Monday, June 30, 2025

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நொடிப்பொழுதில் உண்டாகும் கோபத்தை விட்டு

நொடிப்பொழுது நீங்கள் பொறுமையைக் காத்தால்

துடித்தேதான் நூறு நொடிகள் வருந்தும்

நிலையைத் தவிர்க்கலாம் செப்பு.


மதுரை பாபாராஜ்

Saturday, June 28, 2025

பொன்விழா இணையர்


 
பொன்விழா இணையர் திருமதி சுபாரவிக்கு  வாழ்த்து!

பொன்விழா ஆண்டுதனைக் கொண்டாடும் அன்பான 
எங்கள் மகளே! மருமகனே! இன்பமுடன்
என்றும் குடும்பத்தார் சூழ்ந்திருக்க வாழியவே!
வண்டமிழ்போல் பல்லாண்டு வாழ்க வளமுடன்!
நன்னெறியில் வாழ்க வளர்ந்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்

கொடிபிடித்தேன்


 

Friday, June 27, 2025

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்


 

Wednesday, June 25, 2025

தடுமாற்றமே வாழ்வு


 

Tuesday, June 24, 2025

ஐயா துரைசாமி அனுப்பியதற்குக் கவிதை


 

காணொளிக் கவிதை!

ஆசையே காரணம்! சொன்னமகான் புத்தரோ

பார்த்திருக்க இங்கே பிறப்பும் வளர்ப்புமே

ஆர்வமுடன்  தோன்றி மறையும் பரம்பரைதான்!

மாயை உலகை உணர் .


மதுரை பாபாராஜ்

Monday, June 23, 2025

வானிலை வாழ்நிலை


 

தன்னலக் காற்று


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


செயல்படுதல் உங்கள் பொறுப்பென்றே ஆனால்
முழுமன தோடு நிறைவேற்ற வேண்டும்!
செயல்கள் அனைத்தையும் நீங்கள் ரசித்து
அனுபவித்துச் செய்க! அதுதான் கொடுக்கும்
மகிழ்ச்சியை மற்றும் திருப்தியை உங்கள்
அகத்திற்கு என்றே உணர்.

மதுரை பாபாராஜ்

Sunday, June 22, 2025

கடமையே கடவுள்

 கடமையே கடவுள்!

கடமையைச் செய்யாமல் கோயிலுக்குச் சென்று

கடவுளைத் தேடல் உதவாது! என்றும்

கடவுளைக் கும்பிட வேண்டாம்! தினமும்

கடமையைச் செய்வதே நன்று.

மதுரை பாபாராஜ்

வணக்கம்

அருமையான  கருத்துச் செறிவுள்ள வெண்பா🌹

ஸ்டாலுன் ராமகிருஷ்ணன்

Saturday, June 21, 2025

நடி


 

பூவெல்லாம் பூநாகம்


 

மாண்புமிகு அன்பில் மகேஷ்


 minister-schedu@tn.gov.in

தமிழே அடையாளம்! ஆங்கிலம் வாய்ப்பு!

-- மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!


தமிழெங்கள் தாய்மொழி! எங்களடை யாளம்!

கனிந்துவரும் வாய்ப்புக்கே ஆங்கில மாகும்!

துணிவுடன் ஆற்றலே முன்னேற வைக்கும்!

முனைப்பும் உழைப்புமே வாழ்வு.


மதுரை பாபாராஜ்


அக்கா


 🙏


பேரன்கள் கோசல் சுசாந்த் தளபதி இலக்குமி 

மனைவி வசந்தா!


 தாரம்   தளபதியும்  தாத்தாவும் பேரன்கள்

ஆர்வமுடன் பார்க்கும் படம்.


