Sunday, October 31, 2021

நண்பர் BSNL இராமசாமி அனுப்பிய படத்திற்குக் கவிதை


நண்பர் BSNL இராமசாமி அனுப்பிய படத்திற்குக் கவிதை


பச்சைக் கிளிவந்தே காலை வணக்கத்தை

நட்புடன் கூறித்தான் நிற்கிறதே! நண்பரின்

நட்பில் திளைக்கிறேன்!

நண்பர் இராமசாமி

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


என்றும் நட்புடன்

மதுரை பாபாராஜ்

 

தெய்வத்திரு மைத்துனர் ஜோதிகுமார் பிறந்தநாள்!


தெய்வத்திரு மைத்துனர் ஜோதிகுமார் பிறந்தநாள்!


நாள் 01.11.21 அகவை 75


உலகில் பிறந்து கடமைகள் செய்தே

பிறவிப் பயனை அடைந்து குடும்பம்

சிறப்பாக வாழ வழிசெய்து விட்டே

நிறைவுடன் சென்றுவிட்ட உங்கள் நினைவில்

தினமும் வணங்குகிறோம் இங்கு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை:


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை:

வணக்கம்.

தாய்ப்பறவை இங்கே தலைகீழாய் நின்றேனும்

சேய்களைக் காக்கின்ற காட்சிகண்டேன்! தாய்மீது

சேய்களுக்கு நம்பிக்கை! தாயின் அரவணைப்பே

சேய்களுக்குப் பாதுகாப்பு!நி ம்மதியாய் வாழ்ந்திருக்கும்!

தாயன்பே வாழ்க்கையின் வேர்.


மதுரை பாபாராஜ்

 

Saturday, October 30, 2021

fond and memorable memories of our Egypt 🇪🇬 trip three years ago. 😃🙏



 

: In fond and memorable memories of our Egypt 🇪🇬 trip three years ago. 😃🙏

 திரு.துரைசாமி திருவாசகம் திருமதி நிலமங்கை துரைசாமி இணையரின் எகிப்து பயணத்தின் நினைவு:

எகிப்து பயணத்தின் இன்ப நினைவின்
மகத்தான ஓவியம் தந்தவர் அம்மா!
அகங்குளிர வாழ்கபல் லாண்டு நலமாய்!
படைத்திடு்ம் ஆற்றலுக்கு வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா


நண்பர் துபாய் ராஜேந்திரன் அனுப்பிய படத்திற்குக் கவிதை


நண்பர் துபாய் ராஜேந்திரன் அனுப்பிய படத்திற்குக் கவிதை

இயற்கையின் பாடம்!

பாறையிலும் பூமலரும்! பாலையிலும் சோலையுண்டு!

நீள்குகைக்குள் அங்கே மரங்களுண்டு!

வாழ்விலே

சூழ்ந்துவரும் எல்லாத் தடைகளையும் வென்றுதான்

வாழ்வில் நிமிரவேண்டும் என்றே இயற்கைதான்

பாடம் உணர்த்திடும் பார்.


மதுரை பாபாராஜ் 


 

மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


வாழ்க்கை எளிதாய்,சிறப்பாய்,

எளிமையாய் 

மாறுமட்டும் காத்திருக்க வேண்டாம்! அமைந்திருக்கும்  வாழ்க்கையோ

சிக்கல் நிறைந்ததே! இத்தகைய

வாழ்வில் மகிழ்ச்சியாக வாழப் பழகவேண்டும்!

காலம் பறந்துவிடும் காண்.


மதுரை பாபாராஜ்

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை வாழ்த்து!


பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும்  குரு பூஜை வாழ்த்து!


30.10.21


ஆன்மிகத்தை நாட்டு விடுதலையை நாள்தோறும்

வாழ்வாகக் கொண்டு பயணித்த ஏந்தலாவார்!

சாதிமத வேறுபாட்டை ஏற்க மறுத்தவர்!

நேத்தாஜி போசின் நெருக்கமான நண்பரானார்!

ஏற்றார் தனிமனித நல்லொழுக்கப் பாதையினை!

போற்றுவோம் தேவரைச் சூழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்:


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்:


உள்ளதற்கும் இல்லா ததற்குமே நன்றிசொல்வோம்!

உள்ள மகிழ்ச்சிக்கும் அந்த நிலைதானே

உள்ளிருக்கும் காரணம்! என்றும் மறவாதே!

உள்ளத்தின் எண்ணமே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

Friday, October 29, 2021

மகள் முனைவர் சுபாதேவியின் கல்விப் பயணம்



மதுரை மலரும் நினைவுகள்


மகள் முனைவர் சுபாதேவியின் கல்விப் பயணம்!


பள்ளிப் படிப்பை முடித்ததும் பாத்திமா

கல்லூரி சேர விரும்பினாள்! சொக்கலிங்கம்

மற்றுமிங்கே ஜேம்ஸ்டீபன் ஏற்ற முயற்சியால்

வெற்றி கிடைத்ததே அன்று.


