Saturday, August 31, 2024

சஞ்சய்


 சஞ்சய் அருமை!


பின்னணியில் நீலக் கடலுடன் முன்னணியில்

தன்னிடக் காலையே சாய்த்தேதான் கல்மீது

என்னமாய்ச் சாய்ந்தேதான் நிற்கின்றாய் சஞ்சய்நீ?

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


பாபா தாத்தா

வசந்தா பாபாராஜ்


 அந்தமான் தீவில் கடலோரம் நின்றேதான்

இந்தமானுக் கென்னதான் சிந்தனையோ நானறியேன்!

என்னதான் சிந்தனை? சொல்.

மதுரை பாபாராஜ்

Friday, August 30, 2024

நண்பர் முரளி


 நண்பர் முரளிக்கு வாழ்த்து!


வெண்புறா வெண்மலர்க் கொத்துடன் வெண்கோப்பை

அன்புடன் சூடாய்க் குளம்பியும் செம்மலரும்

பண்புடன்  காலை வணக்கமாய்த் தந்தமையை

நட்புடன் வாழ்த்துகிறேன் இன்று.


மதுரை பாபாராஜ்

பேரன் சுசாந்த் ஸ்ரீராம் R.S.


 

Thursday, August 29, 2024

பெற்றோரைப் பேணுதல்


 

நண்பர் பென்னர் மாரிசாமி


 நண்பர் பென்னர் மாரிசாமி அனுப்பியதற்குக் கவிதை!


வாழ்க்கை! அழகான புல்லாங் குழலென்போம்!

காண்போம் துளைகளும்  வெற்றிடமும்! ஆற்றலுடன்

நாமோ கவனமாக வாசித்தால் இன்னிசை

ராகங்கள் மீட்டலாம் சொல்.


மதுரை பாபாராஜ்

ஓவியர் திருமதி நிலம்துரை


 ஓவியர் திருமதி நிலமங்கை துரைசாமி, விசாகை அவர்களுக்கு வாழ்த்து!


மீனுக்குள் மீன்வரு மாறுதான்  நீலவண்ண

மீனிரண்டை வைத்தேதான் ஆற்றலுடன் ஓவியம்

தீட்டிய அம்மாவை வாழ்த்து!


மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பியது


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


உள்ளமோ தண்ணீரைப் போன்றது! துள்ளாமல்

இங்கே அமைதியாய் உள்ளபோது எல்லாமே

தெள்ளத் தெளிவாய்த் தெரியும் கலங்கலின்றி!

உள்ளமே எல்லாம் உணர்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


இலக்குகளைச் சாதிக்கத் தீவிர எண்ணம்
உளத்திலே உள்ளதா? நன்கு கவனம்
நிலைநிறுத்திப் பாடுபட்டு நாளும் செயலைத்
தொடருங்கள்! உங்கள் இலக்ககுடன் அந்தச்
செயல்கள் பொருந்தவேண்டும்! அந்தப் பொருத்தம்
இலக்குகளைச் சாதிக்கும் செப்பு.

மதுரை பாபாராஜ்

Wednesday, August 28, 2024

கோளாறு


 கோளாறு பதிகம்
இசைக்கலாமோ?

S.P.Swaminathan
VOV
29.08.24

மனநிலையை மாற்று


 

Tuesday, August 27, 2024

புண்படாமல் பேசு


 

காலம்போல் நண்பனில்லை


 

புறணி பேசாதே


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உள்ளத்தில் தொந்தரவு மற்றுமிங்கே தேவையற்ற
எண்ணங்கள் மண்டிவிட்டால் நம்முடைய உள்ளத்தை
ஒன்றிலே ஒன்றவிட மாட்டாமல் நாம்திரிவோம்!
எந்தநல் செய்கையும் செய்ய முடியாது!
எப்போதும் உள்ளத்தில் நல்லநல்ல எண்ணத்தை
ஒட்டி உறவாடச் செய்.

மதுரை பாபாராஜ்

திருமதி நிலம் துரை வரைந்த ஓவியம்


 ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


விடிந்ததே! இன்னுமா தூங்குகின்றீர்? என்றே

இடித்துரைக்கும் வண்ணம் உசுப்புகின்ற சேவல்!

கடமையை நாளும் தவறாமல் செய்யும்!

சுறுசுறுப் பாக எழு.


