Thursday, August 31, 2023

பொய்பேசாதே



 பொய்பேசாதே!


பொய்களைச் சொல்லத் தொடங்கினால் பொய்களால்

பொய்க்குமேல் பொய்யடுக்கி பொய்மூட்டை யாகிவிடும்!

தள்ளாடிப் பொய்யைச் சுமப்பதற்கு நேரிடும்!

பொய்பேசும் வாழ்க்கையே பொய்.


மதுரை பாபாராஜ்

தாயும் குழந்தையும்


தாயும் குழந்தையும்!


ROVER MOVEMENT! 


ISRO SCIENTIST SIMILE!


குழந்தை நடைபயின்று நாளும் தரையில்

உருள்வது போல, குழந்தையைத் தாயோ

கருத்துடன் பார்த்து ரசிப்பது போல 

தரையுலகில் இங்கிருந்து வெண்ணிலவு மீது

உருள்வதைப் பார்க்கின்றோம் நாம்.


மதுரை பாபாராஜ்

 

முறுக்காக நம்மைப் பிழிந்தால்


முறுக்காக நம்மைப் பிழிந்தால்?


மாவை நிரப்பிப் பிழிந்தால் முறுக்குவரும்!

ஆவலுடன் வீட்டிலே செய்வார் சுவைத்திருப்போம்!

சூழலோ மாவாக மாறி மனிதரை

நாளும் முறுக்கைப் பிழிவதுபோல் ஆக்கிவிட்டால்

வாழ்வே உளைச்சல்தான் சொல்.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, August 30, 2023

சிறுபாணாற்றுப்படை


சிறுபாணாற்றுப்படை!

----------------------+------------

பூழி பூத்த புழல் காளாம்பி

ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்

வளைக்கை கிணை மகள் வள் உகிர்க் குறைத்த

குப்பை வேளை உப்பிலி வெந்ததை

மடவோர் காட்சி நாணிக் கடை அடைத்து

இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்

அழி பசி வருத்தம் வீட………… (133-140)


கூரையில் வேய்ந்த மரச்சட்டம் காணவில்லை!

காரைச் சுவரைக் கறையான் அரித்ததால்

காளான் சுவரின் இடுக்கில் வளரந்திருக்க

சீரழகி என்மனைவி கையில் வளையலுடன்

கோரப் பசியால் வயிறு துடித்திருக்க

கீரையை அங்கே கைநகங் கொண்டேதான் 

ஆரணங்கு பார்த்துப் பறித்தேதான் வேகவைத்தாள்

பாவமாய் உப்பின்றி உண்ணும் பரிதாப

ஏழ்மை நிலையை மற்றவர்கள் பாராமல்

கூர்மதியாள் அங்கே கதவைத்தான் மூடினாள்!

பால்முகம் வாட உறவுடன் உண்டிருந்தாள்!

ஏழ்மைக் கொடுமையைப் பார்.


மதுரை பாபாராஜ்

 

கைபேசி


கைபேசியைக் கவனமாக பயன்படுத்துவோம்!


கைபேசி தன்னை முறையாக பாதுகாப்பாய்க்

கையாளும் நல்ல நெறிமுறைகள் சொல்கின்றார்!

கையாள்வோர் நாளும் கவனமாக கையாண்டால்

கைபேசி நல்லது தான்.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, August 29, 2023

மழையே உயிர்



 மழையே உயிர்!


மழைபெய்தால் நாட்டில் வளம்சேரும்! பொய்த்தால்

நிலைமாறும் நாளும் வறட்சிதான் ஆளும்!

அலையாடும் ஆழியும் காணாமல் போகும்!

சிலைகாணும் பூசையும் நின்றுதான் போகும்!

மழையே உலகின் உயிர்.


மதுரை பாபாராஜ்

Gayathri Prasad


Source: Mr. Gayathri Prasad, Madurai

Family united -- 

Financial problem more!

Emotional.problem less!

Old Scenario!


Family Staggering --

Financial problem less!

Emotional problem more!

Current scenario!

Babaraj

 

புண்படுத்தல் நல்லதல்ல


புண்படுத்தல் நல்லதல்ல!


நோய்நொடியில்  திண்டாடும் நேரத்தில் புண்படுத்திக்

காயப் படுத்துதல் நல்லதல்ல -- நோயாளிக்

காறுதலாய் இல்லை எனினும் உளைச்சலால்

கூடுகட்டிப் பார்ப்பது தீது.


மதுரை பாபாராஜ்

 

என்ன செய்வேன்?


என்ன செய்வேன்?


