Monday, February 28, 2022
மனக்கவலை
மனக்கவலை மாற்றல் அரிது!
பணக்கவலை என்றால் கடன்வாங்கிப் போக்க
தினமும் வழிபிறக்கும்! ஆனால் வதைத்துச்
சுணங்கவைத்துப் பார்த்துத் துடிக்கத்தான் வைக்கும்
மனக்கவலை மாற்றல் அரிது.
மதுரை பாபாராஜ்
Sunday, February 27, 2022
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குத் தமிழில் கவிதை!
எந்தக் குறிப்பிட்ட காலத் திலுமிங்கே
நம்முடைய கொள்கையோ சூழலைக் காப்பது
மட்டுமின்றி இந்த மனித இனத்தையும்
கட்டமைப்பில் வாழவைக்கும்
போக்கும் இருக்கவேண்டும்!
ஒற்றுமை மற்றும் பகிர்தலெனும் பண்புகள்
சிந்தும் மகிழ்ச்சி மெதுவாய் மறைகிறதே!
என்றுமிது நல்லதல்ல சொல்.
மதுரை பாபாராஜ்
பெருந்தன்மை
பெருந்தன்மை கோழைத்தனமல்ல!
GENEROSITY IS NOT COWARDICE!
பெருந்தன்மை கோழைத் தனமல்ல! அந்தப்
பெருமைக் கிணையில்லை! ஈடில்லை!
பண்பின்
சிகரம் பெருந்தன்மை என்பேன்! உயர்த்தும்
அறநெறியே அப்பண்பு தான்.
மதுரை பாபாராஜ்
வள்ளுவம் பொதுமுறை
வள்ளுவம் பொதுமுறை!
வள்ளுவத்தின் சொற்களோ அந்த மொழிச்சொல்லா?
தெள்ளுதமிழ்ச் சொற்களா? என்பதைக் காட்டிலும்
வள்ளுவம் கூறும் அறநெறியைப் பின்பற்றும்
உள்ளத்தைக் கொள்தல் சிறப்பு.
பூசைகள் செய்து மணியடித்து தெய்வமாக்கி
கூசாமல் இங்கே மதச்சிறையில் வள்ளுவத்தைத்
தேடவைத்தல் தேவையற்ற வேலை எனச்சொல்வேன்!
பாடமாக்கி வாழ்விலே போற்று.
மதுரை பாபாராஜ்
கையாள்தல்
கையாள்தல்!
நீரையும் பாலையும் சோறு பிரித்துவிடும்!
வாழ்வில் வருகின்ற சிக்கலையும் இப்படித்தான்
ஏற்றே அணுகினால் சிக்கலும் தீர்ந்துவிடும்!
ஊற்றெடுத்து நிற்கும் குழப்பங்கள் ஓய்ந்துவிடும்!
போட்டுக் குழப்புவதை நீக்கு.
மதுரை பாபாராஜ்
Saturday, February 26, 2022
ஐயா துரைசாமி திருவாசகம்
மனிதன்! புரியாப் புதிர்!
எறும்பா? கடிக்கத்தான் செய்யுமிங்கே! தேளா?
கொடுக்காலே கொட்டத்தான் செய்யுமிங்கே! பாம்பா?
சுருக்கென்றே தீண்டத்தான் செய்யும்! விலங்கா?
மிரண்டேதான் தாக்கத்தான் செய்யும்! மனிதன்?
தெரியாதே! என்னசெய்வான்? ஏதுசெய்வான்? என்றே!
உலகில் மனிதன் புதிர்.
மதுரை பாபாராஜ்
இயல்பாக வாழ்வோம்
இயல்பாக வாழ்வோம்!
இறைவனை நம்புங்கள் உங்கள் விருப்பம்!
இறைவனையே நம்பிக் கடமை மறக்கும்
நிலையெடுக்க வேண்டாம்! நிலைகுலையும் வாழ்க்கை!
இயல்பாக வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
நண்பர் செல்லப்பா
நண்பர் செல்லப்பா அனுப்பிய காணொளிக்குக் கவிதை!