மதுரை பாபாராஜ்

வம்பைத் தவிர்


 

Monday, August 26, 2024

ஒருகை ஓசை


 

இல்லறத்தின் மாண்பு


 

திருமதி ஜோதி ராஜ்குமார் பிறந்தநாள்


 திருமதி ஜோதி ராஜ்குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவை 61


அகவைத்திருநாள்: 26.08.24


அகவை அறுபத்து ஒன்றினைக் காணும்

மகிழ்விலே ஜோதி மிளிர்கின்றார்! நல்ல

குடும்பத்தைப் பல்கலைக் கூடமாய்க் கண்டே

எடுப்பாக வாழ்க! குடும்பத்தார் சூழ

சிறப்பாக வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

Sunday, August 25, 2024

இயன்றதைச் செய்வோம்


 

வீடு

 வீட்டை வெறுக்கும் மனது!


வீட்டுக்குள் வந்தால் மகிழ்ச்சி இருக்கவேண்டும்!

வீட்டுக்கு வந்தாலே ஏன்வந்தோம் என்றேதான்

வீட்டுச் சூழ்நிலை இங்கே இருக்குமானால்

வீட்டை வெறுக்கும் மனது.


மதுரை பாபாராஜ்

கண்டபடி வாழாதே


 

பாவலர் தமிழியலன் விழா


 பாவலர் தமிழியலன் ஐயாவின் நூல் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து!


நாள் 27.08.24


மொட்டுக்கு மெட்டு! தமிழியலன் நூல்நாளை

வெற்றி மணக்க வெளியிடும் பாவிழா!

நற்றமிழ்போல் வாழ்கவென்றே வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

அக்கா திருமதி லட்சுமி முத்துவீரன்

 அக்கா திருமதி  லட்சுமி முத்துவீரன் 

அவர்களது மணநாளில் ஆசிகள் வேண்டுகிறோம்!


25.08.24


அக்காவின் நேர்மை உழைப்பு கடமை உணர்வின் பின்னணியே குடும்ப முன்னேற்றத்தின் காரணம்!


பாவா இழப்பே பெருந்துயரம் என்றாலும்

பாவா கனவை நினைவாக்கி இன்றிங்கே

பாவா குடும்பம் தலைநிமிர்ந்தே வாழ்கின்றார்!

ஆசிகேட்டு வாழ்த்தி வணங்கு.


நாற்றிசையில் பிள்ளை குடும்பங்கள் வாழ்ந்தாலும்

போற்றினர் நல்லுழைப்பை நம்பித்தான் நால்வரும்!

காட்டினர் தங்கள் படிப்பாலே முன்னேறி!

நாட்டில் மதிக்கின்றார் வாழ்த்து.


அம்மாவின் சொற்படி கேட்டே அற்புதமாய் 

நன்றாக வாழ்கின்றார்! நாடுபோற்ற வாழ்கின்றார்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார் 

அற்புதம் மாமா.. அருமை. சேர்ந்து வாழ்ந்த நாட்களைக் காட்டிலும் பிரிந்து வாழும் நாட்கள் தான் எண்ணிக்கையில் கூடிக் கொண்டே இருக்கிறது...அப்பருவம் தாண்டுகையில் தான் அவ்வேதனையை நம்மால் உணர முடிகிறது. மக்களுக்காக தம் வலியைத் தாங்கிக் கொண்டு வாழும் தெய்வம். வாய் வாழ்த்த, மனது அழுகிறது.

மு.சரவணப் பெருமாள்

திண்டுக்கல்

Saturday, August 24, 2024

யோகாதான் நாளும்!

 யோகாதான் நாளும்!

CONSTIPATION!

பறவை சிறகை விரிப்பதுபோல் கைகள்

சிறகாய் விரிந்திருக்க யோகாபோல் செய்தால்

திடக்கழிவு நாளும் கழிவறையில் செல்லும்!

கடக்கிறேன் காலைக் கடன்.


மதுரை பாபாராஜ்

உளைச்சலைக் கூட்டுவார்!


 

நம்பிக்கை வை!


 [25/08, 07:41] Vovkaniankrishnan:

 பாபாஜியைப் போல் இவ்வளவு எளிதாகக் கவி யாக்க புவியில் யார்தான் உளர்?!!.

[25/08, 07:42] Vovkaniankrishnan: 

கவி புனைவதில் யான் ஏழையினும் ஏழை.

மதுரை பாபாராஜ்:

கவிதையைப் படிக்கத் தூண்டும் அளவுக்கு வண்ணப்படுத்துவதில் யான் ஏழையினும் ஏழை நண்பரே.

இரண்டு கைகள் தட்டினால் ஓசைவரும். கவிதை என்ற ஒருகை ஓசை பலன்தராது.

கல்லும் மலரும்


 

Friday, August 23, 2024

நடப்பதை ஏற்கப்பழகு!