ஒன்றுபோனால் ஒன்றுவரும் என்றிருக்கும் வாழ்விலே

என்றுவரும்? எப்பவரும்? என்னவரும்? என்றேதான்

ஒன்றும் புரியவில்லை! ஒன்றிருக்கும் போதிலே 

ஒன்றுவந்தால் என்னசெய்வேன்? சொல்?


மதுரை பாபாராஜ்

 

செல்வன் பரத்குமார்



 செல்வன் பரத்குமார் பிறந்தநாள்!

அகவைத்திருநாள்: 29.08.23 

வாழ்த்துப்பா!

அகரவரிசை!

அன்பு, ஆற்றல், இன்சொல், ஈகை,

உழைப்பு,ஊக்கம்,எளிமை, ஏற்றம், ஐயந்திரிபறக் கற்றல், ஒழுக்கம், பின்பற்றி ஓங்குபுகழ் கண்டே ஔவைத் தமிழ்போல வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

சுசாந்த் சிரிராம்

நிக்கில் அபிசேக்

Monday, August 28, 2023

வேட்டை காணொளி



 



 Babaraj

முழுவதும் கேட்டேன் மகிழ்ந்தேன். அனைத்தையும் படித்து உழைத்து குற்றால அருவியென தமிழ் பொழியவைத்தமைக்கு நன்றி bro. I am much indebted to you. Super recognition at my age 75. I am gifted.

[8/29, 8:29 AM] VettaiNisshin SATHAR
 NANA: 

தனது இளமைக் காலத்து நற்பணிகளை முதுமைக் காலத்தில்  பட்டியலிட்டு மெச்சப்படுகின்றபோது, ஏற்படுகின்ற மகிழ்ச்சி என்பது  தனிரகமானது!

முகம்காணா ஒரு நல்ல  மனிதரை, இலக்கியவாதியை சர்வதேசத்துக்கு கொண்டுசென்று சேர்ப்பதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்! 

தங்களின் இலக்கியப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!

அன்புடன், செம்மைத்துளியான்.

🙏🧚‍♀🧚‍♀🙏
Super use of AI technology. 👍
Ramkumar

ஐயா, கேட்டேன்! மகிழ்ந்தேன்! அருமை!! வாழ்த்துக்கள்!

VOV Asokan

Awesome uncle👍🏻feeling proud
Mercy

சிரேஷ்ட முதுநிலை அலுவலருக்கு
வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி.
🧚‍♀🧚‍♀🧚‍♀👏👏🧚‍♀🧚‍♀🧚‍♀

முருகு,தமிழையா


வாழ்கபல் லாண்டு!
நோயும் நொடியும் பறந்து!
தென்.கி

நல்ல வாழ்க்கைக் குறிப்பு
குடும்பத்தையும், வள்ளுவர் குரல் குடும்பத்தையும் மறக்காமல் குறிப்பிட்டுள்ளீர்கள்

திக்கெட்டும் 
தமிழ் பரவட்டும்
புகழ் மணம் வீசட்டும்
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாபா🥰
🎉🌺
சி.இராஜேந்திரன்

🙏🏻. வணக்கம் அண்ணா. தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும்,  பல பெருமையான செய்திகளை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.  வாழ்த்துக்கள் அண்ணா.🙏🏻💐🙏🏻

நவில் பாட்டி திருமதி வேணி

🙏🏼🙏🏼🙏🏼 வாழ்த்துகிறோம்                   அண்ணா                                                 க. கோ. பழநி                               திருவள்ளுவர்  கல்வி மன்றம்                    தையூர், கேளம்பாக்கம் , சென்னை

அன்பு நிறைந்த கெழுதகை நம் குறள் குடும்ப அரசவைக் கவித்திலகம் பாபாஜி ஐயா அவர்கள் பற்றிய தகவல்கள் மலேஷியா வேட்டை மின் ஊடக இயந்திரப் பெண் குரலில் உலகமெங்கும் உலா வருகிறது... மிகவும் மகிழ்ச்சியாக, பெருமிதமாக உள்ளது... பாபா ஜி ஐயாவின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏💖❤️

அன்வர் பாட்சா

அன்பர்க்கு
It looks like a C. A worthy of print as a separate booklet first for the benefit for the present entire generation of your large and accomplishing family. Shall we say that this privilege is given to very few families. May be this booklet might serve as guide book and inspiration for the uplift ment of readers. Obviously it has to be in Tamil as well as in English. 
நலமிகு நல்வாழ்த்துகள்! 
வாழ்க வள்ளுவம்!

