Monday, March 31, 2025

ஈத்துவக்கும் இன்பம்


 

Sunday, March 30, 2025

தம்பி பாலாஜி


அருமைத் தம்பி பாலாஜி அனுப்பியதற்குக் கவிதை!

பழங்கள் இரண்டும்   வளர்வதோ நாளும்

கிளையொன்றில் என்றாலும் ஒன்று

கனியும்!

ஒருபழம் காத்திருக்கும் நேரத்திற் காக!

ஒருவரின் வெற்றியோ நம்முடைய தோல்வி

எனநினைக் காதே! இயற்கையின் செய்தி!

நமக்கும் கனிந்துவரும் வெற்றி! பொறுப்போம்!

நமக்குமிங்கே வாழ்வுண்டு சொல்.

மதுரை பாபாராஜ்

அறவழி வாழ்வோம்



 

இதுதான் வாழ்க்கை



VOVCR:
வாழ்க்கை அனுபவப் பிழிவு  பாபா...


திருக்குறள்: 597

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

சாலமன் பாப்பையா உரை:
தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.

Explanation:
The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.

_இதுதான் வாழ்க்கை..பாடல்_ 

 _உண்மையை உண்மையாய் எடுத்தியம்புகிறது._

*கவிதான் தங்களுக்கு உயிர் என்பதால்..துன்பத்தை எளிதாக கடந்து செல்ல முடிகிறது.*

தென் கி


 [30/03, 22:10] Vovkaniankrishnan:

 *எனக்கு உங்கள் மீது மிகுந்த பரிவுண்டு.காரணம் சோகத்திலும் சோர்வுபடா சிறந்த கவிதைக் குவியல்கள்.*

 *உங்களைப் புகழ்வதா பாராட்டுவதா தெரியவில்லை. ஆனால் இருகரம் கூப்பி வணங்குகிறேன்.* 

 _வாழ்வேன் மகிழ்வில் என்றும் உங்கள் நினைவில்._

தூக்கணாங்குருவி


 

Saturday, March 29, 2025

நண்பர் தெ.கி.



 நண்பர் தென்காசி கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்து!

இமயமலை போன்ற கலையை

கிருஷ்ணன்

இமைமூடிப் பார்க்குமுன் கண்ணெதிரே காட்டும்

அமைப்பினை வாழ்த்துவேன் இன்று.


மதுரை பாபாராஜ்

ஊக்கமளிக்கும் வாழ்த்துகள்

 ஒரே நாளில் தங்களால் மட்டுமே கவிதையினைக் குவியலாக அள்ளித்தர முடியும்.கவிதை உங்களுக்கு உயிரோடு கலந்துவிட்டது.எனவே அது பிரவாகம் எடுத்து வருகிறது.வாழ்த்துகள்.


தென்.கி.

30.03.25


ஐயா பாபாராஜ் அவர்களது நூலைப் படித்தாலே போதும்;பிழையின்றி எல்லோரும் வெண்பா எழுதலாம்.இது அடியேனது அனுபவ உண்மை.அந்த பெரிய ஆலமரத்தின் சிறு விழுதாக நானுள்ளேன்.அவர்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.


வள்ளுவம் போல் அவர்களது வெண்பாவும் மண்ணில் நிலைத்து நிற்கும். அவர்கள் உச்சத்தில் நின்றாலும் என்னைப் போன்ற எச்சத்தையும் பாராட்டுவது உள்ளத்தை உவக்கச் செய்கிறது.


தென்.கி


1024..ஆ(ற்)றலே வெ(ற்)றியின் ஊ(ற்)று.


பாபாவின் எதுகையின் எழிலைப் பாருங்கள்.


பாபாவின் பாடலின் வெற்றிக்கு ஊற்றாக அமைவது அவர்களது கருத்தாற்றலே.


தென்.கி.


வெண்பா குறள் நூலுக்கு வாழ்த்து:


உறுத்தும்  இழிசெயல்தான் அஃது - ஆய்தம் ஏந்தும் பாவீரர் பாபா!


தீத்தாரப்பன்

10.03.25


995..புண்படாமல் பேசுவார் பார்


என்னே! பாபாவின் பாவுரை..தென்.கி

10.03.25


Krishnamoorthy Ramanujam


நேற்றைய குறளில்,  சூடான பொருளை உட்கொண்டால்,  என்  நெஞ்சில் உள்ள காதலருக்கு சுடும் என்று, நான் உண்ணுவதில்லை என்ற குறள் கருத்தை எடுத்துக் கொண்டு,


   காதலி, காதலன் ஒழுக்கத்திற்கு ஊறு நேரும் என்று கள் உண்பதில்லை என்று கம்பர் பாடி இருக்கிறார்.


  அதேபோல் இன்று கண்ணை இமைத்தால்,  காதலன் மறைந்து விடுவார் என்று காதலி கண்ணை இமைப்பதில்லை என்று கூறுவதை


துயிலாத பெண் ஒன்று கண்டேன் என்று காதலி நிலையை , காதலன் பாடுவதாக கண்ணதாசன் அமைத்து உள்ளார்.