கேட்டதோ ஒன்று கிடைத்ததோ ஒன்றாக

வாட்டமின்றி நாளும் படித்தேதான் பட்டத்தை

ஆர்வமுடன் வென்றாள்! முதுகலை பட்டமும்

சேர்த்தாள்! முனைவரின் பட்டமும் வென்றேதான்

வாழ்விலே சாதித்தாள் நன்கு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்.



 நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்.


கனவுகளைக் கண்களில் தேக்காதே,! அந்தக்

கனவுகள் கண்ணீரில் சென்று மறையும்!

கனவுகளை உந்தன் இதயத்தில் தேக்கு!

இதயத் துடிப்புகள் ஒவ்வொன்றும் ஊக்கம்

விதைத்தே நினைவாக மாற்ற உதவும்!

கனவை நினைவாக்கப் பார்.


மதுரை பாபாராஜ்

மகன் எழிலரசன் கல்வியில் திருப்புமுனை!


மகன் எழிலரசன் கல்வியில் திருப்புமுனை!

1995--1998 அடைக்கலமாதா கல்லூரி!

அம்மா வசந்தாவின் முயற்சியால் முன்னேற்றம்!


பள்ளிப் படிப்பு முடிந்ததும் என்னபாடம்

கல்லூரி  வாழ்வில் எடுக்கலாம் என்றேதான்

உள்ளம் அசைபோட  அம்மா தமிழாசான்

தஞ்சையின் கோவிந்தம் மாள்தான் அறிவுரையை

தந்தார் கணினிப் படிப்பை படிப்பதற்கு!

முன்வைத்தார் மைந்தனுக்குத் தான்.


தஞ்சை அடைக்கல மாதாகல் லூரியில்

அன்புடன் சேர்த்தார்கள் அண்ணனும் தங்கையும்!

தஞ்சையில் அத்தையின் இல்லத்தில் 

தங்கினான்!

நன்முறையில் பட்டத்தைப் பெற்றான்!

கணினியில்

மென்பொருள் தேர்ந்து தெளிந்தே உயர்கின்றான்!

இன்றவன் வாழ்க்கைத் தளத்தை அமைத்தவள்

முன்னெடுத்த அம்மாதான் சொல்.


மதுரை பாபாராஜ்


 

தம்பி மகன் இன்றைய திரை இயக்குனர் கார்த்திக் படித்த மழலையர் பள்ளி!


மதுரை நினைவுகள்


தம்பி மகன் இன்றைய திரை இயக்குனர்

கார்த்திக் படித்த மழலையர்  பள்ளி!


மெய்யப்பன் 2வது தெரு--1985-86


வீட்டுக்குச் சற்றே எதிரிலே பள்ளிஉண்டு!

கார்த்திக் படித்தான்! பெரியம்மா அப்பக்கம்

காய்வாங்கப் போவார்கள்! கார்த்திக்கோ பள்ளியின்

வாயில் கதவருகில் எட்டியெட்டிப் பார்த்திருப்பான்!

பார்த்ததும் அங்கே "வசந்தாம்மா" என்றழைப்பான்!

பாசத்தின் உச்சம் அது.


மதுரை பாபாராஜ்

 

Labels:

சிறுவனாக இருந்தபோது அழுது அடம்பிடித் தேனாம் நான்!


மதுரை நினைவுகள்


சிறுவனாக இருந்தபோது அழுது அடம்பிடித் தேனாம் நான்!


ஜவ்மிட்டாய்க் கார ரிடமுள்ள ஊதிபோல

ஒன்றெனக்கு வேண்டும்! அடம்பிடித்தே வம்புசெய்தேன்!

என்தந்தை சித்தப்பா டீக்காராமை வாங்கிவரச்

சொன்னாராம்! அன்றே புதுமண் 

டபம்சென்றே

எங்கேயோ செய்யவைத்தே வாங்கிவந்தே

தந்தாராம்!

என்னிடம் தந்ததைச் சொன்னபின்பே அப்பாவோ

நிம்மதியாய் வந்தார் அலுவலகம் விட்டேதான்!

என்வம்போ இப்படியாம் அன்று.


மதுரை பாபாராஜ்

 

தம்பிகெஜாவும் அம்மாவும்! மதுரை மலரும் நினைவு!


தம்பிகெஜாவும் அம்மாவும்!

மதுரை மலரும் நினைவு!

பள்ளிக்குச் செல்ல மனமின்றி தம்பியோ

மெள்ள நடந்தேதான் புத்தகப் பையுடன்

துள்ளியே செல்வான்  அடுத்தத் தெருநோக்கி!

சித்தப்பா வீட்டிலுள்ள மாடிப் படியிலே

உட்கார்ந்து கொள்வான் எவரும் அறியாமல்!

