Friday, January 31, 2025

நண்பர் மொகலீஸ்வரன்


 நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பியதற்குக் கவிதை!


பெரிய கதவுக்குப் பூட்டு சிறிது!

சிறிதான பூட்டைவிட சாவி சிறிது!

இருந்தாலும் இங்கே சிறிதான சாவி

பெரிதான பூட்டைத்  திறந்தால் பெரிய

முழுவீடும் இங்கே திறக்கும்! எனவே

சிறிய எளிதான தீர்வுகளே நாளும்

பெரிதான சிக்கலைத் தீர்க்குமென்று நம்பு!

உருவுகண்டு எள்ளாதே இங்கு.


மதுரை பாபாராஜ்

பண்படுத்துவோம்


 

அனைவருக்கும் வாழ்வுண்டு!


 

Thursday, January 30, 2025

நம்சிக்கல் நமக்குதான் பெரிது!

 நம்சிக்கல் நமக்குப் பெரிது!


நமக்குத்தான் நம்முடைய சிக்கல் பெரிது!

மனஉளைச்சல் பற்றியே மற்றவர்கள் இங்கேன்

மனக்கவலை கொள்ளவேண்டும் எல்லோரும் தங்கள்

கடமையில் மூழ்குவார் காண்.


மதுரை பாபாராஜ்


கோழை


 

வாழ்த்துகள்


 

Wednesday, January 29, 2025

நண்பர் BSNL இராமசாமி


 நண்பர் BSNL இராமசாமி அனுப்பியதற்குக் கவிதை!


வியாழன் கதிரொளியில் உங்களது பாதை

ஒளிமய மாகட்டும் ! நாள்தோறும் வாழ்க்கைப் 

பயணம் விடியல் வெளிச்சத்தைக் கண்டு

வளமாக வாழ்த்துகிறேன் நான்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஊக்கம் தருகின்ற ஆதரவை நல்கிடும்
நேர்மறை யாளரைப் பக்கத்தில் வைக்கவும்!
ஆர்வமுடன் நாளும் சிறப்பாக சாதிக்க
மட்டுமின்றி உங்களைச் செம்மைப் படுத்தவும்
நன்கு துணைபுரியும் சொல்.

மதுரை பாபாராஜ்

மதுரை பாபாராஜ்

முருகு


 தமிழய்யா முருகு அனுப்பிய படம்!


பண்ணையார் வீட்டுக்கு முன்னாலே நெல்காய

அங்கங்கே காகங்கள் தான்ருசிக்க ஆகாகா

கண்கவரும் காட்சியைப் பார்.


மதுரை பாபாராஜ்

Tuesday, January 28, 2025

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!

முதுமைப் பருவம் வருடுகின்ற போது
முகத்தின் அழகோ பயணித்து நாளும்
அகத்தில் இறங்கும்! கவர்ச்சி மறையும்!
பிறரையோ புண்படுத்தல் ஞானமாய் மாறும்!
சிறப்பான வாழ்வின் தருணங்கள் நாளும்
நினைவிலே தேக்கும் நிலையெடுக்கும்! உண்மை
அழகென்றால் இப்போது நீங்கள் மகிழும்
நிலையல்ல! உங்களால் மற்றவர்கள் இங்கே
மகிழ்ச்சியாய் வாழ்வது எப்படி என்று
இருப்பதே வாழ்வென் றுணர்.

மதுரை பாபாராஜ்

அருமையான கருத்துக்கள் நிறைந்த பல விகற்ப பஃறொடை வெண்பா! மனத்தில் நினைத்ததை மனம்திறந்து சொல்லி விட்டீர்கள்!

வலையபட்டி கன்னியப்பன்

என்சுமை எனக்கு



 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


என்ன நடக்குமென்று நாமோ பலமுறை
எண்ணுகின்றோம்! தற்சமயம் இங்கே நடப்பதில்
சற்றும் கவனம் செலுத்தாமல் வாழ்கிறோம்!
தற்சமயம் என்ற நிகழ்கால சிந்தனைக்கு
வந்தேதான் நாமோ  சிறந்ததை சாதிக்க
முன்னேறப் பார்ப்போம் உணர்.

மதுரை பாபாராஜ்

Monday, January 27, 2025

தலைமுறை மாற்றம்


 

பேரன் சுசாந்த் பட்டம் பெற்ற தருணம்



 நாள் 25.01.25

நிலவில் ஓவியம்


 

Sunday, January 26, 2025

ஆயிரம் தேள்கள்

 THOUSANDS OF SCORPIONS GNAWING AT MY HEART!


