Wednesday, January 31, 2024

IJDR Magazine K.Chinniah,Vizag


 மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் ஐயா

மாபெரும் சபைகளில்

உங்களுக்கு மாலைகள் விழுந்தது போன்ற உணர்வு

மலர் மாலைகள் அணிவதை விட நூல் மாலைகளில் பெயர் பதிவது சரித்திரத்தில் தடம் பதிப்பதை போல

அளவில்லா ஆனந்தம்


👏👏🏆🏆🌹🌹

K.Chinniah,Vizag

வாழ்க்கை இப்படித்தான்


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நீங்கள் பொறுப்பேற்ற பின்பு உரிமையைத்
தானாக இங்கே உணர்வீர்கள்! எப்படியும்
வேகமாக மற்றும் கடினமாக நாள்தோறும்
ஈடுபட்டே  அப்பணியை இங்கே முடிப்பதற்குப்
பாடுபடு வீர்கள் உழைத்து.

மதுரை பாபாராஜ்

Tuesday, January 30, 2024

கடமையைச் செய்!

 கடமையைச் செய்! 

பலனை எதிர்பார்க்காதே!


பதிவுகளைப் பார்த்துப் படிப்பாரோ? இல்லை

பதிவுகளைப் பார்க்காமல் செல்வாரோ? இல்லை

பதிவைப் படித்துக் கருத்தளிப் பாரோ?

இதைப்பற்றி எண்ணாமல் தாங்கள் படைக்கும்

பதிவைத் தருவதே நன்று.


மதுரை பாபாராஜ்


நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒருபணியில் உள்ளபோது உங்களுக்கு மற்று
மொருபணியை ஏற்பதற்கு ஆசை வரலாம்!
இடையூறாய் அந்தவேலை முன்னேற்றத் திற்குத்
தடையாக இல்லாமல் பார்ப்பதே நன்று!
தடைகளோ நல்லதல்ல செப்பு.

மதுரை பாபாராஜ்

ஏனிந்த நிலை?

 ஏனிந்த நிலை?

உள்ளத்தில் வாட்டம்! உடலிலே தள்ளாட்டம்!

வெள்ளத்தில் மூழ்கும் உணர்வு! வழியெல்லாம்

முள்ளின் உறுத்தல்! நிலநடுக்கம்! வன்புயல்!

இவ்வாறு நாள்தோறும் வாழ்வு.

மதுரை பாபாராஜ்


இப்படியும் மனிதர்கள்


 

Monday, January 29, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நேரத்தில் நீங்கள் முடிக்க விரும்பினால்
சீராகத் திட்டமிட்டு அந்தச் செயல்முறையை
எந்தக் குழப்பமும் இன்றிச் செயல்படுத்த
முன்வந்தால் நல்ல துணர்.

மதுரை பாபாராஜ்

Friday, January 26, 2024

குறள்நெறிக் குரிசில்


 குறள்நெறிக் குரிசில் சி ஆருக்கு வாழ்த்து!


நவில்தொறும் நூல்நயம் வெள்ளிக் கிழமை
தவறாமல் கேட்க நினைவு படுத்தி
கவனத்தை ஈர்க்கின்ற ஆர்வத்தை வாழ்த்து!
தொடரட்டும் நூல்நயந் தான்.

மதுரை பாபாராஜ்

Thursday, January 25, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எத்தகைய சிக்கலும் நம்கவனம் ஈர்த்துவிட்டால்
உள்ளமோ தீர்வினைக் கண்டு வழிகாட்டும்!
நன்கு கவனமாகப் பின்பற்றிச் சென்றால்தான்
நம்மிலக்கை நாமடைவோம் இங்கு

மதுரை பாபாராஜ்

Wednesday, January 24, 2024

நண்பர் இசக்கிராஜன்


 நண்பர் இசக்கிராஜன் அனுப்பியதற்குக் கவிதை!