துரைசாமி திருவாசகம்

முழுவதும் கேட்டேன்.முதுமையும் தங்களை இளமையாக்குவதற்குத் தங்களது தமிழ்மொழிக் காதலே காரணம் என நான் நினைக்கிறேன்.

பாராட்டுகிறேன் பாபாஜியை.

தென்காசி கிருஷ்ணன்

அம்மாவும் கவிஞர் என்பது இதன் மூலம் தெரிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்களது திருக்குறள் ஆர்வம் வியக்கும் வண்ணம் உள்ளது.அம்மாவுக்கும் தங்களது வெற்றியில் பங்கு உள்ளது என்பதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சி யாக உள்ளது.அம்மாவுக்கும் வாழ்த்தை சொல்லுங்கள்.நன்றி

வி என் சி டி மலையலிங்கம்

அருமையான பதிவு தங்களுடைய பணி மேலும் சிறப்பாகத் தொடர என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

நண்பர் முரளி, கேந்திரிய விகார்

நண்பர் கவிஞனாகவும் எழுத்தாளருமாகவும் வானொலிக் கலைஞராகவும் இருப்பதில் பெருமை கொள்கிறேன். 
பாபா அவர்களுக்கு இனிய காலை வணக்கம்
K R Sundararajan, Karaikudi

It's really very nice to know about many of our earlier generation relatives n their talents.  It sounds so good to know more about your achievements Naina. Thanks for sharing 😍🙏🏻

Mrs Ramya Narayanan
31.08.23


ATM



 தானியங்கி வங்கி இயந்திரம்!


Automated Teller  Machine!


அட்டையைத் தக்க இடத்தில் செருகியதும்

கட்டளை சொல்லும்! படிப்படியாய்ச் செய்ததும்

உற்ற தொககையைக் குறிப்பிட்டால் தானியக்கம்

கொண்டே இயந்திரம் அங்கே செயல்படும்!

தந்துவிடும் கேட்ட தொகைதன்னை! அட்டையை

அன்பாய் எடுக்கலாம் நாம்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

உங்கள் செயல்திறன் ஆற்றல் திறவுகோல்
என்றுமே நீங்கள்தான்! உங்கள் மகிழ்ச்சிக்கு
என்றும் திறவுகோல் நீங்கள்தான்! வாய்ப்புகளை
நன்கு உருவாக்கி வாய்ப்பைப் பயன்படுத்தும்
உத்தி உயர்வைத் தரும்.

மதுரை பாபாராஜ்
 

கலங்கவைக்கும் சூழ்நிலைகள்


கலங்கவைக்கும் சூழ்நிலைகள்!


புலிவரக் கண்டேதான் மாற்றுவழி சென்றேன்!

மதம்பிடித்த யானையோ ஓடிவரக் கண்டேன்!

நிலைகுலைந்தே வேறுவழி சென்றேன்! கரடி

முரட்டுத் தனமாக வந்ததைக் கண்டேன்!

கலக்கமுடன் நானோ குழம்பித் தவித்தேன்!

சுழன்றுவரும் சூழ்நிலைகள் இப்படித்தான் வாழ்வில்

அலறவிடும் நாளும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அவர்களுக்கு வாழ்த்து!


அசையும் படத்தின் பறவையின் மூலம்

இசையாலே காலை வணக்கத்தைக் கூறும்

தகைமைக்கு நண்பரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Sunday, August 27, 2023

சகதி -- புதைகுழி



 சகதியும் புதைகுழியும்!


MUD -- QUAGMIRE!


சகதியில் சிக்கிய காலை எடுப்பார்!

புதைகுழியில் மற்றொரு காலிங்கே சிக்க

எழுந்துவர தத்தளிப்பார்! கைகொடுப்பார் யாரோ?

மலைத்தே திணறுவது வாழ்வு.


மதுரை பாபாராஜ்

முன்னணி பின்னணி


முன்னணி--- பின்னணி!


முன்னணித் தோற்றத்தை நம்பாதே!

வாழ்க்கையின்

பின்னணித் தோற்றமே மெய்யாகும்!

என்னவென்று 

உண்மை வெளிப்பட்டால் வேடம் கலைந்துவிடும்!

முன்னணித் தோற்றமோ பொய்.


மதுரை பாபாராஜ்

 

தடுமாறும் ஓட்டம்


தடுமாறும் ஓட்டம்!