ஆயிரம் தேள்களோ உள்ளத்தில் ஊருகின்ற

கோலந்தான்! நானோ உளைச்சல்

கொடுமையில்

நாளை நகர்த்துகிறேன்! சாவே! விரைவிலே

பாய்ந்து பறந்தேதான் வா.


மதுரை பாபாராஜ் 

எல்லை தாண்டாதே


 

Saturday, January 25, 2025

குடியரசு நாள் ஓவியம்


 திருமதி நிலமங்கை துரைசாமி அனுப்பிய படத்திற்குக் கவிதை!

 குடியரசு நாள் வாழ்த்துகள்!


26.01.25


நாட்டு மலரோ மலர்ந்திருக்க அம்மலரை 

நாட்டு மயிலிங்கே பார்த்திருக்க சக்கரத்தை

ஆற்றலுடன் மூவண்ணம் ஏந்தும் கொடிநடுவே

போற்றி வரைந்திட்ட பண்பாளர் அம்மாவை

வாழ்த்தி வணங்குகிறேன் இன்று.


மதுரை பாபாராஜ்

Friday, January 24, 2025

உளைச்சலா வாழ்வு?

 உளைச்சலா வாழ்வு?

வாழ்வில் எதுநடந்த போதிலும் வேடிக்கை

பார்க்கும் மனிதராக தீர்க்க முடியாத

சூழ்நிலையில் தத்தளித்து நிற்கவேண்டும் என்கின்றார்!

பாழும் உளைச்சலா வாழ்வு?

மதுரை பாபாராஜ்


Thursday, January 23, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

மற்றவரைச் சாராமல் உன்னால் முடிந்ததை
உன்னாலே என்னசெய்ய வேண்டுமோ மற்றவர்மேல்
குற்றம் சுமத்தாமல் செய்யவேண்டும்! மற்றவர்கள்
பின்பற்று வார்களிங்கே தானாக! முன்னேற்றம்
உங்கள் செயல்களால்தான்! உங்கள் விளக்கத்தால்
அல்ல! உணர்ந்தாலே நன்று.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நாள்தோறும் வாய்ப்புகள் எல்லாமே கற்கின்ற
பாடங்கள்! இந்த முறையைப் பயன்படுத்தி
நாமிங்கே நம்மைத் தயார்செய்து வேலையில்
சாதிக்க வேண்டும் உணர்.

மதுரை பாராஜ்

Tuesday, January 21, 2025

வீணை

 வீணை முடங்கியதே!


வீணைபோல் இன்னிசை மீட்டிவந்த இல்லாளோ

வீணை நரம்பிழந்து வீட்டில் முடங்கிய

கோலம்போல் இங்கே நடமாட்டம் இல்லாமல்

பாவம் படுத்துவிட்டா ளே.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நாளையிங்கே திட்ட மிடுவதைக் காட்டிலும்
வேலையில் இன்றுசெய்தல் முக்கிய மானது
சாதனை மற்றும் திருப்தியோ திட்டத்தில்
தோன்றாது! ஆனால் செயலில் தெரியுமிங்கே!
காட்டு செயலில் திறன்.

மதுரை பாபாராஜ்

Monday, January 20, 2025

நண்பர் மொகலீஸ்வரன்


 நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பியதற்குக் கவிதை!


நம்மைவிட மற்றவர் வாழ்க்கை சிறப்பென்றே

எண்ணுகின்றோம்! என்றுமே நம்முடைய வாழ்க்கையும்

மற்றவர்க்கும் அப்படியே இவ்வுலகில் உள்ளதென்றே 

எப்போதும் நாமோ மறந்து விடுகிறோம்!

ஒப்பீடை நாளும் தவிர்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்கள் செயல்களோ உங்கள் கரங்களில்!
தங்குதடை ஆவதற்குச்  சார்புநிலை காரணமாய்ச்
சொல்வதே தப்பாகும்! என்றென்றும் உங்களது
சார்புநிலை , எண்ணம் செயல்களை முன்னேற்றந்
தன்னையோ பாதிக்கா வண்ணந்தான் பார்ப்பது
நன்றாகும்! சார்பைத் தவிர்.

மதுரை பாபாராஜ்

Sunday, January 19, 2025

பொற்கைப் பாண்டியன்


 சந்தக் கவிஞர் பொற்கைப் பாண்டியன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத்திருநாள்: 20.01.25


பொற்கையின் சந்தக் கவிநயம் கேட்டதும்

நற்றமிழ்க் கூட்டம் தலையாட்டும்  பொம்மையாகும்!

பொற்கைத் தலைமைக் கவியரங்கில் பங்கெடுத்த

அற்புத நாள்கள் மறக்க முடியுமா?

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

Saturday, January 18, 2025

அரசியல் பேட்டை

v**@kalaignartv.co.in


கலைஞர் செய்திகள் தொலைக் காட்சியில் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு அரசியல் பேட்டை!

