வாழ்த்து முருகுக்கு
அண்ணனுக்குத் தம்பி விருந்தோம்பல்! பாபாவின் வாழ்த்து!
அண்ணன் விநாயகர் வந்து நுழைந்ததும்
தம்பி முருகு விருந்தோம்பல் செய்தேதான்
வள்ளுவத்தை வீட்டில் மணக்கவைத்தார் வாழ்கவே!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
அண்ணனுக்குத் தம்பி விருந்தோம்பல்! பாபாவின் வாழ்த்து!
அண்ணன் விநாயகர் வந்து நுழைந்ததும்
தம்பி முருகு விருந்தோம்பல் செய்தேதான்
வள்ளுவத்தை வீட்டில் மணக்கவைத்தார் வாழ்கவே!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
நண்பர் IG சந்திர சேகர் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து!
அகவைத் திருநாள்: 31.08.22
இல்லற முத்துக்கள்:
மனைவி:
தமிழச்சி தங்கபாண்டியன் M.P.
மருமகன்கள், மகள்கள்,
பேரக் குழந்தைகள்
குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச
சிறப்புடன் வாழ்க! மகிழ்ச்சியாய் வாழ்க!
நிறைவுடன் வாழ்க! நலமுடன் வாழ்க!
அகங்குளிர வாழ்கபல் லாண்டு.
நாட்டுக்கும் வீட்டுக்கும் நற்பணி ஆற்றுகின்ற
ஆளுமை கொண்ட இணையராய் வாழ்கின்றீர்!
வாழ்வாங்கு வாழ்கபல் லாண்டு.
வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
பொறுமைக்கே வாழ்வு!
உறுமீன் உரியமீன் சிக்கிடும் மட்டும்
பொறுமையாய்க் காத்திருக்கும் கொக்கு-- உறுமீனோ
வந்ததும் அப்படியே கவ்விப் பிடித்துவிடும்!
என்றும் பொறுமைக்கே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
எங்கே திருப்தி?
செருப்பில்லை கால்களுக்கு என்றேங்கும் நண்பா!
இருகால்கள் இல்லாத நண்பரைப்பார் அங்கே!
இருப்பதில் திருப்தியே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
மகிழ்ச்சியும் சோர்வும்!
உள்ளக் கடலில் மகிழ்ச்சி அலையினங்கள்
துள்ளிவந்தால் துள்ளலாம் பொங்கும் அலைகள்போல்!
உள்ளம் உளைச்சலிலா? துள்ளாமல் சோர்ந்துவிட்ட
வெள்ளலைபோல் மாறிவிடும் சொல்.
மதுரை பாபாராஜ்
நண்பர் எசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!
வாழ்க்கை, பருத்தித் துணிகளைப் போன்றது!
நீரென்னும் துன்பத்தில் மூழ்கவைத்தால் அத்துணியோ
தோள்வலிக்க நாளும் கனமாகும்! அத்துணியை
வாழ்வில் மகிழ்ச்சியென்னும் காற்றில் பிடித்திருந்தால்
லேசாகும் இன்புறலாம்! வாழ்வின் தருணத்தை
நாமும் அனுபவிப்போம் இங்கு.
மதுரை பாபாராஜ்
புகழும் தூசியும்!
ஊரும் உலகமும் நாடும் புகழலாம்
பார்போற்ற பல்லாண்டு வாழ்கவென்றும் வாழ்த்தலாம்!
போகின்ற போக்கில் குடும்பத்தார் தூற்றிவிட்டு
தூசியாகத் தட்டுவார் சொல்.
மதுரை பாபாராஜ்
மீண்டும் வருமோ?
அமைதி தவழ்ந்திருந்த வாழ்க்கைக் கடலில்
அமளிப் புயலடித்துக் கூத்தாடும் கோலம்!
உளைச்சல் இதயத்தில்! மீண்டும் அமைதி
தவழ்ந்தே தழைக்குமா? சாற்று!
மதுரை பாபாராஜ்
HAPPY BIRTHDAY
Selvan G.S. Adhitya!
24.08.2022
YOU ARE A TEEN AGER!
A WONDERFUL DAY INDEED!
YOUR RESPONSIBLE LIFE
STARTS FROM TODAY!
RESPECT YOUR TEACHERS
THEY ARE YOUR REAL SCULPTORS!
THEY INCULCATE CHARACTER
AND QUALITY DAILY!
YOUR PARENTS' AND ELDERS' BLESSINGS WILL GUIDE YOU
PROPERLY AND POSITIVELY!