அங்குமிங்கும் ஓடிய வாழ்க்கை முடிந்ததென்றே

என்னிளமைக் காலம் முடிந்தே முதுமையில் 

கண்மூடி ஓய்வெடுக்கும் நேரம் உளைச்சலுடன்

என்னைத்தான் வாழ்க்கை துரத்துவதால்  ஓடுகிறேன்

தட்டுத் தடுமாறி தான்.


மதுரை பாபாராஜ்

 

உறவினர் ராஜ்குமார் வீட்டில்


உறவினர் ராஜ்குமார் வீட்டில்!


அப்பா மடியில் மகளிருக்க அம்மாவோ

பற்றுடன் பார்த்திருக்க தாத்தா பெருமிதத்தால்

சற்றே சிரித்திருக்க உள்ளம் ரசித்திருக்கும்

அற்புதக் காட்சியை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

From Mr.Rajkumar

[8/27, 1:02 PM] Rajkumarjothi: 

Pleasant surprise, Sir. 👍👍When did you click Sir?

[8/27, 4:19 PM] Rajkumarjothi: 

Wow! Extraordinary lines from you, Sir. Great 👍👍👍

From Raghava

மிக அற்புதமான பதிவு.
நன்றி மாமா.. 😍😊

 

அலைமேல் அலை


அலைமேல் அலை!


கடலிலே சிற்றலைக்குள் சிக்கித் தவித்தேன்!

திடுமென்று பேரலை வந்தென்னைச் சூழ்ந்து

முழுகவைத்துப் பார்த்துச் சிரித்ததே மூடி!

அலைமேல் துரும்புதான் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

Saturday, August 26, 2023

மருமகன் ரவி



 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


நிலையாமை கொண்டதுதான் வாழ்வாகும்! ஆனால்

கதிரோனின் மாலை மறைவுக்குப் பின்னால் 

கதிரோனின் காலை விடியல் எழுச்சி

உலகிலே நிச்சயம் உண்டு.


மதுரை பாபாராஜ்

தமிழ் மொழிபெயர்ப்பு: மதுரை பாபாராஜ்



 பிடித்ததைப் பகிர்கிறேன்....

 தமிழ் மொழிபெயர்ப்பு: மதுரை பாபாராஜ்


Khalil Gibran on Fear 💛

It is said that before entering the sea
a river trembles with fear.
கடலில் நுழைவதற்கு முன்னால் நதியோ
நடுங்கும் அச்சத்தால் தான்.
She looks back at the path she has traveled,
from the peaks of the mountains,
the long winding road crossing forests and villages.
மலையின் சிகரத்தில் நின்றே பயணம்
அலைந்துவந்த பாதையைப் பார்க்கும்!
நீண்டு
வளைந்துவந்து காடுகளை ஊடறுக்கும் சாலை
நிறைந்த கிராமங்கள் பார்த்தால் மலைக்கும்!
மனதால் சிலிர்க்குமே கண்டு.

And in front of her,
she sees an ocean so vast,
that to enter
there seems nothing more than to disappear forever.

கண்முன்னே பார்க்கும் விரிந்து பரந்திருக்கும்
தண்ணலை துள்ளும் கடலில் நுழைவதற்கு!
ஒன்றுமே இல்லை மறைவதற்கு என்றேதான்
எண்ணிடத் தோன்றும் அதற்கு.

But there is no other way.
The river can not go back.

வேறு வழியில்லை! அந்த நதிமீண்டும்
போக முடியாது சொல்.

Nobody can go back.
To go back is impossible in existence.
யாரும் திரும்பித்தான் போக முடியாது!
வாழ்வின் நடைமுறை பார்.


The river needs to take the risk
of entering the ocean
because only then will fear disappear,
because that’s where the river will know
it’s not about disappearing into the ocean,
but of becoming the ocean.

நதிகள் கடலில் நுழையத்தான் வேண்டும்!
அதற்குப்பின் அச்சம் நதிக்கு மறைந்துவிடும்!
கடலுக்குள் நாமோ மறைவதில்லை! ஆனால்
கடலாகவே மாறுகிறோம் என்று நதியோ
உணர்வதும் அங்குதான் சொல்.

மதுரை பாபாராஜ்

~ Khalil Gibran
    #KhalilGibran #EnglishLiterature
    #philosophy #philosophyquotes
    #Literature #Wisdom #quotestoliveby

குடும்ப நண்பர்


குடும்ப நண்பர் திருமதி ச.முனியம்மா அவர்களின் கருத்துக்குக் கவிதை!


வாழ்வில் கவலையில்லை என்றால் மலையையும்

தூக்கலாம்! ஆனால் கவலை படையெடுத்தால்

காகிதத்தைக் கூடநாம் தூக்க முடியாது!

