Tuesday, June 29, 2021

அனுப்பியவர் நண்பர் இசக்கிராஜன்!

 ,அனுப்பியவர் நண்பர் இசக்கிராஜன்!


The fact is, discipline is punishment when imposed on you by someone else._

When you discipline yourself, it’s not punishment but empowerment._

Les Brown

தமிழ் மொழிபெயர்ப்பு:

உன்மேல் ஒழுக்கத்தைத்  திணிப்பதென்றால் தண்டனை!

உன்னைநீ சீர்படுத்த தன்னொழுக்கம் மேற்கொண்டால்

தண்டனை அல்ல! மனவலிமை என்றுரைப்போம்!

என்றும் நல்லொழுக்கம் பேண்.


மதுரை பாபாராஜ்

Monday, June 28, 2021

மகள் திருமதி.சுபாதேவி ரவி பிறந்தநாள் வாழ்த்து!

 மகள் திருமதி.சுபாதேவி ரவி பிறந்தநாள் வாழ்த்து!


கணவர்: சி.ரவி

மகன்: R.S. சுசாந்த் சிரிராம்

29.06.21

அகவை 45/46

நலமுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

பலவகை ஆற்றல் திகழ்ந்திட வாழ்க!

கணவரின் அன்பும் மகனுடைய வாழ்த்தும்

அரவணைக்க வாழியவே! பெற்றோர் பெரியோர்

பொழிந்திடும் ஆசிகள் சூழ்ந்திருக்க வாழ்க!

உறவினர் சுற்றம் மகிழ்ந்திருக்க வாழ்க!

செழிப்பான இல்லறத்தைப் போற்றியே வாழ்க!

களிப்புடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ் 

வசந்தா

குடும்பத்தார்




மணிவிழா நாயகர் குறளாய்வாளர் அஷ்ரப் பல்லாண்டு வாழ்க!

 மணிவிழா நாயகர் குறளாய்வாளர்

அஷ்ரப் பல்லாண்டு வாழ்க!



28.06.21. அகவை 60


அகவை அறுபதைக் காணுகின்றார் அஷ்ரப்!

மகத்தாக வாழியவே! வாழ்வாங்கு வாழ்க!

அகங்குளிர இல்லாள், மருமகள், மைந்தன்

குடும்பத்தார் சூழ்ந்திருக்க பல்லாண்டு வாழ்க!

குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

சம்பந்தி இராம களஞ்சியம் அவர்கள் காலமானார்


 சம்பந்தி இராம களஞ்சியம் அவர்கள் காலமானார்!

27.06.21 ஊர் புளியங்குடி

வணங்குவோம் நினைந்து.

கள்ளங் கபடமின்றி உள்ளத்தில் உள்ளதை

உள்ளவாறு சொல்வார் இராம களஞ்சியம்!

வெள்ளந்தி யானவர் அன்பாய்ப் பழகுவார்!

பிள்ளைக் குணமுடைய  புன்னகைப் பண்பாளர்!

நல்லவரை நாளும் வணங்கு.


அவர் சொன்ன உவமை!

25.07.2019

குழந்தைகள் சாப்பிடும் நேரத்தில் சிந்தும்

அழகுப் பருக்கைகள் பார்ப்பதற்கு விண்ணில்

ஒளிர்கின்ற நட்சத் திரங்களைப் போல

உளதென்றார் தாத்தா ரசித்து.


பரபரப்பாய் வாழ்ந்தவர் பட்டென்றே சென்றார்!

குடும்பமும் சுற்றமும்  ஏங்கிநிற்கச் சென்றார்!

மருத்துவராய்த் தொண்டாற்றி மாண்புடன் வாழ்ந்தே

கருத்தாய்க் கடமைகள் ஆற்றியவர் எங்கே?

நிரந்தர மற்றது வாழ்வு.

(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:336)

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகென்றார் அய்யன்!

இருந்தவர் இன்றோ இறந்தவர் ஆனார்!

இருப்போர்கள் வாழ்வோம் நினைந்து.