நரம்பற்ற நாவாலே கண்டபடி இங்கே
வரம்பின்றிப் பேசுவதே மாந்தர் இயல்பு!
நரம்பெடுத்துக் கூடுகட்டும் நேர்மறைப் போக்கே
பறவையின் வாழ்க்கை இயல்பு.
மதுரை பாபாராஜ்
நண்பர் கவிஞர் மோகனசுந்தரம் கருத்துப் பரிமாற்றம்:
Mohanasundaram:
கேடுகெட்ட மாந்தரெலாம் கூவுகிறார் வீடிலையாம்
கூடுகட்டும் இப்பறவை பார்.
பொழிப்பு மோனை(1,3)
ஒரூஉ எதுகை(1,4) கூடிய
ஒழுகிசைச் செப்பலோசையில் அமைந்த குறள் வெண்பா.
நரம்பற்ற நாவாலே கண்டபடி இங்கே
வரம்பின்றிப் பேசுவதே மாந்தர் இயல்பு!
நரம்பெடுத்துக் கூடுகட்டும் நேர்மறைப் போக்கே
பறவையின் வாழ்க்கை இயல்பு.
மதுரை பாபாராஜ்
அருமை
Mohanasundaram:
இன்னிசை வெண்பா இனிக்கிறது ஐயனே
தன்னாலே நீருமே தண்பா எழுதுகிறீர்
உன்போலே நானும் உயர்வான பாக்களை
என்று எழுது வனோ?.
மதுரை பாபாராஜ்:
மிக்க நன்றி ஐயா
தங்களின் ஊக்கம் இனிமைதான்
இலக்கண வித்தகரே! உங்களைப் போல
எழுத விழைகிறேன்! சொற்களின் எல்லை
அனுமதிக்கும் எல்லைக்குள் என்முயற்சி என்பா!
அடக்கத்தின் பேருரு நீ.
மதுரை பாபாராஜ்
தம்பி கெஜராஜ்
தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி-- மதுரை
பள்ளி இறுதிப் படிப்பு நிறைவு-1972
பொன்விழா கொண்டாட்டம்
தம்பி S.P. கெஜராஜ் பழைய மாணவர்!
துள்ளித் திரிந்திருந்த காலத்தை எண்ணுகின்றார்!
பள்ளி இறுதி வகுப்பு நிறைவினிலே
பொன்விழா ஐம்பதாண்டு சென்ற நினைவிலே
பள்ளி வளாகத்தில் கூடி மகிழ்ந்தனர்!
எல்லோர்க்கும் வாழ்த்துகள் கூறு.
மதுரை பாபாராஜ்
மூன்றாம் கண்
மூன்றாம் கண்!
சுற்றி இருப்போரின் கண்ணிங்கே மூன்றாம்கண்!
உற்றுத்தான் பார்ப்பார்! குறைகளையே பார்த்திருப்பார்!
அக்கறையாய்க் கேட்டுத் தெரிந்துகொண்டு பற்றவைப்பார்!
அப்பப்பா செய்தி வதந்தியாய் மாறித்தான்
பற்றிவிடும் காட்டுத்தீ போல்.
மதுரை பாபாராஜ்
வேலுநாச்சியார்
மெரினா கடற்கரை--
25.02.22
படத்தில்:நான்சி-அமுதா- அக்கா லட்சுமி-வசந்தா- பாபா-- வருண்
இந்தியவிடுதலைப் போரில் தமிழ்நாடு!
வீரமங்கை வேலு நாச்சியார்-குயிலி-
வீரர் சுந்தரலிங்கம்!
குதிரையில் போர்க்கோலம் நாச்சியார் ஏந்த
உயிர்த்தோழி யான குயிலியோ நிற்க
தகிப்பிலே வாளுடன் சுந்தர லிங்கம்
பகைவரைப் பந்தாடும் கோலத்தில்
நிற்கும்
இணையற்ற பின்னணியில் எங்கள் குடும்பம்
இசைவுடன் நின்றோம் மகிழ்ந்து.
