Monday, October 31, 2022

நண்பர் எழில்புத்தன்

 நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச்சொல்லோவியம்!


செய்யும் அனைத்தையும் என்றும் மழுமனதாய்ச்

செய்யவேண்டும்! செய்ய முடிவெடுத்தால் ஈடுபாடு

கொண்டே முழுமையாய்ச் செய்யவேண்டும் !நேரமே

முக்கியம்! எவ்வளவு நாமிங்கே  செய்கிறோம்

என்பதே என்பதே முக்கியத்தில் முக்கியமாம்!

செய்வதைச் செம்மையாய்ச் செய்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்

 நண்பர் எழில்புத்தன் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியம்!


நேரம்!


தடையின்றி மற்றும்  நிபந்தனை இன்றி

பறப்பது ஒன்றே! அதன்பெயர் நேரம்!

பறக்கவேண்டும் நாமிங்கே நேரத் துடனே!

முடியவில்லை என்றாலோ நேரத்தை விஞ்சும்

துடிப்புடன் வேகமாக நம்மிலக்கை நோக்கி!

நடந்துகொண்டே நாமிருத்தல் நன்று.

மதுரை பாபாராஜ்

Saturday, October 29, 2022

மகிழ்வு

 மகிழ்வு!


அழைத்துவிட்டோம் நண்பரை! நண்பர் வருவார்!

இலைமுதல்  சமையல் அனைத்தும் தயார்தான்!

வழிமேல் விழிவைத்துக் காத்திருப்போம்! நண்பர்

குடும்பம் வருகைதந்தால் ஆகா! மகிழ்வோம்!

உழைத்த உழைப்பிற்கு நற்பயன் வாழ்வில்

கிடைத்தால் பொழியும் மகிழ்வு.


மதுரை பாபாராஜ்

Thursday, October 27, 2022

நண்பர். எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!

நிம்மதியைத் தேடுகின்ற சாக்கிலே இன்றைய

இன்பம் மகிழ்ச்சியை இங்கே இழக்கவேண்டாம்!

என்றும் எதனையோ தேடுவதில் நம்வாழ்வில்

பன்னெடுங் காலம் நகர்கிறது! அத்தகைய

அம்சங்கள் நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை

இங்கே தருவதில்லை சாற்று.


மதுரை பாபாராஜ்

 

கலீல்கிப்ரான் கவிதை! மொழியாக்கம் மதுரை பாபாராஜ்

 கலீல்கிப்ரான் கவிதை!

மொழியாக்கம் மதுரை பாபாராஜ்


ஆழியுடன் சேர்வதற்கு சற்றுமுன்னே ஆறிங்கே

ஆவி நடுங்க பயத்தால் பதறும்!

பயணித்த பாதையைப் பார்க்கிறது நின்றேதான்!

விண்தொடும் மாமலைகள் மற்றும் வளைந்துவந்த

மண்சாலை காடுகளை மற்றும் கிராமத்தை

எங்கோ கடந்துவந்த காட்சி நிழலாட

கண்முன்னே மாபெரும் ஆழி அலைகளுடன்!

எப்படியும் ஆறு நுழைந்தாக வேண்டுமே!

வேறு வழியே கிடையாது இங்கேதான்!

ஆறு திரும்பியோ செல்ல முடியாது!

யாரும் திரும்பியே செல்ல முடியாது!

வாழ்வில் நமக்கு முடியாது நிச்சயமாய்!

ஆழிக்குள் செல்கின்ற ஆபத்தை ஆறிங்கே

வேறுவழி இன்றி எடுக்கத்தான் வேண்டுமே!

ஏனென்றால் அப்போதே அச்சம் விலகிவிடும்!

ஏனென்றால் அங்கேதான் ஆறு அறிந்துகொள்ளும்!

ஆழிக்குள் தானோ மறைவதில்லை! ஆனால்தான்

ஆழியாக மாறுகிறேன் என்று.


