Friday, July 31, 2020
சிறகிருந்தும் இயக்கமில்லை!
உறவிருந்தும் நட்பிருந்தும் யாரும் உதவும்
சிறகிருந்தும் ஏனோ இயங்கத் தயக்கம்?
முடக்கிய கோலம் கொரோனாவின் தாக்கம்!
நடைமுறை வாழ்க்கைதான் இன்று.
என்னதான் முன்னபின்ன வாழ்ந்தாலும் ஒன்றாக
கண்ணெதிரே வாழ்வதைக் கண்டு மகிழ்ந்திருந்தோம்!
என்னதான் கைபேசி காணொளி பேசினாலும்
முன்னின்று பேசுதல்போல் ஆகுமா? காலத்தின்
எண்ணத்தை மாற்றுவது யார்?
மதுரை பாபாராஜ்
31.07.20
உறவிருந்தும் நட்பிருந்தும் யாரும் உதவும்
சிறகிருந்தும் ஏனோ இயங்கத் தயக்கம்?
முடக்கிய கோலம் கொரோனாவின் தாக்கம்!
நடைமுறை வாழ்க்கைதான் இன்று.
என்னதான் முன்னபின்ன வாழ்ந்தாலும் ஒன்றாக
கண்ணெதிரே வாழ்வதைக் கண்டு மகிழ்ந்திருந்தோம்!
என்னதான் கைபேசி காணொளி பேசினாலும்
முன்னின்று பேசுதல்போல் ஆகுமா? காலத்தின்
எண்ணத்தை மாற்றுவது யார்?
மதுரை பாபாராஜ்
31.07.20
Thursday, July 30, 2020
நேர்வழி நிம்மதி!
குறைந்த வருமானம் நேர்வழியில் என்றால்
முறையான வாழ்க்கையில் நிம்மதி உண்டு!
நிறைந்த வருமானம் நேர்வழியில் இல்லை!
கறைபடிந்த வாழ்க்கையோ முள்.
மதுரை பாபாராஜ்
குறைந்த வருமானம் நேர்வழியில் என்றால்
முறையான வாழ்க்கையில் நிம்மதி உண்டு!
நிறைந்த வருமானம் நேர்வழியில் இல்லை!
கறைபடிந்த வாழ்க்கையோ முள்.
மதுரை பாபாராஜ்
நீதி!
உனக்கொரு நீதி! எனக்கொரு நீதி!
மனமே உறுத்தும்! உளைச்சலைத் தூண்டும்!
மனசாட்சி ஏற்க நடுநிலை ஏற்றால்
அனைவருக்கும் நிம்மதி தான்.
மதுரை பாபாராஜ்
உனக்கொரு நீதி! எனக்கொரு நீதி!
மனமே உறுத்தும்! உளைச்சலைத் தூண்டும்!
மனசாட்சி ஏற்க நடுநிலை ஏற்றால்
அனைவருக்கும் நிம்மதி தான்.
மதுரை பாபாராஜ்
நல்லாசிரியர் உயர்திரு.ராமு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து
அகவை 74
30.07.20
ஆயிங் குடியிலே கல்வி ஒளிதந்த
ஆசானாம் ராமு பிறந்தநாள் இன்றாகும்!
ஆர்வம் கடமை உணர்வுடன் கல்வியை
நாளும் புகட்டினார் வாழ்த்து.
மின்விளக்கே இல்லா நிலையிலும் மாணவர்கள்
நன்முறையில் கற்பதற்குத் தூண்டித் துலங்கவைத்த
பண்பாளர் ராமுவைப் போற்றி வணங்குகிறோம்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.
இந்திய நாட்டின் குடிய ரசுத்தலைவர்
அன்புக் கரங்களால் நல்லா சிரியரெனும்
பண்பு விருதைப் பெருமையுடன் பெற்றவர்!
