Wednesday, March 31, 2021

மனிதத் தேனீ ரா.சொக்கலிங்கம்

 மனிதத் தேனீ ரா.சொக்கலிங்கம் 


விஜயா பிரிண்டர் ஸ்,மதுரை

புதுக் கணக்கு தொடக்கம்!

01.04.2021

நிறுவனம் தழைக்க வாழ்த்து!

உழைப்பிலே நேர்மை! செயலிலே தூய்மை!

நிலையிலே வாய்மை! நடுநிலை வாழ்க்கை!

வணிகத்தில் கொள்கை தனிமனிதப் பண்பு!

மனம்போல வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

குடிக்காதே!

 குடி குடியைக் கெடுக்கும்!


சரக்கடிக் காதே

தம்மடிக் காதே

குடும்பத்த தெருவுல

நிக்க வக்காதே!


சம்சாரத்த பாரு

குழந்தகள பாரு

பெற்றோர பாரு

உறவுகள பாரு


எதுத்தவீடு நல்லாருக்கு

தண்ணி அடிக்கல

பக்கத்துவீடு நல்லாருக்கு

தண்ணி அடிக்கல


நீமட்டும் ஏனிங்கே

தண்ணி அடிக்கிற?

ரோட்டு மேல ஏனோதான்

விழுந்து கெடக்குற?


பிள்ளங்கள படிக்கவக்கும்

கடமை இருக்குது

குடும்பத்த காப்பாத்துற

பொறுப்பு இருக்குது


தலநிமிந்து வாழவேணும்

நல்லா புரிஞ்சிக்க

நாலுபேரு மதிக்க வாழணும்

நல்லா தெரிஞ்சுக்க


மதுரை பாபாராஜ்









நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பருக்கு வணக்கம்


ஊடகம்-- விளம்பரம் -- எரிச்சல்!

வணக்கம் பறவையே! நண்பருக்கு நன்றி!

மனம்படும் பாட்டைத்தான் கேட்டுவிட்டுச் செல்லேன்!

உனக்கென்ன ஊடகம் பார்க்காத வாழ்க்கை!

மனமும் அடங்கவில்லை யே.


செய்திகள் பார்ப்பதற்கு ஊடகத்தைப் பார்த்திருந்தேன்!

எல்லாம் விளம்பரத்தை போட்டிபோட்டுக் காட்டின!

செய்திகள் கொஞ்சம்! விளம்பரம் ஏராளம்!

உள்ளம் எரிச்சலில் துள்ள தொலைக்காட்சிப்

பெட்டியை மூடினேன் நான்.


மதுரை பாபாராஜ்

Tuesday, March 30, 2021

மகள் திருமதி உமா பாலமுரளி அனுப்பியது

 மகள் திருமதி உமா பாலமுரளி அனுப்பியது


தமிழாக்கம் 

மனிதர்கள் பலவகை!

வாழ்வில் பழிசுமத்திப் பேசவேண்டாம் யாரையும்!

சேர்கின்ற நல்லோர் மகிழ்ச்சி தருவார்கள்!

சேர்கின்ற தீயோர் அனுபவ மாவார்கள்!

தேடிவரும் மோசமானோர் பாடம் 

உணர்த்துவார்கள்!

நாடிவரும் சான்றோர் நினைவிலே நிற்பார்கள்!

சேர்க்கையின் பண்பே சிறப்பு.


மதுரை பாபாராஜ

அய்யா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்

 



ஸ்டாலின்தான் வராரு!

விடியல் தரப் போறாரு!

வருவாரா? வென்று விடியலை இங்கே

தருவாரா? என்றே

எதிர்பார்க்கும் தேர்தல்!

அரையளவு வந்தது!

மீதி முடிவில்!

எழுந்து வருமென்று நம்பு.


மதுரை பாபாராஜ்

நீர் நூலுக்கு வாழ்த்து!

 நீர் நூலுக்கு வாழ்த்து!


நூலாசிரியர் .ப.திருமலை.

நீர்!

நேற்று--இன்று--நாளை?


நீர்நூலை நீரோ வெளிக்கொணர பட்டபாடும்

ஆர்வமும் புள்ளி விவரமும் மேற்கோளும்

நீர்மேல் எழுத்தல்ல! கல்வெட் டெழுத்தாகும்!

நீரின் றமையா துலகென்ற வள்ளுவத்தின் 

சாரத்தை நீராகத் தந்த திருமலையை 

வாழ்த்தி மகிழ்கிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

மீன்பிடிக்கக் கற்றுக்கொடு

 பழமொழிக்குக் கவிதை!


Give A MAN  a fish and you feed him for a day. Teach him how to fish and you feed him for his life time.

 — Italian proverb.

மீனை ஒருவருக்குத் தந்தால்  பசிதீரும்!

மீன்பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் நிரத்தரமாய் 

வாழ, வருமானம் காண வழிபிறக்கும்!