மதுரை பாபாராஜ்




Sunday, June 27, 2021

அனுப்பியவர் நண்பர் இசக்கிராஜன்

 


அனுப்பியவர் 

நண்பர் இசக்கிராஜன்

Never try to test Good People._

_Because Good People are like Mercury

_When you hit them, they will not break,_

_but they just slip away from your Life silently_


மொழியாக்கம் 


நல்லவரைச் சோதிக்க எண்ணி முயலாதே!

நல்லவர்கள் எல்லோரும் பாதரசம் போன்றவர்கள்!

வல்லூறாய் மாறி அடித்தால் நொறுங்கமாட்டார்!

தள்ளி நழுவி நகர்வார் அமைதியாக!

துட்டரைக் கண்டால் விலகு.


மதுரை பாபாராஜ்






Saturday, June 26, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!



காலை வணக்கத்தைக் கூறும் பறவையே!

நாங்கள் தடுப்பூசி போட்டாலும் அன்றாடம் 

பாதுகாப்பாய் வாழ முகக்கவசம் போட்டுதான்

நாட்டில் நடக்கவேண்டு மாம்.


மதுரை பாபாராஜ்

Friday, June 25, 2021

தேன்துளி 2000


 மனிதத்தேனீயின் இன்றைய தேன்துளி 2000

வாழ்த்துப்பா.


இன்றைய தேன்துளி என்னும் தலைப்பிலே

அன்றாடம் நற்கருத்து முத்துகளைச் சொக்கலிங்கம்

அன்புடன் அள்ளி வழங்குகிறார் வாழியவே!

பண்பாளர் வாழ்கபல் லாண்டு.

திருக்குறள் போல சுருக்கமாய்ச் சொல்லும்

கருத்துக் கருவூலம் தேன்துளிகள் ஆகும்!

பெருகட்டும் கோடிகோடி தேன்துளி ஆழி!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


என்றும் நட்புடன்

மதுரை பாபாராஜ்

வசந்தா


Thursday, June 24, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!


இனமான அரசு

மணங்கமழும் ரோசாக்கள் கண்கவர வந்தே

வணக்கத்தைக் கூறுகின்ற நட்பிற்கு நன்றி!

இனமானம் மற்றும் மொழிமானம் கொண்ட

அரசு மலர்ந்ததற்குச் சான்று.


மதுரை பாபாராஜ்

Tuesday, June 22, 2021

பேத்தி கீர்த்தனா பிறந்தநாள் வாழ்த்து அகரவரிசை

 பேத்தி கீர்த்தனா பிறந்தநாள் வாழ்த்து


23.06.21


பாட்டி: அருணாபாய் J.

அம்மா: வினோதினி 

அப்பா: ரவி மோகன்

தம்பி: கிருத்திக் ஆகாஷ்


அன்பாய்ப் பழகும் கீர்த்தனா!

ஆற்றல் மிளிரும் கீர்த்தனா!

இன்சொல் பேசும் கீர்த்தனா!

ஈகை மனமே கீர்த்தனா!

உறவை வளர்க்கும் கீர்த்தனா!

ஊக்க முள்ள கீர்த்தனா!

எடுத்துக் காட்டே கீர்த்தனா!

ஏற்றம் காணும் கீர்த்தனா!

ஐவரை அணைக்கும் கீர்த்தனா!

ஒழுக்க மான கீர்த்தனா!

ஓங்கு புகழ் பெறுவாளே

ஔவைத் தமிழ்போல் வாழ்வாளே!

பெற்றோர் பெரியோர் உறவினர்கள்

வாழ்த்தைப் பெற்றே வாழ்பவளாம்!

நற்றமிழ் போல பல்லாண்டு

சுற்றம் சூழ வாழ்கவே!



பாபா தாத்தா

வசந்தா பாட்டி

குடும்பத்தார்



Sunday, June 20, 2021

நண்பர் வீதி விடங்கன் அனுப்பிய சொல்லாக்கத்தின் கவிதை!

 நண்பர் வீதி விடங்கன் அனுப்பிய சொல்லாக்கத்தின் கவிதை!