 

Thursday, August 22, 2024

நண்பர் மொகலீஸ்வரன்


 நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பியதற்குக் கவிதை!


புகழ்ந்தாலும் இல்லை இகழ்ந்தாலும் நாளும்

சமமாக ஏற்கப் பழகு! மழையும்

கதிரொளியும் இங்கே மலர்கள் வளர

பயன்படும் கோலம்போல் தான்.


மதுரை பாபாராஜ்

காலநேரம் பார்.


 

நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பியதற்குக் கவிதை!


கடலோரம் நிற்கும் மரத்தடியில் மேசை

துணிவிரித்த மேசையில் தட்டில் உணவு

மனங்குளிர உட்கார நாற்காலி மூன்று

வரவேற்க அன்பாய் வணக்கத்தைச் சொல்லும்

தரமான நட்பினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

உட்பகையை நீக்கு!


 

Wednesday, August 21, 2024

திரு பாலாஜி திண்டுக்கல்


 திரு பாலாஜி ஓவியத்தை வாழ்த்து!


மலைத்தொடர் மற்றும் மரங்கள் நதிநீர்

கலையெழில் சிந்தக் கதிரவன் தோன்ற

பறவைகள் வானில் தெரிய படகின்

துடுப்பசையும் காட்சிகளை பாலாஜி நம்முன்

கொடுத்தார் வரைந்தவரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

பேரன் தாருக்


 

திரு வரவணை செந்தில்


 திரு வரவணை செந்தில் குமார் அவர்களுக்கு வாழ்த்து!


 கண்ணாடி வெண்சட்டை பைக்குள்ளே கையொன்று!

வண்ண மகிழுந்தைப் பார்க்கும் வரவணை

செந்திலை அன்பாக வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Tuesday, August 20, 2024

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!


கோப்பைக் குளம்பி மலர்க்கொத்து நீரலையில்

ஞாயிறின் பேரழகு என்றே வணக்கத்தைக்

காலையில் நட்புடன் நண்பர் அனுப்பினார்

வாழ்த்துகிறேன் அன்புடன் தான்.


மதுரை பாபாராஜ்

ஒவ்வொரு நாளும் இதே


 

திருமதி முனியம்மாள் சண்முகம்


 சமையலர் கவிதைக்குக் கவிஞர் சுவாமிநாதன் வாழ்த்து:

அறுசுவை அன்னம்!
அகம் மகிழ் திண்ணம்!
அன்னை கை வண்ணம்!
அகிலம் வாழ எண்ணம்!

Monday, August 19, 2024

அம்மா இதயம் கதை

 அம்மா இதயம்!: கதை!


அம்மாவைக் கொன்றேதான்  அம்மா இதயத்தைக்

கொண்டுவா! என்றாளாம்! அந்தத்  .தனயனும்

அம்மா இதயத்தைக் கொண்டுசென்ற நேரத்தில்

அங்கே தடுக்கி விழுந்தே அலறினான்!

அம்மா! எனவலியில்  கத்தினான்! தாயிதயம்

அய்யகோ காலடி பட்டதோ மைந்தனே!

என்றே இதயம் துடித்தேதான் கேட்டதாம்!

இப்படிப் பட்டதாயைக் கொன்றேனே என்றழுதான்;

அம்மா இதயம் அது.


மதுரை பாபாராஜ்

அழுகின்றேன்

 காய்ந்த கொடியானாள் வசந்தா!


என்னவளை எண்ணியெண்ணி அழுகின்றேன்!

வசந்தாவை எண்ணி அழுகின்றேன்!


அழுகின்றேன் அழுகின்றேன்

தனிமையிலே அழுகின்றேன்!


என்னவளின் இன்னலைப்

பார்க்க முடியவில்லை

அழுகின்றேன்!


அவளுக்குச் சாப்பிட முடியவில்லை!

அவளுக்குப் பேசப் பிடிக்கவில்லை!


குமட்டுகின்றாள் கொஞ்சமாக 

சாப்பிட முயல்கின்றாள்


திரும்பிப் படுக்க முடியவில்லை

உட்கார முடியவில்லை

நிற்க முடியவில்லை

நடக்க முடியவில்லை!


அவளது தவிப்பைப் பார்க்க முடியாமல்

அழுகின்றேன் அழுகின்றேன் அழுகின்றேன்!


அன்பையெண்ணி அழுகின்றேன்!

ஆற்றாமையில் அழுகின்றேன்!

இயலாமையில் அழுகின்றேன்!

ஈனசுரம் கேட்டே அழுகின்றேன்!

உருக்குலைந்த தோற்றங்கண்டே அழுகின்றேன்!