மதுரை பாபாராஜ்



GHALIL GIBRAN POEM!


said that before entering the sea

a river trembles with fear.

She looks back at the path she has traveled,

from the peaks of the mountains,

the long winding road crossing forests and villages.

And in front of her,

she sees an ocean so vast,

that to enter

there seems nothing more than to disappear forever.

But there is no other way.

The river can not go back.

Nobody can go back.

To go back is impossible in existence.

The river needs to take the risk

of entering the ocean

because only then will fear disappear,

because that’s where the river will know

it’s not about disappearing into the ocean,

but of becoming the ocean.

நண்பரின் வாழ்த்து:

கிப்ரானின் கவிதையை

ஆங்கிலத்தில் படித்துவிட்டு

பாபாவின் மொழியாக்கத்தை தமிழில்

படிக்கிறதுபோது தெரிகிறது ...தமிழ் எவ்வளவு உயர்வான மொழி என்று!!

தெ.கி

தென்காசி கிருஷ்ணன்

The river wants to become the ocean itself

not to disappear 

Super Poem

Super translation

Congrats

Ramu

ஆயிங்குடி

கரைப்பானும் கரைசலும் கரைவது போல ஆறு கடலில் கரைகிறது!பாபா தமிழிலும் கரைகிறது!

தீத்தாரப்பன்

தென்காசி

Wednesday, October 26, 2022

வாழ்வில் எதுவும் நடக்கும்

 வாழ்வில் எதுவும் நடக்கும்!


வளரும் பருவத்தில் கொஞ்சி மகிழ்ந்தோர்

வளர்ந்த பருவத்தில் தோன்றும் கருத்து

நிலைப்பாட்டில் வேறுபட்டே நின்று விலகும்

நிலைகளோ வாழ்விலே சூழ்நிலைக் கைதிக்

களத்திலே நிற்கவைக்கும் காண்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தனின் ஆங்கிலச் சொல்லோவியம்!

நீங்கள் என்ன நினைத்தாலும் நிறைவேறும்!


நேர்மறையாய்ச் சிந்திதே அத்தகைய சிந்தனைக்கு

நாள்தோறும் நேர்மறை எண்ண வலுவூட்டு!

வேலைக்குத் திட்டமிடு! உள்ளம் எதிர்மறை

யாகவரும் உள்ளீடை வாங்க அனுமதிக்க

வேண்டாம்! அனுமதித்தல் தீது.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, October 25, 2022

வேற்றுமையில் ஒற்றுமை

 வேற்றுமையில் ஒற்றுமை!


தேவைக்கே அல்லாடித் தத்தளிக்கும் மக்களுண்டு!

தேவைக் கதிகமாகச் செல்வச் செழிப்புடன்

ஓவியமாய் வாழ்கின்ற மக்களுண்டு! ஆனாலும்

சேர்ந்தே பொறாமையின்றி வாழ்கின்றார்! தங்களின்

வாழ்க்கை விதிப்பயன் என்றேதான் நம்புகின்றார்!

வேற்றுமையில் ஒற்றுமையைப் பார்.


மதுரை பாபாராஜ்


Monday, October 24, 2022

வாழ்க்கை

 வாழ்க்கை!


காசில்லை என்றேதான் மக்களிங்கே ஓடுகின்றார்!

காசுவந்த பின்னால் பொருள்வாங்கி சேர்ப்பதற்கோ

ஈசல்கள் கூட்டம்போல் ஓடிப் பறக்கின்றார்!

காசைக் கொடுத்துப் பொருள்வாங்கி அப்பொருளைப்

பார்த்தேதான் வைப்பதற் கேற்றார்போல் வீடுபார்க்க

ஓடுகின்றார்! வாடகை கேட்டு மலைக்கின்றார்!

பாரிலே வாழ்கின்றோம் வாழ்வு.


மதுரை பாபாராஜ்


மனமே உறுத்தும்

 மனமே உறுத்தும்!


மனசாட்சி ஒன்றுதான் மெய்சாட்சி ஆகும்!

