Sunday, March 31, 2024

மனிதத்தேனீ


 

Thursday, March 28, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனித இனத்திற்கு மாபெரும் தேவையுண்டு!
மக்கள் இயந்திரமாய் மாறி வருகின்றார்!
அன்பினைக் கற்று இனிமையாய்ப் பேசுங்கள்!
இங்கே மகிழ்ச்சியை அன்பை இனிமையை
நன்கு மணங்கமழ ஆதார மாகநீங்கள்
இங்கே திகழலாம் சொல்.

மதுரை பாபாராஜ்

Wednesday, March 27, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


அற்புத மானவாழ்வைத் தந்தமைக்கு நம்முடைய
நன்றியை நாமோ மனதிற்குச் சொல்லவேண்டும்!
செய்யும் செயல்தொடங்க உள்ளத்தைத் தானாக
நன்றாக சிந்திக்க விட்டுவிட்டால் ஊக்கமுடன்
திட்டம் வடிவெடுக்க நாளும் துணைபுரியும்!
நன்றிசொல்லி வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

Tuesday, March 26, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நீங்களிங்கே  அக்கறை கொண்டிருக்கும்  மாந்தருடன்
நேரத்தைச் சற்றே செலவழித்தல் நல்லது!
யாருக்கு உங்கள்மேல் அக்கறை உள்ளதோ
நேரத்தை நீங்கள் செலவழித்தல் நல்லது!
வாழ்க்கையின் சாரமாகும்! முன்னுரிமை ஆயிரம்
வாழ்வில் இருந்தாலும் என்றும் இதயத்தில்
இந்தக் களங்களுக்கு நீங்கள் உயர்ந்ததோர்
முன்னுரிமை கொள்தல் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

Sunday, March 24, 2024

E.S.VARUN ADITHYA BIRTHDAY


 HAPPY BIRTHDAY ! 

E.S.VARUN ADITHYA

DATE : 24.03.24

FATHER: EZHIL ARASAN

MOTHER: SATHYA BAMA

BROTHER: NIKHIL ABISHEIK


GRANDSON VARUN BIRTHDAY!

HAPPY  CHEERFUL BIRTHDAY!

RESPECT YOUR PARENTS!

RESPECT YOUR TEACHERS!

RESPECT ALL THE ELDERS!

WELCOME ALL YOUR LOVING FRIENDS!

YOU ARE UNIQUE IN YOUR WAY!

ARTIST TALENT YOU HAVE

DEVELOP THAT ONE WITH INTEREST!

EDUCATION SHAPES YOUR FUTURE!

EDUCATION TEACHES DISCIPLINE!

WE BLESS YOU MY DEAR VARUN ADITHYA!

MANY MORE HAPPY RETURNS OF THE DAY!

GRAND PARENTS

BABA -- VASANTHA

Saturday, March 23, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எதுவும் வரட்டுமே! எப்படி யேனும்
நமக்குரிய வாழ்க்கையை வாழப் பழகு!
மலர்ந்து மணம்பரப்பு நீ.

மதுரை பாபாராஜ்

Thursday, March 21, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பிய படம்!


நண்பர்கள் மத்தியில் நேரம் செலவழிக்கும்
எண்ணத்தை ஏற்படுத்தி வாழ்வில் மகிழ்ச்சியை
உண்டாக்கப் பாருங்கள்! வாழ்வை அனுபவிக்க
இங்கே சிறந்த வழிகளில் ஒன்றாகும்!
என்றும் மகிழ்ச்சியோ எல்லையின்றி உண்டிங்கே!
அன்பை உணர்வதையும் தாண்டிய வாழ்வாகும்!
நண்பர்கள் வாழ்க்கையின் வேர்.

மதுரை பாபாராஜ்

Wednesday, March 20, 2024

திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன்


 சந்திர சேகர் முதல்வர் தளபதியை

அன்பாய் வணங்க அருகிலே நாடாளு

மன்றத்தின் வேட்பாள ரான தமிழச்சி

நின்றே ரசிக்கின்றார் காண்.


மதுரை பாபாராஜ்

Monday, March 18, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மற்றவரைப் பற்றியே எண்ணுதல் நம்மையோ
மற்றவர்கள் என்ன நினைப்பாரோ இவ்வுலகில்
என்றெண்ணி உங்களது வாழ்வை மகிழ்ச்சியை
இங்கே இழக்கவேண்டாம்! உங்களுக்கு நீதிபதி
என்றுமே நீங்கள்தான் என்றுணர்ந்து நாள்தோறும்
உங்கள் செயல்களில் ஆர்வத்தைக் காட்டுங்கள்!
என்றும் மகிழ்ச்சியே உண்டு.