YOUR FRIENDS' PARTICIPATION
IMPROVES YOUR STUDY AND PLAY!
BE GOOD AND DO GOOD!
AWAKE! ARISE! STOP NOT
TILL THE GOAL IS REACHED!
VALIANT SAINT VIVEKANANDAR SAID!
FOLLOW THIS PRINCIPLE
BEWARE OF YOUR
FREEDOM WITH RESPONSIBILITY!
BLESSINGS FROM
MADURAI BABARAJ
VASANTHA
சீரிழந்த வாழ்க்கை!
ஒருசிலருக்கு இப்படியும் உண்டு!
ஊரறிய உற்றார் உறவறிய இவ்வுலகில்
யார்யாரோ எப்படியோ வாழ்கின்றார் கூடித்தான்!
தேரொன்றோ அச்சொடிந்து நின்றதைப்போல் வாழ்க்கையிங்கே
சீரிழந்து நிற்பதேனோ? செப்பு.
மதுரை பாபாராஜ்
மறக்கமுடியாத புள்ளி!
என்ன நினைத்தாலும் புள்ளிக்குள் மீண்டுவந்தே
என்னை நிறுத்தும் நினைவுகளை என்னென்பேன்!
உள்ளம் மறக்கத் துடித்தும் நினைவுகளோ
புள்ளிக்குள் தள்ளும் நகைத்து.
மதுரை பாபாராஜ்
வேடிக்கை ஏன்?
வாழ முடியவில்லை! சாக மனமில்லை!
பூனை இரையெலியை விட்டுப் பிடிக்கின்ற
கோலம்போல் வாழ்க்கை உளைச்சல் வலைவீசி
வேடிக்கை பார்ப்பதும் ஏன்?
மதுரை பாபாராஜ்
முற்பிறவி யாரறிவார்?
சாமியைக் கும்பிடு துன்பம் வராதென்றார்!
சாமியைக் கும்பிட்டும் துன்பங்கள் வந்தன!
ஏனென்று கேட்டாலோ முற்பிறவிக் கர்மவினை
தானென்றே சொன்னார் நகர்ந்து.
மதுரை பாபாராஜ்
கடிதோச்சி மெல்ல எறிக
சமையலில் உப்போ உப்பு!
என்சமையல் எப்படி? என்றாள் மனைவிதான்!
அன்பே! அருமைதான் உன்சமையல்! ஆனாலும்
உன்னன்பைப் போல அளவின்றி உப்பைநீ
அன்பாய்க் கலந்துவிட்டாய்! என்செய்ய? எப்படியோ
உண்டேன்! நெளிந்தேன்! பொறுத்து.
மதுரை பாபாராஜ்
Vovemayavaramban: அன்பின் மிகுதியால்
நின்பால் கொண்டமையலால்
மயங்கினேன்!
மிகுந்திருந்த உப்பின்சுவை
சமையலில்!
அறியாது உண்டேன்
அளவிற்கடந்து!
அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்!
இனிக்கும் இணையருக்குண்டோ
ஈடு இணை!
தென்காசி கிருஷ்ணன்:
அதிக உப்பிட்ட மனைவியை உள்ளளவும்
உள்ளத்தில் கொள்ள
வேண்டும்..ஐயா.
தெ.கி.
எப்பக்கம் செல்ல?
இப்பக்கம் போய்ப்பார்த்தேன் முள்வேலி போட்டிருந்தார்!
அப்பக்கம் போய்ப்பார்த்தேன் கற்சுவ ரால்தடுத்தார்!
இப்பக்கம் அப்பக்கம் இன்றி நடுப்பக்கம்
சென்றால் புதைகுழிப் பாதை வரவேற்க
எப்பக்கம் நான்செல்ல? கூறு.
மதுரை பாபாராஜ்
திருந்துங்கள்! திருத்துங்கள்!
காலைப் பொழுதில் புலனத்தைப் பார்த்தாலோ
சூள்கொட்ட வைக்கின்ற வண்ணம் அறிவுரைகள்!
பார்த்துப் படிக்கவைப்போர் தங்களை அவ்வண்ணம்
மாற்றித்தான் வாழவேண்டும்! வாழ்ந்தால் அவரவர்
வாழ்க்கை அருமைதான் சொல்.
மதுரை பாபாராஜ்
தங்கள் தமிழ் தொண்டு வணங்க வேண்டியது ! நாங்கள் பாராட்டினால் ,அது எங்களுக்கு தான் பெருமை ! ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மாற்றலாம் சிறிது ஆங்கில அறிவு இருந்தால், ஆனால் தமிழில் உள்ளதை ஆங்கிலத்தில் மாற்றுவது அத்தகை எளிது அல்ல ! (Sri Tamil eayalan sir)
சொல்ல கேட்டு பிரமித்து போனேன்! வாழ்க !பல்லாண்டு ! வளர்க !உன் தமிழ் தொண்டு !