தாங்கள் கவிதை இயற்றவும், பாடவும் வல்லவர்கள்.🙏


💄அழியாத செல்வமே சால்பு💄


சால்பிற்கு பாபா அவர்கள் தந்துள்ள பாவுரைதான் என்னே அழகு!.


தென் கி


அரசவைக் கவிஞர் பாபராஜ் அவர்கள் 


வெண்பாக்களை சும்மா அருவி போலக் கொட்டி வருகிறார்!


அத்துடன் ஆங்கிலத்திலும் புகுந்து விளையாடுகிறார்!!


Full time writer!


👍👍🙏🙏

Soma Veerappan


சொல்லேருழவர் என்று இவர்களைப் போன்றோர்களைப் பார்த்துத்தான் வள்ளுவர் சொல் யாத்தாரோ?


Vov Thertharappan


" விதைத்தால் விளையவேண்டும் சொல் "


நம் பாபா அவர்கள் சொல் வன்மை மிக்கவர்கள் என்பதற்கு இவ்வடியே தக்க சான்று.அவர்களது பாடலைப் புரிந்துகொள்ள எந்த அகராதியும் தேவையில்லை.கவிதையா உரைநடையா என்றே அறிய முடியாத வகையில் பாடுவது அவர்களது தனித்துவம்...தென்.கி


" தாழ்வும் உயர்வும் இயல்பு "


என்று மிக எளிமையாகப் பாடிவிட்டார் நம் பாபா அவர்கள்.ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் ஆற்றலுண்டு.அவ்வகையில் பாபாவுக்குள் பாட்டு எளிமை.எளிமை என்றாலும் எள்ளுக்குள் எண்ணெய் இருப்பதுபோல அவர்களது கவிதைக்குள் வாழ்வியல் போதனை இருக்கும்.


பாபா வாழ்க! அவர்களது பாட்டும் வாழ்க!...தென்.கி


வாழ்வியல் அந்தாதி:

"வெற்றிகாண சோம்பலை நீக்கு"


என்னே! அழகான வாழ்வியல் முன்னேற்றத் தொடர்.பல்வேறு பனுவல்கள் கூறியுள்ள வாழ்வியல் நெறிமுறைகளை நம் பாபா அவர்கள் மிகமிக எளிதாக எடுத்துச்சொல்வது அவரது ஆற்றலை அறியச் செய்கிறது.


பாபா வாழ்க!

பார்போற்ற பலநாள் பிணியின்றி வாழ்க!


தென்.கி



"உயிரே கருணைதான் சொல்"


வாழ்வியல் கருத்துகளை இவ்வளவு எளிதாக உறுதியாகச் சொல்ல நம் பாபாவால் மட்டுமே முடியும்.


பாபாவை வணங்குகிறேன்,வயதில்லையாயினும் வாழ்த்துகிறேன்.நான் வாழுங்காலத்து அவர்களொடு அன்புகொண்டு வாழ்வதைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்.

…………………………………………………

அன்பே அனைத்திற்கும் ஆதாரம் என்பதால்


அன்பொடு வாழ்வோம் அணைந்து.

……………………………………………………

தென்.கி


பாபா இயலா இசையா இரண்டிலும்

பாபா உயர்ந்துநிற்கி றார்.


தென்.கி.


கவிதை வருவதால் தங்களுக்கு இன்பம்


கவிதை வராததால்

எங்களுக்குத் துன்பம்.


உங்களை ஊக்குவிக்க நாங்களோ யார்?


தென்.கி.


களங்கமற்ற இன்பம்


இன்பத்திற்குச் சிறப்பான அடையுடன் கூடிய விளக்கம்.


இத்தகைய சொல்லாடலைக் கவிஞர்களிடம் மட்டுமே காணமுடியும்.


தென்.கி.


குறளுக்கு குறள் வடிவில் விளக்கம் தந்து இருப்பது மிக சிறப்பு!👌👌🙏

அன்பு


" கற்றறிந்த நற்கருத்தே சான்று "


பாபா அவர்கள் நன்கு கற்றவர் மேலும் நற்கருத்து பல கொண்ட பாடல்களைத் தருவதில் வல்லவர் என்பதற்கு இத்தொடரே சான்று.


வாழ்க நீவிர் பல்லாண்டு உடல் மற்றும் மன நலத்தோடு...தென்.கி.


" உள்ளத்திற் கின்பந்தான் சொல் "


இதுதான் பாபாவின் இன்பத்துப்பாலின் ஈற்றடி.

இதில் ஒரு நுட்பம் உள.


முதலெழுத்து....உ

ஈற்றெழுத்து......ல்


தமிழில் பல சொற்கள் உல் என்ற அடியாய்ப் பிறக்கும்.

உல் என்றால் சுற்று என்று பொருள்.பாபா அவர்கள் எளிமையான சொற்களால் பாடல்கள் பல தந்து நம்மை அவர்கள் பின்னால் சுற்றச்செய்வது சிறப்பு.


தென்.கி.


" விண்ணுலகில் உண்டோ புகழ் "


ஒரு கவிஞனுக்கு இருக்க வேண்டிய முதன்மைத் திறன் எதுவென்றால் அது கற்பனை.இதனுடன் ஓசை நயமும் கலந்து விட்டால் பாடலின் உயிரோட்டம் கூடி படிப்பவர் உள்ளத்தில் பாடல் தங்கி சாகாவரம் பெற்று நிற்கும்.இத்தகைய தகுதி நம் பாபாவிடமும் உள்ளதென்பது படிப்பவர்க்குத் தெற்றென விளங்கும்.