அம்மாவோ பின்தொடர்ந்து சென்றிடுவார்! தம்பியைக்

கண்டு பிடித்தேதான் பள்ளியில் விட்டுவிட்டு

வந்திடுவார் வெற்றியுடன் தான்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!

மற்றவர்கள் என்னசெய்ய வேண்டுமென்றே எண்ணாமல்

அப்படி நீங்களென்ன செய்யவேண்டும் என்றெண்ணி

உற்றதைச் செய்தால் உயரலாம் வாழ்க்கையில்!

குற்றம் சுமத்தல் தவிர்.


மதுரை பாபாராஜ்

 

Thursday, October 28, 2021

BALA IS BALA !


BALA IS BALA !


BALA! MAN FROM A TINY VILLAGE

QUALIFIED IAS  WITH MOTHER TONGUE

THE TAMIL  AS MEDIUM

TRAVELLED FAR AND WIDE

ALL OVER THE WORLD

GREAT SCHOLAR AND RESEARCHER

IN INDUS CIVILIZATION IN DEPTH

HIS FAME AND NAME REVERBERATE

AND ADORN HIS CROWN WITH TWINKLING

JWELS OF MULTIFARIOUS ACHIEVEMENTS

AND MULTI TALENTED ASSIGNMENTS!

SPONTANEOUS OFFER OF PLUM POSTS

WORLD WIDE POURED IN

BUT BALA EXPRESSED HIS INABILITY

TO ACCEPT AT THE BEHEST OF HIS

NONPAREIL THIRST FOR RESEARCH

RESEARCH AND RESEARCH OF HIS INTEREST .

FROM A DOT HIS PROGRESS WIDENED

AND BECOME TALL AS HIS PHYSIQUE!

HIS PURSUIT WILL WIN 

MORE AND MORE LAURELS

IN THE YEARS TO COME!

I AM GIFTED TO SAY:

BALA IS MY FRIEND!


MADURAI BABARAJ


 

Wednesday, October 27, 2021

மகள் திருமதி உமா பாலு அனுப்பியதற்குத் தமிழாக்கம்!


மகள் திருமதி உமா பாலு

அனுப்பியதற்குத் தமிழாக்கம்!


ஒன்றி விடுதல் இரண்டு வழிகளுண்டு!

ஒன்று நமது உணர்வில் உருகுவது!

ஒன்றுநம் வேறுபாட்டில் நாம் உறைந்துபோதல்!

என்றும் உருகுதலே நன்று.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எசக்கிராஜன் அனுப்பிய ஆங்கிலத்திற்குத் தமிழாக்கம்


நண்பர் எசக்கிராஜன் அனுப்பிய ஆங்கிலத்திற்குத் தமிழாக்கம்

*_Relationship* Can not  be made with mood and conditions. They have to be maintained by Feelings._

_*Good Morning.*_

*_1028_*


மனநிலை மற்றும் நிபந்தனைக ளோடு

உறவுகளைக் காக்க முடியாது! நாளும்

உணர்வைப் புரிந்து பராமரிக்கும் பண்பே

உறவை வளர்க்கும் உணர்.


மதுரை பாபாராஜ்


 

இல்லம் தேடி கல்வி திட்டம்!

 Thank


இல்லம் தேடி கல்வி திட்டம்!

27.10.21

மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!

பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிப் படிப்போ
உருக்குலைந்து போனதால் மாணவச் செல்வம்
படிப்பிலே தொய்வு இடைநிற்றல் சூழல்
எதிர்கொண்டார் ஏக்கமுடன் தான்.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகவென்றார் வள்ளுவர்!
கற்கின்ற சூழலை வீடுதேடி ஏற்படுத்த
அக்கறையாய்க் கொண்டுவந்தார் வாழ்த்து.

இல்லத்தைத் தேடிவரும் கல்வியெனும் திட்டத்தை
நல்மனங் கொண்டே நடத்துகின்றார் நம்முதல்வர்!
கல்வியைக் கற்று முழுமை பெறுவதற்கே
நல்வாய்ப்பைத் தந்தார் மகிழ்ந்து.

கற்கின்ற ஆண்டில் இடைநிற்றல் இல்லாமல்
கற்பதற்கு வாய்ப்பை உருவாக்கி பிள்ளைகள்
கற்பதை இவ்வரசு அக்கறை கொண்டுதரும்
அற்புதத் திட்டம் இது.

அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் எண்ணி
இணையற்ற திட்டத்தைத் தந்தார்கள் வாழ்க!
முனைப்பும் முயற்சியும்  கொண்ட முதல்வர்
பணிகளை வாழ்த்துவோம் சூழ்ந்து.

மதுரை பாபாராஜ்


பண்பாளர் போப் ஆங்கில மேற்கோளின் தமிழாக்கம்


பண்பாளர் போப் ஆங்கில மேற்கோளின் தமிழாக்கம்:


நதிகளோ தண்ணீரைத் தான்குடிப்ப தில்லை!