வாழவழி காட்டுதல் மேல்


மதுரை பாபாராஜ்


Monday, March 29, 2021

தெய்வத்திரு.கல்யாணி அக்காவுக்கு நினைவேந்தல்


 தெய்வத்திரு.கல்யாணி 

அக்காவுக்கு நினைவேந்தல்


30.03.21( 1943 மார்ச்)

மதுரை  வடக்குமாசி வீதி  இராமாயணச் சாவடிக்கு அருகில் வீடு!


குழந்தைப் பருவத்தில் தன்னுயிர்

நீத்தார்!

குடும்பத்தில் சோகமேகம்! துன்பத்தால் தந்தை

பணியைத் துறக்க முனைந்தார்! அலுவல்

பணியாளர் வற்புறுத்த மீண்டும் கடமை

சுமக்கத் துணிந்தார் தொடர்ந்து.


தெளிவாகப் பேசும் மழலைச் சிறுமி!

அழுகை அருவியில் பெற்றோரும் உற்றார்

உறவுகளும் ஏங்கவிட்டுச் சென்றுவிட்டார் அன்று!

மறக்காமல் இங்கே நினைத்தேதான் வாழ்வில்

வணங்குகிறோம் அன்பாய் மதித்து.


மதுரை பாபாராஜ்

குடும்பத்தார்


Sunday, March 28, 2021

மகள் திருமதி உமா பாலமுரளி அனுப்பியது!

 மகள் திருமதி உமா பாலமுரளி அனுப்பியது!


தமிழாக்கம்!

உறவின் உயிரே தகவல் தொடர்பு!

தொடர்பிழை தொய்வே உறவின் இழப்பு!

தகவல் தொடர்பைத் தொடர்தல் கலையே!

உறவின் மகிழ்ச்சியே வாழ்வு.



தாய்லாந்து மொழியில் திரு் கோ.சுந்தரர் அவர்களுக்கு வாழ்த்து




 நன்றி அஷ்ரப்்

திரு.கோ. சுந்தரகுமாருக்கு வாழ்த்து.

'தாய்'மொழியாக்கம்

இந்திய நாட்டின் தமிழ்நாட்டில் தோன்றிய

வண்டமிழ் வள்ளுவத்தை தாய்லாந்து தாய்மொழியில்

சுந்தரர் இங்கே மொழிபெயர்த்தார்! நூல்படியை

இந்திய நாட்டுப் பிரதமர் மாண்புமிகு

பண்பாளர் மோடியிடம் தந்த மகிழ்வான

அந்தத் தருணத்தை வாழ்த்து.


தாய்மொழி தாண்டியே தாய்லாந்து மக்களின்

'தாய்'மொழியில் வள்ளுவத்தை

ஆய்ந்து மொழிபெயர்த்தார்!

வாழ்க வளமுடனே வண்டமி்ழ்போல் வாழ்கவே!

வாழ்த்தி மகிழ்கின்றேன் இங்கு.

-------------------------------------------------------------------------

கோ.சுந்தர குமார்

வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா. 

மொழிபெயர்ப்புக்காக அமைக்கப்பட்ட குழுவில் நான் ஒரு அங்கத்தினராக மொழிபெயர்ப்பை சரிபார்க்கும் பணி. அதாவது, குறள் ஒன்றரை அடியில் சரியாக உள்ளதா, பொருள் எவ்வாறு உள்ளது என்று.

தாய் படிக்க பேச தெரிந்த மூன்று நபர்கள், நான் உள்பட, இந்த சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டோம்.

மொழிபெயர்ப்பு பணியை தாய்லாந்து நாட்டின் விஞ்ஞானி ஒருவரால் செய்யப்பட்டது.

முனைவர் சுவித். இவர் பாரத் ரத்னா கலாம் ஐயா அவர்களின் சில புத்தகங்களை தாய்மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.



மருமகன் ரவி அனுப்பியது

 வணக்கம்


தமிழாக்கம்

நீயே உனக்கே அகத்தூண்டல்! உன்னுடைய

தீர்வுக்கும் நீயே பொறுப்பு! மனத்துக்குள்

ஊக்கம் பெருக்கெடுக்க காரணமும் நீதானே!

நேர்மறை எண்ணமே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

Friday, March 26, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய பறவை படம்


 இன்றைய காலகட்டம்!

நண்பருக்கு வணக்கம்

இவரால் வருமோ? இதனால் வருமோ?

அவரால் வருமோ? அதனால் வருமோ?

எவரால் வருமோ? எதனால் வருமோ?

கொரோனா பயமுறுத்தும் வாழ்வு.


அந்தக் கொரோனாவே இன்னும் இருக்கிறதாம்!

இந்த உருமாற்றம் பெற்ற கொரோனாவோ

இங்கே வந்து பரவுதாம் என்செய்ய?

என்று முடியுமோ? சொல்.


தடுப்பூசி போடுதல் எல்லோரும் நாளும்

முகக்கவசம் போட்டி இடைவெளி போற்றி

நகர்த்துகின்ற நம்பிக்கை ஒன்றே வாழ்க்கை!

விதிகளைப் பின்பற்று வோம்.