அவர்கள் வாழ்க!..வளர்க!


தென்.கி.

" மேற்கொள் செயலை விழைந்து "


இவ்வாறு எத்தனையோ செறிவுடைய பொன்மொழி போன்ற தொடர்களைப் பாபாவின் பாடல்களில் பரக்கக் பார்க்கலாம்.மிக உயரிய வாழ்வியல் போதனைகளை ஒரு அடியில் அடக்கிச் செல்லும் பாங்கு பாபாவின் புகழை ஓங்கச் செய்யும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


தென்.கி.


குறள்களுக்கு குறள் வடிவில் விளக்கம்:

[11/01, 17:51] Madurai Babaraj:


 அருமையான வெண்பா நூல்.

 திரு இராமசாமி பெரியகுளம்


" என்றும் அறிவே துணை "

இதுபோன்ற வாழ்வியல் மகாவாக்கியங்களை மிகவும் எளிதாக தங்களால் மட்டுமே தர முடியும்.


பாட்டுப் புலவராம் பாபாவைப் போற்றுகிறேன்.


தென்.கி.


பாபா ஐயாவின் மீது எனக்கு பொறாமை மிக உண்டு.என்ன பொறாமை யென்றால் எப்படி இப்படி குழந்தையாய்ப் பாடல் எழுத முடிகிறது என்பதுதான்.


எளிமையின் அளப்பரிய ஆற்றல் அவர்கள்.


தென்.கி.


'இங்கே இருக்கின்றேன் பார்'


காமத்துப்பால் மீதான பாபாவின் பார்வை போற்றத்தக்கது.


தென்.கி.


நூல் கிளிஞ்சல்கள்

கவிதை: வீசப்பட்ட வீணைகள்

ஆண்டு 2002


நல்லதோர் வீணைVs வீசப்பட்ட வீணை


மனத்தைப் பிழியும் வீணை இசை...


CR


அருமை ஐயா! ஒரே பாடலில் மனிதனின் இழிசெயலையைம்        உன்னத நிலையையும் , பாதிக்கப்பட்ட பிஞ்சு மனத்தின் ஓலத்தையும், நல்லோரின் ஆதரவுக் கரத்தால் வாழ்வில் நம்பிக்கை பெற்றதையும் நம் மனத்தில் ஆணி அடித்தது போல் பதித்து விட்டீர்கள். இரு தலைமுறைகளின்  வாழ்க்கைப் போராட்டம் சிறப்பு. வீசப்பட்ட வீணைகள் கலைஞன் கை  பட்டால் நாதம் எழுப்பும்.


VOV Rajendran chokalingam


வாழ்விற்கு எளிமையாய் விடை சொல்லிவிட்டீர்கள்.கவிஞர்களால் விரிக்கவும் சுருக்கவும் முடியும்.



Vovkaniankrishnan: _


படத்திற்கு ஐந்து நிமிடம்..

ஆனால்

படைப்பதற்கோ

ஒரே நிமிடம்._

பாபாவின் வித்தகம்._


Madurai Babaraj: 


ஐந்து மணித்துளி வண்ணப் படைப்பால்தான் 

என்கவிதை பார்ப்பார் படித்து.


மதுரை பாபாராஜ்


பாபாவின் முப்பால் எளிய கவியுரையினை எல்லோரும் வேறுபாடு கொள்ளாது படிக்க வேண்டும்.மு.வ உரையினும் கவியுரை எளிதாய் இருப்பது பெரு வியப்பாகவுள்ளது.இது அவர்களுக்கு எப்படி சாத்தியப்பட்டதென்பது புதிராகவுள்ளது.பரிமேலழகரைப் படித்துக் குழம்புவதை விட பாபாவைப் படித்து தெளிவு பெறலாம்.


பாபாவின் எளிமைக்குள் எழுச்சிபெற்று நிற்கிறது திருக்குறள் என்றாலது மிகையன்று.பாபா வாழ்க! அவரது எளிமைத் தமிழ் மேலும் வாழ்க!..


தென்.கி.



"ஆசை அழிவைத் தரும்"


பேருண்மையை எளிய தொடரில் தந்துள்ள பாபாவைப் பாராட்டாமல் இருக்க முடியுமா!


தென்.கி.


"நினைப்பதை நெஞ்சே நிறுத்து"


நகர ஓசை நம்நெஞ்சை பாபாவின்பால் நகர்த்திச்செல்வது நணித்து..


தென்.கி.


உயர்நிலை பள்ளி முதலே 

உல்லாசமாய் தமிழை ரசித்து,

கவிமாலை கொடுத்திடும்

பன்முக கலைஞர் 

நமது பாபாராஜ் ஐயா!

மரணத்திற்கே மணி மணியாய் 

கவி பாடினார்! 

வள்ளுவனையும் கம்பனையும் வசீகரமாய் காதலித்து

மின்னல் வேகத்தில் மெருகேற்றி கவிபடைக்கும் தனித்திறன் படைப்பாளி 

நம் பாபராஜ் ஐயா!

