Tuesday, August 31, 2021

நண்பர் வீஓவி I.R. பாலகிருஷ்ணன், கோவை,அனுப்பிய காணொளி


நண்பர் வீஓவி I.R. பாலகிருஷ்ணன்,

கோவை,அனுப்பிய காணொளி


சிலந்தி! பொறியியல் கற்கவில்லை! ஆனால்

வலையைப் பொறிஞரின் ஆற்றலுடன் பின்னும்

கலையிலே அற்புதத்தைக்  கண்டேன்! மகிழ்ந்தேன்!

மலைத்தேன் ரசித்தேன் 

வியந்து.


மதுரை பாபாராஜ்

 

மதிப்பிற்குரிய தமிழினியன் அய்யாவுக்கு வாழ்த்து.


மதிப்பிற்குரிய தமிழினியன் அய்யாவுக்கு வாழ்த்து.

தமிழினியன் அய்யா கவிச்சந்தம் முன்னே

இமிழ்கடலின் ஓசை அடங்கித்தான் போகும்!

தமிழன்னை முன்வந்தே ஆசிகள் கூறி

தலைநிமிர்ந்து நிற்பாள் திளைத்து.

மதுரை பாபாராஜ்

 

Monday, August 30, 2021

மருமகன் திண்டுக்கல் ராஜா அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மருமகன் திண்டுக்கல் ராஜா அனுப்பிய படத்திற்குக் கவிதை!

ஐந்து மலரனுப்பி காலை வணக்கத்தை

திண்டுக்கல் ராஜாதான் கூறுகின்ற அன்பிற்கு

நன்றி நவில்கிறேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

பெரியவர் துரைசாமி திருவாசகம் அனுப்பிய காணொளி!


பெரியவர் துரைசாமி திருவாசகம் அனுப்பிய காணொளி!

வெள்ளை மயிலொன்று தோகை விரிக்கின்ற
கொள்ளை அழகை ரசித்தேதான் மெய்மறந்தேன்!
வெண்மை! அமைதியின் சின்னமாக பூங்காவில்
கண்டேன் கவிதை படைத்து.

மதுரை பாபாராஜ்
 

மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்


மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்:

நல்லதைக் கேட்க உணர்வுக்குக் காதுகள்

உண்டெனினும் உள்ளம் புரிந்துகொள்வ தில்லையிங்கு!

பண்படுத்தும் சொற்களைப் பேசு.

மதுரை பாபாராஜ்

 

தங்கை மகள் திருமதி பத்மா பிரபாகரன் பிறந்தநாள்!


தங்கை மகள் திருமதி பத்மா பிரபாகரன் பிறந்தநாள்!

30.08.21

வாழ்த்துப்பா!

அறிவார்ந்த ஆசிரியைப் பணியில்  நாளும்

நெறியுடன் தொண்டாற்றி மாணவச் செல்வம்

மகிழ்ச்சியாகப் போற்ற குடும்பத்தார் வாழ்த்த

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்.

 

நண்பர் எழில் புத்தன் அனுப்பிய சொல்லோவியம்!


நண்பர் எழில் புத்தன் அனுப்பிய சொல்லோவியம்!


எந்தச்  சுமைகளும் இல்லாமல் உங்களைச்

சொந்தமாக சாதிக்க மாற்றார்க் குதவுகின்ற

அந்த மனப்பான்மை ஒன்றை வளர்த்துக்கொள்!

இந்த மனப்பான்மை உங்களை நாள்தோறும்

இங்கே சிறந்தவ ராக்கும்.


மதுரை பாபாராஜ்

 

முடிவெங்கே?

 முடிவெங்கே?


முழுக்காட்சி புரியவில்லை

முடிவென்ன தெரியவில்லை


பதட்டங்கள் தணியவில்லை

கலக்கங்கள் அணையவில்லை


நடப்புகளோ விளங்கவில்லை

விடியல்கள் புலரவில்லை


தாக்குதல்கள் நிற்கவில்லை

ஏக்கங்கள் எல்லையில்லை


உற்சாகம் விழிக்கவில்லை

ஊக்கமிங்கே நெருங்கவில்லை


ஏற்றங்கள் காணவில்லை

இறக்கங்கள் தூரமில்லை


ஆற்றலுக்கு வலுவேஇல்லை

ஆணவங்கள் ஒழியவில்லை


உளைச்சலுக்குப் பஞ்சமில்லை

உடலினிலே உணர்ச்சியுல்லை


நடையினிலே எழுச்சியில்லை

வாழ்க்கையிலே பிடிப்பேஇல்லை


மதுரை பாபாராஜ்

தணலில் சருகு!