மதுரை பாபாராஜ்
மெரினாவில் நமச்சிவாயம்
மெரினா கடற்கரை
25.02.22
தமிழ்நாடு அரசின் ஊர்வல வண்டி!
இந்திய விடுதலைப் போரில் தமிழ்நாடு!
வீரமங்கை வேலு நாச்சியார் -- குயிலி-- வீரர் சுந்தரலிங்கம்
குதிரையில் வீரமங்கை வேலுநாச்சி வீற்றிருக்க
குயிலியோ கேடயம் ஏந்திநிற்கும் கோலம்
துணிவுடன் வீரராம்
சுந்தர லிங்கம்
அணிசெய்யும் பின்னணியில் நமச்சிவாயம் நிற்கும்
இணையற்ற காட்சி இது.
மதுரை பாபாராஜ்
Thursday, February 24, 2022
கலையாற்றலுக்கு வாழ்த்து
முதல் படம்
திருமதி நிலமங்கை துரைசாமி,விசாகை
இரண்டாவது படம்:
திருமதி
சுபா ரவி,சென்னை
படத்திற்குக் கவிதை:
வளைந்து கொடுத்தேதான் வாழ்வ தழகே!
உரைக்கின்ற கைவண்ண ஆற்றல் அருமை!
வளரட்டும் ஆற்றலென்றே வாழ்த்தி மகிழ்வோம்!
கலையழகே கூறும் உழைப்பு.
மதுரை பாபாராஜ்
Vovkaniankrishnan:
காட்சியைப் படம்பிடித்துக்
கவிதையாக்குவதுதான்
கவிஞனுக்கு அழகு என்பர்.
அந்த அழகில் ராஜ்
பாபாராஜ் ஐயா.
கனியன் கிருஷ்ணனுக்கு வாழ்த்து!
கருத்தைக் கவிதை வடிவில் கனியன்
தருவதில் வல்லவர்தான் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
THAMIZHIYALAN
THE NEW INDIAN EXPRESS-- 23.02.22
THAMIZHIYALAN A SMILING PERSONALITY
Of Perils and Purpose
Perils may come at anytime
And at any age in our life!
Shattering our hopes and close
Our doors of opportunities!
Parents and well wishers and Doctors
Plunge into action and save
Our lives to their best efforts!
Thamizhiyalan the best example
Who without losing the hope
Step by step he progressed
And regained his restricted mobility!
Sudden attack of fever
Developed into polio
Affected his future!
His relentless efforts
Made him a Man of achievement!
Education chistled him a fullfledged
Exemplary Man running
I AM AN IAS ACADEMY!
Three masters degree
Throwing away the inferiority complex
Now with his wife and children
Glitter like a shining star
In the society doing yeomen service!
Several zoom meetings he is presiding
Finding an alternative amidst pandemic
Crisis reaching hundreds of his fans!
A multi faceted personality with
Many laudable talents.
Long live Thamizhiyalan and His family.
Madurai Babaraj
நா போல செயல்படு
'நா' போல செயல்படு!
பல்லிடுக்கில் ஏதேனும் சிக்கிவிட்டால் நம்நாக்கு
பல்லில் துழாவியே சிக்கியதை எப்படியும்
தள்ளி எடுக்குமட்டும் ஓயாது! அப்படித்தான்
நம்வாழ்வில் ஏற்படும் சின்னத் தடைகளையும்
தள்ளித் தவிர்த்தல் சிறப்பு.
மதுரை பாபாராஜ்
Wednesday, February 23, 2022
அது ஒரு பொற்காலம்
அது ஒரு பொற்காலம்!
1976 முதல் 2012 முடிய
நாங்கள் பழைய திரைப்படப் பாடல்கள் பாடித் தூங்கவைத்த நினைவு இன்றும் பசுமையாக உள்ளது.நாங்கள் பாடித் தூங்கவைத்த பாடல்கள்:
1. சின்னஞ்சிறு கண்மலர்
2. பூஞ்சிட்டுக் கன்னங்கள்
3. நீலவண்ணக்கண்ணா வாடா
4. என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
5. எங்கிருந்தாலும் வாழ்க
6. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
7. காதலிலே தோல்வியுற்றாள்
8. உன்னைக் காணாத கண்ணும்
9. என்னை யாரென்று எண்ணியெண்ணி
10. நான் பேச நினைப்பதெல்லாம.