சுட்டுவிடும் என்றறிந்தும் சூடான தேநீரைப்

பக்குவமாய் நாம்பருகக் காட்டும் நிதானமே

இத்தரணி வாழ்க்கையின் தத்துவமாம்! இங்குணர்ந்தால் 

எத்திசை சென்றாலும் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

புதிய தி மு க அரசுக்கு வாழ்த்து!

 புதிய தி மு க அரசுக்கு வாழ்த்து!

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்



புதிய அரசின் அமைச்சரவை வேகம்,

புதுமை விவேகம்! முதலமைச்சர் காட்டும்

நடுநிலைப் போக்கு! இவற்றைநீ பாராய்!

பறவையே! வண்டமிழால் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


Thursday, June 17, 2021

திருமதி லதா சூரிய பாபு அவர்களுக்குப் பொன்விழா வாழ்த்து!

 திருமதி லதா சூரிய பாபு அவர்களுக்குப் பொன்விழா வாழ்த்து!

இல்லறமுத்துக்கள்:

பெரிய மகன்: அபினேஷ் பாபு -- மருமகள் ரகிதா அபினேஷ்

இளைய மகன்: ஜெகதீஷ் பாபு

18.06.21 அகவை 50

பிறந்தநாள் பொன்விழா கொண்டாடும் நீங்கள்

சிறப்பாக வாழ்க! வளமுடன் வாழ்க!

கணவர்,மருமகள் மகன்களுடன் பெற்றோர்

உறவினர் ஆசிகள் வாழ்த்துடன் வாழ்க!

குறள்நெறி போற்றித்தான் பல்லாண்டு வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.




மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


Wednesday, June 16, 2021

மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியம் தமிழாக்கம்.

 மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியம் தமிழாக்கம்.


சுவைமிகு தேநீர் தயாரிப்பே வாழ்க்கை!

கொதிக்க விடுங்கள் அகந்தையை! ஆவி

நிலையில் கவலைகள் போகட்டும்! துன்பம்

தொலையட்டும் நீர்த்து! வடிகட்டுத் தப்பை!

சுவையான வாழ்க்கை மகிழ்வைத் தருமே!

சுமையின்றி வாழ்வதற்குப் பார்.


மதுரை பாபாராஜ்


Monday, June 14, 2021

அமைதி கிடைக்கும்!

 அமைதி கிடைக்கும்!

நாமிங்கே சிக்கலுக்குக் காரணமா? நம்மைநாம்

நாமே திருத்தவேண்டும்! மற்றவர் காரணமா?

நாமோ பொறுமையைக் காக்கவேண்டும்! இப்படி

வாழ்ந்தால் அமைதியுண்டு இங்கு.


மதுரை பாபாராஜ்

Saturday, June 12, 2021

பேரன் ஜெகதீஷ் பாபு பிறந்தநாள் வாழ்த்து

 பேரன் ஜெகதீஷ் பாபு பிறந்தநாள் வாழ்த்து


!

13.06.21

கலைத்துறையில் நாளும் கடமைப் பயணம்!

மலைக்கவைக்கும் சாதனை செய்தே,பெற்றோர்

உளங்கனிந்த ஆசியுடன் நண்பர்கள் வாழ்த்த

வளமுடன் வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தி மகிழ்கின்றோம்

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

Friday, June 11, 2021

அரவிந் எடுத்த குறும்படம்

 அரவிந் எடுத்த குறும்படம்


காகிதக் கப்பலுக்கு வாழ்த்து!

காகிதக் கப்பல் குறும்படந்தான்! ஆனாலும்

சேகரித்துச் சொல்கின்ற செய்தி பெருங்கருத்து!

பாடம் புகட்டும் அரவிந் இயக்கந்தான்!

காகிதக் கப்பலை ஓட்டும் நடிகர்கள்

ஆகா நடிப்பெல்லாம் நன்று.