மதுரை பாபாராஜ்

நண்பர் பன்னீர்செல்வம்


 நண்பர் பன்னீர்செல்வம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மழலையின் புன்னகை கோப்பைக் குளம்பி

அழகை ரசித்திருந்தேன்! நண்பரின் காலை

வணக்கத்தில் மெய்மறந்தேன் நான்


மதுரை பாபாராஜ்

Sunday, March 17, 2024

YOU ARE UNIQUE


 

Saturday, March 16, 2024

நண்பர் மாரிசாமி



 நண்பர் மாரிசாமி அனுப்பியதற்குக் கவிதை!


வாழ்க்கையும் காலமும் இவ்வுலகின் ஆசான்கள்!

வாழ்க்கையோ காலத்தை நன்கு பயன்படுத்த,

காலமோ வாழ்வின் மதிப்பை உணர்த்திட

ஞாலத்தில் கற்றுத் தருகிறது கற்கவேண்டும்!

பாடத்தைக் கற்றால் சிறப்பு.


மதுரை பாபாராஜ்

B.வசந்தா-- R.ஜோதி


 வசந்தாவும் திருமதி ஜோதி ராஜ்குமாரும்


அத்தை மருமகள் அட்டகாச மாகத்தான்

நிற்கின்றார் ஆகா! ரசித்து.


மாமா பாபா

நண்பர் லிங்கராஜ்


 நண்பர் லிங்கராஜ் அனுப்பியதற்குக் கவிதை!


கோப்பைக் குளம்பியை ஊதா நிறப்பூவைக்

காட்சிப் படுத்தியே காலை வணக்கத்தை

நாட்டமுடன் தூதனுப்பி நட்பினை லிங்கராஜ்

ஊற்றெடுக்க வைத்திட்டார் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Friday, March 15, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


பணந்தான் மகிழ்ச்சியிங்கே  என்று பலரும்
பொருள்தான் மகிழ்ச்சியிங்கே என்று சிலரும்
ஒருசிலரே பண்பும் அணுகுமுறைப் போக்கும்
இவற்றைவிட உள்ளதென்பார் சொல்.

மதுரை பாபாராஜ்

Thursday, March 14, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


கிடைத்திருக்கும் எந்தவொரு வாய்ப்பினையும் நாமோ
கொடுத்தும் உதவியும்  எண்ணிமுன் வந்தே
நடைமுறை யாக்கு! வலிமை கிடைக்கும்!
கிடைத்துள்ள வாய்ப்புதான் பொன்.

மதுரை பாபாராஜ்

Monday, March 11, 2024

பேரன்கள் வளர்ச்சி


 பேரன்கள் சுசாத்த்-- நிக்கில்-- வருண்


நடைவண்டி-- மகிழுந்து!


நடைவண்டி, சக்கரங்கள் மூன்றுள்ள சின்ன

மிதிவண்டி, பின்னர் டயர்வண்டி, பின்னர்

மிதிவண்டி சக்கரங்கள் ரெண்டுடன் ஓட்டி

கதழுந்து சிற்றுந்து என்றேதான் மாறி

மகிழுந்தை ஓட்டும் கோலத்தை வாழ்வில்

மகிழ்ச்சியுடன் காண்போம் வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எண்ணங்கள் என்றும் வலிமை உடையவை!
நம்செயல் பாட்டைத் துணைபுரிந்து மேம்படுத்த
அன்றி சிதைக்க முடியுமிங்கே! நேர்மறை
எண்ணமும் ஆக்கபூர்வ எண்ணமும் நல்லது!
எண்ணம்போல் வாழ்க்கை உணர்.

மதுரை பாபாராஜ்

Sunday, March 10, 2024

பல்லி ஒலி!

 

பல்லி ஒலிவைத்து நல்லதா கெட்டதா

சொல்லித்தான் வாழ்கின்றார்! இங்கே பகுத்தறிவின்

சொல்கேட்க மாட்டாரோ? சொல்.


மதுரை பாபாராஜ்

என் வாழ்க்கைக் கணக்கு!

 என்வாழ்க்கைக் கணக்கு!


வாழ்க்கைப் பயணத்தைக் கூட்டிக் கழித்தேதான்

பார்க்கின்றேன்! வாழத் தெரியாத ஏமாளி

நானென்றே எண்ணிக் கலங்குகிறேன் என்னென்பேன்!

வானத்தைப் பார்க்கின்றேன் நின்று.


ஏக்கப் பிழிவு மனதைப் பிசைகிறது!

தேக்க நிலைகளோ தேகத்தை மொய்க்கிறது!

ஊக்கமும் உற்சாக வேகமும் கானலாகும்

காட்சியில் என்இறுதி நாள்.


நாய்களும் பூனைகளும் வாழ்கின்ற மண்ணகத்தில்

வாழும் முறையறிந்து வாழவில்லை நானிங்கே!