11. கண்ணும் கண்ணும் பேசியதும்
12.துள்ளாத மனமும் துள்ளும்
13.தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
14.சின்னச்சின்ன நடை நடந்து
15. எங்கிருந்த போதும் உன்னை
16. சொன்னது நீதானா
17.உள்ளம் என்பது ஆமை
18. சின்னபாப்பா எங்க செல்லபாப்பா
19.சின்னப் பயலே
20.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
21.அவளுக்கென்ன தூங்கிவிட்டாள்
22.அண்ணன் காட்டிய வழியம்மா
23.மலர்ந்தும் மலராத
எங்கள் பாடலைக் கேட்டுத் தூங்கிய குழந்தைகள்:
1.ராஜ்குமார்
2.சுபா
3.எழில்
4.பொம்மி
5. கார்த்திக்
6. சேனா
7.பெனிட்டா
8.ஹரி
9.சுசாந்த்
10. நிக்கில்
11. வருண்
ஒருமுறை நீலவண்ணக் கண்ணா பாடிய போது தொட்டிலுக்குள் இருந்து அதே பாடலை எங்களுடன் நிக்கிலும் பாடியது இன்றும்நினைவில் உள்ளது.
தம்பி கெஜாவின் நண்பர் செல்வா மதுரையில் வீட்டிற்கு வருவார். பாடத்தொடங்கியதும் "அண்ணனும் அண்ணியும் பாட்டுக்கச்சேரி ஆரம்பிச்சாச்சு என்று சொல்வார்.
அக்கா மகன் பாலு கூறியது:
மலர்ந்தும் மலராத பாட ஆரம்பிச்சாச்சு.
இத்துடன் பாட்டுக் கச்சேரி முடிஞ்சுச்சு
என்பார்.
அது ஒரு பொற்காலம்!
Labels: கார்த்திக்
பொறுமை
பொறுமை கடலினும் பெரிது!
நடப்பவை இங்கே நடந்துதான் தீரும்!
கடக்கின்ற நேரம் கடந்துதான் போகும்!
இடைப்பட்ட காலத்தில் வேதனையே மிஞ்சும்!
பொறுமைக்கே உண்டு பரிசு.
மதுரை பாபாராஜ்
Tuesday, February 22, 2022
STAR
STAR!
Twinkle twinkle little star
Study well to become a super star
How i wonder what you are
How to become like you? Tell!
Up above the world so high
Positive thoughts brighten you so high
Like a diamond in the sky
You shine like a diamond in the life
When the blazing Sun is gone
Ups and downs of life are gone
Then you show your little eyes
Then your opportunities knock thy doors
S.P.Babaraj
அன்றும் இன்றும்
அன்றும் இன்றும்!
ஐந்தாண்டு போனதே! என்னுருவம் இன்றுபார்த்தால்
நைந்தே உருக்குலைந்த தோற்றத்தில்! பற்களோ
அங்கங்கே ஓட்டையுடன் கோணலாக! என்தலையில்
வெண்முடி! எந்தன் முகத்திலே இன்பதுன்பம்
பண்பட்ட பக்குவத்தின் கீற்று.
மதுரை பாபாராஜ்
அன்றைய முகமோ
தோற்றப் பொலிவு
இன்றைய முகமோ
பக்குவத் தெளிவு.
நண்பர் கனியன் கிருஷ்ணன்,தென்காசி
Monday, February 21, 2022
உலகத் தாய்மொழி நாள்
உலகத்தாய்மொழி நாள்
21.02.22
இந்தமொழி அந்தமொழி எந்தமொழி கற்றாலும்
சொந்தமொழி தாய்மொழியை வாழ்வில் புறக்கணித்தால்
முன்னேற்றம் காண முடியாது தத்தளிப்போம்!
என்றுமே தாய்மொழியே காப்பு.