வாழ்த்துகிறேன்!


அரசியல் பேட்டை சுமையாவின் கேள்வி

வரவணை செந்தில் பரபரப் பாக

விளக்கம் தருவதிலே நேரம் நகர்தல்

தெரிவதில்லை என்றேதான் செப்பு.


மதுரை பாபாராஜ்


நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பியதற்கு வாழ்த்து!


இல்லமும் இல்லத்தின் முன்னாலே தோட்டமும்

உள்ளத்தின் அன்போடு காலை வணக்கமும்

அள்ளிக் கொடுத்தநல் நட்பையும் வாழ்த்துகிறேன்!

பல்லாண்டு வாழ்க சிறந்து.


மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


மனச்சோர்வில் வாழ்ந்தால் கடந்தகாலந் தன்னில்

உழல்கின்றீர் என்று பொருளாம்! பதட்டம்

சுழலத்தான்  வாழ்ந்தால் எதிர்காலத் தோடு

நிழல்யுத்தம் என்றே பொருளாம்! அமைதி

தவழ்ந்தால் நிகழ்காலந் தன்னிலே வாழும்

மனநிலை என்றே பொருள்.


மதுரை பாபாராஜ்

செங்கோல் -- கொடுங்கோல்


 செங்கோல்-- கொடுங்கோல்!

பரபரப்பு மற்றும் கலகலப்பு மாக

உளம்மகிழ்ந்த செங்கோல் முறைமாறி இன்று

அமைதி இறுக்கம் இருக்கும் கொடுங்கோல்

நடைமுறை யாகியதும் ஏன்?


மதுரை பாபாராஜ்

Friday, January 17, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


என்னதான் மற்றவர்கள் இங்கே இலக்குகளை
உண்டாக்கி வைத்தாலும் நீங்களோ வாழ்விலே
என்றும் மகிழ்ச்சியாய் வாழ இலக்குகளை
உண்டாக்க வேண்டும்! அதுவென்று வாழ்க்கையை
நன்கு அனுபவிக்க வெற்றிகாண வைத்திருக்கும்!
இந்தவாழ்வை வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


வாழ்க்கை ஒருமுறைதான் இங்கே மலர்கிறது!

நேர்மறை காட்டும் மகிழ்ச்சியை நாடுங்கள்!

யாரிங்கே உங்களை புன்னகைக்க வைப்பாரோ

வாழ்வில் அவருடன் நட்பைத் தொடருங்கள்!

வாழ்க்கையை வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

நண்பர் பழனிவேல்


 நண்பர் பழனிவேல் அவர்கள் அனுப்பியதற்குக் கவிதை!

தொப்பி அணிந்திருக்கும் பூனையைத் தூதனுப்பி

அற்புதமாய்க் காலை வணக்கத்தை நட்புடனே

சொல்லுகின்ற நண்பரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

முந்தாத வரிசை


 

அறிஞர் -- ஆர்வலர்


 

Thursday, January 16, 2025

கட்சிகள்


 

குழு உணர்வு


 

ஊக்குவித்தால் கவிதை வரும்


 

உனக்கும் கீழே உள்ளவர் கோடி


 

Glitters-withers


 

Wednesday, January 15, 2025

நண்பர் மொகலீஸ்வர்.


 விசாகை உருக்காலையில் நண்பர் மொகலீஸ்வர் கவிதை படிக்க திருவள்ளுவர் விழா!


விசாகை உருக்காலை மக்களெலாம் கூடி
நடாத்திய வள்ளுவர் நாள்கொண்டாட் டத்தில்
மொகலீஸ்வர் பாவலர் பாவைப் படிக்க
அகமகிழ்ந்தார் கேட்டு ரசித்து.

மதுரை பாபாராஜ்


விசாகை உருக்காலை மக்களெலாம் கூடி

நடாத்திய வள்ளுவர் நாள்கொண்டாட் டத்தில்
மொகலீஸ்வர் பாவலர் பாவைப் படிக்க
அகமகிழ்ந்தார் கேட்டு ரசித்து.

மதுரை பாபாராஜ்

இதயத்தில் இடம்பிடிக்க கவனியுங்கள்



 ஆங்கிலத்திற்குக் கவிதை!

இதயத்தில் இடம்பிடிக்க கவனிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

செவிகள் இரண்டை அருகருகில் வைத்தால்
இதய வடிவத்தில் காண்போம்! எனவே
இதயத்தில் நீங்கள் இடம்பிடிக்க என்றும்
கவனிக்கக் கற்பது நன்று.

மதுரை பாபாராஜ்

உழவு


 உழவு!