🙏🙏🤝🙏🙏

மொகலீஸ்வரன்

31.12.24


தங்கள் வெண்பா மிகவும் அருமை! தங்களுடைய முப்பால் வெண்பா நூல்களையும் பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிவிட்டேன்!

தீத்தாரப்பன்


Vovkaniankrishnan:

எனது குறள் வெண்பாக்கள் அனைத்தும் பாபாவின் சொத்து.என்னுடைய பங்களிப்பென்று எதுவுமிலை.அதுதான் உண்மையுங்கூட.


நீங்கள் நார் அல்ல நீங்களே வேர்..தென்.கி.


RAJENDRAN CHOKALINGAM:

வேரில் பழுத்த  பலா   

ஏராளம்

வேரால் வளர்ந்த கிளைகளும் 

வீரியமே

கிளைகளில் உருவான கவிதை 

கனிகள்

உன்னதக் கருத்தால் உலகை

உயர்த்தும்.

சாற்றின் சுவையில் வேரின்

சாரமுண்டு.


Vovkaniankrishnan:

அறிவுக்கடல் நீங்கள்.


நானும் பிறந்துள்ளேனே இம்மண்ணிற்குப் பாரமாய் என நினைக்கத் தோன்றுகிறது...தென்.கி


எந்த வகையில் பார்த்தாலும் கவிஞர்களுக்குப் பின்தான் கலைஞர்கள்.


நீங்களெல்லாம் இம்மண்ணில் நீண்ட காலம் வாழ வேண்டும்.அதற்கு இயற்கை துணைநிற்க வேண்டும்..


தென்.கி.


உங்களுடைய ஆற்றல் தனித்துவம் வேறு. அதற்குள் நான் வரமுடியாது.ஆற்றல்கள் நிகரற்றவை நண்பரே. ஏற்றத் தாழ்வு கிடையாது.


மதுரை பாபாராஜ்


Vovkaniankrishnan:

இக்கவிதை என் மனதை வேதனையுறச் செய்கிறது.

என்ன செய்ய?.வாழ்வோம் துணிந்து..தென்.கி.


பிறர்நமக்குச் செய்தகுற் றங்களைமன் னித்து


மறந்து விடுதலே சால்பு.


[25/12, 08:24] Vovkaniankrishnan: *வண்ணத்தைத் தீட்டி அழகுசெய்தால் என்னபயன்* 

 *எண்ணத்தைத் தீட்டல் பயன்.*


[25/12, 08:52] Madurai Babaraj: கவிதை படைத்தல் படிக்கவைக்க! அந்தப்

பயனைத் தருவ தழகு.


[25/12, 07:22] Vovkaniankrishnan: *பாட்டெழுதுவதையே உயிர் மூச்சாய்க்கொண்டு வாழும் தங்களை நாளும் வணங்குகிறேன்.*


[25/12, 07:27] Madurai Babaraj: கவிதை படிப்பதற்குத் தூண்டுகின்ற வாறு

கவர்ச்சியாக வண்ணங்கள் தீட்டுகின்ற உங்கள்

அழகாற்ற லுக்குதான் உண்டு.


மதுரை பாபாராஜ்


மதுரை பாபாராஜ்


REVERBERATION 

ENGLISH VERSES!


MAKE LIFE PLEASANT:


'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதற்கு சமமான ஆங்கிலக் கவிதை!


KRS KARAIKUDI


Swaminthan Swaminathan:

I think you were aware in 1984 itself that BJP would come to power and so you have warned the Nation to be careful. 

But the Nation was careless and so fundamentalism, religious fanaticism etc rule the Nation today.

But, India will win. Yes, we can.


மதுரை பாபாராஜ்:

It was there globally. So I wrote this. Moreover these vicious tentacles grip then and there. Thank you


Apartheid!

[18/12, 13:58] Rajkumarjothi: 

Super, Sir 👍👍

Urn of Ash!

[18/12, 13:59] Rajkumarjothi: 

Rightly said, Sir 👍👍

Need of the hour!

[18/12, 14:00] Rajkumarjothi: 

Great thinking 👍👍


அருமையானப் பணிகளைத் தாங்கள் தொடர்ந்து ஆற்றி வந்துள்ளீர்கள். 

மகிழ்ச்சியுடன் தங்களை வணங்குகிறேன்!

வாழ்க பல்லாண்டு நல் வளத்துடன்!


செ வ இராமாநுசன்


பாபாவின் அருமையான ஆங்கில கவிதைகள் புகழ் பெற்ற செய்தித்தாளில் வந்த செய்தி தெரியாமல் இருந்துள்ளேன் என்பது எனக்கு ஒரு வருத்தத்தை அளிக்கிறது.


KRS KARAIKUDI


Vovkaniankrishnan:

பாபாவிற்குத் தாய்மொழி தமிழே ஆயினும் ஆங்கிலமும் அத்துப்படி.


VovTheetharappan:


கவிஞர்களுக்குப் பொதுவாக பன்மொழித் திறன் இயற்கையாகவே இருக்கும்! அதனாலேயே அவர்கள் " யாமறிந்த மொழிகளிலே" என்று பாடுகிறார்கள்!