சூழ்நிலையின் தாக்கமே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

வெற்றி


வெற்றிவேல் வாழ்க!

பின்னணியில் வெள்ளை மகிழுந்து நின்றிருக்க

கண்ணில் குளிராடி கையிலே கைபேசி

கண்படும் வண்ணம் மடிப்புக் கலையாத

சட்டையுடன்  வெண்ணிற வேட்டி அணிந்தேதான்

அட்டகாச மாகவரும் வெற்றிக்கு வாழ்த்துகள்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

வெற்றியோ தோல்வியோ நீண்டநாள் வாடவேண்டாம்!
கற்றுக்கொள் பாடத்தை! கற்றலை வைத்தேதான்
நன்கு பயன்படுத்தி முன்னேறு! உற்சாகம்
பொங்க செயல்படு நீ.

மதுரை பாபாராஜ்
 

Friday, August 25, 2023

நண்பர் பாலாவுக்கு வாழ்த்து


நண்பர் பாலா அவர்களுக்கு வாழ்த்து.


மன்னார் குடியிலே புத்தகக் காட்சியின்

தன்னிக ரில்லாத் திருவிழாவில் பேருரை

வண்டமிழில் பேசுகின்றார் பாலாதான்! வாழ்த்துகள்!

புன்னகை வேந்தரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

உடல்நலம் காப்போம்


உடல்நலம் காப்பது கடமை!


கண்டதை கண்டபடி கண்டநேரம் சாப்பிடும்

உண்ணும் முறைகளை மாற்றி அமைக்கவேண்டும்!

உண்பதைச் சீரணிக்க நேரத்தில் உண்ணவேண்டும்!

இன்றைய மாற்றமே நாளை நலமளிக்கும்!

இன்று புறக்கணித்தால் கேடு


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் கருத்துக்குக் கவிதை!

நேரத்தை வீணடிக்கும் எல்லாச் செயல்களையும்
ஆய்வுசெய்து அந்தச் செயல்களை நீக்கவோ
தேவையானால் இங்கே குறைக்கவோ எண்ணவேண்டும்!
நேரத்தை நன்கு திறம்பட ஆளலாம்!
நேரம் செயல்களின் வேர்.

மதுரை பாபாராஜ்
 

அப்பாவும் மகனும் வியப்பில்



அப்பாவும் மகனும் மனக்குரலில் வியப்பு!


MIND VOICE OF FATHER AND SON


அப்பா கெஜராஜ்


உன்னையே பார்த்துப் பெருமைப் படுகின்றேன்!

என்மகனே! அன்று கலைஞர்  தொலைக்காட்சி

தந்தனர் வாய்ப்பை! குறும்படப் போட்டியில்

வென்றுவிட்டாய்! ! இன்று கலைத்துறையில் முன்னேறி

பன்முக ஆற்றல் இயக்குநராய் மாறிவிட்டாய்!

பெற்றோரின் ஆசிகள் உண்டு.


மகன் கார்த்திக் சுப்பாராஜ் 


மருந்துத் துறையிலே வாழ்வைத் தொடங்கி

மருத்துவரைப் பார்த்து தொழில்செய்த

தந்தை

திரைத்துறையில் நாளும் நடிகராய் இன்று

பலரும் புகழ கலைத்துறை தன்னில்

நிலைப்பது விந்தைதான் இங்கு.


மதுரை பாபாராஜ்



 

Labels:

தம்பியும் தம்பி மகனும்


அப்பாவும் மகனும் மனக்குரலில் பரிமாற்றம்!

MIND VOICE OF FATHER AND SON

அப்பா கெஜராஜ்

உன்னை வளர்த்தேதான் ஆளாக்கிப் பார்க்கின்றேன்!

வந்த அருமைமிகு வாய்ப்பைப் பயன்படுத்தி

உந்தன் திறமையால் முன்னேறி பெற்றோர்க்கு

நற்பெயர் தந்துவிட்டாய் நீ.


மகன் கார்த்திக் சுப்பாராஜ்

உங்கள் கடமைகளைச் செவ்வனே செய்ததனால்

என்கடமை உங்களுக்கு நாளும் பெருமையை

இங்கே வழங்குதல் தான்.

மதுரை பாபாராஜ்

 

Labels:

வீடும் வாய்ப்பும்


Saravanan Dindigul Home

வீடும் வாய்ப்பும்!