அன்றிங்கே மாடுகளை வைத்தே உழுதனர்!

இன்றிங்கே பார்த்தால் டிராக்டர் உழவிலே

நன்கு உழுகின்றார் நாளும் கவனமுடன்!

தொண்டு சிறக்க வணங்கு.


மதுரை பாபாராஜ்

Tuesday, January 14, 2025

சித்தப்பா சொன்னது

 எனது சித்தப்பா தெய்வத்திரு அழகர்சாமி அடிக்கடி சொன்னது!


வாழ்க்கையில் தானாய் வருவது பாதியென்றும்

நாமாக வாழ்வில் இழுப்பது பாதியென்றும்

தேனாய் அனுபவத்தால் சொன்னாரே சித்தப்பா!

வாழ்நாளில் காண்கிறோம் இன்று.


மதுரை பாபாராஜ்

திருவள்ளுவர் நாள்


 திருவள்ளுவர் நாளை வாழ்த்துவோம்!


15.01.25


உலகத்தார் எல்லோரும் பின்பற்றும் வண்ணம்

உலகப் பொதுமுறையை வாழ்வியலாய்த் தந்து

வியக்கவைக்கும் வள்ளுவர் நாளிதை வாழ்த்தி

வணங்குவோம் உள்ளம் உவந்து.


மதுரை பாபாராஜ்


Monday, January 13, 2025

மருமகள் சத்யா வீட்டுவாசல் கோலம்


 மருமகள் சத்யாவின் வீட்டுவாசல் கோலம்!

14.01.25

மருமகள் சத்யாவின் வீட்டுவாசல் கோலம்!

அருமையாய் ஆதவன்தான் எட்டித்தான் பார்க்க

கரும்புகள் சூழ்ந்திருக்க பொங்கல்பா னையில்

பெருகிவரும் காட்சியைக் காண்.


மதுரை பாபாராஜ்

செல்வி சத்யப்பிரியா கோலம்


 மகள் சுபா வீட்டு வாசல்!

பொங்கல் வாழ்த்து!

14.01.25

உழவதி காரம் படைத்தவர் பார்க்க

பளபளக்கும் செங்கதிரோன், பானை, கரும்பு, 

உழவுக் குதவிய மாடும் வரைந்தே

அருமையாய் நன்றி நவிலும் படத்தைப்

பெருமையுடன் சத்யா வரைந்தார்! உலகப்

பொதுமுறை தந்ததிரு வள்ளுவரை இங்கே

வணங்கித் தருகிறோம் வாழ்த்து


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார் 


கொண்டாட்டம்! திண்டாட்டம்!


 

இப்படியும் விபத்தா?



 

Sunday, January 12, 2025

திருமதி ஜெயபாய் சாலமன் பாப்பையா



 அம்மாவை வணங்குகிறோம்! ஏங்குகிறோம்!

திருமதி ஜெயபாய் சாலமன் பாப்பையா

இயற்கை எய்தியநாள்:

12.01.25

தமிழறிஞர் சாலமன் பாப்பையா ஐயாவுக்கு மனஉறுதியளிக்க வேண்டுகிறோம்!


வீட்டிற்குச் செல்லும் பொழுதெல்லாம் இன்முகம்

காட்டியே பேசிப் பழகினார்! வள்ளுவம்

காட்டும் விருந்தோம்பல் பண்பை மதித்தேதான்

வாழ்ந்திருந்தார் ஐயாவின் பின்னணியில் வாழ்வியல்

ஊக்கம் அளித்திருந்தார் பண்பார்ந்த அம்மாதான்!

ஏங்கவிட்டுச் சென்றாரே ஏன்?


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

Saturday, January 11, 2025

வேதனைக்பே ஆளாவார்


 

Friday, January 10, 2025

உளைச்சலே என் வாழ்வு!

 உளைச்சலே என் வாழ்வு!

நடக்கவே கூடாத காட்சிகள் எல்லாம்

நடப்பதைப் பார்த்தே கடக்கவேண்டும் என்றே

கடந்துகொண்டே வாழ்கிறேன் நாளும் உழன்றே!

உளைச்சலே வாழ்வாகிப் போச்சு!

மதுரை பாபாராஜ்

காலமாற்றம்


 

தனிமதிப்பே தரம்


 

பூபாலன் பிறந்தநாள் வாழ்த்து


 திரு பூபாலன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

நாள் 10.01.25

பூமனத்து நாயகர்! புன்னகை ஏந்திவரும்

பாமணக்கும் பூபாலன் வாழ்கபல் லாண்டிங்கே!

தேமதுரப் பைந்தமிழ்போல் வாழியவே! வாழியவே!

தேன்மணக்கும் இல்லறத்தில் தான்.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்