pray on bended knees,
First bend down to lift someone who is down-trodden.
And strengthen the young ones. 
Not crush them.

கோயிலுக்குச் சென்று முழங்கா லிட்டேதான்
தாயே எனக்கருள் என்றே வழிபாடு
வேண்டவேண்டாம்! கொஞ்சம் குனிந்தே எளியோரைத்
தாங்கி உயர்த்து! இளைஞர்கள்
பண்புடன்
ஓங்க வலுகொடு! நாளும் நசுக்காதே!
தூண்டு! துலங்கும்  வளர்ந்து.

Go not to the temple to ask for forgiveness for your sins,
First forgive from your heart those who have hurt  you!

உன்னுடைய வக்கிர எண்ணச் செயல்களுக்கு
மன்னிப்புக் கேட்டேதான் கோயிலுக்குச் செல்லாதே!
உன்னைத் துடிதுடிக்கப் புண்படுத்திப் பார்த்தவரை
அன்புடன் நீமுதலில்  உள்ளம் மகிழ்ந்திட
மன்னித்துப் பண்படுத்தப் பார்.

தமிழாக்கம்: மதுரை பாபாராஜ்

Tuesday, April 23, 2019


சிட்னி மாநாட்டுக்கு வாழ்த்துப்பா!

அமைதிக்கும் ஒற்றுமைக்கும்  வள்ளுவமே தீர்வின்
இமையாகும் என்றேதான் சிட்னி நகரில்
இமைக்காமல் மாநாடு கூட்டுகின்றார் சூலை!
அமைப்புகள் வாழ்க மகிழ்ந்து.

தமிழ்வளர்ச்சி மன்றத்தின் செத்தமிழ்த் தொண்டு
நிமிர்ந்த  நடைபோட்டுச் செம்மாந்து வாழ்க!
தமிழ்கூறும் நல்லுலகம் வாழ்த்துகள் தூவும்!
தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா
9003260981




அறத்துப்பால்
--------------------------------
திருக்குறள்
------------------------------
கடவுள் வாழ்த்து 1
-----------------------------------------------
தமிழின் தொடக்கம் அகரம்
உலகின் தொடக்கம் இயற்கை
-------------------------------------------------------
எழுத்தின் தொடக்கம் அகரந்தான்!
உலகின் தொடக்கம் இயற்கைதான்!

சான்றோர் வழியை வணங்கிடுவோம்
இல்லையேல் கற்றது வீணாகும்!

நினைக்க நினைக்க நிம்மதிதான்!
நீண்ட காலம் வாழ்ந்திடலாம்!

துன்பம் நம்மை நெருங்காது
தீவினை நம்மைச் சேராது!

ஆசை தன்னை அடக்கித்தான்
ஒழுக்கத் தோடு வாழ்ந்திடலாம்!

அவரடி பணிந்தால் போதுமே
கவலைகள் எல்லாம் நீங்குமே!

மறந்து போன மற்றவர்க்கோ
கவலைகள் நிலையாய் மாறிடுமே!

ஆசைக் கடலைக் கடப்பதற்கோ
அன்புத் தோணி சான்றோர்தான்!

சான்றோரை வணங்காத் தலைகளோ
இயங்காப் புலன்போல் பயனில்லை!

சான்றோர்  வழியில் நடந்தாலே
பிறவிக் கடலை நீந்தலாம்!

Friday, April 19, 2019

கள்ளழகர் வைகையில்!

19.04.2019

பச்சைப்
பட்டுடுத்தி
தங்கக் குதிரையிலே
வைகை ஆற்றுக்குள்
உற்சாக மாகத்தான்
பக்தர்கள் மகிழ்ந்தாட
கள்ளளழகர் இறங்கினார்!
வைகையில் அலைகளா?
பக்தர்கள் தலைகளா?
வியப்பு மேலிட
விரைந்துவந்தார் கள்ளழகர்!


புனித வெள்ளி!

19.04.2019

கொடுங்கோலர் ஆட்சியில் மாசற்ற ஏசு
கொடுமையின் உச்சகட்ட தண்டனையை ஏற்றார்!
துடிக்கவைக்கும் முள்மகுடந் தன்னைத் தலையில்
அடக்க,  கருணையின் நாயகன் அங்கே
நடந்தார் சிலுவையைத் தோளில் சுமந்தே!
அடலேறாம்  ஏசுவைக் கல்வாரிக் குன்றில்
அகம்துடிக்க அந்தச் சிலுவையில் ஏற்றி
குகைக்குள்ளே தள்ளித்தான் வாசலை மூடி
பகைவர் களித்திருந்தார் பார்.


நலமாய் வாழ்வோம்!

அரைவயிற்றுக் குணவும் அரையில் காலை
நிரப்பவேண்டும் தண்ணீரால்! மீதமுள்ள காலை
உலவவைக் காற்றால்! இதுவொன்றே வாழ்வில்
நலமுடன் வாழவழி யாம்.