மதுரை பாபாராஜ்

27.03.21

தன்னம்பிக்கை கொள்!

 தன்னம்பிக்கை கொள்!


தமிழாக்கம்

நான்கு மெழுகுவர்த்திகள்!

Peace-- Faith-- Love-- Hope


முதலாம் மெழுகுவர்த்தி நான்தான் அமைதி!

எதற்கெடுத் தாலும் சினந்தேதான் சீறும்

நடைமுற கண்டே அணைந்தேதான் போனேன்!

இரண்டாம் மெழுகுவர்த்தி நம்பிக்கை நான்தான்!

உலகம் விரும்பவில்லை என்னை! எனவே

நிலைகுலைந்தேன்! காற்றுவீச நானும் அணைந்தேன்!

இரண்டிற் கடுத்ததாய் மூன்றுதான்  அன்பு!

அருகில் இருந்தும் புறக்கணிப்பார் மக்கள்!

வெகுகாலம் காத்திருந்தேன்! நானும் அணைந்தேன்!

அடுத்ததாய் நான்காம் மெழுகுவர்த்தி நான்தான்!

தடுமாறி வந்தாள் பயந்தே சிறுமி! 

நடுங்காதே! தன்னம்பிக் கையாக உள்ளேன்!

அணையாத என்னை வைத்தே ஒளியை

இழந்ததை ஏற்று ஒளிகிடைக்கும் என்றேன்!

குழந்தை மகிழ்ச்சியுடன் வந்தேதான் ஏற்ற

இழந்த ஒளிகிடைத்த தங்கு.


எதனை இழந்தாலும் தன்னம்பிக் கையை

திடமாகப் பற்றிக்கொள் வெற்றி உறுதி!

படரும் இருளை அகற்றும் கதிரோன்

சுடராகும் தன்னம்பிக் கை.


மதுரை பாபாராஜ்

தாய்தந்தை நினைத்து வணங்கு!

 தாய்தந்தை நினைத்து வணங்கு!


தாயும் மகளும்!

தங்கை ராணி- மகள் அனுரேகா

சேய்ப்பருவம் கண்டாள்! சிறுமி நிலைகண்டாள்!

பூவை நிலைகண்டாள்! மங்கை நிலைகண்டாள்!

வாழ்வில் இணையராய்க் கண்டே மகிழ்ந்திருந்தாள்!

சேய்தந்த சேய்களாம் பேத்திகள் கண்டுவாழ்ந்து

பாட்டிப் பறவை சிறகை விரித்ததுவே!

தாய்தந்தை நினைத்து வணங்கு.



வாழ்வு

 வாழ்வு!

இதுவும் இவரும் நிரந்தர மென்றே

எதுவும் எவருமில்லா மண்ணக வாழ்வு!

எதுவும் எவரும் விரைந்தே மறையும்!

புதிர்கள் கொண்டதே வாழ்வு.


ஒன்றோ ஒருவரோ சென்றுவிட்டால் மற்றொன்று

வந்தே உதவும் துணைக்கரம் நீட்டும்!

இந்த நிலையில் புதிரை அவிழ்க்கின்ற

நம்பிக்கை ஊட்டுவதும் வாழ்வு.








இல்லறத்தை இனிமையாக்கு!


இல்லறத்தை இனிமையாக்கு!


உரிமைகள் மற்றும் கடமைகள் இந்த

இரண்டையும் போட்டுக் குழப்பாமல் வாழ்ந்தால்

கருத்தொன்றி ஆண்களும் பெண்களும் வாழும்

ஒருநிலை காணலாம் இங்கு.


ஆண்களோ பெண்ணை அடிமையாய் எண்ணுவதும்

ஆண்களைப் பெண்கள் துச்சமாய் எண்ணுவதும்

போட்டி பொறாமை எடுத்தெறிந்து பேசுவதும்

கூட்டை எரிக்கும் நெருப்பு.


ஆண்களும் பெண்களும் விட்டுக் கொடுப்பதே

ஊனமற்ற வாழ்வை உளைச்சலின்றி ஏற்படுத்தும்!

தேன்கூடு என்ற குடும்பம் கலையாமல்

பார்த்தல் விவேகம் உணர்.


பெருந்தன்மை கோழைத் தனமல்ல! விட்டுக்

கொடுப்பவர்கள் கெட்டுத்தான் போவதில்லை! வாழ்க்கை

நடுத்தெருப் போட்டியல்ல! வெற்றிதோல்வி பார்க்க!

சிறுமையைத் தூக்கி எறி.


தந்தையும் தாயும் சேயும் குழந்தை வளர்ப்பிலே

கண்ணுங் கருத்துமாய் அக்கறை காட்டவேண்டும்!

இந்த இருவருக்கும் என்றும் பொறுப்புண்டு!

கொஞ்சம் தவறினாலும்  சேய்கள் மனம்நோகும்!

பின்னால் இடித்துரைப்பார்  பார்.


இரண்டு சிறகும் அசைந்தால் பறக்கும்

இயக்கத்தைப் போல இணையர் இருந்தால்

குடும்பப் பறவை உயர்ந்தே பறக்கும்!