மனமொன்று சொல்ல செயலொன்று செய்ய

தினந்தோறும் வேடங்கள் போட்டேதான் வாழ்ந்தால்

மனமே உறுத்தும் உணர்.


மதுரை பாபாராஜ்

Saturday, October 22, 2022

நண்பா! இது உன்பா! வெண்பா இல்லை!

 நண்பா! உன்பா! வெண்பா இல்லை!


வெண்பா எழுதி இலக்கணம் உள்ளதா

என்றே புலவரிடம் காட்டினேன்! நண்பாஉன்

வெண்பா தளைகளோ தட்டுவதால் உன்பாதான்

வெண்பாவே இல்லையென்றார் பார்த்து.


மதுரை பாபாராஜ்

சிதைத்தால் சிதைவார்

 சிதைத்தால் சிதைவார்!


கட்டிய கூட்டைத் தகர்த்தே சிதைக்கின்ற

மட்டமான மாந்தர் சிதைந்தேதான் போய்விடுவார்!

எக்காலும் நிம்மதி காணமாட்டார்! கானலாகும்!

மற்றவர்கள் தூற்றுவார் பார்த்து.


மதுரை பாபாராஜ்

Monday, October 17, 2022

இணையர் கண்ணப்பன் சேது-- இராஜேஸ்வரி


இணையர் 

கண்ணப்பன் சேது -  இராஜேஸ்வரி அவர்களுக்கு மணிவிழா வாழ்த்து!


17.10.22


அகவை 59/60


அச்சகத் துறையிலே கண்ணப்பன் சேதுவோ

முத்திரைச் சாதனை செய்கின்ற பின்னணியில்

உற்றதுணை யாக மனைவி இருக்கின்றார்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


உழைப்பு, கடமையே மூச்சாக வாழும்

நிலைப்பாட்டில் முன்னேறும் கண்ணப்பன்  வாழ்க!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


இல்லத் தரசி குழந்தைகள் சுற்றத்தார்

நல்லோர்கள் நண்பர்கள் சூழ மகிழ்ச்சியுடன்

பல்லாண்டு வாழ்கவே! நூறாண்டு வாழியவே!

இவ்வுலகில் வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தும் இதயங்கள்

மதுரை பாபாராஜ் 

வசந்தா

குடும்பத்தார்

 

நண்பர் பன்னீர்


நண்பர் பன்னீர் அனுப்பிய படம்!


வானமே எல்லையாய் மாறவே தன்சிறகை

வானளக்க நாளும் விரித்தே பறக்கின்ற

வான்பறவைக் கூட்டம் கடலுக்கு மேல்பறக்க

காணுகின்ற காட்சி அழகு.


மதுரை பாபாராஜ்

 

Sunday, October 16, 2022

துர்கா படம்



 

வெள்ளத்தில் தக்கை

 வெள்ளத்தில் தக்கை!


தென்றல் வருடுகின்ற நேரத்தில் மெய்மறப்போம்!

வன்புயலாய்ப் பாதிக்கும் நேரத்தில்

நொந்துபோவோம்!

ஒன்றாய் நினைத்தால் அமைதியுண்டாம்! சொல்கின்றார்!

உள்ளம் அடங்க மறுக்கிறதே என்சொல்ல?

வெள்ளத்தில் தக்கைதான் வாழ்வு.


மதுரை பாபாராஜ்



காலநேரம் பார்!

 காலநேரம் பார்!


குழந்தையோ இல்லை பெரியவரோ இங்கே

பரபரப்பாய் உள்ளநேரம் தொந்தரவு செய்தால்

சுழிப்பார் முகத்தை! உகந்தநேரம் பார்த்தே

நெருங்குதல் நன்றென்(று)  உணர்.


மதுரை பாபாராஜ்

நண்பர் இராமசாமி


நண்பர் இராமசாமி அனுப்பியதற்கு மொழியாக்கம்!


