Friday, May 30, 2025
Thursday, May 29, 2025
கரும்புள்ளி
கரும்புள்ளி!
மணநாள் 50 ஆண்டு நிறைவு!
29.05.1975-29.05.2025
வெண்ணிற ஆடை அணிந்திருந்த போதிலும்
கண்களில் இங்கே முதலில் படுவதோ
வெண்ணிற ஆடையில் உள்ள கரும்புள்ளி
மட்டுந்தான்! அந்தக் கரும்புள்ளி யைப்போல
சொந்தமகன் ஆகிவிட்டான்! எங்களுடன் இல்லாமல்
சொந்தமகன் ஊருக்குச் சென்றுவிட்டான்! சுற்றத்தார்
உள்ளனர் வாழ்த்தினர் இங்கு.
மதுரை பாபாராஜ்
பாலுவுக்குப் பணிநிறைவு வாழ்த்து
மருமகன் மு. பாலமுரளிக்குப் பணிநிறைவு வாழ்த்து!
நாள்: 30.05.2025
Life Insurance Corporation of India!
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்!
முப்பத்தைந் தாண்டு படிப்படி யாகத்தான்
தன்முனைப் பாற்றலில் முன்னேற்றங் கண்டேதான்
இன்று பணிநிறைவு காணும் மருமகன்
அன்பான பால முரளியை வாழ்த்துகிறேன்!
நன்னெறி வாழ்கின்றார் வாழ்த்து.
பெற்றோரின் ஆசிகள் இல்லத்
தரசியுடன்
முத்தான பொன்மகள்கள் மற்றும் மருமகன்
சுற்றத்தார் சூழ சிறப்புடன் வாழியவே!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
ஐம்பது 50
Vovemayavaramban:
*வாழ்விணையர் மதுரகவி பாபாராஜ் - வசந்தா பொன்விழா ஆண்டு மணநாள் வாழ்த்து!*
இல்லறத்தின் மாண்பை
ஏற்றமுடன் போற்றி
இல்லறத்தை நல்லறமாய்
நடாத்தி வரும்
வாழ்விணையர் கவிஞர்
பாபாராஜ் - வசந்தாம்மா
வாழ்க்கையில் இணைந்த
பொன்னாளின் பொன்விழாஆண்டு!
இல்லற வாழ்வில்
இன்னலும் கன்னலும்
இயல்பென எண்ணி
இன்னலில் துவளாமல்
இன்பத்தில் திளைக்காமல்
எளிமையை மேற்கொண்டு
இல்லறத்தின் இலக்கணத்தை
இல்வாழ்வில் கடைபிடித்து
நல்லறத்தின் நாயகனாய்
நாயகியாய் வடிவமைத்து
நல்வழிக் காட்டிடும்
நற்றமிழ் இணையரே!
சீரிளமைத் தமிழாக
சிறப்புடன் வாழ்கவென்று
பெருமைமிகு பாபாவை
அம்மா வசந்தாவை
இதயத்தால் வாழ்த்துகிறேன்!
இன்புற்று என்றும்வாழ்க!
வாழிய வாழியவே!
வாழிய பல்லாண்டு!
கோ.இமயவரம்பன்
29.05.2025
[29/05, 21:54] Madurai Babaraj: கவிதை வாழ்த்து கவிஞர் இமயம்
புவிபோற்ற தந்துவிட்டார் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
Rajaramperiakanna:
💐💐Happy 50th Wedding Anniversary
God bless you with good health and long life🙏🙏
Rajaram &Hema👆
Jeyasaraswathi Sethu
Dear Anna ,Vadhinai Hearty congratulations. Wish you a very happy golden wedding anniversary. May God bless you with good health and happiness to celebrate many more happy anniversaries. 🙏🙏💐💐👍👍👌👌👏👏😊
Dr Sethu
உலக தம்பதியர் தினத்தன்று,
மணநாள் ஆண்டு நிறை
பொன்விழா காணும்
உன்னத தம்பதியற்கு
மனம் நிறை நல்வாழ்த்துகள்.
மணவாழ்வின் இனிய நினைவுகள்
இதயத்தை நிறைக்கட்டும் .
இனிவரும் நாட்களில்
அனைத்து நலத்தையும்,
ஆதிபகவன் அருளட்டும்.
Krishnamoorthy Ramanujan
பாலைப் போல தூய்மை தன்னை
வளர்த்து கொள்கிறார்
அவர் பழத்தை போல இனிமை தன்னை
பகிர்ந்து கொள்கிறார்
பாலைப் போல தூய்மை தன்னை
வளர்த்து கொள்கிறார்
அவர் பழத்தை போல இனிமை தன்னை
பகிர்ந்து கொள்கிறார்
குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு
குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு
அது கோலம் போட்டு காட்டுவது குடும்ப விளக்கு
குடும்ப விளக்கு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு
Vovramanujan:
ஐயா, வணக்கம்!