எங்கெங்கே வீடு கிடைக்கிறதோ மக்களும்

அங்கங்கே வாழ்கின்றார்! வேலைக்கு வாய்ப்புகளும் 

சொந்தநாடோ எந்தநாடோ எங்கே கிடைக்கிறதோ

அங்கே பணிபுரிதல் நன்று.


மதுரை பாபாராஜ்

 

Thursday, August 24, 2023

எல்லை மீறினால் தொல்லை!


எல்லை மீறினால் தொல்லை!


எல்லாம் ஒழுங்காக வாழ்ந்தால் அழிவில்லை!

எல்லையை மீறினால் தொல்லைதான் உண்டாகும்!

எல்லைகள் வாழ்க்கைக்கும் வாழவைக்கும் பேரியற்கைத்

தன்மைக்கும் உண்டென் றுணர்.


மதுரை பாபாராஜ்

 

அக்காவின் திருமணநாள்





அக்கா திருமதி M.லெட்சுமி அவர்களின் திருமணநாள் வாழ்த்து!


25.08.23


மொத்தக் குடும்பத்தின் தாய்க்கு நிகரான

அக்காவின் ஆசிகளை வேண்டி வணங்குகிறோம்!

சுற்றங்கள் சூழ்ந்திருக்க வாழ்க மகிழ்ச்சியுடன்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்



 

Wednesday, August 23, 2023

சந்திரயான் 3 நிலாப்பயணம்


இந்தியாவின் கம்பீரம்!


சந்திரயான் 3!


ISRO ACHIEVEMENT! 


23.08.2023 மாலை 6.04/மணி


நிலவில் வெற்றிகரமாக இறங்கியது!


சந்திரயான் மூன்று நிலவில் இறங்கியது!

கண்டோம் உவகையால் சாதனையை வாழ்த்தினோம்!

வந்திறங்கும் நேரம் வரைக்கும் பரபரப்பு!

துல்லியமாய் நேரம் கணித்துப் படிப்படியாய்

மெல்ல நிலவின் பரப்பிலே ஊன்றிட

வைத்தனர் விஞ்ஞான விற்பன்னர்! வாழ்த்துவோம்!

கைதட்டி வாழ்த்தினார் காண்.


மதுரை பாபாராஜ்

 

இந்தியாவின் கம்பீரம்


இந்தியாவின் கம்பீரம்!


சந்திரயான் 3!


ISRO ACHIEVEMENT! 


நிலவில் இறங்கும் உலகப் புகழைக்

களங்காணும் இந்தக் கலத்தை அமைத்த

அறிவியல் விஞ்ஞா னிகளின் உழைப்பில்

மிளிரும் சந்ரயான் மூன்றினை வாழ்த்து!

உலகமே உற்றுநோக்க இந்தியா பீடு

நடைபோட்டு நிற்பதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்



 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நீங்கள் பதட்டமாக உள்ளபோதோ அல்லது
நீங்கள் பொறுமையின்றி உள்ளபோதோ எச்செயலும்
செய்வது கூடாது! உங்கள் செயல்திறனை
நிச்சயம் பாதிக்கும்! ஓய்வெடுத்து ஈடுபட்டால்
வெற்றியுடன் சாதிக்க லாம்.

மதுரை பாபாராஜ்

Tuesday, August 22, 2023

இருப்பதில் திருப்திகொள்



 இருப்பதில் திருப்தி கொள்!


மரத்தில் இருக்கும் பலாக்காயை எண்ணி

கரத்தில்  இருக்கும் களாக்காயை விட்டே

பலாக்காய் கிடைக்காமல் இங்கே இருந்த

களாக்காயும் கைநழுவிப் போகத்தான் பார்க்கும்

நிலையிலே ஏமாந்தார் நின்று.


இருப்பதில் நாளும் திருப்தியுடன் வாழும்

அருமைக் கருத்தை உணர்.


மதுரை பாபாராஜ்

நண்பர் முரளி


நண்பர் முரளி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


பனிவிழும் காலைப் பொழுதில் மலர்கள்

மனங்கவரப் பூத்துச் சிரித்திருக்க சுற்றி

மணங்கமழ மேசையின் மீது குளம்பி

வரவேற்க நண்பர் வணக்கத்தைக் கூறி

மனமகிழும் தன்மையை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்

 



நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

மற்றவர்மேல் குற்றத்தைக் காண்பது தேவையில்லை!
என்னசெய்ய வேண்டும்?
அதைச்செய்ய வேண்டும்நீ!
என்னசெய்யக் கூடுமோ
செய்யவேண்டும்  நீங்கள்தான்!
முன்னேறிக் காட்டவேண்டும் நீ.