இன்றெதைச் செய்கின்றாய்? அந்தச் செயலைநீ

இங்கே மகிழ்ச்சியாய்ச் செய்தே நிறைவுகொள்!

உன்வாழ்க்கை உன்கையில் தான்.


மதுரை பாபாராஜ்

 

வாழ்க்கை

 வாழ்க்கை இப்படித்தான்!


பெற்றோர் உடன்பிறப்பு என்றே குடும்பமாய்த்

தொட்டே உறவாடும் சூழ்நிலை மாறிவிடும்!

உற்றார் உறவுகள் பல்கிப் பெருகிடும்!

மற்றவர்கள் நண்பர்கள் சூழத் தொடங்கிடுவார்!

முற்றும் பணிக்களம் மற்றும் கடமைகள்

இப்படி அப்படி என்றே அலைக்கழிக்க

நம்குடும்பத் தார்களின் வாழ்க்கை தொடருமே!

எப்படியோ வாழ்க்கை நகரும் உலகிலே!

கட்டக் கடைசித் தனிமை இறுதியில்!

எப்போது இப்பிறவி வாழ்க்கை முடியுமோ?

என்றேதான் எண்ணுவோம் நாம்.


மதுரை பாபாராஜ்

பொறுப்பு நானே

 பொறுப்பு நானே!


தலைசுற்றல் சோர்வு உளைச்சல் நடையில்

நிலையில் தடுமாற்றம்! சாலையில் நானோ

விழுந்து மயங்குவேன் வண்டிக் கிடையில்!

இறந்தால் பொறுப்பெல்லாம் நான்.


மதுரை பாபாராஜ்

16.10.22

Saturday, October 15, 2022

கரைகாண்போமா?

 கரைகாண்போமா?


பிறவிக் கடலிலே வாழ்க்கையென்னும் கப்பல்

நிறைவாய் நகர்ந்தே நடுக்கடலைச் சென்றே

அடைந்திட்ட நேரம் பேரலைகள் தோன்றி

சிதைக்கின்ற அச்சத்தை ஏற்படுத்திப் பார்க்க

கரைகாணத் தத்தளித்தோம் காண்.


மதுரை பாபாராஜ்

Friday, October 14, 2022

எத்தர்கள்

 எத்தர்கள்!


பெற்றோரை நாளும் துடிக்கவைத்துப் பார்த்தேதான்

உற்ற குடும்பத்தை இங்கே சிதைக்கின்ற

எத்தகைய மாந்தரும் முற்றும் அழிந்திடுவார்!

எத்தர்கள் என்றேதான் சாடு.


மதுரை பாபாராஜ்

விடியட்டும் பொழுது

 விடியட்டும் பொழுது!


விடியல் நேரம் 5.40


மலர்ந்தும் மலராத காலைப் பொழுதில்

கலைந்தும் கலையாத தூக்க நிலையில்

விழித்தேன் விடியட்டும் என்றேதான் மீண்டும்

படுத்தேன் விழிமூடித் தான்.


மதுரை பாபாராஜ்


எறும்பின் விடாமுயற்சி

 எறும்பின் விடாமுயற்சி!

( குரோவ் வளாகத்தில் 13.10.22 ல் பார்த்த காட்சி)

பறவை இறகொன்று கீழே கிடக்க

எறும்பொன்றோ அந்த இறகைத்தான்  தள்ளி

நகர்த்தியது! காற்றில் இறகு விரைவாய்

நகர்ந்தும் விடவில்லை அங்கு.


எறும்புக் கிருக்கும் விடாமுயற்சி பார்த்தே

வியந்தேன்! மகிழ்ந்தேன் சிலிர்த்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம் !


உங்களின் நாள்களில்  நீங்கள் ஒருசெயலை

இங்கே அதிகரிக்க ஏலுமென்றால் செய்யுங்கள்!

அந்தச் செயல்களே மற்றவர்க்கோ உங்களுக்கோ

அல்லது மேம்படுத்த என்றும் துணைபுரியும்!

செய்யும் செயலே புகழ்.