வாழ்க்கைக் கணிதமே தப்பாகிப் போனதோ?

நாள்தோறும் வாடுகிறேன் நான்.


காயங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்துக்

காயப் படுத்தித்தான் பார்க்கிறதே! தேகத்தை

மேய்ச்சல் நிலமாக்கி வாட்டுகின்ற கோலத்தில்

சாய்ந்தே சரிகின்றேன் இங்கு.


தாயம் விழுந்தால் மகிழ்வேன்நான்! பன்னிரண்டு

ஓயாமல் காய்கள் விழுந்தால் லாபமில்லை!

தேவைகள் யாரறிவார்? தேவைக் குதவாத

வாழ்வெதற்கு இங்கே எனக்கு?

மதுரை பாபாராஜ்


Saturday, March 09, 2024

திருமணவாழ்த்து.8/3&10/3.24


 

மலையும் மடுவும்!

 மலையும் மடுவும்!


இன்பமும் துன்பமும் வாழ்விலே மாறிமாறி

வந்துபோகும் என்றாலும் துன்பம் மலையளவும்

இன்பம் மடுவளவும் என்றால் உளைச்சலை

என்னென்று சொல்வதோ சொல்.


மதுரை பாபாராஜ்

பகுத்தறிவும் பக்திநெறியும்

 பகுத்தறிவும் பக்திநெறியும்!


பகுத்தறிவுப் பாதையை ஏற்று நடந்தால்

எதுவரினும் ஏற்கின்ற பக்குவம் வேண்டும்!

விதியென்றே பக்தி வழியில் நடந்தால்

பொறுமை பெரிது கடலினும் என்றே

முடிவுகாணும் மட்டும் பொறுமையுடன் வாழ்ந்து

முடிவுவரும் என்றேதான் நம்பு.


மதுரை பாபாராஜ்





கண்முன் நிலச்சரிவு!

 கண்முன் நிலச்சரிவு!


என்ன நடந்தாலும் வேடிக்கை பார்க்கின்ற

ஒன்றுதான் வாழ்க்கையா? நாத்திகமும் ஆத்திகமும்

இங்கே துணைவராதாம்! கண்முன் நிலச்சரிவு!

கண்டு நடுங்குவதா வாழ்வு?


மதுரை பாபாராஜ்

தேங்காயில் முயல் பொம்மை



 தேங்காயைக் கொண்டு முயல்பொம்மை செய்திருக்கும்
ஆர்வமிகு ஆற்றலை அன்புடனே வாழ்த்துகிறேன்!
தீந்தமிழ்போல் வாழ்க வளர்ந்து.

மதுரை பாபாராஜ்

தவிர்த்தவர் இல்லை!

 தவிர்த்தவர் இல்லை!


மருத்துவம் எப்படிப் பார்த்தாலும் நேரம்

நெருங்கிவிட்டால் சாவைத் தடுத்தல் அரிதே!

மருத்துவர்க்கும் சாவுண்டு நேரம் கனிந்தால்!

மரணமில்லா வாழ்வில்லை இங்கு.


மதுரை பாபாராஜ்


Friday, March 08, 2024

பழைமை- முருகு பாபா


 பழைமை!


பென்னர் நிறுவனத்தில் எங்கள் கடமைகளை

வண்டமிழ் நற்கூடல் சங்கத்தில் ஆர்வத்தை

என்றே வளர்த்தேதான் நாங்கள் இருவரும்

அன்று மதுரை நகரில் மிதிவண்டி

கொண்டுதான் சுற்றினோம்! நண்பர் முருகேசன்

வண்டமிழ் ஆசானாய் இன்றானார்! சென்னையில்

என்வாழ்க்கை என்றாலும் நாங்கள் இருவரும்

இன்றுவரை நட்புற வாடிப் பழகுகின்றோம்!

அன்றிருந்து இன்றுவரை தான்.


மதுரை பாபாராஜ்

Thursday, March 07, 2024

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அவர்களுக்கு இரவு வணக்கம்!


நதிமேல் நிலவொளி மின்னும் இரவின்

அழகில் இரவு வணக்கத்தைக் கூறும்

மயக்கத்தைக் கண்டேன் ரசித்து.


மதுரை பாபாராஜ்

இன்று மனைவி

 படுத்த படுக்கையாய் மனைவி!


துவண்டு சரிந்து படுத்திருக்கும் இல்லாள்!

அவளருகில் தத்தளித்துப் பார்த்திருக்கும் நான்தான்!

எனக்கொன்று வந்தால் துடித்தே கடமை

மடமட வென்றேதான் செய்தவள் இன்றோ

நடைதளர்ந்தாள் பாவம் சரிந்து.


நிழல்போல கூடவரும் என்வசந்தா இன்றோ

சருகுபோல் இங்கே படுத்திருக்கும் காட்சி

உருக்குலைய வைத்தே உலுக்குதே என்னை!