Anbu
Great achievement indeed Sir. 👍👍👍
Rajkumar jothi
தமிழ் இயலன் ஐயா அவர்கள் இலக்கியத் திறனும் பேசும் திறனும் ஒருங்கே பெற்றவர்கள். அன்னார் அவர்கள் தங்களது இலக்கியங் பங்களிப்பினை வியந்து பாராட்டியதைக் கேட்டு நான் பெருமகிழ்வெய்தினேன்.
வாழ்க பல்லாண்டு
வளரட்டும் தங்கள் தொய்வில்லா தமிழ்த் தொண்டு.
தென்காசி கிருஷ்ணன்
பொருள்கள் இங்கே! உறவுகள் எங்கே?
செய்க பொருளை எனச்சொன்னார் வள்ளுவர்
செய்க பொருளைமட்டும் என்றெங்கும் சொல்லவில்லை!
மக்கள் பொருளைமட்டும் ஈட்டி உறவுகளை
விட்டுவிடும் கோலத்தைப் பார்.
மதுரை பாபாராஜ்
சி ஆர்.
வள்ளுவர் குடும்பம்
ஆம் பாபா.. வள்ளுவரின் பொருள் ஈட்டும் நோக்கம்.. செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்... தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு.. ஆனால் இன்று..
அன்பை விதைக்கச் சொன்னார்..
அருளாய் பரிணமிக்கும் என்றார்.,
பிரசாந்த் மருத்துவமனை சார்ந்த அனைவருக்கும் நன்றி!
மருத்துவர் மதுசூதனன் குழுவினர்!
நலமின்றி இருந்தவர் மனைவி
திருமதி பா. வசந்தா
அறை எண் 1001
04.08.22-- 08.08.22
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நாளும்
கருத்துடன் தங்கள் கடமைகளைச் செய்தே
அருமை சிகிச்சை அளித்தனர்! நாங்கள்
திருப்தி அடைந்தோம் மகிழ்ந்து.
பராமரிப்பு மற்றும் உணவுத் துறையில்
இருப்பவர்கள் எல்லாம் சுணங்காமல்
தங்கள்
கடமைகளைச் செய்தார் முகமலர்ந்தே!
நன்றி!
அகங்குளிர நன்றிசொன்னோம் இன்று.
காணும் இடமெல்லாம் செந்தமிழ்ச் சொற்களைத்
தேனாய்ப் பருகிக் களித்தேன்! அகமலர்ந்தேன்!
தேனமுதப் பைந்தமிழ்ச் சொல்லாக்கம்
அற்புதம்!
தீந்தமிழ் வாழும் நிலைத்து.
மதுரை பாபாராஜ்
9003260981
சிகிச்சை ஒன்றே இலக்கு!
நோய்வந்து தாக்குமட்டும் தன்மானம் மானமெல்லாம்!
நோய்வந்தால் எல்லாம் பறந்துவிடும்!
யார்யாரோ
நோய்தீரப் போரிடுவார்! சாதிமதம் பார்க்கமாட்டார்!
நோய்சிகிச்சை ஒன்றே இலக்கு.
மதுரை பாபாராஜ்
பிரசாந்த் மருத்துவமனையில் அம்மாவுக்கு அறுவைசிகிச்சை!
நாள் 04.08.22
மகள் திருமதி சுபா ரவி எனக்காக கொண்டுவந்த இரவு உணவு!
இரவு உணவாக மல்லிகைப்பூ இட்லி
அருமைச் சுவைகொண்ட தேங்காயின் சட்னி
இனிப்பான சர்க்கரை என்றே சுபாதான்
மனம்மகிழ கொண்டுவந்தாள் பார்த்து.
அப்பா
மதுரை பாபாராஜ்
தொடர்களின் வேர்!
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
கலகமூட்டிப் பார்க்கின்ற காட்சித் தொகுப்பாய்
மளமள வென்றே ஊடகத்தில் பேசும்
தொடரின் உரையாடல் வேர்
மதுரை பாபாராஜ்
என் வாழ்க்கை!
என்ன வெடிக்குமோ எப்போ வெடிக்குமோ
எங்கே வெடிக்குமோ என்றே தெரியமால்
அங்கங்கே கீழே விழுந்து புரெண்டெழுந்து
இன்னும்நான் ஓடுகிறேன் இங்கு.
