Thursday, September 30, 2021
CONGRATS! ALL THE BEST!
CONGRATS! ALL THE BEST!
NIKHIL ! SUCCESS IS YOURS!
First board exam for Xth std
Your diligence and relentless efforts
And concentraion with sincere involvement
Will fetch fruitful rich dividends!
Your glittering performance will be commended!
Guidance of your Teachers and
Blessings of your parents are
Guiding stars for your success!
Nikhil! This is your first jwel in your
Academic crown!
More jewels are awaiting in the future!
Congrats! All the best! Success is yours!
With blessings
Grand father
Madurai Babaraj
Grand Mother
Vasantha
Wednesday, September 29, 2021
6.ருக்மணி லட்சுமிபதி
6. ருக்மணி லட்சுமிபதி
1892--1951
விவசாயப் பின்னணி கொண்ட குடும்பம்!
குழந்தை திருமணம் தந்தை விருப்பம்!
மறுத்தார் உறவினர்! பள்ளிக்குச் சென்றார்!
படித்தார் உயர்வகுப்பு தான்.
மூன்று குழந்தைக்குத் தந்தை! மனைவியில்லை!
ஆனாலும் காதலித்து லட்சுமிபதி என்பவரை
ஏற்றார் கணவராக! பல்வேறு போராட்டம்
நாட்டு விடுதலைக் குத்தான்.
சென்னையின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார்!
பண்பட்டார்! அன்று துணைசபா நாயகராய்
பக்குவமாய் தன்கடமை செய்தார்! தன்னுடைய
ஐம்பத்து ஒன்பதாம் ஆண்டில் இறந்துவிட்டார்!
என்றுமே வாழ்வார் நிலைத்து.
மதுரை பாபாராஜ்
பழமொழிக்குக் கவிதை!
பழமொழிக்குக் கவிதை!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!
உள்ளத்தில் உள்ளதைச் சொல்லில் உரைக்கவேண்டும்!
உள்ளத்தில் ஒன்றாக சொற்களில் வேறானால்
தெள்ளத் தெளிவாய் அகத்தின் அழகினைத்
துள்ளி முகங்காட்டும் செப்பு.
மதுரை பாபாராஜ்
Tuesday, September 28, 2021
A to Z verse.
Daily activities of our Honourable CM M.K.Stalin mingling with public and helping without hesitation prompted me to write
A to Z verse.
HONOUABLE CM STALIN A TO Z
Act of Benevolent Care Daily Efficiently For
General public with Helping mind Integrated
automatically Join hands with Kindness
glittering with Love , Mercy a Nonpareil
attitude without Ostentation but with Pure
Quality Rare Service mind True and Unique
Vibrant Wise Xenial and Yare with Zest
reverberate the name of HONOURABLE CM M.K. STALIN everywhere.
Madurai Babaraj
Monday, September 27, 2021
.5.அஞ்சலை அம்மாள்
5. அஞ்சலை அம்மாள்
விடுதலைப் போரின் முதல்பெண்போ ராளி!
கணவருடன் பங்கெடு்த்தார்! அஞ்சலையின் வீரம்
மணக்கின்ற வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தால்
மனமே சிலிர்க்கிறது இங்கு.
இந்தியர்மேல் வன்கொடுமை ஏவினான் கர்னல்நீல்!
சென்னையில் வைத்த அவன்சிலையை நீக்கவே
தன்மகளாம் ஒன்பது வயதான லீலாவும்
பங்கெடுக்கப் போராடி நின்றார்! சிறைசென்றார்!
தன்மகளோ நான்காண்டு காலம் சிறைக்கொடுமை
புன்னகைத்தே ஏற்றார்! மகாத்மா மகிழ்ந்தேதான்
அன்புடன் வார்தாவில் தொண்டாற்ற
சேர்த்தாராம்!
பண்பாளர் வாழ்கவே நீடு.
மகப்பேறு பார்க்க சிறைவிட்டே வந்து குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறைக்குள்
அடைபட்டார்! அக்கொடுமை ஏற்று
மதுரை பாபாராஜ்
Attitude dilutes the problems!
Attitude dilutes the problems!
Problems may come and haunt
We have to face tactfully!
Jumping into conclusions
lead to further chaos
Blocking the entrance and exit
Arresting within the shell!
Every problem has its solution
Embedded within itself!
Our patience and attitude
Change the situations and
Bring forth solutions!
Till such time don't make mess!
Don't get agitated with anxiety!
Shed your negative attitude!
Nurture your positive attitude!
Negative attitude
Aggravates the problem!
Positive Attitude
Dilutes the problem!
Controls the situation
Shows way to solution!
At last peace of mind
Emerges elegantly!
Madurai Babaraj
From DR.Valayapatti KanniappanMadurai
Beautiful poems tell how to balance between the problems And solutions. Nice.
Sunday, September 26, 2021
பழமொழிக்குக் கவிதை!
பழமொழிக்குக் கவிதை!
ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூ சூடிநிற்க
உள்ளே இருக்குமாம் ஈருகளும் பேன்களுமே!
நல்லழகுப் பெட்டகமாய் மேனி தெரிந்தாலும்
உள்ளேயோ வக்கிர எண்ணங்கள் ஊற்றெடுக்கும்
கள்ளமனம் கொண்டதுபோ லாம்.
மதுரை பாபாராஜ்
சுமையெல்லாம் என்னோடு!
சுமையெல்லாம் என்னோடு!
என் சுமையை நான்தானே சுமக்கவேண்டும்!
எப்படித்தான் என்றாலும் நான்தானே வாழவேண்டும்!
அழுதாலும் புரண்டாலும் நிலைமைதான் மாறுமா?
யாரென்ன சொன்னாலும் ஆறுதல்தான் கிடைக்குமா?
எல்லோரும் வருவார்கள் ஏதேதோ சொல்வார்கள்?
சொல்வதெல்லாம் கேட்டாலும் தீருமா
சிக்கல்கள்?
என்னென்ன காரணங்கள் எப்படித்தான் சொன்னாலும்
என்றிங்கே நிலைமாற?
என்றிங்கே அமைதிகாண?
வேதனையும் சோதனையும்
தொடர்கதையாய் மாறிவர
ஆழியலை அடங்கிவிட்ட
நிலைபோல ஆகிவிட்டேன்!
காற்றடிக்கும் திசையெல்லாம்
காகிதமாய் மாறிவிட்டேன்!
பறக்கின்றேன் பறக்கின்றேன்
திசையறியாப் பறவைபோல்!
மதுரை பாபாராஜ்
Saturday, September 25, 2021
நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!
நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!
பறவையே! இன்றைய குறளும் விளக்கமும் கேள்!
குறள் 271:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
மற்றவர்க்கு நல்லொழுக்கம் கூறிவிட்டுத் தானிங்கே
பற்றுவது தீயொழுக்கம் ஆகிவிட்டால் நம்முள்ளே
சுற்றிவரும் ஐந்துபூ தங்களும் கைகொட்டித்
தங்களுக்குள் கேலிபண்ணும் செப்பு.
மதுரை பாபாராஜ்
Friday, September 24, 2021
மகானுக்கு வாழ்த்துகள்
மகானுக்கு வாழ்த்துகள்
பண்பட்ட ஆற்றல் நடிகராம் விக்ரமுடன்
அன்பு மகனாம் துருவும் மகான்படத்தில்
நன்றாய் நடித்துள்ளப் பாங்கினைக் கார்த்திக்தான்
உண்மைத் தெளிவுடன் சொல்லி இருக்கின்றார்!
இந்தப் படத்தினை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
Labels: கார்த்திக்
Thursday, September 23, 2021
நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய பறவையே! உனக்கொரு கவிதை!
Wednesday, September 22, 2021
நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்,!
நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்,!
மன்னிக்கும் பண்பே மனித இனமேந்தும்
பண்பில் சிறந்ததாம்! நம்மை வலிமையாக்கும்
ஒவ்வொரு நாளும்! அமைதியை உண்டாக்கும்!
நம்மனதில் தேங்குகின்ற குப்பைகளை நீக்கத்தான்
இங்கே துணைபுரியும்! மன்னிப்பு
என்பதோ
மற்றவர்க் கில்லை! நமக்காகும்
நற்பண்பாம்!
எப்போதும் பின்பற்று! நன்று.
மதுரை பாபாராஜ்
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி சாதனைத்திலகம் மு.க.ஸ்டாலின் வாழ்க!
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி
சாதனைத்திலகம்
மு.க.ஸ்டாலின் வாழ்க!
தெற்கில் எழுந்த கதிரவன் ஸ்டாலின்!
தினமும் சாதனை படைத்திடும் ஸ்டாலின்!
இந்தியா திரும்பிப் பார்த்திடும் ஸ்டாலின்!
பன்னாட்டு மன்றம் பாராட்டும் ஸ்டாலின்!
முன்னோடித் திட்டம் தருவது கண்டே
எல்லோரும் புகழும் காட்சிகள் உண்டு!
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற
திட்டம் நடைமுறை கண்டே வியப்பார்!
மக்கள் தொடர்பால் உறவை வளர்க்கும்
அருமை நட்புத் திலகம் ஸ்டாலின்!
வாக்களித் தவர்கள் மகிழ்ந்து போற்ற
வாக்களிக் காதோர் வாழ்த்திப் பேச
ஆக்க பூர்வ சாதனை செய்யும்
அருமைத் தளபதி ஸ்டாலின் வாழ்க!
அமைச்ச ரவையும் அலுவலர் குழுவும்
துளியும் சோராமல் கடமைகளை ஆற்றும்
அமைப்பைக் கண்டே வாழ்த்துவோம் சூழ்ந்து!
அருந்தமிழ் போல வாழ்கபல் லாண்டு!
மதுரை பாபாராஜ்