மதுரை பாபாராஜ்

 

Thursday, October 13, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


உங்கள் தரத்தை அளவுகோலை வேலையில்

என்றும் சமரசம் செய்து குறைக்கவேண்டாம்! 

எப்போதும் பண்படுத்தி மேம்படுத்த வேண்டுமிங்கே!

சற்றே குறைவாய் இருந்தாலும்  நாள்தோறும்

முற்றும் அதிகரித்தல் நன்று.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, October 12, 2022

சேக்ஸ்பியர்

 SHAKESPEARE


The schoolboy creeps like a snail since he watches him going to school grudgingly, grumbling, and carrying his school bag. The poet compares the schoolboy to a snail because he moves slowly with a schoolbag, much like a snail moves slowly with a big shell on its back.


சேக்ஸ்பியர் காலம்தொட்டே!


நத்தையோ கூட்டைச் சுமக்க முடியாமல்

அப்படி இப்படி இங்கே நகர்தல்போல்

பள்ளிக் குழந்தைகள் தங்கள் முதுகிலே

புத்தகத்தை நாளும் சுமக்க முடியாமல்

முக்கி முணங்கி மனமின்றி பள்ளிக்குப்

போகின்றார் ஏக்கமுடன் தான்.


மதுரை பாபாராஜ்





Tuesday, October 11, 2022

மதுரை கோச்சடை பூதம்


மதுரை கோச்சடை பூதம்!

அனுப்பியவர் ராஜூ


பூதங்கள் உள்ளனவா இல்லையா? சர்ச்சைதான்!

பூதம்போல் கற்பனையில் காட்சிச் சிலைகளைக்

கோச்சடைக் கோயிலில் அக்காலந் தொட்டேதான்

நாங்கள்தான் பார்த்து ரசிக்கிறோம் அஞ்சாமல்!

தூங்கா நகர வியப்பு.


மதுரை பாபாராஜ்



 

நண்பர. எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


எதையெதையோ செய்யவேண்டும் என்றே பதறி

எதையுமே குந்தகமாய்ச் செய்வதோ வேண்டாம்!

அதையும் சரிப்படுத்தல் இங்கே கடினம்!

கவனமாய்த் தேர்ந்தெடுத்தே செய்தல் விவேகம்!

உழைப்பில் கவனத்தை வை.


மதுரை பாபாராஜ்

 

Sunday, October 09, 2022

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


நல்லதைச் செய்வதற்குத் தீர்மானம் செய்துவிட்டால்

நல்லதைச் செய்வதற்கு மற்றவர் சம்மதம்

எள்ளளவும் தேவையில்லை! நீங்கள் நினைத்தவாறு

செய்யுங்கள் உங்களால் ஆனதை முன்வந்தே!

நல்லதைச் செய்க முயன்று.


மதுரை பாபாராஜ்

ஆதித்யா அம்மா


ஆதித்யா அம்மா திருமதி  G. சுமதிஸ்ரீ அனுப்பிய படம்!


வெண்முகிலின் கூட்டத்தில் வெண்ணிலா காட்சிதர

மண்ணகத்தில் பச்சை மரங்களோ தோரணமாய்

அங்குமிங்கும் ஆடி அசைந்திருக்க ஆதித்யா

அம்மா படம்பிடித்தார்! ஆகா அழகாக!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

Friday, October 07, 2022

தம்பி கெஜராஜ் வாழ்க


நடிகர் தம்பி கெஜராஜ் வாழ்க!


பன்முக ஆற்றலைக் காட்டி வியக்கவைக்கும்

தம்பி கெஜராஜ் நடித்த படங்களைக்

கண்டேன் ரசித்தேன் களித்தேன் மகிழ்ந்தேனே!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்!


உண்மையாய் உள்ளது மட்டுமே நேர்மையல்ல!

உங்களுக்கு நீங்களே உண்மையாய் வாழவேண்டும்!

இந்தத் தெளிவே திறமையை உற்பத்திப்

பங்கில் திறனை அதிகரிக்கும் நேர்மறையாய்!