மதுரை பாபாராஜ்
ஐயா துரைசாமி திருவாசகம்
ஐயா துரைசாமி திருவாசகம்,விசாகை அனுப்பியதன் தமிழாக்கம்:
எப்போதும் வாழ்வில் அமைதியைப் பின்பற்று!
சற்றுகூட நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்
புண்பட ஆணவம் கொள்ளாதே! யாரையும்
புண்படுத்திப் பேசாதே! எல்லோரி டத்திலும்
அன்பாய்ப் பழகு! வழிபாட்டை என்றுமே
விட்டு விடாதே! இறையை அமைதியாய்
இங்கே நினைக்கவும்! உண்மையைப் பேசவும்!
பண்பாய்ப் பொருத்தமான சொற்களைச் சொல்லவும்!
இத்துடன் உற்சாகந் தன்னை வெளிப்படுத்தி
என்றுமே வாழ்ந்தால்தான் வாழ்க்கை சிறப்பாக
நிம்மதியாய் வாழலாம் நம்பு.
மதுரை பாபாராஜ்
Sunday, February 20, 2022
அப்பாவிடம் பேசட்டும் குழந்தைகள்
அப்பாவிடம் பேசட்டும் குழந்தைகள்!
கணவன் மனைவிக்கு வேறுபாடு என்றால்
குழந்தைகள் செய்தபாவம் என்ன? அந்தக்
குழந்தைகள் அப்பா விடம்பேசி னால்தான்
மனங்குளிரும் காட்சிமாறும் இங்கு.
மதுரை பாபாராஜ்
உள்ளத்தின் இயல்பு!
உள்ளத்தின் இயல்பு!
(சித்தப்பா தெய்வத்திரு அழகர்சாமி கூறிய கருத்து)
மறக்க நினைத்தாலும் உள்ளமோ இங்கே
மறக்க விடாமல் நிகழ்வுகளை நம்முன்
நிறுத்தித் துடிக்கவைத்துப் பார்க்கும்!
துடிப்போம்
சிறைப்பறவை யாகத்தான் நாம்.
மதுரை பாபாராஜ்
Saturday, February 19, 2022
கொள்கை வெறியானால்
கொள்கை வெறியானால்!
கொள்கையில் பற்றென்றால் கேடில்லை நல்லதே!
கொள்கை வெறியாக மாறிவிட்டால் கேடுதான்!
உள்ளத்தில் வக்கிரங்கள் ஊற்றெடுக்கும்! உட்பகையோ
எல்லைகள் மீறிவிடும் செப்பு.
மதுரை பாபாராஜ்
Friday, February 18, 2022
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்- தமிழாக்கம்
பின்னாளில் நீங்கள் உணர்ந்து திருந்துகின்ற
எந்த எதிர்மறைப் போக்குச் செயல்களையும்
என்றுமே செய்யவேண்டாம்! எப்போதும் நற்செயலைச்
செய்யுங்கள்! அச்செயலோ இங்கே சிறிதெனினும்
இல்லை பெரிதெனினும் செய்யுங்கள்! யாரையும்
புண்படுத் தாமல் இருப்பதற்குக் கற்கவும்!
என்றும் அமைதியே உண்டு.
மதுரை பாபாராஜ்
தலைகுனியவைக்கும்
தலைகுனிய வைக்கும்!
அடிப்படைப் பண்புகள் மாறாத பக்தி!
நெறியொழுக்கம் பேணாமல் வாழும் படிப்பு!
முறைதவறி சேர்க்கும் மலைபோன்ற செல்வம்!
தலைகுனிய வைத்துவிடும் சாற்று.
மதுரை பாபாராஜ்
புத்தகக் கண்காட்சி 2022
தலைப்பு ஒன்று! கவிதைகள் இரண்டு!
புத்தகக் கண்காட்சி! 2022
ஆகா! மகிழ்ந்தார்! திருக்குறள் வாங்கினார்!
பாகாய் உருகிப் படித்தார் விறுவிறுப்பாய்!
சாகா வரம்பெற்ற தைப்போல் உணர்ந்திருந்தார்!
போகாதோர் வாய்ப்பிழந்தார் இங்கு.