அருமை!
வாழ்வியல் பாடங்கள் அனைத்திலும் தாங்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்று மகிழ்ந்தவர் என்பதைப் புரிந்து கொண்டேன். மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா.
தங்கள் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்! நீவிர் இருவரும் இணைந்து பல்லாண்டு வாழ்கநல் வளத்துடன்!
Vovramanujan:
பின்னால் அந்நாள் படமும், முன்னால் இந்நாள் படமும் எழிலூட்டுகின்றன.
Krishnamoorthy Ramanujan
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதியர் வாழியவே. இல்லறம் கண்டு.
உங்கள் திருமணநாள் உலக தம்பதியர் தினத்தன்று அமைந்தது மிகச் சிறப்பு.
Stalin Ramakrishnan:
இணையர் இருவரும், என்றென்றும் அன்பு பொங்கி நலமும், வளமும் பெற்று வாழ்க என்று அன்புடன் வாழ்த்தி ,உங்களின் ஆசியை வேண்டுகிறேன்.
🙏
Vovkaniankrishnan:
தம்பதியர் இன்பமாய் என்றும் பிரியாது
நிம்மதியாய் வாழ்கபல் லாண்டு.
தென்.கி
மனம் ஒத்த இணையர்,
மணம் கமழ இணைவர்!
இறை ஒத்த இல்லறம்!
என்றும் வாழும் நல்லறம்!
S saminathan
Sridhar:
மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா...
KANDADAMY:
இனிய மணநாள் வாழ்த்துக்கள்
VOVCR:
இல்லறக் கடமைகளை "மடுத்த வாயெல்லாம் பகடு போல" செய்து கொண்டிருக்கிறீர்கள் பாபா
அன்பும் அறனும் நிறைந்த ,
மேடு பள்ளங்கள் நிறைந்த இல்வாழ்க்கை... ஒருவகையில் எல்லோருக்கும் அப்படித்தான்...
பயணம், இனிதே தொடரட்டும்.. மீண்டும் ஒருமுறை எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாபா ஐயா- வசந்தா அம்மா
[29/05, 23:25] Kalanavaneethan:
💐💐Happy 50th Wedding Anniversary Anna and vadhinai.
Wish you both happiness, good health in the years ahead.
[30/05, 00:27] DrMallikagovindababu:
Happy 50th Wedding Anniversary dear Anna & Vathinai💐💐💐💐
Wishing you both long happy healthy years 🎂🍧🍬🎁🌹
தங்கைக்கு வாழ்த்து
தங்கை ராஜி ஜோதிகுமார் குடும்பத்தாருக்கு வாழ்த்து!
நாள் 29.05.1975 --29.05.2025
கேக்குடன் பூங்கொத்தும் எங்கள் படத்திற்கு
ஏற்றாற்போல் மின்விளக்கு மின்னொளி தந்தேதான்
ஊற்றெடுக்கும் பொன்விழா வாழ்த்துகளை அன்புடனே
தங்கைக் குடும்பத்தார் காட்டிவிட்டார் வாழ்த்துகிறோம்!
நன்றி நவில்கின்றோம் இன்று.
பாவா வுடனிங்கே வாழ்ந்தநாளை எண்ணித்தான்
வாழ்கின்றார் என்தங்கை! பொன்விழா கண்டுவிட்டார்!
பாங்குடனே பிள்ளைகள் தங்கள் குடும்பத்தை
தாங்குகின்றார் ஆற்றலுடன்! வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
Wednesday, May 28, 2025
Tuesday, May 27, 2025
Monday, May 26, 2025
Sunday, May 25, 2025
Saturday, May 24, 2025
Friday, May 23, 2025
மகன் எழில் அனுப்பியது
மகன் எழில் அனுப்பிய படங்கள்:
குறள்வழி வாழ்பவள்!
மனைவி வசந்தா!
இல்வாழ்க்கை ஏற்றதும் வாழ்க்கைத் துணைநலம்
நல்லபடி யாயமைந்தே இல்லற மாண்புடன்
மக்களைத் தந்தாளே அன்புடைமை கொண்டேதான்!
பண்பாய் விருந்தோம்பல் செய்தே உறவுகளைத்
தக்கவைத்தாள்! வாழ்த்துகிறார் இன்று.
மதுரை பாபாராஜ்
Thursday, May 22, 2025
வாழ்க்கைத் துணைநலம்
வாழ்க்கைத் துணைநலம்!
வாழ்க்கைப் பிடிக்கவில்லை! வாழ முடியவில்லை!
வாழவேண்டும் என்பதற்கு காகத்தான் வாழ்கிறேன் !
வாழ்க்கைத் துணைநலம் பேணுகின்ற காரணத்தால்
வாழ்கிறேன் ஆனமட்டும்! இங்கு.
