Saturday, September 30, 2023
மதுரக்காரன் பாடல்
மதுரக்காரன் பாரடா!
ஏடா ஏடா ஏடா
நான் மதுரக் காரன் தாண்டா
கீழடியே தமிழன்
வரலாற்றைச் சொல்லும்!
தூங்கா நகரம் என்று
ஊரு உலகம் சொல்லும்
தமிழ்ச்சங்கம் கண்டோம்
தலைநிமிர்ந்து நின்றோம்
மீனாட்சி கோயில்
தெப்பக்குளம் உண்டு
அழகர் கோயில் அழகை
பார்த்து ரசிக்க வேணும்
யானை மலை திருப்பரங்
குன்றம் கொண்ட நகரம்
ஆறுபடை வீட்டில்
இரண்டு உண்டு இங்கே!
பள்ளிகளும் உண்டு
கல்லூரி உண்டு
தொழிற் சாலை உண்டு
மருத்துவமும் உண்டு
வைகை ஆறு உண்டு
புராணக் கதை உண்டு!
சித்திரை மாதம் இங்கே
திருவிழாதான் உண்டு!
நாலு மாசி வீதி
தேரோட்டம் உண்டு!
ஜிகர்தண்டா பானம்
மதுரை சிறப்ப சொல்லும்
அந்தத் தலைப்புலதான்
திரைப்படமும் உண்டு
எல்லா மதமும் உண்டு
ஒற்றுமையும் உண்டு
அந்தந்த மதங்களுக்கு
கோயில் குளம் உண்டு
மனித நேயம் கொண்டு
பழகுவது உண்டு
மதுரக் காரன் என்றால்
தனிப்பெருமை உண்டு
மதுரை பாபாராஜ்
Friday, September 29, 2023
Thursday, September 28, 2023
மனதின் தவிப்பு
மனதின் தவிப்பு!
சொன்னசொல்லைக் காக்க வழியின்றி வாழ்கிறேன்!
என்னசொல்ல? எப்படித் தான்சொல்ல?
என்றுநான்
சொன்னசொல்லைக் காப்பேனோ சொல்?
மதுரை பாபாராஜ்
Green Trends
சிகையழகு திருத்தமோ அற்புதம்!
GREEN TRENDS CUTTING STYLE!
கத்தரிக்கோல் சீப்பு இவற்றை விரல்களில்
அட்டகாச மாகப் பிடித்தே சிகையழகை
வெற்றிகர மாகத் திருத்துகின்ற ஆற்றலை
அற்புதமாய்க் காட்டுகின்றார் இங்கு.
சிகைதிருத்தம் மற்றும் முகத்திருத்தம் செய்ய
வகைவகை யாகத்தான் வண்ணக் கலவை
வகைகளை நம்மேல் தெளித்தே அழகின்
சிகரத்தைக் காட்டுகின்றார் பார்.
மதுரை பாபாராஜ்
Wednesday, September 27, 2023
Monday, September 25, 2023
நண்பர் எசக்கிராஜன்
நண்பர் எசக்கிராஜன் அனுப்பியதற்குக் கவிதை!
ஏழையின்முன் உன்செல்வம் பற்றியே பேசாதே!
வாட்டுகின்ற துன்பத்தில் வாடுபவன் முன்னேயோ
ஊற்றெடுக்கும் உந்தன் மகிழ்ச்சியைப் பேசாதே!
நாளும் வலிமையைப் பற்றி வலிமையற்ற
ஆளிடம் பேசாதே! பெற்றோரே இல்லார்முன்
தாய்தந்தை பற்றித்தான் பேசாதே!
புண்படும்!
காயப் படுத்தாதே தப்பு.
மதுரை பாபாராஜ்
Saturday, September 23, 2023
Friday, September 22, 2023
வள்ளுவத்தைப் பின்பற்று
வள்ளுவத்தைப் பின்பற்று!
குறள் 305:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்
கோபம் கொள்ளாதே!
AVOID ANGER! BE HEALTHY!
கோபம்.. நமது உடலில் ஏற்படுத்தும் தீமைகள்:
நமக்கோ இரத்த அழுத்தமோ கூடும்!