இரண்டிலே ஒன்று இணங்க மறுத்தால்

இயக்கம் தடுமாறும்  இங்கு.






Thursday, March 25, 2021

HAPPY BIRTHDAY TO MASTER NAVIL

 HAPPY BIRTHDAY TO MASTER NAVIL


26.03.2021

TODAY IS YOUR BIRTDAY

HAPPY HAPPY BIRTHDAY

RESPECT YOUR PARENTS

RESPECT YOUR TEACHERS

STUDY WELL NAVIL ALWAYS

THAT Will GUIDE YOU ALWAYS

FRIENDS AND RELATIVES ENCOURAGE

YOU CAN ACHIEVE MANY THINGS

PARENTS TEACHERS  SHAPE YOU HERE

LEARN AND BECOME GOOD CITIZEN

ELDERS BLESSINGS GUIDE YOU HERE

TO MAKE THE LIFE ALWAYS CHEER

HAPPY HAPPY BIRTHDAY

LONG LIVE HAPPY BIRTHDAY


E.S.VARUN ADITHYA

FRIEND & CLASS MATE

WITH GRANDFATHER

MADURAI BABARAJ

தன்குற்றம் நீக்கு!

 தன்குற்றம் நீக்கு!


குற்றவாளி நீஎன்றே சுட்டுவிரல் நீட்டலாம்!

மற்ற விரல்களோ உன்னையே நோக்கித்தான்

குற்றவாளி என்றுகாட்டும்! தன்குற்றம் நீக்கித்தான்

மற்றவர்மேல் குற்றம் சுமத்து.



Wednesday, March 24, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


குறளும் விளக்கமும்!


அதிகாரம்:அடக்கமுடைமை 

குறள் எண்:127

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு


நாணுதே நா!


கட்சிகள் கூட்டணி வைத்தே வரிந்துகட்டி

இப்படி அப்படி நாவை வளைத்தேதான்

அப்படிப் பொய்பேசவைக்கும் தேர்தல் அரசியல்தான்!

எப்படிப் பேசுகின்றார் மக்களை நம்பவைக்க!

அப்பப்பா! நாணுதே நா.




நந்தினி அக்காவுக்கு நன்றி!


நந்தினி அக்காவுக்கு நன்றி!

வருண் பிறந்தநாள் பரிசு: 24.03.21

வண்ண வண்ண வாத்து!

மஞ்சள் வண்ண வாத்து!


வருணுக்குப் பிறந்த நாளில்

நந்தினி அக்கா தந்தார்!

அருமை யான வாத்து!

அழகு நிறைந்த வாத்து!

குவா குவா வாத்து

குதித்து நீந்தும் வாத்து!

அசைந்து செல்லும் வாத்து!

அற்புத மான வாத்து!

பரிசாய்த் தந்த அன்பிற்கு 

நன்றி தந்தேன் நான்தான்!


வருண் ஆதித்யா

 

மருமகன் ரவி அனுப்பியது

மருமகன் ரவி அனுப்பியது


மாற்றலாம்!

பின்சென்று நாமோ தொடக்கத்தை மாற்றுவது

என்பதோ என்றும் முடியாது! ஆனாலும்

வந்த இடத்தில் இருந்து தொடங்கியே

இங்கே முடிவினை மாற்ற முடியுமே!

சிந்தனை மாற்றத்தின் வேர்.



Tuesday, March 23, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம் தமிழாக்கம்


 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

தமிழாக்கம்

நேர்மறை எண்ணத்தின் ஆற்றல் என்பதோ

வேண்டுமென்றே நம்மேல் திணித்த எதிர்மறையை

பார்த்துச் சமாளித்து நம்மிலக்கை எட்டுதல்

மட்டுமல்ல நம்மேல் திணித்தோரை மன்னிக்கும்

அற்புதமும் ஆகும் உணர்.



Monday, March 22, 2021

படிப்பின் பயன்


 படிப்பின் பயன்!

Sweet are the uses of adversity!

இன்னல்களின் பயன் இனிமை யானவை!


அன்றிருந்( து) இன்றுவரை இன்னல் துடிக்கவைக்க

நெஞ்சில் சுமையின் அழுத்தங்கள் ஆண்டது!

இன்றோ குழந்தை படிப்புக்கே ஏற்றவேலை!

கைநிறைய தந்தார் வருமானம்! இன்பந்தான்! 

இன்னல்கள் மாறி இனிமையான வாழ்க்கையைக்

கண்டோம் படிப்பின் பயன்.




Sunday, March 21, 2021

குறளும் விளக்கமும்

 குறளும் விளக்கமும்


கருத்தால் ஒன்று


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

( குறள்)

Rich gifts wax poor when givers prove unkind!

Shakespeare


அன்பளிப்பை அன்பின்றி தந்தால் பெறுபவர்கள்

புண்பட்டே உள்ளம் துடித்திடுவார் -- சின்னப் 

பொருளெனினும் அன்புடன் தந்தால் மகிழ்ந்திடுவார்!