தண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்
O. குமரப்பன்
அகவை 74
30.07.20
ஆயிங் குடியிலே கல்வி ஒளிதந்த
ஆசானாம் ராமு பிறந்தநாள் இன்றாகும்!
ஆர்வம் கடமை உணர்வுடன் கல்வியை
நாளும் புகட்டினார் வாழ்த்து.
மின்விளக்கே இல்லா நிலையிலும் மாணவர்கள்
நன்முறையில் கற்பதற்குத் தூண்டித் துலங்கவைத்த
பண்பாளர் ராமுவைப் போற்றி வணங்குகிறோம்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.
இந்திய நாட்டின் குடிய ரசுத்தலைவர்
அன்புக் கரங்களால் நல்லா சிரியரெனும்
பண்பு விருதைப் பெருமையுடன் பெற்றவர்!
தண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்
O. குமரப்பன்
Wednesday, July 29, 2020
Tuesday, July 28, 2020
அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?
வீட்டில் இருந்தே பணிசெய்வோம்!மாணவர்கள்
வீட்டில் இருந்தே படித்திடுவோம்! மக்களோ
வீட்டில் இருந்துகொண்டே நாளும் பொருள்களை
நாட்டில் அலையாமல் வாங்கி மகிழ்ந்திருப்போம்
கூட்டில் அடைத்த பறவைகளாய் மாறிவிட்டோம்!
நாட்டில் இணைய வழியே அனைத்துமாச்சு!
பார்ப்போமா அப்பழைய வாழ்வு?
மதுரை பாபாராஜ்
வீட்டில் இருந்தே பணிசெய்வோம்!மாணவர்கள்
வீட்டில் இருந்தே படித்திடுவோம்! மக்களோ
வீட்டில் இருந்துகொண்டே நாளும் பொருள்களை
நாட்டில் அலையாமல் வாங்கி மகிழ்ந்திருப்போம்
கூட்டில் அடைத்த பறவைகளாய் மாறிவிட்டோம்!
நாட்டில் இணைய வழியே அனைத்துமாச்சு!
பார்ப்போமா அப்பழைய வாழ்வு?
மதுரை பாபாராஜ்
Monday, July 27, 2020
பேரன் நிக்கிலுக்கு வாழ்த்து
பேரன் நிக்கிலுக்கு வாழ்த்து.
தமிழில் முதல்மதிப்பெண் பெற்றதற்கு வாழ்த்து!
கனிந்திருக்கும் வெற்றி தொடர்கதை யாகி
அனைத்திலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று
மனமகிழ்ச்சி கொண்டுவாழ்க நீடு.
புத்துணர்ச்சி ஆர்வம் இவையிரண்டும் கல்வியைக்
கற்பதற்கு ஊக்கம் அளிக்கும் சிறகுகளாம்!
அற்புத ஆற்றலுடன் வாழ்வாங்கு வாழியவே!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
பாபா தாத்தா
வசந்தா அவ்வா
தமிழில் முதல்மதிப்பெண் பெற்றதற்கு வாழ்த்து!
கனிந்திருக்கும் வெற்றி தொடர்கதை யாகி
அனைத்திலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று
மனமகிழ்ச்சி கொண்டுவாழ்க நீடு.
புத்துணர்ச்சி ஆர்வம் இவையிரண்டும் கல்வியைக்
கற்பதற்கு ஊக்கம் அளிக்கும் சிறகுகளாம்!
அற்புத ஆற்றலுடன் வாழ்வாங்கு வாழியவே!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
பாபா தாத்தா
வசந்தா அவ்வா
Sunday, July 26, 2020
இணைநாரைக்கு இல்லை இணை!
கடல்வற்றி மீன்பிடிக்க நின்றதாம் நாரை!
கடலுக்குள் மூழ்கி நனைந்தேதான் மீனைப்
பிடித்தேதான் நாரைக்குத் தந்துவிட்டு நின்ற
இணைநாரை கண்டு மகிழ்ந்ததாம் அங்கு!