*எவ்வளவு திண்மை அறிவுடை யீர்களோ* 

 *அவ்வளவும் தங்கச் சிறப்பு.*

தென்.கி.


அறத்துப்பால் வெண்பா முயற்சி

குறள்கள் 


பயன்படும் நாள்தோறும் பார்

என்னவள் என்னவள்தான் பார்

அருமைப் பொன்னடிகள்.

Vovkaniankrishnan:


நடுத்தெருவில் நிற்பான் நசிந்து...என்னே! அருமை.


பாபாவின் பாடல் படித்தால் பரிமேலழகரும் பாராட்டுவார்..தென்.கி


வணக்கம் ஐயா 


உங்களின் குறள் வெண்பா, சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்து இருக்கிறது.


மாணவனாக , உங்கள் குறள் வெண்பாவை சீர் பிரித்து அலகிட்டு, வாய்பாடு  பார்த்து ,வெண்பா எப்படி எழுத வேண்டும் என்பதை நாள் தோறும் கற்றுக் கொண்டு இருக்கிறேன். வெண்பா ஒரு வன்பா என்பார்கள். 


உங்களுக்கும், ஐயா மதுரை பாபாராஜ் அவர்களுக்கும், தளை தட்டாமல் வெண்பா , இயற்கையாக  அருவியென கொட்டுகிறது. 

வாழ்த்துகள்  ஐயா❤️🌹🌹🌹.


தொடரட்டும் உங்கள் தமிழ் பணி. 🙏 Stalin Ramakrishnan


வார்த்தையில் எளிமை

கருத்தில்  உண்மை

விரிவில் சுருக்கம்

உரையோ கவிதை


கற்பதில் மகிழ்ச்சி

நிறைவில் நெஞ்சம்

உணர்வதில் உயர்வு

உலகில்  உண்மை


குறள் பணியில்

திறமை காட்டும் 

அறப்பணி சிறப்பே

இறைவன் அருளே.


ராஜேந்திரன் சொக்கலிங்கம்


ஐயகோ காண்!  - அருமை!


நண்பர் தீத்தாரப்பன்


திருக்குறள் முழுமைக்கும் நேரிசை வெண்பாக்களால் முதன்முதல் உரை கண்டவர் என்னும் பெருமிதம் கவிஞர் பாபாராஜ் அவர்களுக்கு உண்டு. 


- கு. மோகனராசு


*மிக அடக்கமாக இருந்துகொண்டு கணக்கிலடங்கா பாடல்களைப் பாடியுள்ளீர்கள்.பாராட்டுகள் பாபாஜி.*

தென்.கி.


இதுவே தங்களது பெருஞ்சிறப்பிற்கான நற்சான்று.


உரையால் தர முடியாததையும் கவிதையால் தரமுடியும் என்பதைத் தாங்கள் சாதித்துக் காட்டியுள்ளீர்கள்.


என்றென்றும் வாழ்க! தாங்களும் தங்கள் கவிதையும்...தென்.கி.


சொல்லே அகத்தின் சுடர்..அருமை எளிய சொல் ஏந்தலே!


எளிய உரை நடையையே மிகச் சிறந்த பாடலாக்கும் அற்புதத் திறன் கொண்டவர் நம் பாசமிகு பாபாராஜ் அவர்கள்.

எளிமை அதுவே நம் பாபாவின் திறமை..


தென்.கி


உங்களுடைய அனைத்துப் பதிவு களும் மிக அருமை


Stalin Ramakrishnan


கனி காய் என்று இரண்டே சொற்கள்.அதுவே பாபாவின் பாட்டிற்குப் பூக்கள்.பூவே பூக்கா விட்டாலும்,பாபாவின் பாட்டு நாளும் பூக்கும்..தென்.கி.

03.12.24


வள்ளுவன் வாக்கு விடியல் வெளிச்சமாய்

உள்ளம் கவரும் உரை.


தென்.கி.


வள்ளுவன் வாக்கு

வெளிச்சம் டிவி


வள்ளுவன் குறள் வாழ்வின் விடியல்!

பாபா ராஜ் குரல் விடியலின் வெளிச்சம்!

வாழ்க! வளர்க! இறை அருள்க!


Vov Swaminathan ss


*உலகில் நகை உவகை இரண்டையும் தரவல்லது குழந்தைச் செல்வமே.அதுபோல்தான் தங்களது குழந்தைப் பாடல்களும்.காலத்தை வீணாக்காமல் வீரியமாக்கி வாழ்கிறீர்கள் நீங்கள்.நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழுங்கள் தாங்களும் தங்களது உற்ற துணைவியாரும்.*


எளிமையும் வாழ்வியலும் கூடிய பாட்டால்

 குளிரவே செய்வார்பா பா.

தென்.கி.*

*குழந்தைப் பாடல் என்ற பெயரில் அழகு நிறைந்த பாடல்கள்.*


நம் பாபாராஜ் அவர்கள் வெவ்வேறு தளத்தில் நின்று தமிழ்ப்பணி ஆற்றுவது மிகவும் பாராட்டத்தக்கது..

தென்.கி.