மதுரை பாபாராஜ்
Wednesday, May 21, 2025
பாசம் கீழ்நோக்கித்தான் போகும்
பாசம் கீழ்நோக்கித்தான் போகும்!
அம்மாவும் அப்பாவும் தங்களது வாழ்நாளைக்
கண்ணுங் கருத்துமாய்ப் பிள்ளை வளர்ப்பிலே
அன்றாடம் காட்டுவார்! பெற்றோர் முதியவராய்
இங்கேதான் ஆனாலும் மாறமாட்டார்! பிள்ளைகள்
தங்கள் சிறகை விரித்தே பறந்திருப்பார்!
பெற்றோரைப் பிள்ளைகள் இப்படிப் பார்ப்பாரா?
எப்போதும் பாசமோ கீழ்நோக்கித் தான்போகும்!
இப்படித்தான் வாழையடி வாழையாய் வாழ்கிறோம்
நற்றமிழே! வாழ்க்கையில் நாம்.
மதுரை பாபாராஜ்
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
நம்முடைய நேர்மறைச் சிந்தனைகள் வாழ்க்கையில்
நம்முடைய நண்பர்க ளாவர்! அவைகளோ
உங்களை நாளும் அமைதியாய் வாழவும்
உங்கள் உளைச்சல் களைப்பைக் குறைக்கவும்
என்றும் உதவும்! நலங்காக்கும்! நேர்மறைச்
சிந்தனையைப் பின்பற்றி என்றும் மகிழ்ச்சியாக
இங்குவாழ்தல் நன்று! உணர்.
மதுரை பாபாராஜ்
அருமை முதல்வர் ஸ்டாலின்
அருமை முதல்வர் ஸ்டாலின்!
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை
நிலத்திலே யார்க்கும் அஞ்சா நெறிகள்
உளத்திலேந்தச் சொன்னவர் பாரதி! கண்முன்
களமாடும் ஸ்டாலின் அருமை முதல்வர்!
உளங்கனிந்து வாழ்கவென்று வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
900 3260 981
Tuesday, May 20, 2025
Monday, May 19, 2025
இவரா அப்படி?
இவரா அப்படி?
மழையும் புயலும் புரட்டியே போட்ட
நிலைபோல சண்டை முதல்நாள் மறுநாள்
தலைகீழாய் மாறி அமைதியாவார் வந்து!
இவர்தானா அப்படிச் சண்டைகள் போட்டார்?
எனக்கேட்போம் பார்த்து வியந்து.
மதுரை பாபாராஜ்
Sunday, May 18, 2025
நண்பர் சோம வீரப்பன்
Somaveerappan:நேற்று 18/5/25 *கீழடி* சென்றோம்...
பெயர்த்தி அக்ஷராவிற்கும் பெயரன் குமரனுக்கும்
தமிழ் நாகரி கத்தின் தொன்மையைக் காட்டியதில் பெரு மகிழ்ச்சி...
மாப்பிள்ளை ஶ்ரீதருக்கும், மகள் ஶ்ரீவித்யாவிற்கும் நன்றி!
*தமிழன் என்று சொல்வோம் !*
*தலை நிமிர்ந்து நிற்போம் !!*
சோம வீரப்பன்
மதுரை பாபாராஜ்:
குறளினிது சோமவீ ரப்பன் மனதில்
நிறைவுடன் பேரக் குழந்தைகள் சூழ
சிறப்புகள் சொல்லும் கீழடி சென்றார்!
அறக்குறள் வேந்தரை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
மு.சரவணப்பெருமாள்-- ஜெயசித்ரா மணநாள் வாழ்த்து!
இணையர் மணநாள் வாழ்த்து!
மு.சரவணப் பெருமாள்
ச.ஜெயசித்ரா
மணநாள்: 19.05.25
ஆண்டுகள்: 28/29
இல்லற வாழ்வில் இருபத்து எட்டுதனை
நல்லறப் பாதையில் நன்கு நிறைவுசெய்து
பல்வளம் காண இருபத்து ஒன்பதில்
இன்று அடியெடுத்து வைக்கும் இணையரோ
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ
சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
Saturday, May 17, 2025
கலைமாமணி ஏர்வாடியார்
கலைமாமணி ஏர்வாடியார் அவர்களின்
78 ஆம் பிறந்தநாள் விழா வாழ்த்து!
நாள்: 18.05.2025
இலக்கிய ஏரால் கவிதை உறவை
உழவுசெய்த ராதா கிருஷ்ணனை வாழ்த்து!
வளர்தமிழ்போல் வாழ்க வளர்ந்து.
வங்கிப் பணிசெய்த போதும் மொழிபெயர்ப்பு
வங்கிப் பணிச்சொற்க ளுக்கேதான் செய்திட்ட
தன்னிக ரற்ற கலைமா மணிவாழ்க!