ஆகா! அறிவுச் சுரங்கத்தில் நடந்திருந்தார்!
ஓகோ! புதையலைக் கண்டே வியந்திருந்தார்!
சாகா வரம்பெற்ற தைப்போல் உணர்ந்திட்டார்!
போகாதோர் வாய்ப்பிழந்தார்! சொல்.
மதுரை பாபாராஜ்
திருமதி ஆர்த்தி -- கோவிந் பெங்களூரு
விருந்தோம்பல் இணையர்
மருமகன் கோவிந்தும்
மகள் ஆர்த்தியும் வாழ்க!
இல்லற முத்துக்கள்:
மகன்கள்: சஷ்டிக்
மிருதுள்
16/17.02.22
மழலை மொழியிலே பேரன்கள் 'தாத்தா'
அழைப்பிலே மெய்மறந்தேன்! உள்ளம் நெகிழ்ந்தேன்!
ஒருவரோ மெய்நிகர் காணும் வகுப்பில்
படித்திருக்கப் பார்த்தேன் உவந்து.
வள்ளுவர் சொன்ன விருந்தோம்பல் பண்பினை
நல்ல இணையராம் கோவிந்தும் ஆர்த்தியும்
உள்ளன்பு கொண்டே ஏந்தியே வாழ்கின்றார்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
இன்னல்களின் பயன் இனிமையானவை
இன்னல்களின் பயன் இனிமையானவை!
SWEET ARE THE USES OF ADVERSITY!
மேம்பாலம் அங்கங்கே கட்டுகின்றார் அக்கறையாய்!
போக்கு வரத்தில் நெரிசல்தான்! இன்னல்தான்!
ஆனாலும் கட்டி முடித்தவுடன் மக்களுக்கு
நாள்தோறும் இன்பந்தான் இன்னல் மறைந்துவிடும்!
ஆம்நமக்கோ இன்னல் பயனோ இனிமைதான்!
வாழ்க்கையும் இப்படித்தான்! சொல்.
மதுரை பாபாராஜ்
Thursday, February 17, 2022
Wednesday, February 16, 2022
நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்
நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்
நீங்கள் நீங்களாக இருங்கள்!
நீதிமா னாகித்தான் தீர்ப்பு வழங்கவேண்டாம்!
நாடியே தண்டனை தன்னைத் தரவேண்டாம்!
வாழ்வில் எதைவிதைத்தா ரோயிங்கே அஃதையே
நாளும் அறுவடை செய்வார்கள் நிச்சயம்!
வாழ்க்கையில் நீங்களோ நீங்களாய் வாழுங்கள்!
சூழ்நிலையை வென்றெடுக்கும் அன்பு.
மதுரை பாபாராஜ்
பெங்களுரு
Tuesday, February 15, 2022
தம்பி இராம்குமார் அனுப்பியதன் தமிழாக்கம்
தம்பி இராம்குமார் அனுப்பியதன் தமிழாக்கம்!
ஆணுக்கும்/ பெண்ணுக்கும் பொருந்தும் !
நீங்கள் சரியாகத் தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு
நாளுமே காதலர் நாளாகும் வாழ்விலே!
நீங்கள் தவறாகத் தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு
நாளும் தியாகிகள் நாளாகும் வாழ்விலே!
சோம்பேறி வந்துசேர்ந்தால் ஒவ்வொரு நாளுமே
வாழ்வில் உழைப்பாளர் நாளாகும்! செல்வந்தர்
தேர்வானால் ஒவ்வொரு நாளுமே புத்தாண்டே!
வாழ்விலே பக்குவ மற்றவரைத் தேர்ந்தெடுத்தால்
வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் குழந்தைகள்
நாளாகும்! ஏமாற்றுப் பேர்வழி தேர்வானால்
வாழ்க்கையின் நாளெல்லாம் ஏப்ரல் முதல்நாளே!
வாழ்வில் திருமணமே செய்யவில்லை என்றாலோ
வாழ்க்கை விடுதலைநாள் தான்.
மதுரை பாபாராஜ்