Vovkaniankrishnan:

தங்களா லான முயற்சிக ளெல்லாமே

எங்களுக் கான விருந்து..தென்.கி


VOVCR:

எவருக்கும் புரியும் வகையில் அதிகாரக் கருத்துக்கள் ஒரே பக்கத்தில்....


Vovkaniankrishnan:

பாரதியின் பாப்பா பாட்டுப் போல

பாபாவின் குழந்தை குறள் பாட்டு.


தென்.கி

நண்பர் சிரிதருக்கு


ஒரே நாளில் தங்களால் மட்டுமே கவிதையினைக் குவியலாக அள்ளித்தர முடியும்.கவிதை உங்களுக்கு உயிரோடு கலந்துவிட்டது.எனவே அது பிரவாகம் எடுத்து வருகிறது.வாழ்த்துகள்.

தென்.கி.





 நண்பர் சிரிதர் அவர்களுக்கு வணக்கம்!


விடிந்ததும் வந்த பதிவுகளைப் பார்த்து
அடியாத்தி இத்தனையா என்றே வியக்கும்
படிஇருந்த தோதான் பகர்.

மதுரை பாபாராஜ்

கருமியானாரே!


 

என்று மாறும் ஊடகங்கள்?


 

தள்ளாடும் வாழ்க்கை

 தள்ளாடும் வாழ்க்கை!


இப்படி வாழவேண்டும்! அப்படி வாழவேண்டும்!

எப்படியோ என்கனவில் ஓரளவு வாழ்ந்திருந்தேன்!

கொப்பொடிந்து  வீழ்ந்தேன்! துடித்தேன் துவண்டுவிட்டேன்!

இப்படியா என்தலையில் பாறாங்கல் வைப்பார்கள்?

அப்படியே தத்தளித்துத் தள்ளாடும் வாழ்விலே

எப்படியோ வாழ்கிறேன் இங்கு!


மதுரை பாபாராஜ்


Friday, March 28, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எண்ணங்கள் வந்துபோகும் என்ப தியல்புதான்!
எண்ணத்தில் நேர்மறையைத் தேர்ந்தெடுத்தோம் என்றால்தான்
நன்மை விளையும்! மகிழ்ச்சியை வாழ்க்கையில்
உங்களைச் சுற்றியே தக்கவைக்கும் என்றென்றும்!
நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பார்.

மதுரை பாபாராஜ்

Thursday, March 27, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்களைச் சுற்றி நடப்பதை உங்களால்
என்றுமே கட்டுப் படுத்த முடியாது!
உங்கள் மனப்போக்கை கட்டுப் படுத்தலாம்!
எந்த அளவுக்கு முன்னேற்றம் என்பதையும்
என்னநீங்கள் என்பதையும் சூழ்நிலையை நீங்களோ
நன்றாய்ச் சமாளிக்கும் உங்களது ஆற்றலால்
இங்கேதான் காட்டலாம் காண்.

மதுரை பாபாராஜ்

உன்வாழ்க்கை உன்கையில்


 

Wednesday, March 26, 2025

மலையும் மடுவும்


 

மருமகன் ரவி



 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


வேலையைச் செய்தால் அறம்வேண்டும்! பின்பிங்கே

ஓய்வெடுத்தால் அந்த நிலையில் அறம்வேண்டும்!

காய்தல் உவத்தலின்றி மேற்கொள்ள வேண்டுமிங்கே!

வாழ்விலே ஒன்றையொன்று விஞ்சாமல் பார்க்கவேண்டும்!

தேவை அறவழி யே.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


தயாராய் இருப்பது முக்கியம்! ஆனால்
அதிலே வெறியாக இல்லா திருத்தல்
மிகமுக்கி யந்தான்! தயார்படுத்த நேரம்
செலவழித்தே அந்தப் பணிகளை நாமோ
உளங்கனிய மேற்கொண்டு சாதிக்க வேண்டும்!
இலக்கை நிறைவேற்றப் பார்.

மதுரை பாபாராஜ்

Tuesday, March 25, 2025

காலம் புகட்டும் பாடம்.


 

வெய்யிலோ வெய்யில்


 

Monday, March 24, 2025

இடியாப்பச் சிக்கல்

 இடியாப்பச் சிக்கல்?


இடியாப்பச் சிக்கலே வாழ்வாக மாறித்

துடிக்கவைத்துப் பார்த்தால் துவண்டேதான் போவார்!

வெடிகுண்டு கூட உடனேதான் கொல்லும்!

நெறிமறக்கும் உட்பகை நாள்தோறும் கொல்லும்!

தொடக்கம், முடிவெங்கே? சொல்.

மதுரை பாபாராஜ்

I want to sleep!

 I want to sleep!


Sleep slips from my eyes!

Mind is shattered into pieces!

Walk is staggering here and there!

Thousands of scorpions gnawing

At my heart and bleeding by stings!

Why this state occurs suddenly?

Reasons are thousands roaming

Around me showering blistering pains!

Oh! Sleep! Slips from my eyes!

Mind is shattered into pieces!