தணலில் சருகு!


தவறான ஓரடி! உறவுகள் எல்லாம்

விலகிநிற்கும் சூழல்! பதற்றமான வாழ்க்கை!

கலங்கித் தவிக்கின்ற காட்சி! மனமோ

உளைச்சல் தணலில் சருகு.


மதுரை பாபாராஜ்

 

Sunday, August 29, 2021

உறவினர் அமர்,திண்டுக்கல்ராஜா அனுப்பிய ஓவியங்களுக்கு கவிதை! இவை உண்டு!


உறவினர் அமர்,திண்டுக்கல்ராஜா அனுப்பிய ஓவியங்களுக்கு கவிதை!
 இவை உண்டு!


கிருஷ்ணன் பிறந்தாரோ இல்லையோ தட்டை,

உருண்டையாய்  சீடை, தயிருடன் பாலும்

மருந்தாக  காயங் கருப்பட்டி உண்டு!

பலவித சிற்றுண்டி தான். 


மதுரை பாபாராஜ்

கணவர்/ கணவன் படும்பாடு!

 கணவர்/ கணவன் படும்பாடு!


கணவர் பெயர்சொல்லக் கூடாத 

காலம்!

கணவர் பெயர்சொல்லிக் கூப்பிட்ட காலம்!

கணவனைப் போடாநீ என்றழைக்கும் காலம்!

வளர்பிறையா? தேய்பிறையா சொல்.


மதுரை பாபாராஜ்

Saturday, August 28, 2021

நண்பர் அன்பு அனுப்பிய காணொளி!


நண்பர் அன்பு அனுப்பிய காணொளி!

அசைந்துவரும் யானை!

அழகான யானை!

நீளமான தந்தம்

நீளமான தும்பிக்கை

கொண்டுவரும் யானை!

உயரமான யானை!

நிலைப்படியைத் தொட்டுவிட

நிற்கின்ற யானை!

குழந்தைகள் பெரியவர்கள்

உற்சாகம் கொள்ள

நடந்துவரும் யானை!

யானைவரும் பின்னே

மணி

ஓசைவரும் முன்னே!


மதுரை பாபாராஜ்

 

Friday, August 27, 2021

நண்பர் கண்ணனுக்கு வாழ்த்து!


நண்பர் கண்ணனுக்கு வாழ்த்து!


கழகத்தின் வட்டத் துணைச்செயலர் கண்ணன்

தளபதி யாரின் தலைமையை ஏற்று

வலம்வரும் டாட்டா மகிழுந்தில் சாய்ந்தே

அமைதியாய் நிற்பதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


கிளியே!


அனைத்துவகைக் கோயிலுக்குள் நாள்தோறும்  போவாய்!

குழந்தை முதலாய் பெரியோர்கள் எல்லாம்

வரவேற்பார் உன்னை! மகிழ்கின்றார் கண்டு! 

மருதம், குறிஞ்சியுடன் முல்லைக்கும் சென்றே

அலையாடும் நெய்தல் மணற்குன்று பாலை

நிலமெல்லாம் உன்விருப்பம் போலப் பறந்து

அளக்கின்றாய்! இந்த விடுதலைக் காற்றில்

வலம்வந்தே வாழ்கிறாய் வாழ்க களித்து!

உலகிலே தங்குதடை எங்களுக்கே! இந்த

அளவோ உரிமையில்லை ஏன்?


மதுரை பாபாராஜ்



 

மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியம்.


மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியம்.


தமிழாக்கம்.


யாரோ ஒருவரின் பார்வையில் நாமெல்லாம்

தேவையற்ற கெட்டவராய்த் தானிருப்போம் வாழ்க்கையில்!

ஊரார் உலைவாயை மூட முடியாது!

வாழ்க்கைக்குச் சான்றே மனம்.


மதுரை பாபாராஜ்

 

வேட்டை இதழுக்கு அகவை 5/6


மதுரை பாபாராஜ்    
வேட்டை இதழுக்கு அகவை 5/6
வேட்டை இதழோ இலக்கியத் தொண்டிலே
போற்றும் சாதனை ஆண்டுகள் ஐந்தினை
ஆக்கபூர்வ மாகத்தான்  இங்கே  நிறைவுசெய்து 
ஆறாவ தாண்டில் நிமிர்ந்து நடைபோட
காண்கிறேன்! காணட்டும் நூறு.