தண்ணீரின் மென்மைக் கிணையில்லை! ஆனாலும்

தண்ணீர் வலுவான பாறையைத் தாக்கித்தான்

கண்முன் உடைத்துவிடும் காண்.


மதுரை பாபாராஜ்

நண்பர் சுப்பையா


 நண்பர் சுப்பையா அனுப்பியதற்குக் கவிதை!


வாழ்க்கையின் போராட்டம் இன்றிருக்கும் உன்னையிங்கே

நாளும் செதுக்கிய சிற்பியாகும்! நன்றிசொல்!

வாழ்வின் கடினமான நேரமே உன்னையிங்கே

மேலும் வலிமையாய் மாற்ற முடியும்பார்!

சோதனைக் கஞ்சாமல் நில்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


என்னதான் செய்கிறோம் என்பதும் எப்படிச்
செய்கிறோம் என்பதும் சொன்னநே ரத்திலே
செய்யவில்லை என்றால் சரியல்ல! அர்த்தமற்று
செய்ததாய் அச்செயல் மாறிவிடும் காலநேரந்
தன்னில் முடியாத போது.

மதுரை பாபாராஜ்

Tuesday, January 23, 2024

நண்பர் கோதண்டராமன்


 நண்பர் கோதண்டராமனுக்கு வாழ்த்து!


அம்மா வலக்கை பழக்கூடை ஏந்திவர

அம்மா இடுப்பில் மழலை அமர்ந்திருக்க

அன்புடன் காலை வணக்கம் அனுப்பிய

நண்பரை வாழ்த்துகிறேன் நான்.


மதுரை பாபாராஜ்

GIRIHITHA BIRTHDAY


 GRAND DAUGHTER GRIHITHA 

FIRST BIRTHDAY!


அகவைத்திருநாள்: 23.01.24


பெற்றோர்:

அப்பா: ராகவேந்திரா

அம்மா: பவதாரிணி


தாத்தா பாட்டி செல்லத்தில்

அம்மா அப்பா அரவணைப்பில்

உற்றார் உறவினர் வாழ்த்திசைக்க

நற்றமிழ் போல வாழியவே!


உந்தன் அருமைச் செயல்களிலே

உந்தன் அன்புக் குறும்பினிலே

எல்லோ ரையும் பரபரப்பாய்

இயங்க வைப்பது நீதானே!


கைகள் தட்டிப் பாடுகின்றோம்

ஆடிப் பாடி மகிழ்கின்றோம்!

வாழ்க வாழ்க பல்லாண்டு!

சிறப்புடன் வாழ்க பல்லாண்டு!


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நமக்குள்ள நம்மிடம் உள்ள வலிமை
தனையறிந்து  நன்கு பயன்படுத்தி
மேலும்
முழுமையாய் வாய்ப்பு வளங்களைக் கொண்டே
பிறரது ஆதரவை நாடுமுன் ஏற்றம்
பெறுதலே நல்ல துணர்.

மதுரை பாபாராஜ்

Monday, January 22, 2024

வணக்கமும் வாழ்த்தும்




நண்பர் கோதண்டராமனுக்கு வாழ்த்து!


மஞ்சள் மலர்களோ பூத்துச் சிரித்திருக்க

அன்புடன் காலை வணக்கத்தைக் கூறிய

நண்பரை வாழ்த்துகிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்




நண்பர் சுப்பையாவுக்கு வாழ்த்து!


சிகப்பு மலரனுப்பி காலை வணக்கம்

அகங்குளிரச் சொல்லியதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


நண்பர் பன்னீர்செல்வத்திற்கு வாழ்த்து!


செம்மலர்க் கொத்தை குளம்பி மணங்கமழ

அன்புடன் காலை வணக்கத்தைக் கூறிய

நண்பரை வாழ்த்துகிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்


ஓவியர் திரும்மி நிலமங்கை துரைசாமி


 ஓவியர் திருமதி நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து!


தாய்மீனும் சேய்மீனும் துள்ளித்தான் நீந்துதம்மா!