திருக்குறள் கூறியதே அன்று.




நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்





தமிழாக்கம்!

தொடக்கம் முதலாய் அணுகுமுறை தன்னை

விடாமுயற்சி கொண்டே சரியான போக்கில்

திசையில் செயல்பட்டால்

வெற்றி உறுதி!

செய்வன திருந்தச் செய்.



Saturday, March 20, 2021

குறளும் விளக்கமும்!

 குறளும் விளக்கமும்!


குறிப்பறிந்து காலங் கருதி

வெறுப்பில

வேண்டும் வேட்பச் சொலல்.( குறள் 696)

தந்தையே என்றாலும் காலங் கருதவேண்டும்!

தந்தை முகக்குறிப்பைப் பார்த்துபொம்மை கேட்கவேண்டும்!

அந்தநிலை ஒன்றே குழந்தைக்கு வெற்றியாகும்!

மற்றநிலை தோல்வி!வெறுப்பு.



Friday, March 19, 2021

வாழ்க்கையை வாழப் பழகு!

 வாழ்க்கையை வாழப் பழகு!


காலைப் பொழுது புலர்ந்து படர்வதைப்போல்

நாளும் கவலைகள் பற்றிப் படர்கிறதே!

வாழ்க்கை நகர்வதோ இப்படி யானதேன்?

சூழ்நிலையின் கைதியாய் நான்.


வாழ்வை வளைக்க முடியாது! மண்ணக

வாழ்க்கை அமைவதற் கேற்ப வளைந்துகொடு!

சூழ்நிலை மாறும்! வசப்படும் வாழ்க்கைதான்!

வாழ்க்கையை வாழப் பழகு.



பென்னர் நண்பர் தல்ஜித்சிங் அனுப்பியது!

 பென்னர் நண்பர் தல்ஜித்சிங் அனுப்பியது!


தமிழாக்கம்.

மொழியுடைய தாக்கம் மகத்தானது! சொற்கள்

கடுமையா? தேன்கூட  விற்ப தரிதே!

இனிமையா? கார மிளகாயும் விற்கும்!

கனியிருப்ப காய்கவர்ந் தற்று.


மதுரை பாபாராஜ்

Thursday, March 18, 2021

நண்பர் மொகலீஸ்வரன், விசாகை

 நண்பர் மொகலீஸ்வரனுக்கு வணக்கம்.


மலர்ந்த மலரும் மலரத் துடிக்கும் 

அரும்பும் புலர்காலை நேரம் இனிய

வணக்கம் இயம்பும் அழகே அழகு!

மணக்கின்ற நட்பினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Wednesday, March 17, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

வீஓவி அண்ணாவின் பதிவு

VovAnnadurai:

மீளாய்வு செய்திட மேலொரு தருணம் 

வேண்டா வகையில் எதுசெய் தாலும்

முழுதாய்ச் செய்வோம் முதல் வாய்ப்பிலேயே!

வீஓவி அண்ணாவின் கருத்தைக் கவிதைவடிவில் முயற்சி

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

தமிழாக்கம்

மீளாய்வு செய்திட மேலொரு தருணம் 

வேண்டா வகையில் எதுசெய்த போதிலும்

நன்றாய் முழுதாய்ச் செய்வோம் முதல்வாய்ப்பில்!

செய்வோம் செயலை உணர்ந்து.


தமிழாக்கம்

செய்யும் செயலை முதல்வாய்ப்பில் முற்றிலும்

செய்வதே நல்லது! அச்செயலைப் பாதியிலே

விட்டுவிட்டு நேரம் ஒதுக்கிச் சரிப்படுத்தல்

சற்றும் சரியல்ல சாற்று.

பூக்களும் முட்களும்

 பூக்களும் முட்களும்!


பூக்களுக்கு மத்தியில் முட்கள் இருப்பதுபோல்

வாழ்க்கையில் அங்கங்கே சிக்கல் இருக்கலாம்!

பூக்களைப் பார்த்து ரசிக்கவேண்டும்! முட்களே

வாழ்க்கையென்றே எண்ணுதல் கேடு.


அமைந்துவிட்ட வாழ்க்கையை வாழும் கலையைச்

சுமையென்றே எண்ணாமல் கற்கப் பழகும் 

மனைமாட்சி ஒன்றே பெருமை! உணர்வோம்!

மனைதோறும் நிம்மதி உண்டு.



நண்பர் IG சேகர் அனுப்பிய பறவைபடம்

 நண்பருக்கு வணக்கம்


முழுப்பூசணியைச் சோற்றுக்குள் மறைப்பதா?

பூசணிக்காய் தன்னை முழுவதும் அப்படியே

சோற்றுக்குள் வைத்தடைத்தல் போல 

அரசியல்

தேர்தலில் கட்சிகள் நாட்டிலே பார்த்தறிந்த

காட்சிகளை மாற்றித்தான் பேசுகின்றார்

பொய்யுரைத்தே!

காட்சிபார்த்தோர் உள்ளபோதே தான்.