மதுரை பாபாராஜ்


Thursday, June 10, 2021

பாடலாசிரியர் மதுரை பாபாராஜ்

 


Songs makes mind cool


தேய்பிறை

பாடலாசிரியர்
மதுரை பாபாராஜ்



பாடகர்
மீனாட்சி இளையரா
இசையமைப்பாளர்
ஜாசந்தோஷ் நாராயணன்
திரைப்படம்
ஜெகமே தந்திரம்

Theipirai Song Lyrics in Tamil


—BGM—


பெண் : தேய்பிறைய பெத்தெடுத்த கண் போல காத்திருந்தேன்…
கத்திமுனை சூழ்நிலையில் காப்பாத்த வழியுமில்லை…
காப்பாத்த வழியுமில்லை…


பெண் : என்னைவிட்டு போறியா என் உயிர் துளியே உறவினமே…
கண்ணெதிரே கலங்குறியே கதரித்தான் நிக்குறியே…


பெண் : கை இருந்தும் உதவவில்லை கண்ணால பாத்திருக்கேன்…
எந்த நாடு போறீகளோ…
எப்படி போறீகளோ…
எப்படி போறீகளோ…


பெண் : அந்த நாடு எப்படியோ அந்த மக்க எப்படியோ…
வரவேற்று ஏற்பாரோ முகம்சுளிச்சு வெறுப்பாரோ…
முகம்சுளிச்சு வெறுப்பாரோ…
முகம்சுளிச்சு வெறுப்பாரோ…


—BGM—


பெண் : எப்போ நாம சேருவமோ…
எப்படித்தான் சேருவமோ…
அல்லாடும் என் உசுரும் அதுவரையும் தங்கிடுமோ…


பெண் : எப்போ நாம சேருவமோ…
எப்படித்தான் சேருவமோ…
அல்லாடும் என் உசுரும் அதுவரையும் தங்கிடுமோ…


பெண் : தாயிருக்க பிள்ளைகள போர்க்கலமும் செதரடிக்க…
கைபெசஞ்சு தாயும் நிக்க பிள்ளை இப்போ ஏதில்லையாம்…


பெண் : தேசம் எங்கும் அலங்கோலம்…
தாய் மனசு கலங்குதய்யா…
பூ மழைய பாத்த பூமி…
குண்டு மழை பாக்குதய்யா…


பெண் : தேய்பிறைய பெத்தெடுத்த கண் போல காத்திருந்தேன்…
கத்திமுனை சூழ்நிலையில் காப்பாத்த வழியுமில்லை…
காப்பாத்த வழியுமில்லை…


பெண் : என்னைவிட்டு போறியா என் உயிர் துளியே உறவினமே…
கண்ணெதிரே கலங்குறியே கதரித்தான் நிக்குறியே…


—BGM—


பெண் : கோலமெல்லாம் நாளை மாறி போகும்மய்யா…
காலம் வரும் நம்பிக்கையா போய் வாங்க…
கோலமெல்லாம் நாளை மாறி போகும்மய்யா…
காலம் வரும் நம்பிக்கையா போய் வாங்க…


பெண் : மீண்டு வந்து வாழ்ந்திடலாம் போய் வாங்க…
தாய்நாடும் காத்திருக்கு போய் வாங்க…
ஒரு கதவு மூடுச்சின்னா மறு கதவிருக்கு…
என் புள்ள வாழ இந்த பூமியிலே இடமிருக்கு…


குழு (ஆண்கள்) : தேய்பிறைய பெத்தெடுத்தே…
தேய்பிறைய பெத்தெடுத்தே…
தேய்பிறைய பெத்தெடுத்தே…


குழு (ஆண்கள்) : தேய்பிறைய பெத்தெடுத்தே…
தேய்பிறைய பெத்தெடுத்தே…
தேய்பிறைய பெத்தெடுத்தே…


—BGM—

This entry was posted in 
ஜகமே தந்திரம் and tagged 
சந்தோஷ் நாராயணன்
மதுரை பாபாராஜ்
மீனாட்சி இளையராஜா 
on June 9, 2021 
by தகவல் களஞ்சியம்.

Sunday, June 06, 2021

திருமதி உமா பாலமுரளி அனுப்பியது

 திருமதி உமா பாலமுரளி அனுப்பியது


கடந்தகாலம் சென்றதை ஏற்றுக்கொள் வாழ்வில்!