யார்வலையில் யார்சிக்கிச் செல்வாரோ என்பதை

யாரறிவார் இங்குதான்? சொல்.


மதுரை பாபாராஜ்

திமிங்கலத்தின் முடிவு!



 திமிங்கலத்தின் முடிவு!


திமிங்கலம் சாவை அறிந்துகொள்ளும் ஆற்றல்
இருப்பதால் அந்தநேரம் கூட்டத்தை விட்டே
தனிமைப் படுத்தி இறந்துவிடு மிங்கே!
உயிர்மூச்சு போனபின் மற்ற கடல்வாழ்
உயிரினங்கள் அந்தத் திமிங்கலத்தை மொய்த்தே
உணவாக்கிச் செல்லும்! எலும்புகளின் கூடு
கடலுக் கடியிலே சென்றேதான் தங்கும்!
இதுதான் திமிங்கலத்தின் சாவு.

மதுரை பாபாராஜ்

நண்பர்கள் பாலா--சி ஆர்


 நண்பர்கள் பாலா-- சிஆர்!


உள்வாங்கிப் பேசுவது வேறு! தலைப்புக்குள்

உள்சென்றுப் பேசுவது வேறு! நமதருமைச்

சிந்துவெளி ஆய்வாளர் பாலாவும் நம்முடைய

வள்ளுவர் கூட்டுக் குடும்ப நெறியாளர்

நண்பர் இராசேந்ர னாரும் தலைப்பிலே

உள்சென்று ஆர்வமுடன் பேசுவதில் வல்லவர்கள்!

வல்லவர்கள் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

Sunday, January 21, 2024

மதச்சார்பின்மையே உயிர்மூச்சு!

 மதச்சார்பின்மையே உயிர்மூச்சு!


எந்தமதச் சார்புமின்றி மக்கள் பழகுவதே

இந்திய நாட்டின் சிறப்பு.


மதுரை பாபாராஜ்

Saturday, January 20, 2024

பென்னர் நண்பர்கள்சந்திப்பு


 முயற்சிக்கு வாழ்த்து!


பணிஓய்வு பெற்றபின்பும் நட்பு தொடர்ந்து

மணம்பரப்பும் நண்பர்கள் சந்திக்கும் வாய்ப்பைக்

கனிந்துவரச் செய்த முயற்சிக்கு வாழ்த்து!

அனைவரையும் வாழ்த்துகிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

பென்னர் நிறுவன ஊழியர்( ஓய்வு)

சென்னை

Friday, January 19, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனதை அலைய விடாதீர்கள்! அந்த
மனதிலே நேர்மறை எண்ணத்தைத் தூவி
மனதிற்குள்  உள்ளீடு மற்றும் செயல்கள்
தினந்தோறும் ஊட்டுங்கள்! நிம்மதி மற்றும்
சிறந்த செயல்பாட்டைச் செய்ய முடியும்!
சுறுசுறுப்பாய் வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

நண்பர் பொற்கையார்


 சந்தக்கவிஞர் பொற்கைப் பாண்டியன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத்திருநாள்: 20.01.24


எந்தத் தலைப்பெனினும் சந்தக் கவிதைகள்

சொந்தமெனத் துள்ளிவரப் பாக்களை யாத்தளிக்கும்

நண்பர்தான் பொற்கையார்! சந்தம்போல் வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


செயல்கள் அனைத்திற்கும் காலமுண்டு! ஆனால்
முயற்சிகள் செய்தே விரைவாய் முடிக்கத்
தடையில்லை! நம்மிலக்கை நோக்கி முயல்வோம்!
முறையாய் முடிப்போம் விரைந்து.