நண்பர் DGM இராமசாமி அனுப்பி படம்

 நண்பர் DGM இராமசாமி அனுப்பி படம்

வணக்கம்.

அடுத்தநாள் சற்றே தொடங்கியது! இங்கே

எழுந்தது! ஆகா ஒளிக்கதிர் வீச்சோ

உலகில் படர்ந்தது! நம்மைப்போல் என்றும்!

நலமே மலரட்டும் இன்று.




Tuesday, March 16, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


.

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்வின் குறிக்கோள் குறித்து வியக்கிறோம்!

ஆழ்மனத்தில் உள்ள பொறியோ கொண்டுசெல்லும்!

வாழ்வில் பொறியை விடாமல் தொடருங்கள்!

வாழ்வை அனுபவித்தல் மட்டுமின்றி அவ்வாழ்வை

வாழ்ந்துகாட்டக் கூடும் உணர்ந்து.



நண்பர் வீதிவிடங்கன் அனுப்பியது

 நண்பர் வீதிவிடங்கனுக்கு


வணக்கம்!

தமிழாக்கம்!

தன்னடக்கம் என்றால் வலிமையாம்! சீரிய

எண்ணமே தேர்ச்சியாம்!

என்றும் அமைதியே 

பண்பு ததும்புகின்ற ஆற்றலின் தோற்றமாம்!

பின்பற்றி வாழ்தல் உயர்வு.



சத்யப்பிரேமா-- கார்த்திக் பிறந்தநாள் வாழ்த்து


 மருமகள் மருத்துவர்  சத்யப் பிரேமா-- 

நாள் 17.03.21

மகன் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்

நாள் 19.03.21

இணையருக்குப் பிறந்தநாள் வாழ்த்து.


உடலின் இயக்க இயக்குந ராக

கடமைகள் செய்யும் மருத்துவர் சத்யா

அகங்குளிர வாழ்க மகிழ்ச்சியுடன் வாழ்க!

மகத்தாக வாழ்கபல் லாண்டு.


வெற்றிப் படமியக்கும் ஆற்றல் இயக்குநராம்

அற்புத கார்த்திக் வளம்பல பெற்றேதான்

பெற்றோர் குடும்பத்தார் வாழ்த்திசைக்க 

வாழியவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தும் இதயங்கள்

மதுரை பாபாராஜ்-- வசந்தா

குடும்பத்தார்.

Labels:

நண்பர் IG சேகர் அனுப்பியது

 நண்பருக்கு வணக்கம்


சொல்வது எளிது!

சொல்லத் துடிக்கிற சொல்லலாம்! செய்றதச்

சொல்லணும் சொன்னதச் செய்யணும்!

சொல்லிட்டு

செய்யாம விட்டா சிரிப்பாங்க! கேட்டுக்க!

செய்ய முடியும்னா சொல்லு.



Monday, March 15, 2021

திண்டுக்கல் பயண நினைவுகள்! 15.03.21

 திண்டுக்கல் பயண நினைவுகள்!

15.03.21

மகள் பிருந்தா  தந்த இட்லி அருமை!

போகும் வழியில் மரநிழலில் கார்நிறுத்தி

காலை உணவருந்த காருக்குள் உட்கார்ந்தே

ஆர்வமுடன் டப்பாவை நாங்கள் திறந்துபார்த்தோம்!

பார்த்ததும் மெய்மறந்தோம் அங்கு.


மல்லிகை வண்ணத்தில் பூப்போன்ற இட்லிகள்மேல்

எண்ணெய் தடவி மிளகாய்ப்  பொடிசேர்த்தே 

அன்பு மகளாம் பிருந்தா கொடுத்திருந்தார்!

நன்கு ரசித்தே உள்ளம் மகிழ்ந்திட

உண்டோம் பசியாற்றி தான்.





மகன் எழிலுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

 மகன் எழிலுக்குப் பிறந்தநாள்

வாழ்த்து!


15.03.2021

இல்லற முத்துக்கள்:

மனைவி: சத்யபாமா

மகன்கள்:

நிகில் அபிசேக் -- வருண் ஆதித்யா


ஆற்றல், உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை

நாற்றாக நட்டுவிட்டால் சாதனை வெற்றிதான்!

ஏற்றப் படிகளில் நாளும் படிப்படியாய்

ஆக்கபூர்வ முன்னேற்றம் காணுகின்றாய் வாழியவே!

ஊக்கமுடன் வாழ்கபல் லாண்டு!


அன்பு மனைவி, அறிவார்ந்த மைந்தர்கள்

என்றும் துணையிருக்க இல்லறத்தில் வள்ளுவத்தைக்

கண்போல காத்தேதான் பல்வளங்கள் சூழ்ந்திருக்க

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


கணினித் துறையில் தொழில்நுட்ப ஆற்றல்!

தனித்திறமை காட்டும் கலைத்துறை ஆற்றல்

எனப்பல ஆற்றலைக் கொண்டுள்ளாய் வாழ்க!