இதயநோய் உண்டாகும்! மூச்சுவிடும் போக்கில்
படபடப்பு கூடும்! உடல்நடுங்கும்! அல்சர்
மனத்தடு மாற்றம் செயல்களும் சொல்லும்
அனைத்துமே கட்டுப்பாட் டைமீறிச் செல்லும்!
உறவுகள் பாதிக்கும்! நிம்மதிக்கு வேட்டும்
மனநிலை பாதிப்பும் உண்டு.
மதுரை பாபாராஜ்
இரக்கம் வருமா?
நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய படத்திற்கு நன்றி!
இரக்கம் வருமா?
தலையிலே சும்மாடு வைத்தே அதன்மேல்
கடவுள் சிலைகளைக் கூடையில் வட்ட
வடிவத்தில் நன்றாய் அடுக்கி, இடுப்பில்
குழந்தையைக் கையால் அணைத்தே சிலைக்கு
விலைகூறி விற்றுப் பணமாக்கி இங்கே
ஒருசாண் வயிற்றுப் பசியடக்கும் பெண்ணை
கடும்வறுமை வாட்டி வதைத்திருக்க நாளும்
படும்பாட்டை தந்ததேன் அக்கடவுள் இங்கு?
உழைத்தால் உயர்வதுதான் என்று?
மதுரை பாபாராஜ்
Thursday, September 21, 2023
இன்றைய வீடு
இன்றைய வீடு!
வீட்டுக்குள் சென்றால் அறைகளோ மூன்றிருக்கும்!
காட்சிப் பொருள்கள் நிறைந்திருக்கும்!
கேட்பவர்கள்
யாருமில்லை! வாங்க! வரவேற்போ இல்லைதான்!
பார்ப்பதற்கு எந்த அறையில் எவருள்ளார்?
பார்க்கவேண்டும் சென்று கதவைத் திறந்தேதான்!
வாருங்கள் என்பார் மடிக்கணினி பார்த்தேதான்!
வீட்டின் விருந்தோம்பல் இன்று.
மதுரை பாபாராஜ்
Tuesday, September 19, 2023
ஒன்று முதல் பத்து முடிய
ஒன்றும் சுழியமும் ஒன்று!
இந்திய நாடு ஒன்று!
ஒன்றும் ஒன்றும் இரண்டு!
குறளின் அடிகள் இரண்டு!
இரண்டும் ஒன்றும் மூன்று!
இயல்இசை நாடகம் மூன்று!
மூன்றும் ஒன்றும் நான்கு!
வெண்பா அடிகள் நான்கு!
நான்கும் ஒன்றும் ஐந்து!
நமக்குப் புலன்கள் ஐந்து!
ஐந்தும் ஒன்றும் ஆறு!
உணவின் சுவைகள் ஆறு!
ஆறும் ஒன்றும் ஏழு!
குறளின் சீர்கள் ஏழு!
ஏழும் ஒன்றும் எட்டு!
உலகின் திசைகள் எட்டு!
எட்டும் ஒன்றும் ஒன்பது!
உணர்ச்சிப் பண்புகள் ஒன்பது!
ஒன்பதும் ஒன்றும் பத்து!
பிள்ளைப் பருவம் பத்து!
மதுரை பாபாராஜ்
Monday, September 18, 2023
பணிக்களம் -- இல்லறம்
பணிக்களம்!
அமையும் பணிக்களத்தில் ஆற்றலைக் காட்டி
இமைப்பொழுதும் சோராமல் சாதனைகள் செய்தே
விருதுகள் பட்டங்கள் பெற்றே மகிழ்வார்!
பருவத்தில் இல்லறம் ஏற்று.
இல்லறம் -- இணையர்!
இல்லறத்தை ஏற்றே இணையராய் மாறுவார்!
நல்லறம் போற்றி குழந்தைகள் பெற்றெடுப்பார்!
இவ்வுலக வாழ்க்கை சுழன்றேதான்
சென்றிருக்க
பிள்ளைகள் ஏற்பார் தொடர்ந்து.