மதுரை பாபாராஜ்

Thursday, January 18, 2024

பதக்கங்கள் பெற்றவருக்கு வாழ்த்து


 பதக்கங்கள் பலபெற்ற போதும் பணிவைப்

பதக்கமாக வைத்திருக்கும் நீங்களோ வெற்றித்

தடம்பதித்து வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


வாழ்க்கையின் போக்கிலே செல்லப் பழகவேண்டும்!
போக்கிலே செல்லும் பொழுதில்  அனுபவித்துப்
பார்த்தேதான் உங்களைச் சுற்றியுள்ள நல்லவற்றைச்
சேகரித்து வாழ்தல் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

Wednesday, January 17, 2024

சி ஆர் கருத்து


 கருத்தளித்தவர் சி ஆர்:


இவரால் பயனுண்டா! போடுவோம் உக்கி!
அவரால் பயனுண்டா போடுவோம் தண்டா!
பயனில்லை என்று தெரிந்தால் விலகிப்
பயணிப்போம்  என்றுவாழும் வாழ்வு.

மதுரை பாபாராஜ்

Tuesday, January 16, 2024

முதுமை படுத்தும் பாடு!

 முதுமை படுத்தும் பாடு!


உடலில் அரிப்பு, தலையில் பொடுகு,

திடக்கழிவு மேலாண்மை நாள்தோறும் சிக்கல்

நடைமுறை வாழ்க்கையோ இப்படித்தான் இங்கே!

தடைகளை மீறித்தான் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

குறளும் சாப்பாடும்

 குறளும் சாப்பாடும்!

குறள் 942:

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய

தற்றது போற்றி உணின்

கலைஞர் உரை:


உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை

சாப்பாடு-- இன்றைய நடைமுறை!

வீட்டில் சமைத்துவைத்த சாப்பாடை விட்டுவிட்டு

நாட்டில் கடைகளைத் தேடித்தான் சாப்பிடும்

காட்சி நடைமுறை வாழ்விலே பார்க்கின்றோம்!

காத்திருக்கும் பெற்றோரைக் காண்.


கண்டகண்ட நேரத்தில் கண்டபடி சாப்பிட்டுத்

திக்குமுக் காடுகின்றார் சீரணம் ஆகாமல்!

இந்தநிலை தேவையா? நேரத்தில் சாப்பிட்டு

மந்தநிலை தன்னைத் தவிர்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தல் இங்கே
உரியதோர் வாய்ப்பினைத் தேர்ந்தெடுத்தல் போல
மிகமிக முக்கியம்! தேர்ந்தெடுக்கும் பாதை
குறுகிய காலமாக அல்லது இங்கே
நெடுங்காலப் பாதையாய்த் தோன்றலாம்! ஆனால்
அதுதான் உதவும் உணர்.

மதுரை பாபாராஜ்

Monday, January 15, 2024

ஓவியர் திருமதி நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து


 அம்மா திருமதி நிலமங்கை துரைசாமி அவர்களின் கலையாற்றலுக்கு வாழ்த்து!


ஓலைச் சுவடி, எழுத்தாணி கொண்டேதான்

வாழ்வின் நடைமுறையை நல்லறத்தால் கற்பித்த

தூய்மை நெறியாளர் வள்ளுவரின் வள்ளுவத்தைத் 

தாள்பணிந்தே ஏற்று நடந்திடுவோம் வாழ்க்கையில்! 

வள்ளுவரை வாழ்த்தி வணங்கு.


மதுரை பாபாராஜ்

வள்ளுவர் நாள் வாழ்த்து


 

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


அறுவடை நாளைப் பலமக்கள் எந்தப்
பெயரிலே கொண்டாடி நன்றியைச் சொல்லும்
வழக்கமுண்டு என்பதைக் கூறிவிட்டு இந்நாள்
வளங்கள், இணக்கம், மகிழ்ச்சி இவற்றை
அளவின்றித் தந்துவக்க வாழ்த்துகின்றார் நண்பர்
எழில்புத்தன் அன்புடன் தான்.

மதுரை பாபாராஜ்

மருமகள் வீட்டு வாசலில் பொங்கல் கோலம்!


 மருமகள் சத்யபாமா வீட்டு வாசலில் பொங்கல் கோலம்!