Babaraj

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எல்லாம் நமது அணுகுமுறப் பக்குவத்தில்
உள்ளது! நேர்மறைச் சிந்தனை காட்டுகின்ற
நல்ல அணுகுமுறை ஒன்றே எதையுமே
இங்கேநாம் சாதிக்க வல்லது! நல்வழியில்
உங்களது தீர்மானம் நற்பணி செல்லவேண்டும்!
என்றுமே நேர்மறையாய் வாழ்வதற்குக் கற்கவேண்டும்!
நன்னெறியில் வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

Sunday, March 23, 2025

Varun birthday


 வருண் பிறந்தநாள் 24.03.25

Cake cutting before grandma 23.03.25

HAPPY BIRTHDAY GRANDSON!

 E.S.  V A R U N  A D I T H Y A .

BIRTH DAY: 24.03.25

Variety of Artistic talent glitters!

Alacrity always your style!

Rarer action in virtue to all beings!

Utmost concentration in your task!

Nonpareil you are in your field!

Austerity in dress and friendship!

Daring personality you are!

Instant drawing your special skill!

Technical interest embedded in you!

Humanitarian attitude dazzles!

Yare in all approach!

Affability reflects in your manners!

Greetings from 
Babaraj
Vasantha
Family

Saturday, March 22, 2025

தடைகளைத் தாண்டு


 

Friday, March 21, 2025

தரைமீது மீன்


 

Thursday, March 20, 2025

இயற்கைப் பேரிடர்


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்கள் மகிழ்ச்சியோ உங்களுக்குள் உள்ளது!
பொன்பொருள் அல்லது சூழ்நிலையோ வேறெதுவோ
அல்ல! இவற்றை உணர்ந்துவிட்டால் நீங்களோ
எப்போதும் நல்லமைதி மற்றும் மகிழ்ச்சியுடன்
நன்றாக வாழலாம் இங்கு.

மதுரை பாபாராஜ்

Wednesday, March 19, 2025

குறள் பாலம்

 VOVCR:

ஆட்சியர் எவ்வழி அவ்வழியே துறைகள் இயங்கும்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு வீ ப ஜெயசீலன் பல்வேறு வகையான உத்திகளை மேற்கொண்டு குறளறம் விதைக்க முயன்று வருகிறார்..

அதன் மாவட்டத்தில் திருக்குறளை பரப்புவதற்காக ஒல்லும்‌ வகையெல்லாம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்று குறள் பாலம்..

குறள் பாலம் கரை சேர்க்கும்...
மனங்களை இணைக்கும்.😇

As they say

Speed of the Engine is speed of the Train..👍😊🌺

மதுரை பாபாராஜ்:

குறள்பாலம் வாழ்விலே நேர்மறைப் பண்பைச்
சிறக்கவைத்தே நாளும் மனிதம் தழைக்க
மனங்களை இங்கே இணைக்கும் பணியைச்
சுணங்காமல் செய்யும் உணர்.

மதுரை பாபாராஜ்

சத்யப்பிரேமா கார்த்திக் பிறந்தநாள் வாழ்த்து


 

Tuesday, March 18, 2025

சுனிதா வில்லியம்ஸ் புட்ச் வில்லிமோர்


 

நண்பர் பிரசாத் USA



 நண்பர் பிரசாத் அனுப்பியதற்குக் கவிதை!


நல்லவரை எப்போதும் சோதிக்கக் கூடாது!

நல்லவர்கள் பாதரசம் போலத்தான் தாக்கினால் 

உள்ளம் உடையமாட்டார்! உன்வாழ்வை விட்டேதான்

தள்ளி நழுவி அமைதியாக சென்றிடுவார்!

நல்லவரைப் புண்படுத்தல் தப்பு.


மதுரை பாபாராஜ்

Monday, March 17, 2025

நவில்தொறும் நூல்நயம்

 https://www.facebook.com/ValaiTamil/videos/2126881231084986

நவில்தொறும் நூல்நயம்

திருக்குறள் வெண்பாப் பாங்கில்

14.03.25

ஆய்வுரை: ஸ்டாலின் இராமகிருஷ்ணன்

பொறியாளர்

எனது பென்னர் நண்பரிடம் இருந்து வந்த மடல்:


:அருமை!

 வெண்பாப் பாங்கில் திருக்குறள்


ஸ்டாலின் இராமகிருஷ்ணன்

பொறியாளர்,

தங்களைப் பற்றி விரிவாக பேசியிருக்கிறார்.

திருக்குறள் முழுவதற்க்கும் வெண்பா எழுதியது,மற்றும் திரு.சாலமன் பாப்பையா உடன் நீண்ட வருட தொடர்பு, தென்கச்சி சுவாமிநாதன் தங்களைப்பற்றி புகழுரை( 60வயதுக்கு மேல் ரிடையர்மெண்ட் இல்லாமல் எழுதுவது  என்பதைப்பற்றி)

நயவுரை சிறப்பாக இருந்ததுமிகவும் மகிழ்ச்சி! நன்றி!

கண்ணன்

Export




யானை- பூனை

 யானையாய் அன்று! பூனையாய் இன்று!


யானைபோல் வாழ்ந்திருந்தேன் அப்போது என்னையோ

தாக்க புலிகூட அஞ்சித்தான் ஓடிவிடும்!

பூனைகூட இன்றோ எனைத்தாக்க

நாடிவரும்

கோலத்தில் வாழ்கிறேன் நான்.