என்றுமே நேர்மையே நன்று.


மதுரை பாபாராஜ்

 

Thursday, October 06, 2022

மதுரை நினைவுகள்

 மதுரை நினைவுகள்!


ஆரப்பாளையம் வீட்டில்


இப்படியும் வாழ்ந்தேன்!


என்னிடம் அன்றிருந்த காசைச் செலவழித்தேன்

என்பதால் பத்துகாசு மீதம் இருந்தது!

புன்னகைத்தே வீட்டுக்குள் வந்தபோது வாசலிலே

அம்மா! எனக்குரல் கேட்டேன்! இரவலர்க்கு

என்னிடம் மீதம் இருந்தபத்து காசையும் 

தந்துவிட்டேன்! காசின்றி நானிருந்தேன் அன்றுதான்!

புன்னகைத்தேன் வாழ்வை நினைந்து.


மதுரை பாபாராஜ்

என்று முடியுமோ?

 என்று முடியுமோ?


பொன்பொருள் பஞ்சமில்லை! ஆனாலும் நிம்மதி

கொஞ்சமும் இல்லையே! தேடுகின்றேன் தேடுகின்றேன்!

என்னடா வாழ்க்கை? விரக்தியில் வாழ்கிறேன்!

என்று முடியுமோ வாழ்வு?


மதுரை பாபாராஜ்

Tuesday, October 04, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


தயார்செய்தல் என்பதோ நாளும் மிகவும்

கவனம் கலந்திருக்கும் முக்கிய மாகும்!

தயாரிப்பே இன்றி செயல்படக் கூடும்

எனினும் துணிவுடன் நம்பிக்கை கொண்டு

செயல்பட கைகொடுக்கும் பார்.


மதுரை பாபாராஜ்

 

Monday, October 03, 2022

VOV IG SEKAR


நட்புத்திலகம் IG சேகர் அவர்களுக்கு வாழ்த்து!


நாளும் பறவைவிடு தூதில் வணக்கத்தைக்

காலைப் பொழுதில் அனுப்பி அகமகிழ்வார்!

பால்போன்ற மாசற்ற புன்னகை ஏந்துகின்ற

ஆளுமை கொண்டவர் நட்புத் திலகமாம்

சேகராவார்! வாழியவே நீடு.


மதுரை பாபாராஜ்

 

கவிவித்தகர் பொற்கைப்பாண்டியன்


கவிவித்தகர் பொற்கைப் பாண்டியனுக்கு வாழ்த்து!


கவிஞரின் இரண்டாம் உயிர் நூல் வெளியீடு!


நாள் 03.10.22


இடம் மதுரைத் தமிழ்ச்சங்கம்


வாழ்த்துகள் சந்தக் கவிஞரே பாண்டியன்!

தாய்த்தமிழை நேசிக்கும் பாவலரே! வாழ்த்துகிறேன்!

தூயநட்பே நான்காம் தமிழ்ச்சங்கம் வாழ்த்திட

நீவாழ்க நற்றமிழே! நீடு.


மதுரை பாபாராஜ்

 

கவிஞர் பாலா


கவிஞர் பாலாவுக்கு வாழ்த்து!


உயரமே அழகு!


உயரமான கோபுரம் ஊருக் கழகே!

உயரமான பேரலை ஆழிக் கழகே!

உயரமான மாமலைகள் நாட்டிற் கழகே!

உயரமே பாலாவை ஆளும் அழகாம்!

உயர்வுள்ளல் வாழ்விற் கழகு.


மதுரை பாபாராஜ்

 

Sunday, October 02, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


.செயல்படுத்தும் நேரமென்றே இங்கொன்றும்  இல்லை!

தயங்காமல் வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்வில்

செயலாற்றி சாதித்து நம்மிலக்கை நோக்கி

நடைபோட வேண்டும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் விஓவி ராமசாமி


நண்பர் VOV ராமசாமி அனுப்பியதற்குக் கவிதை:


காலமும் நேரமும் காத்திருக் காதிங்கே!