வட்டத்தின் மத்தியில் கோலமிட்ட பானையில் 

பொங்கிவரும் பொங்கலும் செங்கரும்பும் பூக்களும் 

கண்கவரும் வண்ணம் அழகுசெய்ய கோலமிட்ட

எண்ணத்தை நற்றமிழால் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Sunday, January 14, 2024

மகள் வீட்டு வாசலில் பொங்கல் கோலம்


 மகள் சுபா அனுப்பிய படத்திற்கு வாழ்த்து!

பொங்கல் நாள் கோலம்

15.01.24


பானையிலே பொங்கலோ பொங்கிவர செங்கரும்பு

பானையைச் சுற்றித்தான் வைத்திருக்க நம்வீட்டு

வாசலிலே கோலம் கலைநய ஆற்றலுடன்

ஆர்வமுடன் போட்டவரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Saturday, January 13, 2024

நண்பர் முருகுவுக்கு வாழ்த்து



 நண்பர் தமிழய்யா முருகேசனாருக்கு வாழ்த்து!


தமிழ்ஒளி வீசும் விருதினை வாங்கும்

தமிழய்யா வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

Friday, January 12, 2024

மன்பதையின் நாக்கு


 

எங்கே நிம்மதி?

 எங்கே நிம்மதி?


வாழ்க்கை ஒன்றும் புரியவில்லை

வாழத் தானே தெரியவில்லை

எங்கும் எதுவும் புரியவில்லை

ஏனோ ஏனோ தெரியவில்லை!


மேடு பள்ளம் ஓடுகிறேன்

காடுக ளுக்குள் தேடுகிறேன்

கடலுக் குள்ளே நீந்துகிறேன்

வானில் நானும் பறக்கின்றேன்


கிழக்கை ஒருவர் காட்டுகின்றார்

மேற்கில் ஒருவர் தேடென்றார்

தெற்கில் ஒருவர் போஎன்றார்

வடக்கில் ஒருவர் கிடைக்குமென்றார்!


நாலு திசையும் சென்றுவந்தேன்!

வாழ்க்கை ஒன்றும் புரியவில்லை!

அலைந்து அலைந்தே மயங்குகிறேன்!

நிம்மதி ஏனோ கிடைக்கவில்லை?


மதுரை பாபாராஜ்






Thursday, January 11, 2024

பேத்தியுடன் பாட்டி


 பேத்தியுடன் பாட்டி திருமதி.செண்பகம் அம்மாள்!

பெற்றோர்: மருத்துவ இணையர் 

மதுசூதனன்-- வைதேகி

பேத்தியின் லூட்டியைப் பாட்டி ரசித்திருக்க

பேத்தியின் கைகளில் அங்கே குடமிருக்க

ஊற்றெடுக்கும் பாசத்தில் அன்பின் அரவணைப்பில்

பேத்தியின் நெற்றியில் பக்தி மணங்கமழ

பார்ப்பவளை வாழ்த்துகிறேன் நான்.


பாபா தாத்தா

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்களைச் சுற்றியே நல்லவர்கள் உள்ளது
நன்மைதான்! அன்னாரின் செல்வாக்கும் ஆதரவும்
என்றும் விரும்புகின்ற மற்றும் சிறப்பான
பண்பட்ட நல்ல விளைவுகளைக் கொண்டுவரும்!
என்றும் குழுப்பணியே நன்று.

மதுரை பாபாராஜ்

Wednesday, January 10, 2024

கடைக்குட்டிப் பேரன் வருண்


 கடைக்குட்டிப் பேரன் வருண்!


விளையும் பயிரோ முளையில் தெரியும்!

கலைமீது நாட்டந்தான் உட்கார்ந்து ஏட்டில்

எழுதுகோலால் ஓவியம் தீட்டுகின்ற ஆர்வம்

அருமையாய்த் தானுண்டு தன்வேலை உண்டு

வருணின் கவனத்தைப் பார்த்தேன் ரசித்தேன்!