இணைக்( கு) இணையுண்டோ சொல்.
மதுரை பாபாராஜ்
கடல்வற்றி மீன்பிடிக்க நின்றதாம் நாரை!
கடலுக்குள் மூழ்கி நனைந்தேதான் மீனைப்
பிடித்தேதான் நாரைக்குத் தந்துவிட்டு நின்ற
இணைநாரை கண்டு மகிழ்ந்ததாம் அங்கு!
இணைக்( கு) இணையுண்டோ சொல்.
மதுரை பாபாராஜ்
மாடுகூட இந்த மழலையைக் கொஞ்சிடும்!
ஓடியாடித் தொட்டு விளையாண்டால் பார்த்திருக்கும்!
ஏறி மிதித்தும் சகிக்கும் பொறுமையுடன்!
ஈடில்லா காட்சி இது.
மதுரை பாபாராஜ்
Saturday, July 25, 2020
YOU ARE INSPIRATION DR.RAJU
ஒற்றின்றி கவிதை முயற்சி!
கவியே தமிழே அமுதே தருவே
புவியே புகழ மனமே உருக
அகமே குளிர அருவி யெனவே
தடையை உடைநீ பொழி!
மதுரை பாபாராஜ்
Friday, July 24, 2020
பாலாவின் சங்கச் சுரங்கத்திற்கு வாழ்த்து!
முதல்பத்து கலந்துரையாடல்
24.07.20- நிகழ்வு 31.07.20
சங்கச் சுரங்கம் முதல்பத்து வெள்ளிகள்
தங்கமாய் வைரமாய் வைடூ ரியங்களாய்
சங்க இலக்கியக் காட்சி ஒளிர்ந்திருக்க
நெஞ்சில் நிலைக்கின்ற வண்ணம் பயணத்தில்
மெய்மறந்து சென்றிருந்தோம்! எல்லாம் விறுவிறுப்பாய்த்
தொய்வின்றி அள்ளிவைத்த பாலாவை வாழ்த்துவோம்!
வெள்ளிதோறும் கேட்போம் விழைந்து.
மதுரை பாபாராஜ்
முதல்பத்து கலந்துரையாடல்
24.07.20- நிகழ்வு 31.07.20
சங்கச் சுரங்கம் முதல்பத்து வெள்ளிகள்
தங்கமாய் வைரமாய் வைடூ ரியங்களாய்
சங்க இலக்கியக் காட்சி ஒளிர்ந்திருக்க
நெஞ்சில் நிலைக்கின்ற வண்ணம் பயணத்தில்
மெய்மறந்து சென்றிருந்தோம்! எல்லாம் விறுவிறுப்பாய்த்
தொய்வின்றி அள்ளிவைத்த பாலாவை வாழ்த்துவோம்!
வெள்ளிதோறும் கேட்போம் விழைந்து.
மதுரை பாபாராஜ்
இலக்கியக்காட்சி
முத்தொள்ளாயிரம்
சோழன் | கிள்ளி
பாடல் 32
நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற – யாமத்
திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் நெஞ்சு. – 32
கவிதை:
கிள்ளியின் தோள்களைக் காண்பதற்குக் கண்களோ
கிள்ளித் துடிக்கவைக்க நாணமோ பின்னிழுக்க
கொள்ளை அழகனை வேட்கையோ பாரென்று
தள்ளுதே முன்னரே! வேந்தனுலா சென்றுவிட்டான்!
உள்ளம் இரவெல்லாம் பார்த்திருக்க லாமென்றே
சொல்லியது! நாணமோ பார்க்காமல் வந்ததே
நல்லதென்று கூறிட போராட்டம் ஓய்ந்தேதான்
மெல்லியலாள் தூங்கினேன் சோர்ந்து.