நிகழ்காலந் தன்னையோ நம்பிக்கை கொண்டே

நடத்து! எதிர்காலம் தன்னை எதிர்கொள்!

அகஉளைச்சல் நீங்கும் உணர்.


தமிழாக்கம்

மதுரை பாபாராஜ்

மன ரணம்

 மனரணம்!

ரணநோய்கள் மொய்த்தால் சிகிச்சைகள் உண்டு!

மனநோய்கள் மொய்த்தால் சிகிச்சைகள் ஏது?

தினமும் மனத்தில் உளைச்சல்கள் கூடும்!

மனரணம் ஆறுவ தென்று?


மதுரை பாபாராஜ்


அந்தநாள் வருமோ?

 அந்ததாள் வருமோ?

என்ன நடக்குமோ ஏது நடக்குமோ

என்றே நடுங்கியே வாழ்கிறேன் நாள்தோறும்!

இந்த உளைச்சல்கள் தீரும்நாள் எந்தநாள்?

அந்தநாள் என்றுவரும் சொல்?


மதுரை பாபாராஜ்

பொறுமையே தீர்வு

 முள்ளில் விழுந்த துணி!

பட்டுத் துணியொன்று முள்வேலி தன்னிலே

சிக்கிவிட்டால் அந்தத் துணியும் கிழியாமல்

முள்ளும் கிழிக்காமல் பார்த்தெடுக்க வேண்டுமிங்கே!

இவ்வுலக வாழ்க்கையின் சிக்கலைத்

தீர்ப்பதற்கும்

நல்ல பொறுமையே தீர்வு.


மதுரை பாபாராஜ்




முரண்

 முரண்

கால்களைக் கட்டி விரைந்தோடச் சொல்கின்றார்!

வாயை அடைத்தே முழங்கென்று சொல்கின்றார்!

கண்களைக் கட்டித்தான் காட்சிகாணச் சொல்கின்றார்!

எப்படி இந்த முரண்?

Saturday, June 05, 2021

வாழ்க்கை இப்படி இருந்தால்!

 வாழ்க்கை இப்படி இருந்தால்!

அடிமேல் அடிகளை வாங்குகின்ற வாழ்க்கை!

இடிமேல் இடிகள் விழுகின்ற வாழ்க்கை!

பிடிமானம் இன்றி நடக்கின்ற வாழ்க்கை!

நடைப்பிண மாக்கிவிடும் இங்கு.


மதுரை பாபாராஜ்

சூழ்நிலையின் தாக்குதல்!

 சூழ்நிலையின் தாக்குதல்!


தூக்கம் வரவில்லை! சாப்பா(டு) இறங்கவில்லை!

ஏக்கம் மனதைப் பிழிகிறது நாள்தோறும்!

சூழ்நிலையின் தாக்குதல் தாங்காமல்  தத்தளித்தே

வாழ்கிறேன் நொந்துபோய் தான்.


மதுரை பாபாராஜ்

Friday, June 04, 2021

இன்பமும் துன்பமும்!

 இன்பமும் துன்பமும்!

ஒருவருக்கு இன்பம்! ஒருவருக்குத் துன்பம்!

இருநிலை உள்ளதே வாழ்க்கையாம்! நாளும்

பருவநிலை மாறுதல்போல் மாற்றங்கள் உண்டு!

இருநிலையை ஏற்பதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பியது!

 மருமகன் ரவி அனுப்பியது!



அனைவரையும் இங்கே மகிழ்ச்சிகொள்ள வைத்தல்

கடினமாகும்! நாளும் அனைவ ருடனும்

மகிழ்ச்சியாய் வாழ்வதே

என்றும் எளிது!

மகிழ்ச்சியாய் வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

பொய் மேல் பொய்!

 பொய் மேல் பொய்!


பொய்சொல்ல வாழ்வில்  பழகிவிட்டால் மென்மேலும்

பொய்சொல்லத் தூண்டிலிடும்! ஒன்றோ இரண்டாகும்!

எல்லைகளைத் தாண்டவும் அஞ்சாது!