மருமகன் ரவி பிறந்தநாள் வாழ்த்து!

18.04.2019.

       45

பத்திலே நான்கையும்  ஐந்தையும் ஒன்றாக
ஒட்டியே கூட்டினால் அந்தஎண் உங்களது
முத்து வயதாகும்! செந்தமிழ்போல்
வாழியவே!
சுற்றம், மனைவி சுபாவும் மகன்சுசாந்த்தும்
அக்கறையாய் அன்புடன் சூழ்ந்திருக்க வாழியவே!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

என்றும் அன்புடன்
மதுரை பாபாராஜ்
வசந்தா

Thursday, April 18, 2019

அற்புதமான தீர்ப்பு!

எட்டு வழிச்சாலை ஆணையை ரத்துசெய்து
அற்புதத் தீர்ப்பை அளித்திருக்கும்  நீதிமன்றம்
நற்றமிழ்போல் வாழ்க தொடர்ந்து! விவசாயி
பற்றுடன் நன்றிசொன்னார் பார்.

Wednesday, April 17, 2019

பேச வருவாரா?

நேரமில்லை பேச எனச்சொன்ன காலம்போய்
யாரேனும் பேச வருவாரா? என்றேங்கும்
கோலம்! முதுமைத் தனிமையில் தேடவைக்கும்!
காலமாற்றந் தன்னை உணர்.






https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

உமா பாலமுரளி பிறந்தநாள் வாழ்த்துப்பா!

15.04.2019

கண்ணுங் கருத்துமாய் இல்லறத்தைக் காத்தேதான்
நன்னெறியில் நாளும் குடும்பத்தைப் போற்றுகின்றாய்!
அன்புக் கணவன் மகள்களுடன் வாழியவே!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு

                        வாழ்த்தும் இதயங்கள்

மதுரை பாபாராஜ்    ரவி--சுபா—சுசாந்த் எழில்--சத்யா--நிகில்---வருண்
வசந்தா




சித்ரா சரவணன் பிறந்தநாள் வாழ்த்து!

17.04.2019

புன்னகையும் நல்லுழைப்பும்  இல்லறத்தில் நல்லறத்தை
என்றென்றும்  சோர்வின்றி ஏந்தியேதான்  திண்டுக்கல்
பொன்நகரில் வாழும் இணையரே! அன்புமகள்
பண்பரசி தேஜஸ் வினியுடன் ஜோஸ்னாவும்
பண்பகமாம் பெற்றோர் பெரியோர் உடன்பிறப்பும்
என்றும் உறவுகளும் சூழ்ந்திருக்க பல்லாண்டு
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

Saturday, April 13, 2019

கொலுசு!

வெள்ளிக் கொலுசுகள் சந்தக் கவிபாட
துள்ளி நடந்துவந்தாள் அலைபோல மாது!
கள்ளச் சிரிப்பால் கவியழகைச் சிந்தி
அள்ளி வழங்கினாள்! ஆர்வமுடன் சென்றேன்!
தள்ளித்தான் சென்றாள்!தளிர்க்கரத்தால்
முகத்தை
மெள்ளத்தான் மூடினாள்! ஊடினாள் ஓடி!
முள்ளைத் தைத்தாள் சிரித்து.

மதுரை பாபாராஜ்

வள்ளுவர் என்னத்த சொன்னாரு?

சொல்லாததே இல்லங்க!

அன்பைப் பத்தி
ஆக்கத்தைப் பத்தி
இன்சொல் பத்தி
ஈகையப் பத்தி
உழவைப் பத்தி
ஊக்கத்தைப் பத்தி
எளிமையப் பத்தி
ஏற்றத்தைப் பத்தி
ஐம்புலன் பத்தி
ஒழுக்கத்தப் பத்தி
ஓங்குபுகழ் பத்தி
ஔவைத் தமிழ்ல
எஃகு போல சொல்லி இருக்காரு!

அடேயப்பா இவ்வளவா?
இதுமட்டுமில்ல!
அவரு சொல்லாததே இல்லங்க!

மதுரை பாபாராஜ்

வெளிச்சம் தொலைக்காட்சிக்கு வாழ்த்து!

நான்காம் ஆண்டில் தடம்பதிக்கும்
தகைமைக்கு வாழ்த்து!

14.04.2019

வெளிச்சம் தொலைக்காட்சி நான்காவ தாண்டின்
ஒளிபரப்பில் சாதனை முத்திரை ஊன்றிக்
களிப்புடன் தொண்டாற்றும் பண்பிற்கு வாழ்த்து!
புவிபோற்ற வாழ்கவே நீடு.