பெருமைமிகு பேரன் வருணுக்கு வாழ்த்து!

கரங்கொட்டி வாழ்த்துகிறேன் Just.


 பாபா தாத்தா

குட்டிச் செல்லப் பேரன் நிக்கில்!


 குட்டிச் செல்லப் பேரன் நிக்கில்!


பள்ளியின் சீருடையும் நெற்றித் திருநீரும்

வெள்ளையாய்க் காட்சிதர கள்ளமற்ற புன்னகையைச்

செல்லமாய் அன்பாய்த் தவழவிடும் பேரனாம்

நிக்கிலை வாழ்கவென்று வாழ்த்து.


பாபா தாத்தா

குட்டிப் பூசாரி சுசாந்த்


 குட்டிப் பூசாரி சுசாந்த்!


வலக்கையில் சூடத்தைக் காட்டும் கருவி

இடக்கையில் மங்கல மாக ஒலிக்கும்

மணியும் இருக்க இடுப்பிலே வேட்டி

அமர்க்களமாய்க் கட்டித் திருநீற்றுப்  பட்டை

இதமாக நெற்றியில் பூசி நடுவில் 

அழகாக வட்டமாய்ப் பொட்டும் விளங்க

அணிசெய்யும் பேரனை வாழ்த்து.


பாபா தாத்தா

Stress

 STRESS AND ANXIETY!


STRESS AND ANXIETY 

GO HAND IN HAND!

LIFE ON THIS EARTH

CANNOT MOVE WITHOUT

STRESS AND ANXIETY!


STRESS AND ANXIETY

NOT COMING FROM SKY!

BUT CREATED BY US

IN OUR DAY TO DAY LIFE!


CHILDREN TO ELDERS

ALWAYS SUFFER !

DEGREE MAY VARY!

BUT CANNOT BE AVOIDED!


STRESS AND ANXIETY

THRUST ON ELDERS

BY THEIR CHILDREN

AND THEIR FAMILIES!


UNBRIDLED BEHAVIOURS 

OF FAMILY MEMBERS

CAUSE STRESS AND ANXIETY!

THOSE WHO SHOULDER 

SUFFER FOR EVER!


ALL SAY TO AVOID OR IGNORE!

HOW? WE  DONT KNOW!

IT IS THERE  FROM 

TIME IMMEMORIAL!


BABARAJ

இயல்பு


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


வேலை முடிக்கவேண்டும் என்றுகொள்ளும் ஆவேசம்
தேவையல்ல! வேலையை ஏற்றபின்
நம்கவனம்,
ஆவலுடன் கூடிய உள்ள உறுதியுடன்
நாம்பணி செய்தால் முடிந்துவிடும் அப்பணிதான்!
ஆவேசம் கொள்தல் தவிர்.

மதுரை பாபாராஜ்

Monday, January 08, 2024

இல்லறம்சிறக்க

 இல்லறம் சிறக்க!


துள்ளி மகிழ்ந்திருக்கும் ஆண்களும் பெண்களும்

இல்லறத்தை ஏற்ற இணையராய் மாறியதும்

முள்ளில் நடக்கும் உணர்வில் முகஞ்சுழித்தே

உள்ளத்தால் வாடுவதும் ஏன்?


இல்லறத்தை ஏற்பதே இன்பமாய் வாழ்வதற்கு!

உள்ளத்தால் ஒன்றிய விட்டுக் கொடுக்கின்ற

பக்குவத்தை ஏற்று நடந்துகொண்டால் இல்லறத்தில்

வெற்றி மணக்கும் உணர்.


இன்றைய வாழ்க்கை முறையிலே வீட்டுக்குள்

ஒன்றி பிள்ளைகளுடன் வாழ்தல் சிறப்பாகும்!

தங்கி இருக்கின்ற நேரம் குறைவுதான்!