மதுரை பாபாராஜ்
முத்தொள்ளாயிரம்
சோழன் | கிள்ளி
பாடல் 32
நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற – யாமத்
திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் நெஞ்சு. – 32
கவிதை:
கிள்ளியின் தோள்களைக் காண்பதற்குக் கண்களோ
கிள்ளித் துடிக்கவைக்க நாணமோ பின்னிழுக்க
கொள்ளை அழகனை வேட்கையோ பாரென்று
தள்ளுதே முன்னரே! வேந்தனுலா சென்றுவிட்டான்!
உள்ளம் இரவெல்லாம் பார்த்திருக்க லாமென்றே
சொல்லியது! நாணமோ பார்க்காமல் வந்ததே
நல்லதென்று கூறிட போராட்டம் ஓய்ந்தேதான்
மெல்லியலாள் தூங்கினேன் சோர்ந்து.
மதுரை பாபாராஜ்
Thursday, July 23, 2020
மகள் திருமதி ரம்யா நாராயணன் மும்பையிலிருந்து
எண்ணங் கவரும் எழில்மிகுந்த சோலையுலா!
வண்ண மலரினங்கள் பூத்துச் சிரித்திருக்க
வண்ணப் பறவைகள் இன்னிசையைத் தென்றலேந்த
வந்த வணக்கத்தை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
Wednesday, July 22, 2020
நம்பு!
இன்று நடக்கவில்லை என்றே புலம்பாதே!
நன்றாய் நடந்ததே நேற்றுவரை என்றெண்ணி
என்றுமே நன்றாய் நடக்குமென்றே எண்ணினால்
நன்றாய் நடக்கும் உணர்.
மதுரை பாபாராஜ்
இன்று நடக்கவில்லை என்றே புலம்பாதே!
நன்றாய் நடந்ததே நேற்றுவரை என்றெண்ணி
என்றுமே நன்றாய் நடக்குமென்றே எண்ணினால்
நன்றாய் நடக்கும் உணர்.
மதுரை பாபாராஜ்
Tuesday, July 21, 2020
சித்தப்பா தினைவேந்தல்
சித்தப்பா அழகர்சாமி அவர்களின் நினைவு நாள் கவிதை!
20.07.20
எங்கள் குடும்பத்தின் இன்பத்தில் துன்பத்தில்
பங்கெடுத்தே ஆர்வமுடன் நல்ல அறிவுரைகள்
தந்தவர் ! எல்லோ ரிடத்திலும் அன்பாக
பண்புடன் பேசியவர் தான்.
உலக வரலாற்றுச் செய்திகள் எல்லாம்
நினைவாற்றல் கொண்டேதான் சொல்லி விளக்கி
அனைவரையும் நாளும் கவர்ந்தவர் என்றால்
மிகையில்லை உண்மைதான் பார்.
துல்லியமாய்ச் சோதிடம் பார்க்கின்ற ஆற்றலில்
வல்லவர்! வாழ்க்கையில் சோர்ந்துபோய்ப் பார்த்தால்
சொல்கின்ற ஆக்கபூர்வ ஊக்கமிகு சொற்களால்
துள்ளி வருவார் நிமிர்ந்து.
தனக்கென வாழ்வில் தனிவழி கண்டே
முனைப்புடன் நாளும் உழைத்தேதான் வாழ்ந்து
நினைவிலே என்றென்றும் நிற்கின்றார் சித்தப்பா !
வணங்குகிறேன் ஆசிகள் கேட்டு.
மதுரை பாபாராஜ்
20.07.20
எங்கள் குடும்பத்தின் இன்பத்தில் துன்பத்தில்
பங்கெடுத்தே ஆர்வமுடன் நல்ல அறிவுரைகள்
தந்தவர் ! எல்லோ ரிடத்திலும் அன்பாக
பண்புடன் பேசியவர் தான்.
உலக வரலாற்றுச் செய்திகள் எல்லாம்
நினைவாற்றல் கொண்டேதான் சொல்லி விளக்கி
அனைவரையும் நாளும் கவர்ந்தவர் என்றால்
மிகையில்லை உண்மைதான் பார்.
