Thursday, October 31, 2024
Wednesday, October 30, 2024
சாவே வா!
சாவே வா!
தாங்க முடியாச் சுமைகளை நானிங்கே
தாங்க முடியா வயதினிலே தந்துவிட்டான்!
தாங்க முடியவில்லை! ஏங்கித்
தவிக்கின்றேன்!
வான்பார்த்து வாழ்கிறேன் நான்.
வாவென்றால் வந்திடுமா? நிம்மதியைத் தந்திடுமா?
பூனை எலியை உண்பதற்கு முன்னாலே
ஓடவிட்டுப் பார்க்குமாம் வக்கிர மாகத்தான்!
ஓடவிட்டுப் பார்க்கிறதே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
ஏக்கமே வாழ்வு
ஏக்கமே வாழ்வு!
சோகப்பண் மீட்டுகின்ற உள்ளம்
துன்பங்கள் சலங்கைகட்டித் துள்ளும்
தாங்குகின்ற வயதிலே தாங்கலாம்
தூங்குகின்ற வயதிலே தூக்கமில்லை
தூக்கத்தை மனஉளைச்சல் பாதிக்க
ஏக்கத்தில் என்னுள்ளம் துடித்திருக்க
ஊக்கம் தளர்ந்ததே இங்கு.
மதுரை பாபாராஜ்
கடுக்கண்- இடுக்கண்
கடுக்கண் -- இடுக்கண்!
கடுக்கண் கழன்றேதான் காதில் இருந்து
விழுந்தேதான் காணாமல் போனாலும் போகும்
இடுக்கண் உளைச்சல்கள் வாழ்வில் இருந்தே
ஒருக்காலும் போகா துணர்.
மதுரை பாபாராஜ்
புரியாப் புதிர்.
புரியாப் புதிர்!
இடிவிழுந்த போதிலும் கண்டுகொள்ள மாட்டார்!
எதற்கும் கலங்காமல் நாளும் சிரிப்பார்!
புரியாப் புதிராக இத்தகைய மாந்தர்
புவியிலே இப்படித் தான்.
மதுரை பாபாராஜ்
Tuesday, October 29, 2024
வண்ணமயில் கோலம்
நிலைப்படியில் தோரணம்--
Monday, October 28, 2024
Sunday, October 27, 2024
Saturday, October 26, 2024
Friday, October 25, 2024
Thursday, October 24, 2024
Wednesday, October 23, 2024
Tuesday, October 22, 2024
Monday, October 21, 2024
Sunday, October 20, 2024
Saturday, October 19, 2024
Friday, October 18, 2024
Thursday, October 17, 2024
Wednesday, October 16, 2024
வசந்தாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து
Messages for Vasantha birthday
17.10.24
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா
அலமேலு சொக்கலிங்கம்
Happy Birthday 🌹🌹🌹❤️
Ashraff wife
அன்புள்ள அம்மையார்
வசந்தா பாபாராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். 💐🎂🎁🙏.
நீங்கள் உடல் நலத்துடனும் மனநலத்துடனும் வாழ்க
பல்லாண்டு. 🙏
துரைசாமி திருவாசகம்
நிலமங்கை துரைசாமி.
பாபாராஜ் ஐயாவின் வாசுகி(வசந்தா) அம்மையாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பல்லாண்டு பல்லாண்டு நீவிர் இருவரும் ஒன்றிணைந்து வாழ இயற்கை பேரருள் அருள் புரியட்டும்.
இராமசாமி BSNL.
அம்மா வசந்தா பிறந்தநாள் வாழ்த்து!
கவிஞர் பாபாவின்
கருத்தைக் கவர்ந்து
கருத்தொரு மித்து
இல்லறம் நடத்தி
இன்னலும் கன்னலும்
இயல்பென்றே இயங்கி
இடி தாங்கியாய்
இல்லம் காத்து
வாழ்வில் வசந்தம்
வீச வந்த
வசந்தா அம்மையார்
வாழ்க வாழ்கவே!
வளமுடன் வாழ்கவே!
வாழ்க வாழ்கவே!
நலமுடன் வாழ்கவே!
வாழிய வாழியவே!
கோ.இமயவரம்பன்
16.10.2024
Vovkaniankrishnan:
பல்லாண்டுகாலம் வாழ்க!
நோய்நொடி இல்லாமல் வளர்க!..தென்.கி
VovTheetharappan:
மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. வாழ்த்துகள்!
VOVCR:
எங்களின் அன்பு நிறை வாழ்த்துகளும் வணக்கங்களும்....
