Thursday, February 29, 2024
Tuesday, February 27, 2024
Monday, February 26, 2024
Thursday, February 22, 2024
Tuesday, February 20, 2024
Saturday, February 17, 2024
முதுமையில் தனிமை
முதுமையில் தனிமை!
குழந்தைப் பருவத்தில் கூட்டமோ கூட்டம்!
சிறுவர் பருவத்தில் கூட்டமோ கூட்டம்!
நடுத்தர மான பருவத்தில் கூட்டம்!
இளமைப் பருவத்தில் கூட்டமோ கூட்டம்!
களப்பணி காண்பதில் கூட்டமோ கூட்டம்!
அலைந்து திரிந்தேதான் ஓயும் முதுமைப்
பருவத்தில் கூட்டம் விலகித் தனிமை
அரவணைக்க வாழ்ந்திருப்போம் இங்கு.
மதுரை பாபாராஜ்
Friday, February 16, 2024
Thursday, February 15, 2024
நண்பர் பென்னர் மோகன் மகன் திருமணம்
Wednesday, February 14, 2024
திரு ராஜ்குமார் ஜோதி
திரு ராஜ்குமார் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
அகவைத்திருநாள் : 15.02.24
குறள்நெறி போற்றி உலகத்தார் மெச்ச
சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.
பெற்றோரின் ஆசியுடன் ஜோதியின் அன்புடனும்
முத்தான மைந்தன் மருமகளின் பேத்தியின்
உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துடனும்
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
Monday, February 12, 2024
Saturday, February 10, 2024
நல்லொழுக்கம் போற்றுவோம்
நல்லொழுக்கம் போற்றுவோம்!
நல்லவழி நல்லொழுக்கம் நன்மைகள் உண்டாக்கும்!
கள்ளவழி தீயொழுக்கம் தீமைகள் உண்டாக்கும்!
நல்லொழுக்கம் போற்றப் பழகு.
மதுரை பாபாராஜ்
திரு சண்முகம் - முனியம்மா
திருமண நாள் வாழ்த்து!
நாள்: 09.02.24
இணையர்:
திரு.சண்முகம் *திருமதி ச. முனியம்மா
குறள்நெறி போற்றி உலகத்தார் மெச்ச
சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.
மகனும் மகளும் மருமகனும் சேர்ந்தே
அகங்குளிர வாழ்கபல் லாண்டு.
பெற்றோரின் ஆசியுடன் சுற்றத்தார் நண்பர்கள்
எல்லோரும் வாழ்த்தி மகிழ பல்வளங்கள்
பெற்றேதான் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
Friday, February 09, 2024
Thursday, February 08, 2024
Wednesday, February 07, 2024
என்னடா வாழ்க்கை?
என்னடா வாழ்க்கை?
Tuesday, February 06, 2024
Monday, February 05, 2024
மனைவி வசந்தா
மனைவிக்கு பாதிப்பு!
தலையிலே பேன்கள் படையெடுத்த தாலே
அலைபாய்ந்த கூந்தலை இங்கே குறைத்தார்
சிகையழகு செய்யும் நிபுணர்தான்! அந்தச்
சிகையழகு போனதே பார்.
ஏற்கனவே சாப்பாடு செல்லும் அளவிங்கே
முற்றும் குறைந்திட்ட காரணத்தால் மேனியோ
சற்றும் பலமின்றி தள்ளாடும் கோலத்தால்
எப்போதும் நாளும் படுத்திருக்கும் காட்சிதான்!
அப்பப்பா பாவம் அவள்.
வலக்கை விரலில் நகச்சுத்தி கண்டோம்!
விரல்வீக்கம் நீங்க மருந்துகள் கட்டி
நலங்காண வைப்பதால் சாப்பாடு உண்ணக்
கலங்குகிறாள் ஊட்டுகிறேன் நான்.
இப்படித்தான் வாழ்க்கையோ இன்று நகர்கிறது!
எப்படியோ ஏக்கமுடன் வாழ்கின்றோம் நாள்தோறும்!
எத்தனை வேதனை இன்று?
மதுரை பாபாராஜ்
05.02.24