காலத்தே நாமோ முயற்சியை ஊக்கமுடன்

வாழ்வில் எடுத்தால் செயல்கள் நிறைவேறும்!

காலம்! வழிகாட்டி! செப்பு.


மதுரை பாபாராஜ்

 

வள்ளுவத்தின் அறம்

குறள்நெறிக் குரிசில் CR கருத்துக்குக் கவிதை:


வள்ளுவத்தின் அறம்!


அடக்க முடைமை ஒழுக்க முடைமை

கடைப்பிடித்தால் உள்ளம் பிறனில்லை நாடி

விழையாமல் வாழ்க்கை தடம்புர ளாமல்

உளைச்சலின்றி வாழலாம் செப்பு.


மதுரை பாபாராஜ்


Vovkaniankrishnan:

வள்ளுவத்தை

வாழ்விக்க

வாழ்ந்து காட்டுவதே

வழி.


அருமை..ஐயா


தெ.கி


காரைக்குடி 02.10.22 தையல்

 பாட்டி தைத்த தையல்!


காரைக்குடி 02.10.22


பேரன் வருணுடைய ஆடை கிழிந்ததைப்

பார்த்ததும் தையலாம்  பாட்டியோ ஊசிநூல் 

கோர்த்தே தைத்தாள் கரங்கொண்டே ஆர்வமுடன்!

பார்த்து ரசித்திருந்தோம் இன்று.


மதுரை பாபாராஜ்


Saturday, October 01, 2022

குடும்பத் தளபதி


எங்கள் குடும்பத் தளபதி திருமதி லெட்சுமி முத்துவீரன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத்திருநாள்: 02.10.2022


இல்லறமுத்துக்கள்:

மு.ரகுவீரகணபதி-- அமுதா-- நான்சி

மு.பாலமுரளி-உமா--

சௌந்தர்யா--கௌசல்யா

மு.சரவணப்பெருமாள்-- சித்ரா-- தேஜஸ்வினி

மு.ராஜ்குமார் -- பிருந்தா-- கோசல்


அகவை 80/81


எண்பதைக் கண்டுவிட்ட எங்கள் தளபதி!

எங்கள் குடும்பத்தின் ஒப்பற்ற அன்னை!

சுற்றம் குடும்பத்தார் சூழ்ந்திருந்து வாழ்த்த

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ் -வசந்தா

நடிகர் கெஜராஜ் -- மல்லிகா

திருமதி ராஜபாக்யம்-- தெய்வத்திரு.ஜோதிகுமார்

குடும்பத்தார்


 

சான்றோர்களை வணங்குவோம்


 மகாத்மா காந்தி பிறந்தநாள்!

பண்பாளர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்!

பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள்!


நாள் 02.10.2022


இந்திய நாட்டில் பிறந்தே உலகமே

கண்டு வியக்கின்ற வண்ணமிங்க வாழ்ந்தவர்கள்!

அண்ணலும் லால்பகதூர் சாஸ்திரியும்! போற்றுவோம்!

செந்தமிழ் நாட்டில் பிறந்தே எளிமையும்

உண்மையும் வாழ்வாக  வாழ்ந்து மறைந்தவர்

பண்பாளர் காமராசர் ஏந்தல் நினைவுநாள்!

தன்னிக ரில்லாத் தலைவர்கள் மூவரை

என்றும் வணங்குவோம் நாம்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தனின் ஆங்கிலச் சொல்லோவியம்!


ஒவ்வொரு நேரமும் கண்ணாடி பார்க்கின்ற

போதிலும் இங்கே சிறந்த மனிதனைச்

சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததே என்றேநாம்

நற்பெருமை மற்றும் மகிழ்ச்சிகொள்வோம் நாமிங்கே!

பக்குவ மான விவேகம் கனியவைப்போம்!

என்றுமே நீதான் சிறப்பு.


மதுரை பாபாராஜ்