மதுரை பாபாராஜ்
வாழ்வின் பின்னணி!
நோன்பு வழிபாடு எல்லாமே இல்லறத்தில்
சாதகமாய்ச் சூழ்நிலைகள் உள்ளவரை இன்பந்தான்!
பாதகமாய்ச் சூழ்நிலைகள் மாறியே பம்பரமாய்
வாழ்க்கையைச் சுற்றவைத்தால் எல்லாமே துன்பந்தான்!
சூழ்நிலைப் பின்னணியே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
The Seven Ages of Man
Speech from William Shakespeare’s As You Like It, Act II scene vii
Jaques: All the world's a stage,
And all the men and women merely players:
They have their exits and their entrances;
And one man in his time plays many parts,
His acts being seven ages. At first the infant,
Mewling and puking in the nurse's arms.
And then the whining school-boy, with his satchel
And shining morning face, creeping like snail
Unwillingly to school. And then the lover,
Sighing like furnace, with a woeful ballad
Made to his mistress' eyebrow. Then a soldier,
Full of strange oaths and bearded like the pard,
Jealous in honour, sudden and quick in quarrel,
Seeking the bubble reputation
Even in the cannon's mouth. And then the justice,
In fair round belly with good capon lined,
With eyes severe and beard of formal cut,
Full of wise saws and modern instances;
And so he plays his part. The sixth age shifts
Into the lean and slipper'd pantaloon,
With spectacles on nose and pouch on side,
His youthful hose, well saved, a world too wide
For his shrunk shank; and his big manly voice,
Turning again toward childish treble, pipes
And whistles in his sound. Last scene of all,
That ends this strange eventful history,
Is second childishness and mere oblivion,
Sans teeth, sans eyes, sans taste, sans everything.
The Seven Ages of Man
SHAKESPEARE
தமிழாக்கம் கவிதை வடிவில்!
உலகமே நாடக மேடையாம்! நாமோ
உலவும் நடிகர்கள்! உள்ளே வருவார்
வெளியிலே செல்வார்! பலவேடம் தாங்கி
ஒருவர் நடிப்பார் நடிப்பு.
அவர்நடிப்போ ஏழு நிலைகளாம் இங்கே!
முணங்கித் தவிக்கும் குழந்தைப் பருவம்!
சுணங்கிச் சுமக்கும் புத்தகப் பையை
சுமந்தேதான் நத்தைநடை போட்டு மனமோ
விருப்பின்றிச் செல்கின்ற பள்ளிப் பருவம்!
இருபருவம் இப்படித்தான் இங்கு.
இளமைப் பருவம் பெருமூச்சில் ஏக்கம்!
உளம்நாடும் மங்கைப் புருவத்தைக் கூட
கவிதைக் கருவாக்க எண்ணும் பருவம்!
துடிக்கின்ற வீரனாக லட்சியங்கள் ஏந்தி
வெடிப்பான் சினத்திலே மற்றவரைக் கண்டு
பொறாமை உணர்ச்சிகள் பொங்க குமிழிப்
பெருமைக்கு சண்டையிடு வார்.
உலக அனுபவத்தில் வாழ்வதற்குத்
தேவை
எதுவும் உணர்ந்தேதான் அதற்கேற்ப வாழும்
நடுநிலை வாழ்க்கைப் பருவம் இதுவே!
நிதானத்தைக் காட்டுகின்ற ஐந்து.
ஆறாம் பருவம் தொளதொள கால்சட்டை
போடுவார்! கண்ணாடி போட்டே இளமையோ
நாளும் உதிர்ந்திருக்க நல்ல குரல்வளம்
போய்விடும்! மீண்டும் குழந்தை உளறல்தான்!
தேய்மான வாழ்க்கைதான் செப்பு.
ஏழாம் பருவம் இறுதிப் பருவந்தான்!
கோலம் மறதியை ஏந்திவர பல்போகும்!
பார்வையும் மங்கும்! சுவைமங்கும்! எல்லாமே
போய்விடும் நாமோ இறுதிப் பயணத்தின்
நாள்களை எண்ணுவோம் இங்கு.
மதுரை பாபாராஜ்
VOVCR:
நல்ல மொழிபெயர்ப்பு கவியாக்கம்..சாரம் குறையாமல்
ஆங்கிலம் அருமை..
தமிழோ அதனினும் அருமையாக உள்ளத்தில் அமர்ந்து கொண்டது..
குமிழிப் பெருமை
மிகச்சிறந்த மொழி பெயர்ப்பு
துணைவியாரும் இரசித்தார்..