பிள்ளைகள் பள்ளிகள் கல்லூரி என்றேதான்

பல்முனை ஆற்றலைத் தேடிப் பறக்கின்றார்!

பெற்றோர் வருமானம் பார்க்கப் பறக்கின்றார்!

இப்படி வாழ்வதோ இங்கே குடும்பங்கள்

பல்வளங்கள் காணத்தான் சொல்.


வேகமான வாழ்வை விவேகமாய் வாழ்வதற்கு

நாடவேண்டும் பெற்றோர் இணக்கமாக வாழவேண்டும்!

தேவையற்ற ஆணவம் வம்படிப் பேச்சுகள்

கேவலத்தை உண்டாக்கும் பார்.


கணவன் மனைவி ஒருவர்க் கொருவர்

மனத்திலே மாசின்றி அன்பில் கரைந்தே

அமைந்திருக்கும் வாழ்வை அமளியாக் காமல்

குழந்தைகள் வாழ்வைப் பராமரித்து வாழ்ந்தால்

நலமுடன் நிம்மதி உண்டு.


மதுரை பாபாராஜ்

நண்பர் LRC



 நண்பர் LRC அனுப்பிய காணொளிக்குக் கவிதை!


குழந்தைப் பருவம் கிடந்ததைப் போல

தளர்ந்த முதுமைப் பருவம் அடைந்தே

குழந்தையைப் போல கிடக்கின்ற வாழ்க்கை!

உலக நடைமுறை தான்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வொரு நாளுமே உங்கள் வரலாறை
சிந்தித் தெழுதுகின்ற வாய்ப்பாகும்!
நீங்களாக
இங்கே பொறுப்பேற்கு மட்டும் சிறப்பான
நல்ல வரலாறை என்றும் எழுதுதல்
என்ப தெளிதல்ல என்றே உணரவேண்டும்!
மண்ணக வாய்ப்பைச் செதுக்கு.

மதுரை பாபாராஜ்

Saturday, January 06, 2024

ஐயாதுரைசாமி திருவாசகம்


 ஐயா துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


சிக்கல் தெரிந்தாலும் சிக்கலையும் மீறித்தான்

அக்கறையாய் இங்கே இலைகளோ உள்ளன!

சிக்கல்கள் வாழ்விலே வந்தாலும் சிக்கலுக்கே

சிக்கலைத் தந்தேதான் வாழவேண்டும்! நாமிங்கே!

சிக்கலுக் கஞ்சாதே நீ.

மதுரை பாபாராஜ்

அதிஅற்புதமான நொடிப்பொழுது கவிதைக்கு  வாழ்த்துகள் நன்றி. 🙏

ஐயாவுக்கு வாழ்த்து!


தூண்டலோ நீங்கள்! துலங்கியது என்கவிதை!

தூண்டிய உங்களுக்கு வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் கலிப்பதுல்லா ஷா


 நண்பர் கலிப்பதுல்லா ஷா அவர்கள் படத்திற்குக் கவிதை!

MILK VENDOR!

கடற்கரையில் நின்று கரங்களுக்குள் அந்தக்

கடலையே கொண்டுவரும் ஆசை யுடனே

பறவைச் சிறகை விரிப்பது போல

கரங்களை நீட்டுகின் றார்.


மதுரை பாபாராஜ்

கழுதை செய்த குறும்பு!


 கழுதை செய்த குறும்பு!


கழுதைமேல் மூட்டைகளை வைத்தார்! நகர்ந்த

கழுதை சிறிதுதூரம் சென்று முதுகை

ஒருபக்கம் சாய்த்தேதான் மூட்டைகளச் சாய்த்து

தெருவிலே நின்றுவிட மீண்டும் எடுத்து

கழுதை முதுகிலே வைத்தார்! குறும்புக்

கழுதையோ மீண்டுமங்கே அப்படிச் செய்ய

கழுதைக் குறும்பால் சினங்கொண்டார் சீறி!

அழாத குறைதான் அவர்.


மதுரை பாபாராஜ்