மதுரை பாபாராஜ்

Friday, June 20, 2025

புண்படுத்தாதே


 

நற்றமிழர் இராமாநுசன்

நற்றமிழர் இராமாநுசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

அகவைத் திருநாள் 20.06.25

அறுபத்தைந் தாண்டு நிறைவில் மகிழும்

நறுந்தமிழ் நற்றமிழர் ராமா நுசனார்

குறளறிஞர் செந்தமிழ்த் தூதராவார்! பேச்சில்

சிறந்தவர்  பன்முக ஆற்றல் மிளிர

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

*செ.வ.இராமாநுசன்*

*ஊனூர்:* மோ.வன்னெஞ்சூர் - 606213.

*உறையூர்:*

சென்னை - 600074.

*உலாவூர்:*

     --------

நாள்: 20-06-2025.


*பிறந்த நாளில் பெருமையைக் கொண்டோம், சிறந்த உங்களின் வாழ்த்துகளாலே!*

       அன்பு சேர் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்!

     ஒவ்வொரு நாள் காலையும், நமக்கு பிறந்த நாளே! ஒவ்வொரு பிறந்த நாளும், நமக்கு சிறந்த நாளே!

      குழந்தையாகப் பிறந்தது முதல் ஒவ்வொரு நாளிலும், இயற்கை நம்மை வளர்த்தெடுக்கிறது. தானாக நம் உடல் வளர்ந்தாலும் இயற்கையை ஒட்டி வாழ, நம் அறிவை நாமாகத்தான் பெருக்கிக் கொள்ள வேண்டும். அது கல்வி அறிவு, கேள்வி அறிவு மற்றும் பட்டறிவினால் மட்டுமே உருவாக முடியும். 

       பெற்ற அறிவினால் நம் பேதைமை மட்டும் நீங்கவில்லை. நம் தனிமையும் வறுமையும் கூட நீங்கி விடுகிறது. வளர்ச்சி பெருகுகிறது; மகிழ்ச்சி கூடுகிறது. உறவுகள் நெருங்குகின்றனர். அதனால் நம் வாழ்நாளும் நீள்கிறது. இந்த உலகமும் அழகு பெறுகிறது.

      இந்த அழகான உலகத்தில் நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து நிற்கின்றோம். ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பாராட்டத் துடிக்கின்றோம். ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு உயர்ந்து வாழ்கின்றோம்.

      அதனால் நேற்று (20-06-2025) அடியேனின் பிறப்பெடுத்த அகவை நாள்தனை, உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துகளோடு இணைந்து கொண்டாடி மகிழ்ந்தேன். பெரும் மனநிறைவைப் பெற்றேன். 

       65 ஆண்டுகள் அகவையை நிறைவு செய்துள்ளேன் என்பதில் எழுச்சியைக் கொள்கின்றேன். எனது வாழ்நாள் குறைந்து கொண்டே வருகிறது என்று நான் எண்ணவில்லை; எனது வாழ்நாள் நீண்டு கொண்டே போகிறது என்றே நான் மகிழ்ச்சியடைகிறேன். 

       எந்த காலத்திலும், எவரோடும் நாம் நம்மை வாழ்நாள் கால அளவில் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும், அவரவர்களின் மன இயல்பும் தான் அவரவர்களுக்கு உரிய வாழ்நாளை நல்குகின்றன. 

         நாமும் நம் வாழ்நாளினை வளர்பிறை நிலவுக்கு இணையாக எண்ணிக்கொள்வோமாக! இலக்கியங்களின் சுவைக்கொப்ப இயங்கிக் கொள்வோமாக! புகழ்ச்சிக்கு பின்னால் செல்வதைத் தவிர்ப்போமாக! நாக்கு என்னும் இதயத்திற்கு ஒப்பான உறுப்புதனை, உணவுச் சுவையில் இருந்தும், வரம்பில்லா - பயனற்றச் சொற்படுத்தலில் இருந்தும் காத்துக் கொள்வோமாக!

       இனி விடிகின்ற ஒவ்வொரு வெள்ளை பொழுதிலும் அன்றலர்ந்த மலராக, அகம் மலர்ந்து - அன்பு மனம் கொண்டு - கருணை மணம் வீசி, நட்புணர்வில் அழகுறுவோமாக!


