Sunday, November 30, 2025
Saturday, November 29, 2025
Friday, November 28, 2025
நண்பர் பழநி அவர்கள்
நண்பர் பழநி அவர்களுக்கு வாழ்த்து!
கோப்பைக் குளம்பியைப் புல்வெளியில் வைத்தேதான்
கோப்பைக் குளம்பி நனையாத வாறங்கே
பார்க்க, விரித்த குடைதன்னை மேல்வைத்தார்!
ஆக்கபூர்வ காலை வணக்கத்தை நண்பரோ
தூதனுப்பி வைத்திட்டார் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
ChatGPT
A Greeting for My Friend Pazhani
He set the little earthen pot upon the grassy field,
Yet kept it dry beneath his sheltering palm—
For seeing the clouds gather, he raised a wide umbrella overhead.
So too, my friend sent me his morning wishes—
A messenger of goodwill, warm and creative.
— Madurai Babaraj
கமுக்கம் தமுக்கு
கமுக்கம்-- தமுக்கு!
கமுக்கமாக செய்யவேண்டும் என்றே செயலைக்
கமுக்கமாக செய்ய முனைவார்கள் ஆனால்
கமுக்கமாக செய்ய விவரங்கள் இன்றி
தமுக்கடிப்ப தைப்போல மாறிவிடும் இங்கே!
கமுக்கம் தமுக்கடித்த தே.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Secret Turns to Slapstick
A deed meant to be done in secret,
they try to cloak in stealth and shade—
yet, lacking all the needed threads,
their covert craft collapses soon,
turning slyness into slapstick noise.
Thus secret turns to self-slap.
—Madurai Babaraj
மனிதத்தேனீ வாழ்த்துகள்
எல்லாம் நீங்கள் அளித்த ஊக்கமும் ஆதரவும்தான். மனிதத் தேனீ அவர்களே. உங்களது நட்பின் நிழலில் வளர்ந்தவர்கள் நாங்கள். நன்றி மறந்தால் மனிதர்களல்ல.
Thursday, November 27, 2025
Wednesday, November 26, 2025
3.இயல்வது கரவேல்
பாட்டின் சொரூபம் பாபாஜி.
Tuesday, November 25, 2025
Monday, November 24, 2025
பேரன் சுசாந்த்துக்கு வாழ்த்து
பட்டம் அணிசெய்யும் விழா வாழ்த்து!
மேற்பட்டம் சாதித்த பேரன்
R.S. சுசாந்த் ஸ்ரீராம்
பெற்றோர்
C. ரவி -- R.சுபாதேவி
நாள் 25.11.25
சென்னை நகரிலே பட்டப் படிப்பினை
நன்கு முடித்து துபாயிலே மேற்படிப்பை
அங்கே முடித்தேதான் பட்டத்தைச் சாதித்தாய்!
அன்புடனே ஆசிகளைத் தந்தேதான் வாழ்த்துகிறோம்!
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.
மதுரை பாபாராஜ்-- வசந்தா
குடும்பத்தார்
ChatGPT
Here is a poetic English rendering of your celebratory verse, preserving its warmth and blessing tone:
Graduation Blessings
Beloved grandson
R. S. Sushanth Sriram,
Proud achiever of his Master’s degree,
Son of
C. Ravi & R. Subhadevi
On this day — 25.11.25 —
From Chennai you rose with learning bright,
From Dubai you crowned your journey with might;
There you completed your noble quest,
And won this honoured degree with zest.
With love we offer blessings true,
May life flow sweet as Tamil dew;
Grow with grace, rise ever high—
A shining star in every sky.
Madurai Babaraj – Vasantha
and Family
Sunday, November 23, 2025
மதிப்பு
மதிப்பு!
ஆழ்கடலில் சிப்பிக்குள் தோன்றுகின்ற முத்துக்கள்
வாழ்வில் கலைப்பொருளாய் மாறினால் பேரழகு!
ஆழ்கடலில் சிப்பிக்குள் தோன்றி மறைந்துவிட்டால்
பாரில் மதிப்பாரோ? சொல்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Worth!
Pearls born deep in ocean shells
Become a splendour to behold
When shaped into the art of life—
A treasure crowned with worth untold.
But if they bloom in secret depths
And fade unseen beneath the sea,
Who in this world will value them?
Tell me—where lies their dignity?
— Madurai Babaraj
Saturday, November 22, 2025
Friday, November 21, 2025
Wednesday, November 19, 2025
ஒருபக்க நாணயம்!
ஒருபக்க நாணயம்!
ஒருபக்க நாணயம் செல்லுபடி யாக
ஒருபக்க நாணயம் செல்லாத தாக
இருபக்க நாணயம் கையிலே உண்டு!
ஒருபக்கம் செல்கிறது வாழ்வு.
மதுரை பாபாராஜ்
Tuesday, November 18, 2025
Monday, November 17, 2025
Sunday, November 16, 2025
செத்தால் மகிழ்ச்சி!
செத்தால் மகிழ்ச்சி!
16.11.2025
உயிருடன் வாழ்வதைக் காட்டிலும் செத்தால்
களிப்புறுவேன் என்கிறது வாழ்க்கையின் சூழல்!
இவர்தவறா? இல்லை அவர்தவறா? என்றே
எவரையும் சொல்ல விரும்பவில்லை உள்ளம்!
துவண்டு சரியும் மனம்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Joy in Death? —
When life itself grows heavier than breath,
And the heart whispers, “Perhaps in death lies rest…”
Who is to blame—this one or that?
The soul refuses to point a finger,
It only trembles, sinking low,
Burdened by a weariness deeper than words.
— Madurai Babaraj
Saturday, November 15, 2025
திராவிட மாடல் அரசு வாழ்க!
திராவிட மாடல் அரசு வாழ்க!
திராவிட மாடல் அரசின்
புகழோ உலகில் பரவுது!
உறவுக்கு கைகள் கொடுக்கும்!
உரிமைக்கு குரல்தான் கொடுக்கும்!
எல்லார்க்கும் எல்லாம் என்றே
சாதனை படைக்கும் அரசு!
வல்லமை பொருந்திய ஸ்டாலின்
முதல்வராய்த் திகழும் அரசு!
மக்கள் நலமே பேச்சு!
சமத்துவம் தானே மூச்சு!
பிணக்குகள் இன்றி வாழ்வோம்!
இணக்கத் தோடு வாழ்வோம்!
நேர்மறை ஒன்றே பாதை
எதிர்மறைக் கிடமே இல்லை!
தமிழைக் காக்கும் அரசு!
குறளைக் காக்கும் அரசு!
திராவிட மாடல் முரசு!
திசைகள் எட்டும் ஒலிக்கும்!
திராவிட மாடல் அரசு
வாழ்க! வாழ்க! வாழ்க!
மதுரை பாபாராஜ்


















