நாள்தோறும்

தொல்லை உளைச்சல்கள் தான்.


மதுரை பாபாராஜ்


Thursday, June 03, 2021

குறள்தூதர் அன்வருக்கு வாழ்த்து!

 குறள்தூதர் அன்வருக்கு வாழ்த்து!



பேச்சிலும் மூச்சிலும் வள்ளுவம் அன்வருடன்

போட்டிபோட்டுத் துள்ளிவரும் சொற்களில் தானாக!

ஊற்றுகூட தோற்கும் வள்ளுவ ஊற்றுமுன்னே!

போற்றுவோம் நண்பரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Tuesday, June 01, 2021

நட்பிற்கு வீற்றிருக்கை!

 


நண்பர் IG சேகர் அவர்களுக்கு வணக்கம்!

நட்பிற்கு வீற்றிருக்கை!

குறள் 789

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலையென்றார் வள்ளுவர்!

நட்பிற்கு வீற்றிருக்கை மானின்

தலையாக

மாற்றியதே மைனாதான் இங்கு.





69 தூது

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

69 தூது

குறள் 681:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.


அன்பு, குடிப்பிறப்பு, ஆட்சியாளர் பாராட்டும் 

பண்புகள் தூதர்க் கழகு.

குறள் 682:

அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்

கின்றி யமையாத மூன்று.


ஈடற்ற அன்பும், அறிவுடன்  சொல்லாற்றல் 

தூதருக்கு முப்பண்பாம் கூறு.

குறள் 683:

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு.


தன்நாட்டின் வெற்றிக்குத் தூதுரைக்கும் தூதருக்குப்

பண்பட்ட  வல்லமையே பண்பு.

குறள் 684:

அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு.


அறிவுடன் தோற்றப் பொலிவும் படிப்பும்

நிறைந்தவர் தூதுக்கு நன்று.

குறள் 685:

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி

நன்றி பயப்பதாந் தூது.


சொல்வதைச் சொல்லியும் நீக்குவதை நீக்கியும்

சொல்வதே தூதின் சிறப்பு.

குறள் 686:

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

தக்க தறிவதாந் தூது


கற்றதைச் சொல்லி எதற்குமே அஞ்சாமல் 

சொல்கின்ற வீரமே தூது.

குறள் 687:

கடனறிந்து காலங் கருதி இடனறிந்

தெண்ணி உரைப்பான் தலை.


கடமையை, காலம், இடத்தை உணர்ந்தே

சிறப்பாகப் பேசுவதே தூது.

குறள் 688:

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு.


துணிவும், துணையும், ஒழுக்கமும் கொண்ட

மனப்பண்பே தூதர்க் கழகு.

குறள் 689:

விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்

வாய்சோரா வன்க ணவன்.


வாய்தவறி கூட இழிசொற்கள் கூறாமல்

ஆள்வோரின் நன்மைக்கும் நாட்டுக்கும் பாடுபடும் 

தூயமனம் தூதர் சிறப்பு.

குறள் 690:


இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்

குறுதி பயப்பதாம் தூது.


தனக்கழிவு வந்தாலும்  அஞ்சாமல் வேந்தன்

இமையாதல் தூதரின் பண்பு.



74 நாடு



குறள்களுக்குக்  குறள்வடிவில் கருத்து

74 நாடு

குறள் 731:

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.

விளைச்சல், நெறியாளர், செல்வந்தர்
முறையாய்
அமைந்த அமைப்புதான் நாடு.

குறள் 732:

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

வளங்கள்,  விரும்புகின்ற  சூழல், விளைச்சல்
நிலைத்திருக்க வாழ்வதே நாடு.

குறள் 733:

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு.

புதிய சுமைகளைத் தாங்கி வரிகள்
அரசுக்( கு)
அளிக்கும்  வளமுடைத்து நாடு.

குறள் 734:

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

பசியும் பகையும் பிணியுமற்ற நாடே
அகங்குளிர வாழ்கின்ற நாடு.

குறள் 735:

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.