 *வெற்றி நமதே!*

 

பொய்யும் மெய்யும்


 

Wednesday, June 18, 2025

சிலர்பலர் பலர்சிலர்!


 

Tuesday, June 17, 2025

வடகலை! தென்கலை!


 வடகலை! தென்கலை!


வடகலை தென்கலையில் ஒற்றுமை இல்லை!
கடல்சூழ்ந்த வையமக்கள் போரிடா மல்தான்
தடம்பதிக்க வேண்டுமென்றே சொல்கின்றோம்! பாவம்!
முயற்சி வினையாவ தென்று?

மதுரை பாபாராஜ்

என்று கல்லெறிதல் நிற்கும்?


 

மனிதன் இப்படித்தான்


 

அதினன்--இமயம்



 இமயம் - அதினன் பாடுவதற்கு வாழ்த்து!


தாத்தா இமயமும் பேரன் அதினனும்

பாட்டோடு ஒன்றி ரசித்தேதான் பாடுவதைக்

கேட்டேன்! மகிழ்ந்தேன்! ரசித்தேன்! நெகிழ்ந்தேதான்

வாழ்த்துகிறேன்! வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


செயல்களை எல்லாம் உடனடி யாக
செயலாக்க வேண்டுமென்று எண்ணக்கூ  டாது!
ஒருநேரம் இங்கே ஒருசெயல் செய்க!
பலசெயல் மற்றவற்றை முன்னுரிமைக் கேற்ப
முடிப்பதே நன்று உணர்.

மதுரை பாபாராஜ்

Monday, June 16, 2025

ஒருபக்கம் இருபக்கம்


 

மௌனமே மறுமொழி


 

Sunday, June 15, 2025

உளைச்சலின்றி வாழலாம்


 

தம்பிமகன் கார்த்திக்


 
தம்பிமகன் திரைப்பட இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி!

பெங்களூரு சென்றும் மறக்காமல் இப்போது
தந்தைநாள் வாழ்த்தை எனக்களித்த கார்த்திக்கை
அன்புடன் வாழ்த்துகிறேன்! உள்ளம் மகிழ்கிறேன்!
நன்றி நவில்கிறேன் நான்.

பெரியப்பா
மதுரை பாபாராஜ்

செல்வி சத்யப்பிரியா

 [15/06, 12:09] HomecareSathyapriya: Happy father's day appa ✨✨💐💐✨✨

மகள் செல்வி சத்யப்பிரியாவுக்கு நன்றி!

தந்தைநாள் வாழ்த்தினை அன்புடன் தந்தமைக்கு

நன்றி நவில்கின்றேன் நான்.

மதுரை பாபாராஜ்

பொம்மி


பொம்மி படத்திற்குக் கவிதை

வலக்காலில் நின்று இடக்கால் மடித்து

சடக்கென்று பார்க்க குளிராடி போட்டு

சிவப்பு பனியன் குழாயும் அணிந்து

கறுப்புநிறக் காலணிகள் போட்டேதான் நிற்கும்

அழகே அழகுதான் சொல்.


மதுரை பாபாராஜ்

Sathya and Bommi

  Karsathya: 

Happy father's day paa😊😊

 மருத்துவர் மகளுக்கு நன்றி!

தந்தையர் நாளில் மருத்துவர் சத்யாவின்

அன்பான வாழ்த்துக்கு நன்றி நவில்கின்றேன்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்


[15/06, 19:39] Bommi: 

Happy Father’s Day baba naina 💐


 பொம்மிக்கு நன்றி!

தந்தையர் நாளுக்கு வாழ்த்துகள் தந்தமைக்கு

பொன்மகளே நன்றி உனக்கு.


மதுரை பாபாராஜ்

Saturday, June 14, 2025

வசந்தா பாபா


 தம்பி மகன் கார்த்திக் அனுப்பிய படம்


பெரியம்மா மற்றும் பெரியப்பா பாபா

களிப்பில் முதுமைப் பருவம் வருட

தெளிவான காட்சி இது.