பன்னாட்டு வாசகர்கள் ஆதரவில் வேட்டையில்
பன்முக ஆற்றல் அறிமுக மாகின்றார்!
இந்த உலகத்தைக் கையளவில் கொண்டுவரும்
தொண்டுகள் வாழ்கபல் லாண்டு.

ஆசிரியர் மற்றும் குழுவினர் சேர்ந்தேதான்
ஆர்வமுடன் நாளும் குழுஉணர்வால்
ஒன்றிணைந்து
நேர்மையாய்ப் பாடுபடும் பண்பினை வாழ்த்துகிறேன்!
வாழ்கபல் லாண்டு தொடர்ந்து.



 

கேடு

 கேடு!

மற்றவர் வாழ்வில் குறுக்கிட்டால் 

உன்வாழ்க்கை

முற்றும் அழிந்துவிடும்! தாங்கமாட்டாய்! எச்சரிக்கை!

புண்படும் நெஞ்சத்துக் கண்ணீர் பொசுக்கிவிடும்!

புண்படுத்தி வாழ்வது கேடு.


மதுரை பாபாராஜ்


வேடம் கலை

 வேடம் கலை!


காலில் விழவேண்டாம்! கால்வாரித் தள்ளவேண்டாம்!

காலநேரம் பார்த்துக் கவிழ்க்கும் துரோகத்தை

வாழ்க்கை நெறியாக்கி வாழவேண்டாம்! உள்ளத்தில்

மாசின்றி சொன்னசொல் மாறாமல்

வாழவேண்டும்!

வேடமின்றி வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்


Thursday, August 26, 2021

பிள்ளையின் ஏக்கம்!

 பிள்ளையின் ஏக்கம்!


பெற்றெடுத்த பிள்ளைகள் வீட்டிலே ஏங்கிநிற்க

மற்றவர் பிள்ளைகளைக் கவனிக்கச் செல்கின்றார்!

இப்படிப் போனால்தான் வாழ முடியுமென்று

பிள்ளை உணராது! பெற்றோரைப் பார்க்கின்ற

பிள்ளையின் ஏக்கத்தை யார்தீர்ப்பார்?

பெற்றோரே!

உள்ளம் உருகிவிடும் கண்டு.


மதுரை பாபாராஜ்

மதிப்பிற்குரிய திருமதி நிலமங்கை துரைசாமி,விசாகை அவர்களின் கைவண்ணம்!


மதிப்பிற்குரிய திருமதி நிலமங்கை துரைசாமி,விசாகை அவர்களின் கைவண்ணம்!


ஐந்துபைசா நாணயத்தை இங்கே அடுக்கிவைத்து

கண்கவரும் கோயிலை அம்மா கலையுணர்வால்

கண்ணெதிரே கட்டிவிட்டார் ஆற்றலுடன்

ஆர்வமுடன்!

அம்மாவின் ஆற்றலை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் ரகுநாத்,பெங்களூரு அனுப்பிய சொல்லோவியம்!


நண்பர் ரகுநாத்,பெங்களூரு அனுப்பிய சொல்லோவியம்!

தமிழாக்கம்.


மாற்றா ரிடத்தில் எதிர்பார்ப்ப தைவிடவும்

நீங்களோ உங்களிடம் கொள்ளவேண்டும்! ஏனென்றால்

மாற்றா ரிடத்தில் எதிர்பார்ப்பு புண்படுத்தும்!

உங்களிடம் என்றாலோ ஊக்கத்தை ஏற்படுத்தும்!

வாழ்க்கையின் சாரம் இது.


மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியம்!


மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியம்!


தமிழாக்கம்.


சொற்களின் அன்பிலே நம்பிக்கை ஊற்றெடுக்கும்!

சிந்தனையின் அன்பிலே ஆழம் உணரலாம்!

அன்பாய் வழங்குவதே அன்பை உருவாக்கும்!

அன்பகமே வாழ்வின் தளம்.


மதுரை பாபாராஜ்

 

என்னசெய்ய

 

என்னசெய்ய?