மனைமாட்சி போற்றிவாழ்க நீடு.

அப்பா:மதுரை பாபாராஜ்

அம்மா: வசந்தா

இணைந்து வாழ்த்துவோர்

குடும்பத்தார்


திண்டுக்கல் பயணம் 15.03.21

 திண்டுக்கல் பயணம்

தள்ளாட்டம்!

15.03.21

அக்கா- பாபாராஜ்- வசந்தா

தேநீர் குடிப்பதற்கு காரை உணவகம்

பார்த்து நிறுத்தினோம்! மூவரும் ஆர்வமுடன்

காரின் கதவைத் திறந்தே இறங்கினோம்!

காலெடுத்து வைக்கத் தத்தளித்தோம்! ஆகாகா

காலம் கொடுத்த முதுமை வலியது!

தாளமிட்டு மான்போலத் துள்ளிய அன்றெங்கே?

ஆடி அசைந்தே அலைந்து தவழ்கின்ற

நாடி தளர்ந்த நிலையேந்தும் இன்றெங்கே?

தேடிவரும் கோலமாற்றம் வாழ்வு.


மதுரை பாபாராஜ்


Sunday, March 14, 2021

நண்பர். IG சேகர் அனுப்பியது

 நண்பருக்கு வணக்கம்!


தேர்தல் பருவம்!

வேட்பாளர் வாய்ப்பில்லை என்றதும் வேறுகட்சி

கூட்டணியில்  சேர்ந்தே வாய்ப்பைப் பெறுகின்றார்!

காட்சியும் கோலமும் மாறிட, மாறிமாறிப்

பேட்டிதரும் சஞ்சலத்தைப் பார்.


மதுரை பாபாராஜ்

Saturday, March 13, 2021

பேராசிரியர் சுப வீ அவர்களுக்கு வாழ்த்து

 சுப வீ

குரல் கருத்து

அனைத்தும் அற்புதம்.

மதிப்பிற்குரிய பேராசிரியருக்கு வாழ்த்து.

கடலைக் குடத்தில் அடைக்க முடியும்!

கடலளவு நற்கருத்தை ஆகா! சுருங்க

விளக்கும் சுபவீ அறிஞர் அவர்கள்

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு




Friday, March 12, 2021

கிடைத்ததில் மகிழ்ச்சிகொள்


 கிடைத்ததில் மகிழ்ச்சிகொள்!

I was angered, for I had no shoes. Then I met a man who had no feet.

- Another chinese proverb

( பழமொழி உதவியவர் : திரு.சுப்ரமணியன்,தானே,மும்பை)


காலணி வண்ணங்கள் ஏராள மாயிருந்தும்

தேர்ந்தெடுக்க உள்ளமின்றி சோர்ந்தே நடந்துவந்தேன்!

கால்களே இல்லாமல் தத்தளிக்கும் மாந்தரைப்

பார்த்தேன்!  விரைந்தேன்! கிடைத்ததை வாங்கினேன்!

காலணி முக்கியம், காலற்ற மாந்தரைப்

பார்க்குமட்டும் இங்கே எனக்கு.



Thursday, March 11, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


தமிழாக்கம்

உற்பத்தித்திறனே மகிழ்ச்சி


சரியா னதைச்செய்தல் செய்யும் திறனாம்!

சரியாகச் செய்தல் நமது திறமை!

இரண்டும் இணைந்ததே உற்பத்தி ஆற்றல்!

தரத்தின் தளங்கள் இவை.


மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பியது

 நண்பருக்கு வணக்கம்!


சசிக்கலுக்குச் சிக்கலைத் தா!

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்

(அதிகாரம்:இடுக்கணழியாமை குறள் எண்:623)



கட்டிக் கொடுக்கவில்லை! கற்றுக் கொடுக்கவில்லை!

எப்படியோ வாழ்கின்றாய்! எங்கெங்கோ வாழ்கின்றாய்!

அப்படியே ஏற்றே இயல்பாக வாழ்கின்றாய்!

இப்படி மாந்தர்கள் வாழ்வதற்குக்  கற்கவேண்டும்!

சிக்கலுக்குச் சிக்கலைத் தந்துவிட்டால் சிக்கல்கள்

எப்படியும் ஓடிவிடும் சாற்று.



Wednesday, March 10, 2021

வீஓவி மலர்மிசை ஏகினான் வாதம்

 

வீஓவியில் 

மலர்மிசை ஏகினான்! ஏகாது வாதம்!


மலர்மிசை ஏகினான் என்றசொல்  வாதம்

வளர்ந்து வளர்ந்து தளர்ந்து தளர்ந்து

வளரும் முடிவின்றி மீண்டும் தொடரும்

சளைக்காமல் வாதிட கூட்டணி உண்டு

வரிந்துகட்டி நிற்பார் வளர்த்து.


மதுரை பாபாராஜ்

திருமிகு பாக்யஸ்ரீ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

 திருமிகு பாக்யஸ்ரீ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

நாள் 11.03.21

குறள்நெறி போற்றி குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு!