மதுரை பாபாராஜ்


 ஓவியம் நிலமங்கை துரைசாமி

தாள்பணிந்து கீழ்ப்படிந்து வாழ்ந்ததோ அக்காலம்!

வாழ்வியல் மாற்றந்தான் கூறு.


மதுரை பாபாராஜ்

நண்பர் முரளி


 நாளையும் காட்டி கிழமையைக் காட்டியும்

காலை வணக்கத்தைக் கூறும் முரளிக்கு

வாழ்த்துகள் தந்தேன் மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

தூக்கம் எங்கே?


 முதுமையில் தூக்கம் எங்கே?


அசந்தேதான் தூங்கிய காலமெல்லாம் போச்சு!

அசதி அரவணைத்த போதும் விழிகள்

இடம்மறந்து தூங்குவது போனதே! பூனை

உறக்கம் நடைமுறை யாச்சு.


மதுரை பாபாராஜ்

Friday, June 13, 2025

நண்பருக்கு வாழ்த்து


 நண்பர் கிருஷ்ணமூர்த்தி இராமாநுஜம் அவர்களுக்கு வாழ்த்து!


குறள் 596:

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்  என்றேதான்
வள்ளுவர் கூறியது உங்களை எண்ணித்தான்!
நல்லவர் பண்பாளர் வாழ்க புகழுடன்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்

தென்காசி வள்ளுவர் மன்றம்


 CR தலைமை!


தென்காசி வள்ளுவர் மன்றத்தில் வள்ளுவத்தை
அன்றாடம் சாறு பிழிந்து அளித்துவிட்டு
சென்னை நகர்வந்த எங்கள் குறளநெறிப்
பண்பின் குரிசில் அவர்களை நாங்களோ
அன்பாய் வரவேற்றோம் இன்று.

மதுரை பாபாராஜ்

நண்பர் முரளிக்கு வாழ்த்து


 முப்பத்து நான்காண்டு இல்லறத்தில் ஒன்றித்தான்

வற்றாத அன்புடன் பண்புகளைக் காத்தேதான்

எப்போதும் பின்பற்றி வாழியவே

இன்பமுடன்!

நற்றமிழ்போல் வாழ்க வளர்ந்து!


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

உறவுப் பறவைகள்



 வாழ்க்கை வானில் உறவுப் பறவைகள்!

உறவுகள் எல்லாம் பிரிந்து பிரிந்து

பறவைகள் போலத்தான் வாழ்வென்னும் வானில்

சிறகடித்தே எட்டுத் திசைகளில் செல்வார்!

அவரவர் வாழ்க்கையைத் தேடுகின்ற  நேரம்

தவறில்லை! என்றும் மகிழ்வு.


மதுரை பாபாராஜ்

பாபாராஜ் வசந்தா



 மருத்துவர் திருமதி சத்யப்பிரேமா அனுப்பிய படம்

[13/06, 20:44] Madurai Babaraj: பாபாராஜ்-- வசந்தா

முதுமைக் கவிதை!

முதுமைப் பருவம் வருடுகின்ற நேரம்

எதுகையும் மோனையும் ஆன கவிதை!

எதையுமே தாங்கும் மனது.

மதுரை பாபாராஜ்

[13/06, 21:24] Avinashmother:

 இருவரையும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.உடல்நிலை ஓரளவிற்கு  நன்றாக உள்ளது என்பதை உணர்கிறேன் ஐயா வாழ்த்தும் அளவிற்கு வயதில்லை ஆனாலும் கூறுகிறேன் வாழ்க இன்னும் பல காலங்கள்❤️🙏🏼

இயக்குநர் கார்த்திக்



 

வெற்றி இயக்குநர் கெ.கார்த்திக் வாழ்க!


எடுக்கும் படமெல்லாம் வெற்றி மிளிரும்

படமென்ற நற்பெயரை ஈட்டுகின்ற ஆற்றல்

நடைபோடும் கார்த்திக் குழுவினர் வாழ்க!