பண்பாளர் வாழ்க வளர்ந்து.
குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ
சிறப்புடன் வாழ்க! நலமுடன் வாழ்க!
நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!
அகங்குளிர வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
Thursday, May 15, 2025
Wednesday, May 14, 2025
உறவின் காலம் மாறியதே
உறவின் காலம் மாறியதே!
எளிதாய் நினைத்ததை யெல்லாமே பேசிப்
பழகிய காலங்கள் போனதே! இன்று
தயங்கித் தயங்கியே அச்சமுடன் பார்த்தே
அளவளாவும் கோலமே இங்கு.
மதுரை பாபாராஜ்
Tuesday, May 13, 2025
மனைவியின் உடல்நிலை
மனைவி வசந்தாவின் உடல்நிலை!
நாள்:13.05.25
PHYSIO
மனைவி வலியால் முகஞ்சுழிக்கும் போது
மனது பிசைகிறது! கைகள் துடிக்க
உடல்பயிற்சி நேரம் மனம்நோகப் பார்க்கும்
கடமையில் வாழ்கிறேன் நான்.
அந்த அழகான புன்னகையை மீண்டும்நான்
என்றுகாண்பேன்? எப்படிக் காண்பேனோ? என்னசொல்ல?
பண்பட்ட பேச்செங்கே? பாடும் குரலெங்கே?
கண்ணெதிரே வாடுகின்றா ளே!
நடந்து வருவாளா? கேலிசெய்து பார்த்துக்
கடந்தேதான் போவாளா? அய்யோ! கவலைப்
படுவதுதான் வாழ்வா? பகர்.
மதுரை பாபாராஜ்
மனைவி வசந்தா
மனைவி வசந்தாவின் உடல்நிலை!
நாள்:13.05.25
PHYSIO
மனைவி வலியால் முகஞ்சுழிக்கும் போது
மனது பிசைகிறது! கைகள் துடிக்க
உடல்பயிற்சி நேரம் மனம்நோகப் பார்க்கும்
கடமையில் வாழ்கிறேன் நான்.
அந்த அழகான புன்னகையை மீண்டும்நான்
என்றுகாண்பேன்? எப்படிக் காண்பேனோ? என்னசொல்ல?
பண்பட்ட பேச்செங்கே? பாடும் குரலெங்கே?
கண்ணெதிரே வாடுகின்றா ளே!
நடந்து வருவாளா? கேலிசெய்து பார்த்துக்
கடந்தேதான் போவாளா? அய்யோ! கவலைப்
படுவதுதான் வாழ்வா? பகர்.
மதுரை பாபாராஜ்
Monday, May 12, 2025
Sunday, May 11, 2025
அன்னையர் நாள் வாழ்த்துகள்
பெற்றோரை வணங்குகிறேன்!
அன்னையர் நாள் வாழ்த்துகள்!
நாள் 11.05.25
இடுப்பில் சுமந்திருந்தாய்! நோயால் துவண்டேன்!
இருதோளில் மாற்றிச் சுமந்தாய்! படிக்க
உடன்வந்தாய்! நாளும் படிப்படி யாக
வளர்வதைக் கண்டாய்! கடமைகள் தம்மை
அயர்வின்றி வாழ்வில் நிறைவேற்றிச் சென்றாய்!
மலைத்தேன்நான் அம்மா உனது தியாகம்
நினைத்தேனே நன்றியுடன் இன்று.
மதுரை பாபாராஜ்
நேர்மறைப் பண்பே வாழ்வு!
நேர்மறைப் பண்பே வாழ்வு!
நேர்மறைப் பண்புகள் இல்லாமல் நாள்தோறும்
ஆயிரம் கோயில் குளமென்று சுற்றினாலும்
வாழ்விலே நிம்மதி காண்ப தரிதாகும்!
நேர்மறைப் பண்புதான் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
சாவே வா!
சாவே வா!
சாவே சாவே வாராயோ!
விரைந்து விரைந்து வாராயோ!
மனதில் உளைச்சல் நீங்கிவிடும்
நாளும் வேதனை இருக்காது!
எங்கே எப்போதும் வருவாயோ!
எனக்கு கொஞ்சம் சொல்லிவிடு!மதுரை
கண்ணீர்த் துளிகள் சிந்தாது!
விரக்தி எண்ணம் தோன்றாது!
அங்கே வந்து காத்திருப்பேன்!
கைகள் நீட்டி அணைத்திருப்பேன்!
நன்றிப் பாதான் தந்திடுவேன்!
நிம்மதி யாகத் துயில்கொள்வேன்!
மதுரை பாபாராஜ்


















