சிரிப்பாளா என்வசந்தா தான்?


எழுந்தே நடப்பாளா? பேசுவாளா மீண்டும்?

கலகலப்பாய் மாறினால் நன்று.


மதுரை பாபாராஜ்

உள்ளுணர்வோ?


 உள்ளுணர்வோ?


அடையாளம் இன்றிப் பறவைகள் கூட்டம்

படையெடுத்து மாலையில் தங்களின் கூட்டை

அடைகிறதே! நாளும் வியக்கின்றேன் நான்தான்!

அடையாளம் தந்தும் மனிதர்கள் இங்கே

அடைவதற்குத் தத்தளிக்கும் கோலங்கள் உண்டு!

பறவைக்கு உள்ளுணர்வோ? சொல்.


மதுரை பாபாராஜ்

Tuesday, March 05, 2024

நல்லதோர் வீணை


பாபாஜி அவர்கள் பன்முகத் திறனுடைய எளிமை போற்றும் புலவர் பெருந்தகை...தென்.கி.

 ஐயாவின் வாழ்த்து

RAJENDRAN CHOKALINGAM:
அருமையான கருத்துக் கவிதை. ஆண் மகனால் எளிதில் ஏற்க முடியாத அனைத்துப் பாத்திரங்களாகவும் மிளிரும் வாழ்க்கைத் துணைவி பல ஒளிக்கதிர்களை வெளிப்படுத்தும் வைரம் தான். மண வாழ்வின் முதிர் பருவத்தில் தான் நம்மால் இதை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள முடிகிறது. அதன்பின் ஈருடல் ஓர் உயிரே. பாரதியின் பாடலை எவ்வளவு ஆழமாகக் கற்றாலும் அவரவர் வாழ்ந்து பாராமல் எவரும் இவ்வுண்மையை            ஏற்பதில்லை. மேலும் வைரம் மிளிர ஒளி வேண்டும். ஒளி போல் கணவனும் இயைந்து வாழ வேண்டும். வாழ்க்கை இரு கை ஓசை, இரட்டை மாட்டு வண்டி ,புகை வண்டித் தண்டவாளம், காற்றும் குழலும் போல் இசைவாக அமைய வேண்டும். ஒன்று மாறினால் அனைத்தும் வீணே. ஆணுக்கும் சரி பாதி பொறுப்புண்டு. நல்லதோர் வீணையும் திறமையான விரல் மீட்டினால்தான் நாதம் விளைவிக்கும். மிகச் சிறந்த வாழ்க்கை அருமையான வீணைக் கச்சேரியே.

07.03.24

மதுரை பாபாராஜ்:
மிக்க நன்றி ஐயா. தங்கள் கருத்தே எனக்குப் பொற்கிழி கிடைத்ததைப் போலாகும்.

Monday, March 04, 2024

நீரும்நெருப்பும்

 மகளும் மகனும்!


மகளின் அணுகுமுறை ரோசாவின் மென்மை!

மகனின் அணுகுமுறை முட்களின் வன்மை!

நகர்த்துகின்றேன் மென்மையுடன் வன்மையுள்ள வாழ்வை!

அகத்திலே நீருடன் தீ.


மதுரை பாபாராஜ்

இணையற்ற இணையர்

 இணையற்ற இணையர்!


மனைவி ஒருத்திதான் காக்கும் இமைகள்!

மனைவி ஒருத்திதான் காக்கும் கரங்கள்!

மனைவி ஒருத்திதான் காக்கின்ற கால்கள்!

மனைவிதான் பார்த்துத் துடிக்கும் இதயம்!

மனைவிதான் வாழ்வின் உயிர்.


கணவனும் இப்படி இல்லறத்தில் என்றால்

இணையர் இணையற்றோர்  சொல்.


மற்றவர் எல்லோரும் வாழ்க்கைப் பயணிகள்!

தங்கள் இடம்வந்தால் ஓடி இறங்கிடுவார்!

புண்பட்ட போதும் முணங்கி உடன்வருவார்

என்றும் இணையர்தான் சொல்.


மதுரை பாபாராஜ்

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அவர்களுக்கு வாழ்த்து!


பாவகைகள் போல பழவகைகள் தூதனுப்பிக்

காலை வணக்கத்தைக் கூறிய நட்பினை

வாழ்த்தி வணங்குகிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

நண்பர் முருகு

தமிழய்யா முருகேசன் திருவிளையாடல் புராணம் பேசுவதற்கு வாழ்த்து!


திருவிளை யாடல் புராணத்தைப் பேசும்

முருகேசன் ஆன்மிகப் பேச்சாள ரானார்!

கருத்துடன் பேசும் கலைபயின்ற நண்பர்

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்