அடக்கம் அமைதி பணிவான பண்பை

நிறைவாய்க் கொண்டிருக்கும் நீங்களோ

வாழ்வில்

குறைவின்றி வாழ்க வளமுடன் என்றும்!

குறள்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

திருமதி ஆனந்தபகவதி பிரபு பிறந்தநாள்வாழ்த்து

 திருமதி ஆனந்தபகவதி பிரபு

அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


நாள்: 11.03.21

வள்ளுவத்தை வாழ்வியலாய்ப் பின்பற்றி வாழ்பவர்கள்!

பெற்றோர் கடமையைச் செவ்வனே செய்பவர்கள்!

தன்மகனைச் சான்றோனாய்ப் பார்த்துவக்கும் தாய்தந்தை!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


கவிஞர் வழக்குரைஞர் பேச்சாளர் என்றே

செறிவான பன்முக ஆற்றல் மிளிரும்

அறிவகம் கொண்டேதான் வாழும் மகளோ

மகிழ்ச்சியுடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

நண்பர் இசக்கிராஜன் அனுப்பியது

 நண்பர் இசக்கிராஜன் அனுப்பியது


தமிழாக்கம்

 இளமைப் பருவத்தில் அந்தத் தனிமை

வலித்தது! ஆனால் பக்குவம் பெற்ற 

வயதில் தனிமை இனிமையென் றுணர்ந்தேன்!

இரண்டும் தனிமை உணர்வு.



நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்! தமிழாக்கம்.

 நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்!

தமிழாக்கம்.

அடுத்தது என்ன? மகிழ்ச்சிதான்.!


பலநேரம் சூழ்நிலையோ ஏதாவ  தொன்றோ

தடையாக மாற தடுமாறி நிற்போம்!

அகத்தாலே புண்படுவோம் இங்கே சிலரால்!

புறச்சூழல் காரணத்தால்! பார்த்தே  உணர்ந்து

புறக்கணித்தே நின்றே, அடுத்த தென்ன?

விடைதேடு! முன்னேறு வாய்.



Tuesday, March 09, 2021

குடும்ப நண்பர் (SSK) திரு.சங்கரகைலாசம் அனுப்பியது-

 குடும்ப நண்பர் திரு.சங்கரகைலாசம் அனுப்பியது- 

மருத்துவர் எழுதிய அருமையான சொல்லோவியம்:


தமிழாக்கம்

மருந்தும் மகிழ்ச்சியும்

மருந்தில் மகிழ்ச்சியில்லை! மக்களே! மேலும்

மகிழ்ச்சியைப் போல மருந்தொன்று மில்லை!

மருந்தே விருந்தானால் வாழ்வே சுமையாம்!

மருந்தைத் தவிர்க்கும் நலம்.



மகள் உமா பாலமுரளி அனுப்பியது தமிழாக்கம்!

 மகள் உமா பாலமுரளி அனுப்பியது

தமிழாக்கம்!


தவறைத் தவறாகப் பார்க்கவேண்டும்! நாளும்

எனதென்றோ இல்லை உனதென்றோ வேண்டாம்!

எனதென்றால் குற்றம்! உனதென்றால் கோபம்!

உணர்வதே மேம்படுத்த லாம்.


நண்பல் IG சேகர் அனுப்பியது

 நண்பருக்கு வணக்கம்


பார்த்துக்கொள் பறவையே!


கட்சி அரசியல்!

அப்பக்கம் போகின்றார்! இப்பக்கம் போகின்றார்!

எப்பக்கம் எப்போது போகின்றார் யாரறிவார்?

அப்பக்கம் உள்ளபோதே இப்பக்கம் துள்ளுகின்றார்!

எப்பக்கம் யாரிருப்பா ரோ?


விந்தை மனிதராய் மாறுகின்றார் ஆட்சியை

எப்படி யேனும் பிடித்துவிட நாள்தோறும்

இப்படி ஏனோ துடிக்கின்றார்? பார்த்துக்கொள்

கட்சி அரசியலைத் தான்.


Monday, March 08, 2021

நண்பர. எழில்புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


தமிழாக்கம்

மனிதர்கள் வெற்றிக்குப் பின்னால் இயங்கும்

வினையூக்கி யாகவோ பெண்களே உண்டு!

மதித்திடுவோம் அன்னார் தியாகத்தை மற்றும்

அனைத்திலும் காட்டுகின்ற ஆர்வமான பங்கை!

மனத்தாலே பெண்களை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Sunday, March 07, 2021

சர்க்கரை நோய்

 சர்க்கரை நோய்!


சர்க்கரை ஆலையே வைத்திருப்பார்! ஆனாலும்

சர்க்கரை நோயென்று சர்க்கரை சேர்க்கவேண்டாம்

அக்கறையாய்ச் சொல்வார் மருத்துவர்!

கண்முன்னே

கொட்டிவைத்த சர்க்கரை செல்லமாய்ப் பார்த்தாலும்

எட்டிநிற்க வேண்டும் வெறுத்து.


மதுரை பாபாராஜ்