மரங்கள் கனிகளைத் தானுண்ப தில்லை!

கதிரோன் ஒளியைத் தனக்கேற்ப தில்லை!

மலர்கள் மணங்களைத் தாம்ரசிப்ப தில்லை!

பிறர்மகிழ வாழ்தல் இயற்கை விதியாம்!

பிறக்கின்றோம் நாம்தான் பிறருக் குதவ!

பிறவித் துயரங்கள் எப்படியென் றாலும்

நமக்கு மகிழ்ச்சிதான் நல்வாழ்க்கை என்றால்!

நமக்குப் பெருமகிழ்ச்சி நம்மால் மகிழ்ச்சி

பிறருக்கு வாழ்விலென்றால் தான்.


மதுரை பாபாராஜ்


Tuesday, October 26, 2021

நண்பர் எழில்புத்தன் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் எழில்புத்தன் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


உங்கள் பணியில் செயல்திறனைக் காட்டுங்கள்!

தற்போது நீங்களிங்கே ஏற்ற பொறுப்புகளை

முற்றும் திருப்தியாக தேர்மறை எண்ணமுடன்

இங்கே முடித்தால் இலக்கை அடைவதோ

என்றும் எளிதாம்! உணர்.


மதுரை பாபாராஜ்

 

வெங்காயத்துடன் கைபேசி


வெங்காயத்துடன் கைபேசி!


சண்முகம் இல்லத் தரசியைக் கூப்பிட

கைபேசி எண்ணைச் சுழற்றினார்! கைபேசி

தன்னை மனைவி முனியம்மா தான்மறந்தே

வெங்காயப் பையிலே வைத்ததால் அங்கலற

அப்பை இருந்ததோ எங்களின் வீட்டிலே!

வெங்காயம் கொட்டினார்! கைபேசி கண்டனர்!

அம்மா வியந்தார்கள் கண்டு.


மதுரை பாபாராஜ்


 

குப்பை உணவுகள்! JUNK FOOD!


குப்பை உணவுகள்!

JUNK FOOD!

குப்பை உணவென்று நாளும் படித்தாலும்

குப்பை உணவைத் தவிர்க்காமல் உட்கொண்டே

குப்பையாய் நோய்களை உண்டாக்கி வாழ்கிறோம்!

குப்பை உணவைத் தவிர்.


மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்:


மருமகன் ரவி அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்:


உறுதிமொழி, கோரிக்கை ஒவ்வொரு நாளும்

எதிர்பார்த்தல்  அற்றதே வாழ்க்கையில் நட்பு!

எதிலுமே நேர்மையுடன் நம்பிக்கை தன்னை

வெளிப்படுத்தல் நட்பிற்குப் பண்பு.


மதுரை பாபாராஜ்

 

Monday, October 25, 2021

நண்பர் I R பாலகிருஷ்ணன் கோவையில் இருந்து அனுப்பியது

நண்பர் I R பாலகிருஷ்ணன் கோவையில் இருந்து அனுப்பியது

புள்ளி அளவே இருக்கும் உலகத்தில்

புள்ளியில் நானே பெரும்புள்ளி நீயல்ல!

புள்ளியில் நீயோ கரும்புள்ளி என்றேதான்

புள்ளியாய் மக்குகின்ற வாழ்க்கையில் ஆணவம்!

புள்ளியைப் பந்தாடும் சாவு.

மதுரை பாபாராஜ்

[10/26, 12:00] Vovirbalakrishnan:

 சிறுபுள்ளியை வைத்துக் கவிதையில் 

புள்ளிக் கோலமிட்ட எங்கள்பாபா 

கவிதைப் பள்ளியிதில் வெறும் புள்ளியல்ல;

பெரும் புள்ளி.

👏👏

 

நண்பர் அன்பு அவர்களுக்கு நன்றி


 

மருமகன் மு.ராஜ்குமார் வாழ்த்து!


மருமகன் மு.ராஜ்குமார் வாழ்த்து!


அக்கா மகனின் அகங்கனிந்த பாராட்டு!

இத்தரணி வாழ்வின் இணையற்ற நற்சான்று!

அக்காலம் தொட்டுத் தொடர்கின்ற ராஜாவின்

முத்தாய்ப்பு வாழ்த்தென போற்று.


மாமா மதுரை பாபாராஜ்

 

பேரக் குழந்தைகள் தாத்தா பாட்டியுடன்!


பேரக் குழந்தைகள் தாத்தா பாட்டியுடன்!


பல்போன போதிலும் சொல்போன போதிலும்

துள்ளுகின்ற அன்பில் புறஅழகைக் காணாமல்

செல்லமாகக் கொஞ்சி மகிழும் மனம்படைத்தோர்

இல்லறத்தில் பேரக் குழந்தைகள்தான்!

உள்ளழகே

உள்ளம் விரும்பும் உணர்.


மதுரை பாபாராஜ்



 

 

Sunday, October 24, 2021

மகள் திருமதி உமா பாலு அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்.