மதுரை பாபாராஜ்

வாழ்க்கை விளையாட்டா?

 வாழ்க்கை விளையாட்டா? 


வாழ்க்கை! உயிரோட்டம் கொண்ட குடும்பத்தை

சேர்த்தேதான் பண்புகளால் கட்டமைக்கும் கூட்டமைப்பு!

நாள்தோறும் நல்ல ஒழுக்கத்தைப்  பின்பற்றி

தாய்தந்தை பிள்ளைகள் பாட்டிதாத்தா

என்றேதான்

ஆலமரம் காணும் விழுதுகளாய் ஏற்படும்

கால உறவுகளின் பின்னலாகும் இல்லறம்!

பால இணைப்பே உறவு.


ஊரை உறவுகளைக் கூட்டி உறுதிசெய்து

பாரில் விருந்துவைத்துப் பாங்காய்த் திருமண

நாள்வரும் முன்னேயே பெண்வீட்டார் ஆண்வீட்டார்

காரணம் இன்றி நிறுத்துகின்றார் மன்றலை!

யாரிடம் நோவது நாம்?


திருமணம் காண்பதற்குக் கூடுகின்ற போது

மணமகளோ இல்லை மணமகனோ சொல்வார்

மணத்தில் உடன்பாடே இல்லைதான் என்றே!

மணக்குழப்பம்! காணவந்து கூடிநிற்கும் மக்கள்

மனக்குழப்பம்! எல்லோரும் காவல் நிலையம்

சமரசம்  என்றே அலைவார்! கலைவார்!

விளையாட்டாய்ப் பேனதோ வாழ்வு?


மதுரை பாபாராஜ்


நண்பர் எழில் புத்தன்



நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

உன்னுடைய வாழ்க்கையில் மாற்றத்தை யாரேனும்
உண்டாக்கக் கூடுமென்றால்
அத்தகைய மாற்றத்தை
உன்னால்தான் உண்டாக்கக் கூடுமே அன்றியிங்கே
மற்றவரால் ஏலாது சொல்.

மதுரை பாபாராஜ்
 

Monday, August 21, 2023

பேரன் நவில் பாட்டிக்கு நன்றி


 பேரன் நவில் பாட்டி அவர்களுக்கு நன்றி.


கீழ்த்திசை வானில் கதிரவன் தோன்றுகிறான்!

ஆழ்கடல் ஏந்தும் அலைகள் கரைதொட்டே

பாடிக் களித்திருக்க காலை வணக்கத்தை

தூதுவிடும் பண்பினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

🙏🏻🤔🤔👏🏻👏🏻👌🏻👌🏻👍🏻👑👍🏻🙏🏻. வணக்கம் அண்ணா.  உடனுக்குடன் உண்டான , கவிதையை,  கண்டேன்,  வியந்தேன்,  மகிழ்ந்தேன்,  நெகிழ்ந்தேன். மகிழ்வான நன்றிகளண்ணா.🙏🏻💐🙏🏻

நவில் பாட்டி

பேராசை பேரிழப்பு


 பேராசை பேரிழப்பு!


தங்கமுட்டை போடுகின்ற வாத்தென்றார்! வாங்கிவிட்டார்!

தங்கமுட்டை போட்டதை வீட்டிலே கண்டதும்

தங்கமுட்டை வாத்தின் வயிற்றுக்குள் உள்ளதென்றே

பொங்கிவந்த பேராசை கொண்டேதான் கொன்றுவிட்டான்

தங்கமுட்டை வாத்தை! இருந்ததும் போனதென்றே

இங்கே புலம்பினான் பேராசைக் காரன்தான்!

என்றுமே பேராசை பேரிழப்பு என்பதை

நன்குணர்ந்து வாழ்தல் சிறப்பு.


வாழ்க்கையும் தங்கமுட்டை வாத்துதான் வாழ்வதும்

வாழ்க்கையைப் பேராசை கொண்டே இழப்பதும்

வாழ்வோர் அணுகுமுறை தான்.


மதுரை பாபாராஜ்

விமான ஓட்டி


விமான ஓட்டியின் கடமை!


விமானத்தில் ஏறுவார்! வேலை முடிந்து

விமானத்தை விட்டே இறங்குவார்! நாளும்

விமானத்தை ஓட்டுபவர்! இந்தக் கடமை

சுமையின்றி செய்கின்றார் பார்.


மதுரை பாபாராஜ்

 

ரவாலட்டு


எனக்குப் பிடித்த ரவாலட்டு!