குழுப்பகை உட்பகை மற்றும் துரோகம்
இழைப்பவர் அற்றதே நாடு.

குறள் 736:

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.

பகைவரால் சீரழிந்த போதும் வளங்கள்
குறையாத நாடுதான் நாடு.

குறள் 737:

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு.

ஆழியும் ஆறும் மலையும் அரணும் மழைப்பொழிவும்
ஈடில்லா நாட்டிற் குறுப்பு.

குறள் 738:

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.

நோயின்மை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சியும்
பாதுகாப்பும் நாட்டிற்  கழகு.

குறள் 739:

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

இயற்கை வளம்நிறைந்த நாடுதான் நாடு!
வருந்துவது நாடல்ல சாற்று.

குறள் 740:


ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

எல்லா வளமிருந்தும் நல்லாட்சி
யற்றநாடு
ஒன்றுமில்லா நாடென்று சாற்று.

மதுரை பாபாராஜ்
























வாத்துகளின் கவலை

 வாத்துகளின் கவலை


உங்களுக்குக் கூட கொரோனா மறைகிறதாம்!

எங்களுக்குப் பறவைக்காய்ச்

சல்லென்றே சொல்கின்றார்.!

அங்கங்கே வாழ்கிறோம் எங்கிருந்த போதிலும்

அம்மம்மா சோதனைதான் சொல்.


மதுரை பாபாராஜ்


தளபதி ஸ்டாலினுக்கு வாழ்த்து

 வாழ்த்துப்பா!


6000 இளைஞர்கள் 

மனிதவடிவில் உதயசூரியன்!


உலக-- ஆசிய சாதனைகளுக்கான விருதுகள் தளபதி மு.க. ஸ்டாலினிடம்

வழங்கிய காட்சி!

---------------------------------------------------------------


இளைஞர்கள் கூடி மனித வடிவில்

கழகத்தின் சின்னம்போல் ஒன்றுபட்டு நின்றே

உலகத்தின் ஆசிய சாதனைக் கான

விருதுபெற்றுச் சாதித்தார் எழுச்சி கொண்டே!

தளபதி ஸ்டாலின் தலைமையைப் போற்றி

வழங்கிய பொன்மகுடக் காட்சியை வாழ்த்து!

கலைஞரின் ஆசிகள் உண்டு.


மதுரை பாபாராஜ்


குறளும் விளக்கமும்

குறளும் விளக்கமும்


குறள் 0036:

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை

அறங்களை இன்றே செய்!

இருக்கின்ற போதே ஒருபிடிச் சோறு

தருவதே நல்லறம்! சென்றபின் கூடிப்

படையலிட்டே மாவிருந்து வைத்தல் நடிப்பு!

அறங்களை இன்றேசெய்! நன்று.


 தாங்க முடியாது எட்டாவது கடல் சோதனை!



ஏழுகடல் சூழ்ந்த உலகமென்றே பாடுகின்றோம்!

ஏழுடன் வாழ்க்கைப்  பிறவிக் கடலையும்

ஆர்வமுடன் சேர்த்துவிட்டால் எட்டாம் கடலாகும்!

ஏழுகடல் சோதனையைத் தாங்கலாம்! எட்டென்ற

பாழும் பிறவிக் கடல்தரும் சோதனையைத்

தாள  முடியவில்லை யே.


மதுரை பாபாராஜ்

இமயவரம்பன்


நொடிக்கொரு பா தரும்

நன்றிக் குரியவர் தாங்கள் தான் அய்யா!

நன்றி நவிலற்க!🙏


பென்னர் நண்பர் தல்ஜித் சிங் அனுப்பிய சொல்லோவியம் தமிழாக்கம்.

 பென்னர் நண்பர் தல்ஜித் சிங் அனுப்பிய சொல்லோவியம் தமிழாக்கம்.



முகங்காட்டும் கண்ணாடி பொய்யேசொல் லாது!

உடன்வரும் இந்த நிழல்வில காது!

இதுபோன்ற நண்பர்கள் நட்பு கிடைக்க

கொடுத்துவைத் துள்ளேனே நான்.


மதுரை பாபாராஜ்