மகள் திருமதி உமா பாலு அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்.


உன்னிடம் குற்றத்தைக் காண்பார் சிலரிங்கே!

என்றும் அதனை உனக்கென எண்ணாதே!

உண்மை இருந்தால் திருத்திக்கொள்! இல்லையென்றால்

உன்மன சாட்சிப் படிநடந்து வாழலாம்!

பண்பே உரைகல் உணர்.


மதுரை பாபாராஜ்


மதுரை பாபாராஜ்

 

நா காக்க


நா காக்க!


இப்படியும் பேசுவோம் அப்படியும் பேசுவோம்!

எப்படியும் குற்றம் குறைசொல்லி வாழ்வதே

இத்தரணி வாழ்வின் வழக்கமாக உள்ளதே! 

நற்றமிழே! மாறுவாரோ? சொல்.


முதலமைச்சர் பாராமல் சென்றால் வசவு!

முதலமைச்சர் மக்களுடன் இங்கே கலந்து

பழகினார்! பேருந்தில் சென்றதைச் சொன்னால்

வருகிற தேர்தலில் வெல்லும் வியூகம்

வகுக்கிறார் என்பார்! காரண வண்ணம்

வகைவகை யாகத்தான் பூசுகின்றார் ஏனோ?

எதற்கும் குறைசொல்தல் தப்பு.


மதுரை பாபாராஜ்.

 

நாளின் சுழற்சி!

 நாளின் சுழற்சி!

DAWN TO DUSK!

பொழுது விடிகிறது எப்பொழுதும் போல!

வளர வளர மகிழ்ச்சி துயரம்

கலவையாய் மாறி நிகழ்வு  நடக்க

இரவுப் பொழுதில் அடங்கும் உலகு!

சுழற்சி் முறையிலே நாள்.


மதுரை பாபாராஜ்


கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை!

 பழமொழிக்குக் கவிதை!


கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை!


கூழ் -- தேவை! மீசை-- பேராசை!


கூழுக்கும் ஆசையாம்! மீசைக்கும் ஆசையாம்!

வாழ்வில் அதுலேயும் இல்லறத்தில் 

கூடாது!

காலத்தின் பாடமோ கச்சிதமாய்க் காட்டிவிடும்!

கூழ்தான் மனைவியாம்! மீசையென்றால் வேறொருத்தி!

வாழ்க்கையின் தேவையே கூழ்.


மதுரை பாபாராஜ்



குடும்ப நண்பர் திருமதி சுமதி கோகுல்நாத் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


குடும்ப நண்பர் திருமதி சுமதி கோகுல்நாத் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


நாள்: 24.10.21


பிறந்தநாள் வாழ்வின் சிறந்தநாள்! வாழ்க!

சிறப்புடன் வாழ்க குடும்பத்தார் சூழ

வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தும் இதயங்கள்

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

Saturday, October 23, 2021

விளம்பரமோ விளம்பரம்!

 விளம்பரமோ விளம்பரம்!


தொலைக்காட்சி பார்த்தேன்! விளம்பரம்! மாற்றி

தொலைக்காட்சி பார்த்தேன் விளம்பரம்! வேறு

தொலைக்காட்சி பார்த்தேன் விளம்பரம்! மூடித்

தொலைத்தேன் தொலைக்காட்சி

பெட்டியை இங்கு!

தொலைக்காட்சி எல்லாம் ஒரேநேரம் இந்த

நிலைதான்! என்செய்வேன் நான்?


மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்தின் தமிழாக்கம்:


மருமகன் ரவி அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்தின் தமிழாக்கம்:


உங்கள் பழக்கங்கள் உங்களை வாழ்விலே

நன்கு அடையாளம் காட்டும்! அடையாளம்

உங்கள் பழக்கத்தை நாளும் வடிவமைக்கும்!

இந்த முறையோ இருவழிச் சாலையாம்!

நன்குணர்ந்து வாழ்தலே நன்று.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்!


நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்திற்குத்

தமிழாக்கம்!


கவலைக்கும் அக்கறைக்கும் வேறுபா(டு) உண்டு!

கவலைப் படவேண்டாம் அக்கறை காட்டு!

கவலைப் படுபவன் ஒவ்வொன் றிலுமே

மலைக்கவைக்கும் சிக்கலைக் காண்பான்! நாளும்!

அக்கறை கொள்பவன் தீர்வினைக் காண்பான்!

அக்கறையே தீர்வைத் தரும்.


மதுரை பாபாராஜ்

 

நாலடியார் 158

 

நாலடியார் 158


பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து

ஏதிலா ரிற்கண், குருடனாய்த் தீய

புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும்

அறங்கூற வேண்டா அவற்கு.  

(நாலடி 158)


Realizing the greatness of vitue,

Be deaf to hear the secrets of others,

Be blind to seeing the women of others;

Be dumb to speaking behind the back of others;

No need for books of morals to guide you.