கடைவிரித்துக் கொள்ளவைக்கும் உத்திகள் கொண்ட

இயக்குநர் கார்த்திக்கை வாழ்த்து.


பெற்றோரும் இல்லத் தரசி உறவினரும்

உற்றாரும் நண்பர்கள் எல்லோரும் உற்சாகம்

தந்தனர்! பின்னணியில் ஊக்கம் பெருகிவர

முன்னணியில் வாழ்கின்றார் கார்த்திக்கை வாழ்த்துவோம்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


அன்றிருந்து இன்றுவரை மாறாத தன்மைகள்!

புன்னகை ஏந்திவரும் அன்பு முகங்கொண்டோன்!

கண்ணுங் கருத்துமாய் நாளும் உழைக்கின்றார்!

அன்புமகன் கார்த்திக்கை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


Thursday, June 12, 2025

திருக்குறள் தூதருக்கு வாழ்த்து


 திருக்குறள் தூதர் முனைவர் மோகனராசு ஐயா வாழ்க!

தளராமல் என்றும் திருக்குறள் தொண்டை

உவந்தேதான் முன்வந்து செய்கின்ற தூதர்

முனைவராம் மோகன ராசு அவர்கள்

இணக்கத்தின் சிற்பி! தமிழ்போல வாழ்க!

வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

நினைவாகா கனவு!

நினைவாகா கனவு!

நினைத்தது ஒன்று! நடப்பதோ ஒன்று!

அனைவரும் ஒற்றுமை யோடிங்கே வாழ்வார்!

மனங்குளிரப் பார்க்கலாம் என்றிருந்தேன் நான்தான்!

நடப்பதைப் பார்த்தால் நம்பிக்கை இல்லை!

முடங்கினேன் கனவென்றே நான்.


மதுரை பாபாராஜ்

Tuesday, June 10, 2025

நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பியதற்குக் கவிதை!

கோப்பையில் ரோஜாப்பூ! காலை வணக்கத்தை

தூதனுப்பி வாழ்த்திய அன்பினை வாழ்த்துகிறேன்!

வேடமற்ற நட்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

கவிதை அருமை நன்றி

முரளி

அறவழிச் செல்வம் நிலைக்கும்

 அறவழிச் செல்வம் நிலைக்கும்!


பிறவழியில் சேர்க்கின்ற செல்வங்கள் எல்லாம்

உளைச்சலுக்கே வித்தூன்றும்! நிம்மதி போகும்!

அறவழியில் சேகரித்த செல்வந்தான் நாளும்

நிலைக்கும்! வளரும் ! உணர்.


மதுரை பாபாராஜ்

Monday, June 09, 2025

பாடம் புகட்டு

 பாடம் புகட்டு!

எப்போது என்னநேரும் என்றே தெரியாத

இத்தகைய வாழ்விலே மாந்தர்கள் ஆணவத்தின்

உச்சாணிக் கொம்பிலே ஆடுகின்றார் தாறுமாறாய்!

நற்றமிழே! பாடம் புகட்டு


மதுரை பாபாராஜ்


Sunday, June 08, 2025

CR And Ramanujan


 திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பார்த்தது

பிறகு இன்றுதான் முதல் முறையாக வீட்டிற்கு வந்திருந்தார்.. மகன் சௌந்தரராஜன் உடன் வர.

சற்றே அளவளாவி விட்டு சென்றனர்.

மகிழ்ச்சியான தருணம்.. மகள் வீட்டு மாங்கனிகளும் உவகையுடன்
அளித்தார்.

CR

வள்ளுவரும் கம்பரும் உள்ளங்கள் ஒன்றிய

தெள்ளுதமிழ்ப் பேச்சினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

இப்பொது இப்படித்தான்


 

பொம்மி


 DP உன்படம்!


ஒளிப்பட பொம்மி சிரிப்பே சிரிப்பு!

களிப்பா? வியப்பா? புரியவில்லை பொம்மி!

தெளிவாய்ச் சிரிப்பாயா? நீ.


மதுரை பாபாராஜ்

Friday, June 06, 2025

நிராசை