மதுரை பாபாராஜ்
பள்ளி கல்லூரி
தேரை நிலைநிறுத்தும் பெற்றோர்!
மேனிலைப் பள்ளிக்குச் செல்வார் சிரிப்புடன்!
ஆனமட்டும் கற்று மதிப்பெண்கள் பெற்றேதான்
ஆர்வமுடன் கல்லூரி சேர முயற்சிப்பார்!
தேரை நிலைநிறுத்தத் தான்.
கல்லூரி படிப்பு!
கல்லூரிக் கற்றலில் ஆண்டுகள் போய்விடும்!
ஒன்றாய் இருந்தோர் பிரிந்தேதான் சென்றிடுவார்!
பன்னாடோ பல்துறையோ சென்றே படித்திருப்பார்!
தங்கள் சிறகை விரித்து!
மதுரை பாபாராஜ்
உலகம் உன்வசம்
உலகம் உன்வசம்!
விடியல் ஒளியுடன் விடியட்டும்!
நம்பிக்கை தன்னை விதைக்கட்டும்!
நேற்றைய பொழுதை நினைக்காதே
இன்றைய பொழுதை உனதாக்கு!
உழைத்து வாழ்ந்து முன்னேறு
சோம்பல் தன்னைத் தூக்கியெறி!
இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்து
நேர்மை உண்மை வாழ்வாக்கு!
உனக்கென உள்ளது தேடிவரும்
வருவதில் திருப்தி அடைந்துவிடு!
கிடைக்காத ஒன்றுக்கு ஏங்காதே!
கிடைத்ததை வைத்து நடைபோடு!
யாரையும் இங்கே பகைக்காதே
பொறாமை நெருப்பில் வேகாதே!
உன்னை நீயே உணர்ந்துவிடு
உலகம் உந்தன் வசமாகும்!
மதுரை பாபாராஜ்
Sunday, September 17, 2023
பெற்றோரே கவனம் தேவை
பெற்றோரே! கவனமாய் வாழுங்கள்!
பெற்றோரைப் பார்த்துக் குழந்தைகள் வாழ்க்கையில்
இப்படித்தான் வாழவேண்டும் என்றே உணரவேண்டும்!
இப்படிநாம் வாழக்கூ டாதென்ற எண்ணத்தைப்
பெற்றோர் உருவாக்கும் வாழ்வமைந்தால் பிள்ளைகள்
உள்ளம் உளைச்சலில் தான்.
மதுரை பாபாராஜ்
விழாவும் உளைச்சலும்
விழாவும் உளைச்சலும்!
இந்தவிழா அந்தவிழா என்றேதான் எந்தவிழா
என்றாலும் உள்ளம் உளைச்சலில் சொந்தவிழா
பந்தாடும் நேரத்தில் உற்சாகம் தோன்றுமா?
உள்ளம் விரக்தியில் தான்.
மதுரை பாபாராஜ்
பற்றின்றி வாழ்வோம்
பற்றுடன் பற்றின்றி வாழ்வோம்!
முட்டிமோதி வாழ்வதைக் காட்டிலும் நாள்தோறும்
எட்டிநின்று வாழ்ந்தால் மனதில் உளைச்சலில்லை!
விட்டுக் கொடுத்தால் அமைதியாக வாழலாம்!
பற்றுடன் பற்றின்றி வாழ்.
மதுரை பாபாராஜ்
முப்பெரும் விழா
முப்பெரும் விழாக்கள்!
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்தநாள்!
அறிஞர் அண்ணா பிறந்தநாள்!
தி மு க தொடங்கிய நாள்!
15.09.23--16.09.23--17.09.23
தமிழ்நாடு தன்னெழுச்சி காண்பதற்கு
என்றும்
இமைபோல் கடமையை, காலத்தைப் பொன்போல்
கருதி உழைக்கின்ற பாங்கினை இங்கே
பெருமையுடன் முப்பெரும் நாளின் விழாவாய்
நடத்துகின்றார் ஆண்டுதோறும் தான்.