எலிக்குப் பயந்தேநான் ஓடினேன்! அங்கே

புலிவரக் கண்டேன் மரத்தில் ஏறிக்

கிளைக்குநான் சென்றேன்! கருநாகம் ஒன்றோ

படமெடுக்கக் கண்டேன்! நடுங்கிக் குழம்பித்

தவித்தேன் உடல்தான் வியர்த்து.


மதுரை பாபாராஜ்


வழிகேட்டேன்! கேட்டவரிடம் வந்தேன்,!

 வழிகேட்டேன்! கேட்டவரிடம் வந்தேன்,!


எப்படிப் போகவேண்டும் என்றுநான் கேட்டதற்கு

இப்படிப் போகவேண்டும் அப்படிப் போகவேண்டும்

அப்படி வந்து திரும்பியும் இப்படி

அப்படி வந்தால் விரும்பும் இடம்வரும்

என்றார் பின்பற்றி வந்தேன் பிசகாமல்!

வந்தேன்நான்! கண்டேன் வினவிய ஆளைத்தான்!

இப்படித்தான் வாழ்க்கை சுழன்று சுழன்றேதான்

சுற்றவைத்து மீண்டும் தொடங்கிய புள்ளிக்கே

கொண்டுவந்து சேர்க்கும் உணர்.


மதுரை பாபாராஜ்

In search of water!


In search of water!


I am thirsty i am thirsty

I want a cup of water

To quench my thirst!

My throat becomes dry

Words refuse to come

Body becomes weak

Walk is staggering

Eyes cringe to have water

My mind jumps in joy

To see a sheet of water

In the desert!

That water sheet shines

In the scorching Sun!

 I run and run and run

To catch the visible water

Midst of the desert!

But it moves and moves

Further and further

My hands wave in the air

To say that it is not water

But Mirage! Mirage! Mirage!


Babaraj

 

Wednesday, August 25, 2021

நண்பர் எழில்புத்தனின் சொல்லோவியம்,! தமிழாக்கம்.

நண்பர் எழில்புத்தனின் சொல்லோவியம்,!

தமிழாக்கம்.

புறத்தில் இருந்தும் அகத்தில் இருந்தும்

கழிவுகளை நீக்குதல் முக்கிய மாகும்!

செயல்திறனை இஃது ஊக்குவிக்கும்! மேலும்

இடத்தை பொருளை மனிதனைப் பற்றி

எதிர்மறை எண்ணம் கழிவென்றே சொல்வோம்,!

விடுபட்டால் நல்லது! சொல்.


மதுரை பாபாராஜ்


 

காவல்துறை தொண்டில் 20/21 ஆண்டுகள்! 26.08.21


தங்கை பாக்கியமணி ஜெகநாதன் இணையரின்  மகன் காவல்துறை ஆய்வாளர்     

J.திரு வெங்கடகிரி ராஜாவுக்கும் 

அனைவருக்கும் வாழ்த்து!


காவல்துறை தொண்டில் 20/21 ஆண்டுகள்!


26.08.21


காவல் துறையின் தொலைத்தொடர்பு சேவையில்

ஆவலுடன் இங்கே இருபதாண்டு தொண்டுகளை

ஆர்வமுடன் இன்று நிறைவுசெய்தே வெற்றிநடை

போடும் இருபத்து ஒன்றினைக் காணுகின்ற

ராஜாவை வாழ்த்துகிறேன் நான்.


ஆர்வம்  முயற்சியுடன் ஆற்றலும் சேர்ந்துவிட்டால்

பாரில் உழைப்பின் மதிப்பால் உயரலாம்!

நேர்மையுடன் பல்வளங்கள் சூழ குடும்பத்தார்

வாழ்த்திசைக்க வாழ்கபல் லாண்டு.


இருபத்தோ ராவது ஆண்டில் நுழையும்

குழுவினர்  எல்லோரும் பல்லாண்டு தொண்டு

புரிந்தேதான் பன்முக ஆற்றலுடன் வாழ்க!

வளங்களுடன் வாழ்கபல் லாண்டு.


மாமா மதுரை பாபாராஜ்

அத்தை வசந்தா




மகள் உமாபாலு அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


மகள் உமாபாலு அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!

அனைவருக்கும் உள்ள இருபத்து நான்கு

மணிநேர காலத்தை எப்படி இங்கே

பயன்படுத்து கின்றோம்

என்பதை வைத்தே

புகழ்ச்சி இகழ்ச்சியைக் காலம் கணிக்கும்!

