Tuesday, April 30, 2024
Monday, April 29, 2024
மனைமாட்சி
மனைமாட்சி!
கணவன் மனைவி இருவேறு திக்கில்
தினமும் பயணம்! குழந்தைகள் பாவம்
அனலில் புழுவாய்த் துடித்தேதான் வாழ்வார்!
இணையர் பொறுப்பை உணர்ந்தே நடந்தால்
மனையில் குழப்பமில்லை சாற்று.
மதுரை பாபாராஜ்
Sunday, April 28, 2024
Saturday, April 27, 2024
வேலையோ வேலை
வேலையோ வேலை!
23.04.24
மேல்வேலை செய்பவர் இன்று வரவில்லை!
நான்பார்த்துக் கொள்கிறேன் என்றே தொடங்கினேன்!
மாடிக்கு மெத்தை உறைகளோ மூன்றையும்
கொண்டுசென்றேன்! அங்கே கொடியில் மிதியடிகள்!
மற்றும் பழைய துணிகளும் துண்டுகளும்
தொங்க அதையெல்லாம் வாளியிலே போட்டேதான்
மெத்தை உறைகளைக் காய்வதற்குப் போட்டுவந்தேன்!
அப்பப்பா வேலையைப் பார்.
துண்டுகள் மற்றும் துணிகளை நன்றாக
அங்கே அடுக்கினேன்! பார்த்தேன் மலைத்திருந்தேன்!
இங்கேதான் இப்படி! பானுதான் வந்தாரோ!
பல்வலி என்று வரவில்லை! பாவமென்றே
என்னால் முடிந்த கரண்டிகள் பாத்திரத்தை
நன்றாய்க் கழுவியே வைத்துவிட்டேன்! அப்பாடா!
என்றேதான் மூச்சுவாங்க நின்று.
மதுரை பாபாராஜ்
Friday, April 26, 2024
கீழே விழுந்தேன்
தள்ளிவிட்டார் விழுந்தேன்!
கல்லெறிந்தார் நான்பொறுத்தேன்! சொல்லெறிந்தார் நான்பொறுத்தேன்!
வில்லால் கணையெறிந்தார் நான்பொறுத்தேன்! உள்ளத்தை
முள்ளெனுத்துக் கீறுகின்றார் நான்பொறுத்தேன்! இன்னுமென்ன?
தள்ளிவிட்டார் நான்விழுந்தேன் இங்கு.
மதுரை பாபாராஜ்
Thursday, April 25, 2024
Tuesday, April 23, 2024
Monday, April 22, 2024
தனிமை
வாழ்வே தனிமைதான்!
வானொலி வந்தது! கேட்டு மகிழ்ந்திருந்தோம்!
வானொலி சென்று தொலைக்காட்சி வந்தது!
காணக் கிடைக்காத காட்சிகளைக் கண்டிருந்தோம்!
வாழ்க்கைப் பரபரப்பில் கைபேசி வந்தது!
ஆள்களின் கைகளில் கைபேசி! மூழ்கிவிட்டோம்!
ஆளுக் கொருமூலை நின்றேதான் பேசுகின்றோம்!
வீட்டில் இருந்தாலும் கைபேசி கையுமாய்
பாட்டிமுதல் இங்கே குழந்தைவரை இன்றிங்கே
வாழ்வே தனிமைதான் பார்.
மதுரை பாபாராஜ்
KRS KARAIKUDI:
தனிமையில் இனிமை காண முடியுமா என்ற கேள்விக்கு பதில் கை பேசி
நண்பர் இசக்கிராஜன் திருச்சி
கைபேசியும் போய் முகம் பார்த்து
வாயால் பேசும் வசந்தநாள் மீண்டும் வந்திடும் பார் ஒரு நாள்.
அழகர் திருவிழா பழைய நினைவு
மருமகள் சத்யாவின் கைவண்ணம் இன்று
[23/04, 06:48] Madurai Babaraj: அழகர் திருவிழாவுக்குச் சென்றுவந்த நினைவு!
பாக்யம் பாட்டி--எங்கள் குடும்பம்-- அழகர்சித்தப்பா குடும்பம்--பத்மா சித்தப்பா குடும்பம்!
அந்தக்காலத்தில் மதுரை மோதிலால் இரண்டாம் தெருவில் இருந்து பாக்யம் பாட்டி தலைமையில் நாங்களும்,பத்மா சித்தப்பா குடும்பமும்,அழகர் சித்தப்பா குடும்பமும் சேர்ந்து அதிகாலையில் சிம்மக்கல் நோக்கி நடப்போம். கூட்டத்துடன் கூட்டமாக செல்வதே மகிழ்ச்சிதான். வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை் பார்த்துவிட்டு நடந்தே திரும்புவோம். வரும் வழியில் மாடர்ன் கபேயில் ஆளுக்கொரு காபி குடிப்போம். நீர்ப்பந்தல் மோர்ப்பந்தல் என்று ஒரே அமர்க்களந்தான்.
இன்று நினைத்தாலும் இனிக்கிறது.
மீண்டும் வருமா?
மதுரை பாபாராஜ்
[23/04, 06:59] Saravananddl: இனிய நினைவுகள் மட்டுமே மிஞ்சுகிறது. ஆளுக்கொரு பாதையிலே பயணம். ஒரு குடும்பம் ஒன்று சேருவதே பெரும் பிரயத்தனம். சேர்ந்தாலும் செல்லிடப்பேசியே பிரதானம். மீண்டும் வாய்ப்பு வருவது கனவுதான்.
Sunday, April 21, 2024
Saturday, April 20, 2024
Friday, April 19, 2024
புளோரா குடும்பத்தினருக்கு வாழ்த்து
Flora: எங்கள் குடும்ப புகைப்படம் கடைசி தங்கை வளைகாப்பிற்கு போன மாதம் எடுத்தது ஐயா
Flora: நால்வருமே இறைவன் அருளால் ஆசிரியப்பணியை தொடர்கிறோம்....
Madurai Babaraj:
நால்வருக்கும் வாழ்த்து!
அகத்தில் அறிவைப் புகட்டியே நாளும்
அகத்தில் அறிவொளி யேற்றுகின்ற தொண்டை
மகத்தாக செய்தே மனமுவந்து வாழும்
சிறப்பான தொண்டுதனை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
Wednesday, April 17, 2024
காலையில் குரோவ் வளாகம்
காலைப் பொழுதில் குரோவ் வளாகத்தில் கண்ட காட்சி!
காக்கைகள் மற்றும் புறாக்களும் பூனைகளும்
வீட்டுக்கு வீடிங்கே பாலுறைகள் போடுவோரும்
நாட்டமுடன் செல்லும் நடைப்பயிற்சி மேற்கொள்வோர்
வீட்டில் அலுவலகம் பள்ளி பரபரப்பும்
காற்றிலே சீறிவரும் வண்டிகள் போட்டியிட
காவலர்கள் மற்றும் பணியாளர் எல்லோரும்
ஆட்டிப் படைக்கின்ற கோலத்தில் காலைதான்
லூட்டி அடிப்பதைப் பார்.
மதுரை பாபாராஜ்
Monday, April 15, 2024
Sunday, April 14, 2024
Friday, April 12, 2024
Thursday, April 11, 2024
Monday, April 08, 2024
Friday, April 05, 2024
Thursday, April 04, 2024
குறளும் என்குறளும்
குறள் 1049:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது
மு.வ உரை:
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
என் குறள்:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் உளைச்சல்
நெருக்கிடின் கண்பா டரிது.
மதுரை பாபாராஜ்