மதுரை பாபாராஜ்
Friday, September 15, 2023
அறிஞர் அண்ணா
அண்ணா ஓவியத்தை வரைந்தவர் நண்பர் திரு.அன்பு அவர்கள்
அறிஞர் அண்ணாவின் புகழ் வாழ்க!
15.09.2023
அன்பகம் பண்பகம் மற்றும் அறிவகமாய்
என்றும் திகழ்கின்ற பேரறிஞர் அண்ணாவின்
தொண்டில் தலையாய தொண்டு தமிழ்நாடு
என்னும் பெயர்தந்த தொண்டு.
கடமையுடன் கண்ணியம் கட்டுப்பாட் டையும்
நடைமுறையாய்ப் போற்றச் சொன்னவர் அண்ணா!
புகழ்வாழ்க! என்றும் நிலைத்து.
மதுரை பாபாராஜ்
Wednesday, September 13, 2023
பெற்றோரே தெய்வங்கள்
பெற்றோரே தெய்வங்கள்!
அம்மா அப்பா நம்வாழ்வில்
அன்பும் அறிவும் அவர்கள்தான்!
ஆற்றலை வளர்ப்போர் அவர்கள்தான்
வாய்ப்பைத் தருவதும் அவர்கள்தான்!
இமைபோல் நம்மைக் காப்பார்கள்
நல்வழி காட்டுதல் அவர்கள்தான்!
ஒழுக்கம் கற்றுத் தருவார்கள்
பண்பை நமக்குச் சொல்வார்கள்!
நன்றாய்ப் படிக்கச் சொல்வார்கள்
பள்ளியில் சேர்ப்பதும் அவர்கள்தான்!
நமது வளர்ச்சியைக் கண்டேதான்
நாளும் மலைத்தே மகிழ்வார்கள்!
எத்தனை குழந்தை என்றாலும்
சமமாய் நடத்தி வாழ்வார்கள்!
நமது தேவை அறிவார்கள்
அறிந்தே கடமை செய்வார்கள்!
பெற்றோர்க் கில்லை என்றாலும்
நமக்கே கொடுப்பார் அவர்கள்தான்!
தெய்வத்தை நாமோ பார்த்ததில்லை
தெய்வம் நமக்கு அவர்கள்தான்!
மதுரை பாபாராஜ்
மாண்புமிகு முதல்வருக்கு வாழ்த்து
மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து!
மகளிர் உரிமைத் தொகை
மாதம் ரூபாய்1000!
காஞ்சிபுரத்தில் தொடங்குகிறார்!
தொடங்கும் நாள்15.09.23
மகளிர் உரிமைத் தொகையை வழங்கி
அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் மலர
நடைமுறை யாக்கி நமது முதல்வர்
மகத்தான சாதனையை நாடுபோற்ற செய்தார்!
அகங்குளிர அன்புடன் வாழ்த்து.
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்
ஊற்றெடுக்கும் சாதனைகள் ஊர்மெச்ச நாட்டுகின்றார்!
காக்கும் கரங்களாம் அன்பு முதல்வரை
நாள்தோறும் வாழ்த்துவோம் சூழ்ந்து.
மதுரை பாபாராஜ்
C1, பிரார்த்தனா
குரோவ் அடுக்ககம்
செங்கமல வளாகம்
இணைப்புச் சாலை
ஆதம்பாக்கம்
சென்னை 600 088
--------------------------------------
கைபேசி: 900 326 0981
--------------------------------------
Tuesday, September 12, 2023
Monday, September 11, 2023
Sunday, September 10, 2023
நந்தினி வெங்கடேசன் திருமணம்
திருமண வாழ்த்துப்பா!
திருமணம் நடைபெறும் கோயில்:
திருப்போரூர் கந்தசாமி
திருக்கோயில்!
மணமக்கள் வாழ்க வளமுடன்!
மணநாள்: 11.09.23
மணமகன்:D. வெங்கடேசன் B.Sc;
மணமகள்:S.நந்தினி B.Com;
குறள்நெறி் போற்றிக் குவலயம் மெச்ச
சிறப்புடன் வாழ்க! மகிழ்வுடன் வாழ்க!
நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!
அகங்குளிர வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்