புகழே அகத்தின் அழகு.


மதுரை பாபாராஜ்

 

அக்கா திருமதி லெட்சுமி முத்துவீரன் மணநாள் வாழ்த்து!


அக்கா திருமதி லெட்சுமி முத்துவீரன்

மணநாள் வாழ்த்து!

25.08

நீங்கள் வழங்குகின்ற ஆசிகளில் நாங்களிங்கே

வாழ்கின்றோம்! உங்கள் தலமைப் பெருமையில்

வாழ்வாங்கு வாழ்வதற்கு ஆசிகளை நாடுகின்றோம்!

வாழுங்கள் பல்லாண்டு நீடு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!

 


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!

அற்புதமான வாழ்வின் தளமே கவனிக்கும்
அக்கறை கொண்டுள்ள ஆற்றலாகும்! இவ்வாற்றல்
மற்றவ ரோடு தொடர்பினை ஏற்படுத்தும்!
தெள்ளிய நேர்மறை கொண்ட உறவுகளைத்
துல்லியமாய்க் காண உதவும்! மகிழ்ச்சியை
அள்ளித் தெளித்தேதான் சுற்றியுள்ள சூழலை
நல்லதாய் மாற்றும் உணர்.

மதுரை பாபாராஜ்


Tuesday, August 24, 2021

திருவள்ளுவர் கழகம் விசாகை எஃகு உருக்காலை முதலாம் ஆண்டு நிறைவு வாழ்த்து!




அருமை

திருவள்ளுவர் கழகம் விசாகை எஃகு உருக்காலை முதலாம் ஆண்டு நிறைவு வாழ்த்து!


ஆர்வலர்கள் சேர்ந்தே விசாகை நகரிலே

பார்போற்றும் வள்ளுவத்தைக் கூறும் கழகத்தை

வேர்பிடிக்கச் செய்தனர் வாழ்த்து மனங்குளிர!

வாழ்வாங்கு வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

 

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை:


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை:


பறவையே இன்றைய கவிதையைக்  கேள்.


தமிழே உயிர்.


தமிழைத் தமிழ்மணக்க நாளும் எழுது!

தமிழில் பிறமொழி ஆதிக்கம் தீது!

இமையாக மாறி தமிழ்மொழியைக் காப்போம்!

தமிழே தமிழர்க்( கு) உயிர்.


மதுரை பாபாராஜ்

 

மருமகன் திண்டுக்கல் ராஜா அனுப்பிய படத்திற்கு கவிதை:


மருமகன் திண்டுக்கல் ராஜா அனுப்பிய படத்திற்கு கவிதை:


அம்மா வருவாரா? என்பசி நீங்குமா?

என்றே எதிர்பார்த்து வாய்திறந்து காத்திருக்கும்

அன்புக் குழந்தைப் பறவை தூதனுப்பி

இன்று வணக்கத்தைக் கூறுகின்ற ராஜாவை

நன்றியுடன் வாழ்த்துகிறேன்  நான்.


மதுரை பாபாராஜ்

 

மகள் உமாபாலு அனுப்பிய படத்திற்குக் கவிதை!



 


மகள் உமாபாலு அனுப்பிய படத்திற்குக் கவிதை!

வாழ்க்கை! புயலோ கடந்துசெல்லக் காத்திருக்கும் 
கோலமல்ல! ஆனால் மழையில் நடனமாடும்
கோலத்தைக் கற்பதாகும்! கற்றுவிட்டால்
 எத்தகைய
சூழலையும் வெல்லலாம் சொல்.

மதுரை பாபாராஜ்

நண்பர் கமலுக்கு வாழ்த்து.


 நண்பர் கமலுக்கு வாழ்த்து.

கமல் அனுப்பிய கமலம்

குளத்திலே தாமரை பூத்திருக்கும் காட்சி

புலர்காலை நேர வணக்கமாக நண்பர்

வளர்கின்ற நட்புடனே தந்தார்! மகிழ்ச்சி!

வளரட்டும் நட்புபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

SQUIRREL IN MY BALCONY!


SQUIRREL IN MY BALCONY!


Oh my little Squirrel!

You are always brisk 

Make yourself busy!

Climbing the grills

And from there you jump

To the bunch of leaves

And then to the branch

Munching the nuts

Holding with your front legs

Progress towards tree top

Searching for fruits

Found at last and bite the skin !