[Translator: M. Annamalai – modified]



கவிதை:


ஒழுக்கத்தின் நற்புகழை நன்குணர்ந்து, மாற்றார்

இரகசியத்தைக் கேட்காமல் வாழ்ந்தும், நெறியில்

பிறரின் மனைவியை நோக்காமல்,

வாழ்ந்தும் 

பிறரைக் குறித்துப் புறணிபே சாமல்

இருப்பவரை இங்கே ஒழுக்கத்தைக் காட்டி

விளக்கிட நூல்வேண்டாம் சொல்.


மதுரை பாபாராஜ்


Meaning conveyed Ashraff?

நன்றி மறவா சிங்கம்!


நன்றி மறவா சிங்கம்!


ஸ்பெயின் நாட்டில் ஒரு பெண் ஒரு சிங்கத்தை வளர்த்து வந்தாள் இதையறிந்த அரசாங்கம் சிங்கத்தை பிடித்து மிருக காட்சி சாலை கூட்டில் அடைத்தது ஏழு வருடங்களுக்கு பிறகு அந்த பெண் சிங்கத்தை காண சென்ற போது மெய் சிலிர்க்கின்ற காட்சி


சிங்கப்பெண்!


வீட்டிலே சிங்கம் வளர்த்துவந்தாள் பெண்ணொருத்தி!

நாட்டரசோ சிங்கத்தைக் கூண்டில் அடைத்தது!

வாட்டமுடன் ஏழாண்டு சென்றபின் சிங்கத்தை

நாட்டமுடன் பார்க்கத்தான் சென்றாள் மகிழ்ந்தேதான்!

பார்த்ததும் நாடிவந்தே கட்டிப் பிடித்தேதான்

ஆர்வமுடன் அன்பையும் நன்றியையும் சிங்கமோ

காட்டியதும் மெய்மறந்தாள் பெண்.


மதுரை பாபாராஜ்


 

தன்னல மூட்டை!

 தன்னல மூட்டை!


சூழ்நிலையின் கைதியானால் சீரழிந்த சித்திரமாய்

பாழாகும் இல்லறந்தான்! தன்னல மூட்டையைத்

தோள்வலிக்க நாளும் சுமந்திருப்பார்!

தத்தளிப்பார்!

வாழ்க்கை திசைமாறும் செப்பு.


மதுரை பாபாராஜ்

மகள் திருமதி உமா பாலு அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்தின் தமிழாக்க



மகள் திருமதி உமா பாலு அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


மகிழ்ச்சி,அமைதி,உடல்நலம்,ஆசிகள்,

நம்பிக்கை, அன்புடன் நேர்மறை எண்ணங்கள்

என்றேதான் வண்ணவண்ண வானவில்லின் வாழ்த்துகள்

உள்ளன நாளைத் தொடங்க பயன்படுத்துங்கள்!

எண்ணம்போல் வாழ்க்கை! உணர்.


மதுரை பாபாராஜ்

 

Friday, October 22, 2021

பேராசிரியர் சுப.வீ. அவர்களின் போலிகளின் கூட்டணி ஒலிப்பதிவைக்


பேராசிரியர் சுப.வீ. அவர்களின்

 போலிகளின் கூட்டணி ஒலிப்பதிவைக்

 கேட்டு எழுதிய கவிதை: 

தந்தை பெரியாரை வாழ்த்துவோம்!


சீறும் அலைகளை ஊடறுத்தே கப்பல்கள்

நாடுகளைக் காண கரைசேரும்! கொள்கைகள்

கூடுகட்ட வன்புயலைச் சந்தித்தே கூடுகட்டும்,!

பாடுபட்ட தந்தை பெரியாரை வாழ்த்துவோம்!

சாடுவோர் சாடட்டும் வாழ்த்துவோர் வாழ்த்தட்டும்!

ஊடறுத்துச் செல்வோம் துணிந்து.


மதுரை பாபாராஜ்

 

உலகைவிட்டுப் பிரிந்தாலும் உள்ளத்தைவிட்டுப் பிரியாதவர் வெங்கட்!


Im Chakravarthy, son of Dr. R. Venkatachalam. 

My father passed away yesterday night at 11:30. 

Om Shanthi 🙏🙏🙏


உலகைவிட்டுப் பிரிந்தாலும் உள்ளத்தைவிட்டுப் பிரியாதவர் வெங்கட்!


உளவியல் பார்வையில் வள்ளுவத்தை ஆய்ந்து

களங்கண்ட வெங்கட் குழந்தைமனங் கொண்டே

பழகிய பண்பாளர் கொள்கைப் பிடிப்பில்

உயர்ந்தவர்! நமைவிட்டுச் சென்றுவிட்டார் என்ற

நினைவு மனதைப் பிழிகிறது சோகத்தில்!