DrAshraffwhatsapp:
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐
🙏🏻🎂🎂🙏🏻
அன்புச் சகோதரி
இன்னும் பூரண நலம்
பெற்று இயல்பு
நிலை திரும்பி
மகிழ்ச்சியுடன்
வாழ வேண்டிக் கொள்கிறோம்
மு.முருகேசன்
குடும்பத்தார்
Vanagam Amma
Kumar seetharaman
இன்று போல் என்றும்
பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம்!
அன்பு,போரூர்
சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
திருமலை
நமதுமண்வாசம் இதழ்
[AnudeivanayakiC3: 👏👏
super aunty.Wish you many more happy returns of the day aunty 🎉🎉💐💐
AnudeivanayakiC3: Uncle Kavithai super 👏
Wishing happiness and health ✨️
CBI SIR WIFE
பத்மா
மாயவரம்
அகம் நிறை அகவைத்திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
அனைத்திலும் நலமே நிறையட்டும்.
Dr.சேது
💐💐Happy birthday Akka
God bless you with good health and happiness🙏🙏
Rajaram & Hema
Convey our birthday wishes to your wife. Pray Goddess Meenakshi to give happy and healthier life. Regards
Fenner Sundaram
Made for each other. Happy birtgday akka. Baba bless you for long live.
Viji trichy
வாழ்க வளமுடன் 💐
Fenner P venkaresh
ADVANCE HAPPY BIRTHDAY TO AMMA BY JALAKANDAN
Valththa vayathillai vanangukiren 🙏🏻🙏🏻🥳
Ragu Nancy
[17/10, 05:00] VovMogaleeswarannew:
வணக்கம் அம்மா & ஐயா. நீங்களும் அம்மாவும் பல்லாண்டு வாழ்க வாழ்க என அன்புடன் வாழ்த்துகிறோம்.💐💐💐👏👏🙏🏿
[17/10, 06:54] Vovirbalakrishnan:
வசந்தா அம்மையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...🎊🎁💐🎉மன மகிழ்ச்சியும் , உடல் நலமும் நிறைந்து பல்லாண்டு வளமுடன் தம்பதியர் இருவரும் வாழ்க என வணங்கி வாழ்த்துகிறேன்...🙏💐🙏💐
அண்ணியாருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Babu Teekaram
[17/10, 06:43] Anuhusbandcbe: Iniya piranha naal vaazthukal 💐💐💐
[17/10, 06:44] Anuhusbandcbe:
Periyamma kitta sollidunga naina
Happy birthday mam 💐💐
Flora Rajaa
My Namaskaram to Aunty 🙇♂️
Amudhavalli suba
கடவுள் அ௫ளால் ௨ங்கள் துணைவி பூரண நலம் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐💐
Fenner Jeyalakshmi,Bangalore
பிறந்தநாள் வாழ்த்து வாழ்க தமிழுடன்! நன்னாள் பொன்னாள் இந்நாள் வாழ்க. நலமாய்ப் பாரிலே நூறு நூறு ஆண்டுகள் ஆயினும் வாழ்க வாழ்க தமிழுடன் என்றுமே…
Udhayakumar Madurai
Tuesday, October 15, 2024
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்துபோகும்!
வெப்பமய மாகும் உலகப் பருவமாற்றம்
அப்படியே வானிலை மாற்றத்தைத் தந்தேதான்
எப்படி எப்படியோ தாறுமாறாய் மாமழையைக்
கொட்டித்தான் தீர்க்கிறது இங்கு.
அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் என்றே
இமைக்காமல் தன்னார்வத் தொண்டர்கள் எல்லாம்
ஒருங்கிணைந்தே தங்களால் ஆன முயற்சி
இரவுபகல் பார்க்காமல் செய்வதை வாழ்த்து!
வரவேற்போம் வாழ்த்துவோம் நாம்.
இயற்கை இயல்பையோ மாற்றல் அரிதே!
முயற்சிகளை மேற்கொண்டு மாமழை வெள்ளம்
வழிந்தோடச் செய்தல் கடமையாம்! வானம்
தெளிந்தால் வழிபிறக்கும் நம்பு.
மதுரை பாபாராஜ்
9003260981
Monday, October 14, 2024
Sunday, October 13, 2024
Saturday, October 12, 2024
இதுவரை எனது படைப்புகள்
மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா!
தாங்கள் எளிய நிலை அறிஞர் அன்றோ? எதிர்பார்ப்புகள் இல்லா தமிழ்த்தொண்டரும் கூட.
வணங்குகிறேன் ஐயா!
தங்களின் படைப்புகள் விரைவில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே பேசப்படும் என்பது திண்ணம்.
தங்களின் முயற்சிகளுக்கு அடியேனின் நன்றிகளும் வணக்கங்களும்!
செ.வ.இராமாநுசம்