வள்ளுவர், அம்பேத்கார், தந்தை பெரியாரும்
அள்ளித் தெளித்திருக்கும் நற்கருத்தை ஏந்திவர
தெள்ளத் தெளிவாய் விடியல் வெளிச்சத்தில்
உள்ளதை உள்ளவாறு தந்தே மகிழ்கின்றார்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

வள்ளுவன் வாக்கு
மதுரை பாபாராஜ்

இதுதான் அரசியலா?

இவரோ அவரைத்தான் சாடுகின்றார்! அந்த
அவரோ இவரைத்தான் சாடுகின்றார்!
இந்த
அவரை அனைவரும் சாடுகின்றார்!
ஏனோ?
அவரவர் பந்துகளை வீசுகின்றார்! மக்கள்
அவரவர் வேலைகளைப் பார்த்தால்தான் வாழ்க்கை!
அரசியலின் கண்ணியமா இஃது?

ஆட்சியைக் கைப்பற்றும் கட்சியோ மக்களிங்கே
போற்றுகின்ற நல்லபல திட்டத்தைச் சொல்லவேண்டும்!
தாக்கத்தை ஏற்படுத்தி வெல்லவேண்டும்! எப்பொழுதும்
தாக்குவதைக் கைவிட்டே ஆக்கபூர்வ
சிந்தனைக்கே
ஊக்கம் அளித்தலே நன்று.

எந்தெந்த புற்றுக்குள் எந்தெந்த பாம்புகளோ
என்பதைப்போல் இக்கட்சி அக்கட்சி எக்கட்சி
என்றாலும் ஏனோ பணத்தை இறைக்கின்றார்?
பண்பற்ற செய்கை இது.

மதுரை பாபாராஜ்

Monday, April 08, 2019

அற்புதமான தீர்ப்பு!

08.04.19

எட்டு வழிச்சாலை ஆணையை ரத்துசெய்து
அற்புதத் தீர்ப்பை அளித்திருக்கும்  நீதிமன்றம்
நற்றமிழ்போல் வாழ்க தொடர்ந்து! விவசாயி
பற்றுடன் நன்றிசொன்னார் பார்.

Sunday, April 07, 2019

குறளெங்கே போகிறது

நதி எங்கே போகிறது?
பாடலின் ராகம்!

குறளெங்கே போகிறது
வாழ்வியல் நோக்கி
வாழ்வெங்கே போகிறது
பொதுமுறை நோக்கி
முறையெங்கே போகிறது
ஒழுக்கத்தை நோக்கி
ஒழுங்கெங்கே போகிறது
உயர்வினை நோக்கி!  ( மீண்டும்)

பார்வைகள்  நூறுவரும்
குறள்கள் ஒன்று
கோணங்கள் நூறுவரும்
குறள்கள் ஒன்று
எண்ணங்கள் கோடிவரும்
குறள்கள் ஒன்று
கருத்துக்கள் கோடிவரும்
குறள்கள் ஒன்று!
இன்பங்கள் ஊறிவரும்
குறள்கள் ஒன்று!

குறளைத்தான் படிப்பதற்கு
ஏக்கம் ஏக்கம்
படிக்காத நாளெண்ணி
வெட்கம் வெட்கம்
குறளுக்குள் திரண்டுவரும்
இனிமை கண்டு
எல்லாமே திருக்குறளின்
இரண்டில் உண்டு!

இல்லறத்தில் நல்லறத்தை
வள்ளுவம் கூறும்
மாசின்றி வாழ்வதற்கு
வள்ளுவம் கூறும்
மனிதத்தைக்  காப்பதற்கு
வள்ளுவம் கூறும்
அனைத்துக்கும் தீர்வுகளை
வள்ளுவம் கூறும்!

மதுரை பாபாராஜ்

Thursday, April 04, 2019

மானுட நூல்!

வள்ளுவத்தை இங்கே பொதுமறையாய் ஏற்றவர்கள்
கிள்ளுகின்றார் சைவமென்றும் வைணவம் என்றுமிங்கே!
துள்ளுகின்றார் மற்றவரும் தங்கள் மதமென்றே!
வள்ளுவத்தை வள்ளுவமாய்ப் பார்த்தால் பிணக்கில்லை!
வள்ளுவம் மானுட நூல்.

பொதுமுறை என்றால் இணக்கத்தைத் தூண்டும்!
பொதுவுடைமைச் சிந்தனைக்கு வேராக மாறும்!
இதுவொன்றே நேர்மறைப் போக்கென்று சொல்வோம்!
மதங்களைத் தாண்டி நிமிர்.

கொடுத்து வைத்தவன்!

படுத்துறங்கும் நேரம் உயிர்பிரிந்து  போனால்
கொடுத்துவைத்தோன் என்றேதான் ஊர்மெச்ச செல்வார்!
படுத்த படுக்கையாய் நோயில் விழுந்தால்
அடுத்தவ ருக்கே சுமையாக மாறும்
கொடுமைக்கே ஆளாவோம் சொல்.