நாள் 20.08.23


எனக்குப் பிடிக்குமென்று நெய்யுடன் சீனி

உலர்ந்த திராட்சை ரவையுமே வாங்கி

ரவாலட்டு தான்பிடித்துப் பக்குவமாய்ச் செய்தாள்

மனைவி வசந்தாதான் இன்று.


மதுரை பாபாராஜ்

 

ஏளனம் செய்யாதே


ஏளனம் செய்யாதே!


சிறுதுரும்பும் பல்குத்த என்றும் உதவும்!

சிறுவன்தான் என்றெண்ணி ஏளனம் செய்தால்

சிறுவனைத் தேடியே நாளையே காலம்

நமைநாடிச் செல்லவைக்கும் சூழல் வரலாம்!

அனைவரையும் ஏற்பதே பண்பு.


வலையிலே சிக்கிய சிங்கத்தைக் காட்டில்

எலிவந்து காப்பாற்றி நின்ற கதைதான்!

நிலைமாற்றம் கொண்டதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

உங்களின் சாதனையை என்றும் எதுவுமே
இங்கே தடுக்க முடியாது! நற்செயலை
என்றும் தொடருங்கள் சாக்குபோக்கு சொல்லாமல்!
என்றும் நசுக்கப் படவேண்டும் சாக்குபோக்கு!
உங்களின் சாதனையே மூச்சு.

மதுரை பாபாராஜ்
 

Sunday, August 20, 2023

நத்தையும் மாணவனும்



 ்AS YOU LIKE IT!


THe whining school-boy with his satchel

And shining morning face, creeping like snail Unwillingly to school.


Shakespeare


நத்தையும் மாணவனும்!


நத்தையோ கூட்டைச் சுமப்பது போலத்தான்

புத்தக மூட்டையை மாணவர் தம்முதுகில்

நித்தம் சுமக்கின்றார்! நத்தையிங்கே ஊர்வதுபோல்

பள்ளிக்கு ஊர்ந்தேதான் போவார் மனமின்றி!

பள்ளிப் பருவத்தைப் பார்.


மதுரை பாபாராஜ்

வேரறுந்தும் வீழா மரம்

 வேரறுந்தும் வீழா மரம்!


கேவலப் பட்டுத்தான் வாழவேண்டும் என்றநிலை

காவடித் தூக்கவைக்கும் என்றால் துயரந்தான்!

காயங்கள் கொஞ்சமா? சொல்லடி கொஞ்சமா?

வேரறுந்தும் வீழா மரம்.


மதுரை பாபாராஜ்


இருநிலை மாற்றம்

 இளமையும் முதுமையும்!


இருவேறு அழைப்பு!


வரவேண்டும் நீங்கள் வரவேண்டும் என்றே

விருந்தினரைப் பார்த்து வரச்சொன்னார் அன்று!

வருவது பார்த்தேதான் வாங்க முதுமை

வருடத் தொடங்கியதே தள்ளாட்டம் வேறு!

சிரமப் படவேண்டாம் நீங்கள்! பயணச்

சுமைகளைத் தூக்க முடியாது என்பார்!

இருக்கும் இடத்தில் இருப்பதே நன்று!

கருத்தாக அக்கறை யோடு சொல்லி

நகர்வார் அனைவரும் இன்று.


மதுரை பாபாராஜ்


சூழ்நிலையா? ஊழ்வினையா?


சூழ்நிலையா? ஊழ்வினையா?


வாழ்வில் நடக்கவேண்டும் என்றால் நடந்துவிடும்!

சூழ்நிலையா? ஊழ்வினையா? சொல்லத் தெரியவில்லை!

வாழ்க்கைதான் நம்மை வளைத்துவிடும்! நாமிங்கே

வாழ்வை வளைப்பதில்லை சொல்.


மதுரை பாபாராஜ்

 

எதிரிக்கட்சி ஆகவேண்டாம்


எதிர்க்கட்சி எதிரிக்கட்சி ஆகவேண்டாம்!


இக்கட்சி அக்கட்சி எக்கட்சி ஆனாலும்

இக்கட்சி ஆண்டால் எதிர்க்கட்சி அக்கட்சி!

அக்கட்சி நாள்தோறும் நேர்மறைச் சிந்தனையில்

கட்சி கருத்தைத் தெரிவித்தால் மக்களாட்சி

பற்றிப் படரும்! எதிர்மறைச் சிந்தனையில்

முற்றும் எதிரிகளாய் மாறினால் மக்களாட்சி

வெற்றிடமாய் மாறும் நகைத்து.


மதுரை பாபாராஜ்