வணங்குவோம் என்றும் நினைந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

 

தங்கை திருமதி.J. ராஜபாக்யம் பிறந்தநாள் வாழ்த்து!


தங்கை திருமதி.J. ராஜபாக்யம் பிறந்தநாள் வாழ்த்து!

நாள்: 23.10.21

மும்பையில் பேத்தி, மயிலா டுதுறையில்

அங்கேயோ பேத்தியும், பேரனும் பெங்களூர்

தன்னிலே பேரன்கள் என்றேதான் மாநிலங்கள்

மும்மொழி மூன்றில் வளர்ந்திருக்க பாட்டிக்குப்

புன்னகை நாள்தோறும் தான்.


பெற்றோரின் பாவாவின் ஆசி பொழிந்திருக்க

உற்றார் உறவு மகன்கள் மருமகள்கள்

மற்றும் மகளும் மருமகனும் பேரன்கள் பேத்திகள்

எப்போதும் சூழ்ந்திருக்க இன்பமுடன் வாழியவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


 

இன்று இதுதான்!

 இன்று இதுதான்!


வருவதை ஏற்றுக்கொள்!


நம்பிக்கை வைத்தே முயற்சிகள் செய்துவா!

என்ன வருகிறதோ ஏற்றுக்கொள் பக்குவமாய்!

வந்ததை வைத்தே திருப்திகொள் நிம்மதியாய்!

இன்றிதுதான் என்பதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

பயத்தின் பிடியில்!


பயத்தின் பிடியில்!


மணித்துளி தோறும் பயத்தின் பிடியில்

பணிந்தே மயங்கிக் கிடக்கின்றேன் நாளும்!

மனதில் உளைச்சல் முடக்கி முடக்கி

உடல்தளர்ந்து போகின்றேன் நான்.


மதுரை பாபாராஜ்

22.10.21

 

Thursday, October 21, 2021

தாய்மனம்


தாய்மனம்!


தனக்கில்லை என்றாலும் பிள்ளை பசிக்கோ

உணவை எடுத்துவைக்கும் தாயின் 

தியாக

மனத்திற்கோ ஈடில்லை இவ்வுலகே என்பேன்!

சுனைகூட வற்றுமிங்கே வற்றாத அன்புச்

சுனையாவாள் பெற்றெடுத்த தாய்.


மதுரை பாபாராஜ்

 

மகள் திருமதி உமா பாலமுரளி அனுப்பியதன் தமிழாக்கம்


மகள் திருமதி உமா பாலமுரளி அனுப்பியதன் தமிழாக்கம்:

எப்போதும் ஒன்றுமில்லை என்று நினைக்காதே!

எல்லாம் இருக்கிறதே என்றும் நினைக்காதே!

எப்போதும் ஏதோ இருக்கிறதே நானிங்கே

எப்போதும் வாழ்வில் எதையுமே சாதிப்பேன்!

என்றேதான் சிந்தித்து வாழ்.


மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


மருமகன் ரவி அனுப்பிய  சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


வாழ்வில் சிறந்தவை எல்லாம் பெரும்பாலும்

பார்வைக்கும் அப்பால் இருப்பவையே! அப்பொருள்கள்

யாவும் பெரும்பாலும் உள்ளம் உணர்பவையே!

ஆர்வமுடன் உள்ளத்தால் போற்று.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, October 20, 2021

படுத்துவிட்டால்

 படுத்துவிட்டால்!

வீட்டில் ஒருவர் படுத்த படுக்கையாய்க்

காட்சி் தரும்போது நிம்மதி 

காண்போமோ?

தேக்கும் உளைச்சல் பிடியில் உறவுகள்

ஏக்கத்தில் வாழ்வார் உழன்று.


மதுரை பாபாராஜ்

தலைகுனிவு

 தலைகுனிவு!

வதைபடும் நேரம் வறுபடும் நேரம்

உதைபடும் நேரம் உடைபடும் நேரம்

தடைபடும் நேரம் அலைக்கழிக்கும் நேரம்

தலைகுனிய வைக்கும் மனது.


மதுரை பாபாராஜ்


மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்.


மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்.


ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக

உங்களுக் குள்ளது வந்துசேரும் நம்புங்கள்!

வந்துசேரும் மட்டும் முயற்சிகள் செய்யுங்கள்!

நம்பிக்கை வெற்றி தரும்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எசக்கிராஜன் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் எசக்கிராஜன் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!

Cell phones have brought us closer to the persons far from us. But it has also taken us away from the ones sitting next to us._

தூரத்தில் வாழ்வோரைக் கைபேசி நாள்தோறும்

பாரில் அருகிலே கொண்டுவரும் காட்சியுண்டு!

தூண்போல் அருகில் அமர்ந்திருப்போர்  விட்டேதான்

ஏனோ வெகுதூரம் நம்மை விலக்கிவைக்கும்

வேடிக்கை  காட்சியும் உண்டு.


மதுரை பாபாராஜ்

 

 வாழ்க்கை கசக்கிறது!


வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் வேதனைகள் தீருமா?

நொந்துபோன வாழ்க்கையிலே

சோகங்கள் மாறுமா?


இந்தநிலை எனக்கேனோ?

என்னபாவம் செய்தேனோ?

இந்தநிலை மாறுமோ?

நிம்மதிதான் சேருமோ?


என்நிழலே வெறுக்கிறது!

என்னுள்ளம் நகைக்கிறது!

இமைமூட மறுக்கிறது!

வாழ்வெனக்குக் கசக்கிறது!


மதுரை பாபாராஜ்



Tuesday, October 19, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்

நாள்தோறும் செய்யும் செயலாய் இருந்தபோதும்

வாழ்வில்  சிலசெயல்கள் நம்மை மகிழ்விக்கும்!

வாழ்வில் இலக்கை அடைவதைப் போலநீங்கள்

தேர்ந்தெடுத்து செய்யவேண்டும் இங்கே செயல்களை!

வாழ்விலே வெற்றி உறுதி.


மதுரை பாபாராஜ்


 

Kingfisher நண்பர் IG சேகர் அனுப்பிய பறவை படம்


நண்பர் IG சேகர் அனுப்பிய பறவை படம்


நண்பருக்கு வணக்கம்.


பறவையே. ஓர் ஆங்கிலக் கவிதை ஒன்று கேளேன்


Kingfishers!


Effort and Diligence!


Two kingfishers chasing one another

To catch a fish jumping over the waves

The bird that came behind

Suddenly overtook the bird

And flew fast to catch the fish

Tried with effort and caught the fish

And gone and sat on a rock

And ate the fish with a victorious look!

Yes! Life is a race!

People who take efforts with diligence

Go forward and overtook to succeed 

People without efforts who lag behind!

Relentless efforts bring rich dividends!


Madurai Babaraj


 

ஓவியம்: திருமதி நிலமங்கை துரைசாமி விசாகை

வணக்கம்!


ஓவியம்: திருமதி நிலமங்கை துரைசாமி விசாகை


மழைக்காலம் அல்லவா? பிள்ளையார் அந்த

மழையைத் தவிர்க்க குடைபிடித்தே செல்லும்

கலைமிளிரும் காட்சியில் மெய்மறந்தேன் பார்த்து!

கலைத்திறன் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்


 

Emotions recollected in tranquility!


Emotions recollected in tranquility!


The blooming colourful flowers

Fluttering leaves of the trees

Delectable notes of chirping birds

Singing lullabies of falling falls

Swinging roraring waves of the ocean

Wandering clouds on the mountain peaks

Mighty sky clad beautiful mountains

Gurgling running water of lengthy rivet

Tall and hefty standing trees of forest

Wandering formidable wild Animals

As well as multifarious mild Animals

Far and wide heaps of sand spread deserts

Rainbow, Horizons and tender breeze

Noisy thunder storm and lashing rain

The Rising Sun of the east

The setting sun of the west

Beautiful charming Moon in the sky

Twinkling tiny Stars

Are all gifts of Nature!

We enjoy with rapture!


Madurai Babaraj

Monday, October 18, 2021

புறநானூறு பாடலுக்குக் கவிதை!


புறநானூறு பாடலுக்குக் கவிதை!


"படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப் பெருஞ்செல்வர் ஆயினும் இடைப்படக்

குறுகுறு நடந்து சிறு கை நீட்டி,

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்       

மயக்குறு மக்களை இல்லிலோர்க்குப்   

பயக்குற இல்லை தாம் வாழும் நாளே.."               புறநானூறு - 188


என் கவிதை:

எத்தகைய செல்வந்தர் ஆனாலும் மாவிருந்தை

சுற்றமுடன் கூடியே உண்டாலும் உண்ணுகின்ற

அப்பொழுதில் தேன்மழலை சின்ன நடைநடந்து

உண்ணும் உணவிலேகைவைத்துப்

பெற்றோரைத்

தொட்டுத் துழாவியே நெய்மணக்கும் சோற்றினைப்

பட்டுபோன்ற தன்னுடல் மற்றுமிங்கே பெற்றோரின்

கட்டுடலில் வாரி இறைத்து மயக்குகின்ற

சிட்டுக் குழந்தை அமுதநிகர்ச் செல்வம்முன்

எச்செல்வம் நிகராகும் சொல்?


மதுரை பாபாராஜ்

 

மகள் உமா பாலு அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்


மகள் உமா பாலு அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்


உங்களிடம் உள்ள சிறப்பை வெளிக்கொணரும் 

நண்பருக்கு நேரம் ஒதுக்குங்கள்! உங்களுக்கோ

என்றும் சலிப்பைத் தருகின்ற வக்கிர

நண்பரை இங்கே ஒதுக்குங்கள் நாள்தோறும்!

நல்லவரை நண்பராய்க் கொள்.


மதுரை பாபாராஜ்