துல்லியமாய்ச் சோதிடம் பார்க்கின்ற ஆற்றலில்
வல்லவர்! வாழ்க்கையில் சோர்ந்துபோய்ப் பார்த்தால்
சொல்கின்ற ஆக்கபூர்வ ஊக்கமிகு சொற்களால்
துள்ளி வருவார் நிமிர்ந்து.
தனக்கென வாழ்வில் தனிவழி கண்டே
முனைப்புடன் நாளும் உழைத்தேதான் வாழ்ந்து
நினைவிலே என்றென்றும் நிற்கின்றார் சித்தப்பா !
வணங்குகிறேன் ஆசிகள் கேட்டு.
மதுரை பாபாராஜ்
GSN PAUL இயற்கை எய்தினார்!
அஞ்சலிக்கவிதை!
21.07.20
பென்னர் தொழிற்சாலை ஆற்ற லுடனியங்க
தன்நிக ரில்லா உழைப்பை வழங்கியவர்!
அக்கால பென்னரின் மூச்சாய்த் திகழ்ந்தவர்!
வெற்றியின் சாதனைக்கு வித்து.
எளிமையும் நேர்மையும் ஆணவ மற்ற
தனிமனிதப் பண்பும் ஒழுக்கமும கொண்டு
தெளிவாக வாழ்ந்தவர் பால்ஆவார்! போற்று!
கனிவான பண்பாளர் பால்.
கடமையில் கண்ணுங் கருத்துமாய் ஒன்றி
அடலேறாய்த் தன்பொறுப்பை நாள்தோறும் ஏற்றே
அடக்கமுடன் பன்முக ஆற்றலைக் காட்டி
உயர்ந்தவர்
புகழுடன் வாழ்க நிலைத்து.
மதுரை பாபாராஜ்
அஞ்சலிக்கவிதை!
21.07.20
பென்னர் தொழிற்சாலை ஆற்ற லுடனியங்க
தன்நிக ரில்லா உழைப்பை வழங்கியவர்!
அக்கால பென்னரின் மூச்சாய்த் திகழ்ந்தவர்!
வெற்றியின் சாதனைக்கு வித்து.
எளிமையும் நேர்மையும் ஆணவ மற்ற
தனிமனிதப் பண்பும் ஒழுக்கமும கொண்டு
தெளிவாக வாழ்ந்தவர் பால்ஆவார்! போற்று!
கனிவான பண்பாளர் பால்.
கடமையில் கண்ணுங் கருத்துமாய் ஒன்றி
அடலேறாய்த் தன்பொறுப்பை நாள்தோறும் ஏற்றே
அடக்கமுடன் பன்முக ஆற்றலைக் காட்டி
உயர்ந்தவர்
புகழுடன் வாழ்க நிலைத்து.
மதுரை பாபாராஜ்
எது குற்றம்
எது குற்றம்?