Leaving the uneaten portion 

And come down to earth.

Oh! Why are you running?

Oh! You are hearing the human steps!

Human beings are always there to 

Disturb Nature! Spoil peace with perversion!


Madurai Babaraj


 

Monday, August 23, 2021

மகள் உமாபாலு அனுப்பிய அசையும் படம்!

மகள் உமாபாலு அனுப்பிய அசையும் படம்!

கோப்பை,அதற்குள்ளே பூக்கள், பறக்கின்ற

காட்சிப் பறவைகள், கோப்பையைச் சுற்றியே

பாடுகின்ற வண்ணத்துப் பூச்சிகள் மேலெழும்பும்!

ஆகா! அசையும் படம்.


மதுரை பாபாராஜ்

 

மருமகன் ராஜா,திண்டுக்கல் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மருமகன் ராஜா,திண்டுக்கல் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


பச்சை இலைகளின் பின்னணியில் வெண்ணிறப்பூ!

அற்புதமான காட்சியை ராஜா வணக்கமாக

நட்புடனே காலைநேரத்தில் தந்தார் மகிழ்ச்சியுடன்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா


 

தமிழின்றி வாழ்தல் நல்லதல்ல!


தமிழின்றி வாழ்தல் நல்லதல்ல!


அகரவரிசை


அருளின்றி வாழ்ந்தாலும் வாழலாம்

அன்பின்றி வாழ்தல் நல்லதல்ல!


ஆசையின்றி வாழ்ந்தாலும் வாழலாம்

ஆற்றலின்றி வாழ்தல் நல்லதல்ல!


இனிமையின்றி வாழ்ந்தாலும் வாழலாம்

இரக்கமின்றி வாழ்தல் நல்லதல்ல!


ஈரமின்றி வாழ்ந்தாலும் வாழலாம்

ஈகையின்றி வாழ்தல் நல்லதல்ல!


உயர்வின்றி வாழ்ந்தாலும் வாழலாம்

உண்மையின்றி வாழ்தல் நல்லதல்ல!


ஊனமின்றி வாழ்ந்தாலும் வாழலாம்

ஊக்கமின்றி வாழ்தல் நல்லதல்ல!


ஐவருடன் பழகாமல் வாழலாம்

ஐம்புலனைக் கட்டவிழ்த்தல் நல்லதல்ல!


ஒட்டாமல் வாழ்ந்தாலும் வாழலாம்

ஒழுக்கமின்றி வாழ்தல் நல்லதல்ல!


ஓதாமல் வாழ்ந்தாலும் வாழலாம்

ஓந்தியைப்போல் வாழ்தல் நல்லதல்ல!


ஔவியம் இன்றி வாழ்ந்தாலும் வாழலாம்

ஔவைத் தமிழின்றி வாழ்தல் நல்லதல்ல!


மதுரை பாபாராஜ்

 

திண்டுக்கல் ராஜா அனுப்பிய படத்திற்குக் கவிதை!


திண்டுக்கல் ராஜா அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வரிசையில் செல்வதே ஒழுங்கு!


அஞ்சு மஞ்சள் வாத்து

அஞ்சி நடக்கும் பாத்து

பஞ்சு போன்ற பாதத்தால்

மெதுவாய் நடக்கும் வாத்து!

வரிசை யாகப் போகுது

முண்டி நெருக்கிப் போகாது

மனிதன் மட்டும் ஏனோ

வரிசை கலைத்துப் போகிறான்?


மதுரை பாபாராஜ்

 

Sunday, August 22, 2021

நண்பர் சவுதிஅரேபியா கண்ணன் அனுப்பிய படத்திற்குக் கவிதை:


நண்பர் சவுதிஅரேபியா கண்ணன் அனுப்பிய படத்திற்குக் கவிதை:


புலர்காலை நேரம் நதிக்கரையில் பூக்கள்

அழகாகப் பூத்திருக்க காலை வணக்கம்

உளங்கவரத் தூதனுப்பி கண்ணனின் நட்பை

மலரவைத்தார் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியம்! தமிழாக்கம்.


நண்பர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியம்!

தமிழாக்கம்.

பலவற்றில் நீயோ முழுமையின்றி வாழ்வாய்!

பலசெயல்கள் நீயின்றி இங்கே முழுமை 

அடையாது! உந்தன் வழிகளில் வாழ்க!

சிறப்பினைத் தக்கவைத்துக் கொள்.


