தப்ப முடியாது!
-----------------------
பொறுப்போ கடமையோ இங்கே எதையும்
ஒதுக்கி ஒதுங்க முடியாது! நாமோ
ஒதுங்கினால் வேறொரு சூழ்நிலை தோன்றும்!
பொறுப்பைச் சுமந்திருப்போம் அங்கு.
துணிந்து நில்!
------------------
வாழ்க்கையின் சிக்கல்கள் வேகத் தடையாகும்!
வாழ்க்கை தடையின்றி வேகமாகச் செல்லுமென்றால்
நாளும் விபத்து நடப்பது நிச்சயம்!
வாழ்க்கைத் தடைகளைத் தாண்டு.
மகிழ்ச்சி மகிழுந்தில்
இல்லை!
------------------------
பேருந்தில் சென்றோம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருந்தோம்!
நாளும் மகிழுந்தில் சென்றும் மகிழ்ச்சியின்றி
வாழ்க்கை நகர்கிறது! கோலமாற்றம் வந்தாலும்
வாழ்க்கையில் ஏமாற்றந் தான்.
முகநூல் நட்பு!
-----------------
கோப்பெருஞ் சோழன் பிசிராந்தை யாரது
வேட்கை தணியாத நட்பாய் முகநூலில்
ஏற்படும் நட்புதான் மாறிடுமோ? நண்பர்கள்
காட்சி கிடைக்காதோ? கூறு.
தேர்தல் கலை
கற்பது அரிது!
---------------------
ஆய கலைகள் அறுபத்து நான்கையும்
காலத்தே கற்பதோ எளிதம்மா---தேயத்தில்
தேர்தல் கலையின் எதிர்மறை நுட்பத்தைத்
தேர்ந்து தெளிதல் அரிது.
நகர வாழ்க்கை!
--------------------
பரபரப்பு மற்றும் படபடப்பை ஏந்திச்
சுழன்று நகரும் நகரத்து வாழ்க்கைக்
களத்தில் நெரிசல் உளைச்சல் மனதைக்
கலங்கவைத்துப் பார்க்கும் நிதம்.
மற்றவர் கருத்தை மதி
-----------------------------------------
மற்றவர்கள் தப்பென்றும் தான்தான் சரியென்றும்
அற்பத் தனமாய் நினைக்காமல் இவ்வுலகில்
மற்றவர்கள் சொல்லை மதிக்கும் மனமிருந்தால்
அற்புதந்தான் வாழ்க்கை உணர்.
உலகம் உள்ளங்கையில்
------------------------------------------
கணினித் துறையின் வியத்தகு மாற்றம்
மணித்துளிக் குள்ளே உலகம் அறியும்
பணிகளில் சாதனை செய்து தினமும்
நிமிர்ந்து நிற்கிறது காண்.
கேள்விக் குறி?
------------------
சொந்த உறவுகளைத் தொட்டுத் தொடர்ந்ததோ
சென்ற தலைமுறை!
கொஞ்சம் தொடர்வதோ
இந்தத் தலைமுறை!
ஆனால் அடுத்ததோ
தண்ணீரும் தாமரையுந் தான்.
கோழைத்தனம்!
--------------------
மதவாத சக்தி படமெடுத் தாடி
நடமாட விட்டுவிட்டால் நாசந்தான் நாடு!
கடவுள் பெயரால் வெறியாட்டம் எல்லாம்
கடைந்தெடுத்த கோழைத் தனம்.
விலங்கினும் கீழோர்!
-----------------------
மஞ்சள் தொடங்கி மழலையர் பால்வரை
எந்தப் பொருளில் கலப்படம் செய்யவில்லை?
அந்தக் கொடியவர்க் கெல்லாம் கடுமையான
தண்டனை நிச்சயம் உண்டு.
கேஜ்ரிவால் வாழ்க!
----------------------
நாட்டுக்குத் தேவை மதவாதம் இல்லையென்றே
வாக்களித்தார் கேஜ்ரிவால் கட்சிக்கே டில்லிமக்கள்!
ஆக்கபூர்வ மக்களாட்சி சிந்தனை வென்றது!
நாட்டில் மதவெறி கேடு.
முடிவு முடிவல்ல!
----------------------
எந்த முடிவையும் சிந்தித்(து) எடுக்கவேண்டும்!
அந்த முடிவைச் செயலாக்கிப் பார்க்கவேண்டும்!
கொஞ்சம் தவறெனினும் சொந்தபந்தம் பார்க்காமல்
கண்டித்து நிர்வகித்தல் நன்று.
அணுகுமுறையே வாழ்க்கை!
----------------------------
குறைகளே இல்லாத வாழ்க்கையே இல்லை!
குறைகளைப் பார்க்கும் நிலைகளை விட்டு
நிறைகளைப் பார்க்கும் கலைகளைக் கற்றால்
குறைகள் மறையும் உணர்.
பயமுறுத்தாதே!
-------------------------------------
பயமுறுத்தும் சூழ்நிலையில் நாள்தோறும் இங்கே
வளரும் குழந்தை மனஉளைச்சல் தாக்க
தளர்ச்சி அடைந்துத் தடம்மாறிப் போகும்!
வளர்ச்சி தடைபடும் பார்.
QUOTATION
------------------
"IF WEE SLEEP ON FLOWERS ITS CALLED
OUR FIRST NIGHT"
"IF FLOWERS SLEEP ON US, ITS CALLED
OUR LAST NIGHT"
REALITY OF LIFE.......
----------------------------------------------------------
பூக்களின் மீதிங்கே நாம்படுத்துத் தூங்கினால்
தூக்கம் முதலிரவுத் தூக்கமாம்-- பூக்களோ
நம்மீது தூங்கினால் அந்த இரவுதான்
நம்கடைசித் தூக்க இரவு.
இதுதான் நட்பு
-------------------
நீர்வற்றிப் போனால் பறவை பறந்துவிடும்!
வாழ்விலே இத்தகையோர் நட்பெல்லாம் நட்பல்ல!
நீர்வற்றிப் போனாலும் தாமரை சேர்ந்தழியும்!
வாழ்விலும் இத்தகையோர் நட்பொன்றே நட்பாகும்!
முடிவு முடிவல்ல!
-----------------------------------
எந்த முடிவையும் சிந்தித்(து) எடுக்கவேண்டும்!
அந்த முடிவைச் செயலாக்கிப் பார்க்கவேண்டும்!
கொஞ்சம் தவறெனினும் சொந்தபந்தம் பார்க்காமல்
கண்டித்து நிர்வகித்தல் நன்று.
பயமுறுத்தாதே!
-------------------------------------
பயமுறுத்தும் சூழ்நிலையில் நாள்தோறும் இங்கே
வளரும் குழந்தை மனஉளைச்சல் தாக்க
தளர்ச்சி அடைந்துத் தடம்மாறிப் போகும்!
வளர்ச்சி தடைபடும் பார்.
மழைபோல் பெரியோர்
------------------------------------------
எந்த எதிர்பார்ப்பும் இன்றித்தான் வான்மழை
இங்கே கடமையைச் செய்தே உயிரினத்தைத்
தங்குதடை இல்லாமல் காப்பதுபோல் வாழ்விலே
என்றும் பெரியவர்கள் தங்கள் கடமைகளை
முன்வந்தே செய்திருப்பார்! பார்.