ஊருக்கே உணவளித்த வசந்தாவை எண்ணி அழுகின்றேன்!

எனக்காக வாழ்ந்தவளை எண்ணி அழுகின்றேன்!

ஏங்கி ஏங்கி இன்றிங்கே அழுகின்றேன்!

ஐம்புலனும் அமைதியான கோலங்கண்டே அழுகின்றேன்!

ஒடுங்கிவிட்டாள்! பார்த்தே அழுகின்றேன்!

ஓவென்று கதறவேண்டும்! முடியாமல் அழுகின்றேன்!

ஔவா என்றதும் சிரிப்பாளே!

அதையெண்ணி அழுகின்றேன்!!


மதுரை பாபாராஜ்


Sunday, August 18, 2024

கலைஞர் நாணயம்


 

கவிஞர் சு.ப.சுவாமிநாதன் அவர்களுக்கு வாழ்த்து!


 திருக்குறள் கவியுரை!


கவிஞர்  சு.ப.சுவாமிநாதன்    அவர்களுக்கு வாழ்த்து!


குறளின் பொருளுணர்ந்து சிந்தித்துத் தந்த

சிறப்பான நல்ல கவியுரை  தங்கள்

படைப்பான இந்தநூல் என்றேதான் போற்று!

குறள்களைப்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


காமத்துப்பால் கவிதைகள் திரைப்படப் பாடல்களாய் ஒலிக்கின்றன.

திரைப்படத்துறையில் முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, August 17, 2024

பண்புடைமை


 

கடமையை மறவாதே


 

இதுதான் சிறப்பு


 

Friday, August 16, 2024

நடைமுறை


 

நண்பர். எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நேரத்தை நன்கு முறைப்படுத்தப்
பார்ப்பதே
வாழ்வில் சிறப்பாகும்! அப்படி வாழ்க்கையில்
நேரத்தை நீங்கள் முறைப்படுத்தி னால்மட்டும்
வாழ்வில் சிறப்பாய் செயலாற்ற லாமிங்கே!
வாழ்வில் மனதைத் தெளிவாக வைத்திரு!
நேரம் செயலின் உயிர்ப்பு.

மதுரை பாபாராஜ்

Thursday, August 15, 2024

ஒடுங்குவார் விரைந்து

 ஒடுங்குவார் விரைந்து!

அடுத்தென்ன நேருமோ? என்றே பயந்தே

நடுங்குகின்ற வாழ்வாக என்வாழ்வை மாற்றி

நடுங்கவைத்துப் பார்த்தே மகிழ்கின்ற கூட்டம்

ஒடுங்கும்நாள் காண்பார் விரைந்து.

மதுரை பாபாராஜ்

பெருமைக்குரிய குடும்பம்


 

Wednesday, August 14, 2024

இதற்காகவா வாழ்க்கை


 

Tuesday, August 13, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன்  அனுப்பியதற்குக் கவிதை!


எதையும் குறித்தநேரம் செய்து முடிக்க
உழைக்கத் தயாராய் இருக்கவேண்டும் இங்கே!
கரங்களில் நம்மிடம் உள்ள பணியை
முடிக்க முடிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை
கிடைக்குமென்றே நம்புவோம் நாம்.

மதுரை பாபாராஜ்

Monday, August 12, 2024

பிள்ளையா? தொல்லையா?

 பிள்ளையா? தொல்லையா?


நல்லபிள்ளை பெற்றோரை நாளும் மகிழ்விப்பார்!

கெட்டபிள்ளை பெற்றோரை நாளும் கலங்கவைப்பார்!

நல்லது கெட்டதைச் சொன்னாலும் கேட்காதோர்

பிள்ளையல்ல தொல்லை! உணர்.


மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


உங்களது வாழ்வை விமர்சிப்போர் யார்யாரோ?

இன்றிருக்கும் உங்கள் நிலைக்குநீங்கள் தந்தவிலை

என்னவென்றே இங்கே தெரியாதோர்! அம்மம்மா!

விந்தை மிகுந்த உலகு.


மதுரை பாபாராஜ்

மூடப்பழக்கத்தைச் சாடு


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நீங்கள் இதைச்செய்ய வேண்டுமென்று தீர்மானம்
செய்துவிட்டால் சாக்குபோக்கு சொல்லாமல் செய்யவேண்டும்!
செய்து முடிக்குமட்டும் உங்கள் கவனத்தை
சற்றும் சிதறாமல் பார்ப்பது நல்லது!
செய்ய நினைத்தவுடன் செய்

மதுரை பாபாராஜ்