மதுரை பாபாராஜ்

 

இளமையும் முதுமையும்!


இளமையும் முதுமையும்!


கையோடு கைசேர்த்து துள்ளி இளமையில்

தையலும் நானுமே சென்றிருந்தோம்  ஆர்வமுடன்!

கையோடு கைசேர்த்து  இன்றோ முதுமையில் 

தையலும் நானும் துவண்டே நடந்துசென்றோம்!

இயலாமல் பார்த்தோம் சிரித்து.


மதுரை பாபாராஜ்


 

பகோடா மலர்!


 This is the "Pagoda Flower" or "Mahamaru", an auspicious flower unique to Tibet.  The pagoda flowers in the Himalayas bloom every 400 years.  Our generation is fortunate to see the pagoda blossoms.  Please share and let others see.  Good luck for the rest of your life!

பெரியவர் துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்!

பகோடா மலர்! இமயமலை திபெத் பகுதி

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும்!


வெள்ளை இளஞ்சிவப்பு வண்ணம் கலந்திருக்க

கொள்ளை அழகில் விளக்கு வடிவத்தில்

எல்லைப் பகுதி இமயமலை வட்டத்தில்

நானூறு ஆண்டுக்

கொருமுறை பூக்குமாம்!

காணக்கண் கோடிவேண்டும் என்றே மகிழ்கின்றார்!

ஈடில்லாப் பூக்களோ இப்போது பூத்துள்ள

கோலத்தைப் பாராய்க் களித்து.


மதுரை பாபாராஜ்


 

Saturday, August 21, 2021

பெரியவர் துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்


பெரியவர் துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்


வெள்ளை மலரனுப்பிக் காலை வணக்கத்தை

கொள்ளை அழகுடன் சொல்லி இருக்கின்றார்!

இவ்வுலகின் தேவை அமைதியென்றே வெண்ணிறம்

சொல்கிறது நாளும் நமக்கு.


மதுரை பாபாராஜ்

 

இருப்பதே மேல்!


இருப்பதே மேல்!


கையில் இருக்கும் களாக்காயைக் காட்டிலும்

கைகளுக்கே எட்டா மரத்தின் பலாக்காயை

ஆசையுடன் நாடும் மனது! மாந்தரே

ஆசையே பேராசை  யாய்மாறத் தூண்டிவிடும்!

ஏமாற வைக்கும் இழந்து.


மதுரை பாபாராஜ்


 

மருமகன் ரமேசுக்கு நன்றி.


மருமகன் ரமேசுக்கு நன்றி.

வாழ்க வளமுடன்! நித்தமும் வாழ்த்துகின்ற

வாழ்த்துகள் மாந்தரை வாழ்வாங்கு வாழவைக்கும்!

நேர்மறை எண்ணம் மனதில் அமைதியை

ஏற்படுத்தும் என்றே உணர்.


மதுரை பாபாராஜ்

 

Friday, August 20, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


தமிழாக்கம்


நமக்குக் குறிக்கோள் இருக்கவேண்டும்! நாமும்

இலக்கைக் குறிபார்க்க வேண்டுமிங்கே! வாழ்வில்

பலசெயல்கள் நம்மைச் சிதறடித்த போதும்

கவனம் சிதறாமல் வாழவழி

காட்டும்!

கவனமுடன் வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

Picture sent by Mr. Duraisamy Thiruvasagam,vizag


Picture sent by Mr. Duraisamy Thiruvasagam,vizag


Search not after Horizons!


Fluttering butterflies 

Inside the bottle

Try to come outside

To enjoy the Nature!

Butterflies outside the bottle

Try to go inside the bottle!

Yearning for something there!

They don't know

There is nothing!

Likewise humans are after vacuum

Ignoring the treasure of Nature!

What a pity!

Oh humans! Leave not what is available!

Search not after horizons!


Babaraj

 

நண்பர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியம்!

 

நண்பர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியம்!


தமிழாக்கம்.


தன்னுடைய துன்பம் எதுவாய் இருந்தாலும்

நெஞ்சுறுதி கொண்டோர் பிறர்க் குதவுகின்ற

நன்னெறியை விட்டே விலகாமல் வாழ்ந்திடுவார்!

பக்குவம் பண்பிற்குச் சான்று.


மதுரை பாபாராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரும் மகான் வெல்க!