மதுரை பாபாராஜ்

Sunday, March 16, 2025

மலைப்பிலே வாழ்வு

 மலைப்பிலே வாழ்வு!

தலைநிமிர்ந்த வாழ்க்கை கனவாகிப் போக

தலைகுனிந்த வாழ்க்கை நினைவாகிப் போக

உளைச்சலே நாளும் உறவாகிப் போக

மலைப்பில் நகர்கிறது வாழ்வு.

மதுரை பாபாராஜ்

பூக்குழி நெருப்பு!

 பூக்குழி நெருப்பு!


பூக்குழி என்றே நெருப்பின்மேல் பக்தர்கள்

நேர்ந்துகொண்டு இங்கே நடப்பார்கள்! பார்க்கின்றோம்!

வாழ்க்கையில் நாளும் நெருப்பின்மேல் ஓடுகின்றோம்

சூழ்நிலைகள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கும்!

பாழ்மனம் பார்த்திருக்கும் நொந்து.


மதுரை பாபாராஜ்


நற்றமிழர் இராமாநுசன்


 நெஞ்சகமே நூலகம்

நூலகமே நெஞ்சகம்!

வாரம் ஒரு நூல்!

நெஞ்சகமே நூலகம்! நூலகமே நெஞ்சகம்!
என்ற தலைப்பிலே நூலா சிரியரை
நன்கு அறிமுகம் செய்துவிட்டு நூலாய்வை
நன்முறையில் செய்யும் இராமா நுசனாரின்
பண்பட்ட ஆற்றலை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நிழலும் நீரும் தீதே


 

அனுசரி


 

Saturday, March 15, 2025

Dr Madhusudhanan

 HAPPY BIRTHDAY DOCTOR!

MADHUSUDHANAN!

குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.

16.03.25

Magnificent personality!

Affable manners!

Daring optimism!

Humane in approach!

Urbane in Nature!

Sincere in his Duty!

Upright in his Advice!

Duty coscious

Health care his attitude!

Alacrity in his mobility!

No to his selfishness!

Authenticity is his decision!

Natural smile in his face always glitters!


Babaraj


Friday, March 14, 2025

கூட்டமோ கூட்டம்


 

Thursday, March 13, 2025

நண்பர் தென் கி

பாபா பாமழை நண்பர் பொழிகின்றார்!
பாபா நனைகின்றார் பார்.

பாபா






என்னை வாழ்த்தியமைக்கு நன்றி!

தென்காசி நண்பர் கிருஷ்ணன் உவந்தளித்தார்

வெண்பாவால் வாழ்த்துதான் இன்று.

மதுரை பாபாராஜ்


 ஐயா பாபாராஜ் அவர்களது நூலைப் படித்தாலே போதும்;பிழையின்றி எல்லோரும் வெண்பா எழுதலாம்.இது அடியேனது அனுபவ உண்மை.அந்த பெரிய ஆலமரத்தின் சிறு விழுதாக நானுள்ளேன்.அவர்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.


வள்ளுவம் போல் அவர்களது வெண்பாவும் மண்ணில் நிலைத்து நிற்கும். அவர்கள் உச்சத்தில் நின்றாலும் என்னைப் போன்ற எச்சத்தையும் பாராட்டுவது உள்ளத்தை உவக்கச் செய்கிறது.

தென்.கி

பாபா எனக்கு நிரம்ப பிடிக்குமே

பாபாவே வெண்பாவின் ரோடு.

தென்.கி

ஏனிந்த வாழ்க்கை?

 ஏனிந்த வாழ்க்கை?

ஊக்கம் இழந்துவிட்டேன்! தூக்கம் இழந்துவிட்டேன்!

ஊக்கம் கொடுக்கின்ற உற்சாகம் தானிழந்தேன்!

தூண்டிலிடும் சூழ்நிலைக்குள் சிக்கிவிட்ட மீனானேன்!

ஏனிந்த வாழ்க்கை எனக்கு?

மதுரை பாபாராஜ்

தள்ளாடுகிறேன்

 வேரிழந்து தள்ளாடுகிறேன்!


வேரிழந்து தள்ளாடும் என்தலையில் நாள்தோறும்

ஊர்நகைக்க தூக்க முடியாச் சுமைகளைத்

தூக்கவைத்தே வேடிக்கை பார்க்கின்றார் என்செய்வேன்?

ஏக்கம், உளைச்சலுமா வாழ்வு?


மதுரை பாபாராஜ்


கடமைகள் பற்றா


 

நண்பர் எழில்புத்தன்

 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:


செயல்கள், கலந்துரை யாடல், பயிற்சி
தனைநீங்கள் ஒத்தியே போடுதல் மற்றும்
தவிர்த்திடுதல் என்றால் அடுக்கடுக்காய்ச் சேர்ந்தே
மலைபோல் குவிந்துவிடும்! நோய்போல் பரவும்!
சிறியதே என்றாலும் செய்து முடிக்கத்
துணிவதே என்றும் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

Wednesday, March 12, 2025

கழற்ற முடியாத முடிச்சுகள்


 

Monday, March 10, 2025

பாயும் புலியாகாதே


 

நம்சுமை நமக்கே