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 

வெளிவரும் மகான் வெல்க!

பதினாறு கைகளைக் கொண்ட மகானோ

புதுமைக்குத் தெம்பூட்டி 

புத்தொளி வீசி

எடுப்பான தோற்றமுடன்

விக்ரம் நடிக்க

வருகிறது இங்கே விரைவில் ரசிக்க!

குழுவினரை வாழ்த்துவோம் நாம்.


மதுரை பாபாராஜ்

 

Labels:

Thursday, August 19, 2021

துடிக்கிறதே


 துடிக்கிறதே!

பிள்ளைப் பருவம் நடைதடு மாறினால்

சொல்லித் திருத்தலாம்! ஆனால் வளர்ந்துவிட்ட

பிள்ளை தடம்மாறிப் போனால் அறிவுரையால்

சொல்லித் திருத்த முயன்றும் மறுத்திடுவார்!

உள்ளம் உருகும் துடித்து.


மதுரை பாபாராஜ்

தமிழ்நெடுஞ்சாலை


 அன்புள்ளம் கொண்ட கவிஞர் பாலாவுக்கு வணக்கம்.


தமிழ்நெடுஞ்சாலை!


கற்பனைக்கு அப்பால்...காஷ்மீர் நினைவுகள்


கவிஞர் பாலாவுக்கு வாழ்த்து!

பாலாவை நாடிவந்து சொற்கள் அணிவகுக்கும்!

பாலா விரல்நுனியில் நானென்றும் நானென்றும்

தூதுவிட்டு முண்டி நெருக்கும் நிலையுணர்ந்தேன்!

கோதிவிட்டுத் தேர்ந்தெடுக்கும்  பாலாவை வாழ்த்துவோம்!

சாதனை நாயகரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்


பாலாவின் முத்திரை வரிகள்:

அந்த இரண்டு கிராமங்களும் மக்களாட்சி என்ற மகத்துவப் பெருமையின் புதிய உச்சம்.

ஒவ்வொரு மாநிலத் தேர்தலும் ஒவ்வொரு விதமான ஆடுகளம்.

மேற்கு வங்கம்: சடுகுடு ஆடிக்கொண்டே சதுரங்கம் ஆடுவதுபோல

காஷ்மீர்த்தேர்தல்: உருவகப்படுத்த முடியாத தோராயப் புதிர்.காய்கள் நகரும்;யார் நகர்த்துகிறார்கள் என்று தெரியாது.

ஜம்மு ஒருபுறமும் காஷ்மீர் ஒருபுறமும் களமிறங்கியது தீவிரவாதத்திற்குத் 

தீனி போட்டது.

தேர்தல் ஆணையத்தின் செங்கல் சுவர்களுக்கிடையே வேறொரு வியூகம். ஐந்தாம் ஆறு அல்ல 

காஷ்மீர் த்தேர்தல் , அது வேறு.

உண்மை வாய்மூடினால் வதந்திகள் மாநாடு நடத்தும்.

ஆட்சிப்பணி என்பது மாபெரும் அரசு இயந்திரத்தின் முக்கியமான ஓர் உதிரிபாகம்தான். அதன் இருப்பை நியாயப் படுத்துவது கோப்புகள் அல்ல; கூடுதல் மைல்கள்.


அருமை அருமை.

என்றும் நட்புடன்

மதுரை பாபாராஜ்


Tuesday, August 17, 2021

பெரியவர் துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்.


பெரியவர் துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்.


நாலுகால் வெள்ளை முயலே! சிலரிங்கே 

தான்பிடித்து வந்த முயலுக்கோ மூன்றுகால்

தானென்றே சொல்லும் பிடிவாதப் போக்கினை

யார்மாற்ற? ஊர்நகைக்கும் பார்.


மதுரை பாபாராஜ்

பாலாவின் கருத்து:

[8/18, 08:27] Vovbala: வெண்பா மீது உங்களுக்கு அவ்வளவு விருப்பம் ‌.

வெண்பாவிற்கு 

உங்கள் மீது...👏👏💐💐

பாலாவின் ஊக்கமே வேர்!

பாலாவின் வாழ்த்து தருகின்ற ஊக்கத்தால்

பாபாவின் பாமேகம் வெண்பா மழைபொழிய

காரணம் என்றுநான் சொல்லவும் வேண்டுமோ?

பாலாவின் ஊக்கமே வேர்.

மதுரை பாபாராஜ்