வீடெங்கே வாசலெங்கே
கூடெங்கே குடிசையெங்கே
தேடிவச்ச செல்வமெங்கே
தேக்கிவச்ச கனவெங்கே
ஊரெங்கே உறவெங்கே
பெற்றெடுத்த பிள்ளையெங்கே
ஒண்ணோட ஒண்ணாக
கண்ணொடு கண்ணாக
காலமெல்லாம் வாழ்ந்திருந்தோம்
கால்கடுக்க நடக்குறோமே
இந்தநிலை வருமுன்னு
எந்தநாளும் நெனக்கலயே
நொந்து போன வாழ்க்கையிலே
கிழிந்துவிட்ட துணியானோம்
வந்துபோகும் விருந்துக்கு
வாய்ருசியா விருந்துபோட்டோம்
சென்றவரை வழியனுப்பி
வந்தவரை வரவேற்றோம்
அப்படித்தான் வாழ்ந்தநாங்கள்
இப்படித்தான் ஆகுமென்றே
கனவுலயும் நெனக்கலேயே
கலஞ்சுபோக நெனக்கலேயே
ஒருவேளை உணவுக்கு
வேன்வருமா என்றேங்கி
வந்தவுடன் ஓடுகின்றோம்
ஒருகவளச் சோறுக்கு
யாருக்கு என்னசெஞ்சோம்
எல்லோரை அரவணச்சோம்
எங்களுக்கு இந்தநிலை
தந்ததுதான் யாரிங்கே
மனுசாள பெறந்ததுதான் குற்றமா
மானத்தோட வாழ்ந்ததுதான் குற்றமா
உரிமைகள் கேட்டதுதான் குற்றமா
எதுகுற்றம் என்னகுற்றம் சொல்லுங்கள்
மதுரை பாபாராஜ்
வீடெங்கே வாசலெங்கே
கூடெங்கே குடிசையெங்கே
தேடிவச்ச செல்வமெங்கே
தேக்கிவச்ச கனவெங்கே
ஊரெங்கே உறவெங்கே
பெற்றெடுத்த பிள்ளையெங்கே
ஒண்ணோட ஒண்ணாக
கண்ணொடு கண்ணாக
காலமெல்லாம் வாழ்ந்திருந்தோம்
கால்கடுக்க நடக்குறோமே
இந்தநிலை வருமுன்னு
எந்தநாளும் நெனக்கலயே
நொந்து போன வாழ்க்கையிலே
கிழிந்துவிட்ட துணியானோம்
வந்துபோகும் விருந்துக்கு
வாய்ருசியா விருந்துபோட்டோம்
சென்றவரை வழியனுப்பி
வந்தவரை வரவேற்றோம்
அப்படித்தான் வாழ்ந்தநாங்கள்
இப்படித்தான் ஆகுமென்றே
கனவுலயும் நெனக்கலேயே
கலஞ்சுபோக நெனக்கலேயே
ஒருவேளை உணவுக்கு
வேன்வருமா என்றேங்கி
வந்தவுடன் ஓடுகின்றோம்
ஒருகவளச் சோறுக்கு
யாருக்கு என்னசெஞ்சோம்
எல்லோரை அரவணச்சோம்
எங்களுக்கு இந்தநிலை
தந்ததுதான் யாரிங்கே
மனுசாள பெறந்ததுதான் குற்றமா
மானத்தோட வாழ்ந்ததுதான் குற்றமா
உரிமைகள் கேட்டதுதான் குற்றமா
எதுகுற்றம் என்னகுற்றம் சொல்லுங்கள்
மதுரை பாபாராஜ்
அகதிகளின் அவலநிலை!
அமைதியாக வாழ்ந்திருந்த சூழ்நிலைகள் எல்லாம்
அமளியாக மாறித்தான் போச்சு
உற்றாரும் உறவினரும்
பிரிஞ்சு போன
கோலமே உருவாச்சு
சொந்த நாட்டில் வீடில்லை
உறவில்லை உரிமையில்லை
காப்பாற்ற யாருமில்லை
எந்த நாடு நோக்கித்தான்
இவ்வுலகில் போவது
எத்தனை நாளிங்கே
போராடி சாவது
போகின்றோம் போகின்றோம்
நடந்தேதான் போகின்றோம்
எந்தநாடு வரவேற்கும்
எந்தநாடு புறக்கணிக்கும்
சொந்தநாடு விரட்டுதே
அந்தநாடு மிரட்டுதே
போட்டது போட்டபடி
கெளம்பிட்டோம் விதியநம்பி
குழந்தைகள் பசியடக்கவா
பெரியவர்கள் விழிதுடைக்கவா
நிழலிங்கே பகையாச்சு
நிம்மதியே போயாச்சு
போகின்றோம் போகின்றோம்
அகதிகளாய்
நாடுவிட்டு நாடுபோறோம்
நிர்க்கதியாய்
விமானத்தைப் பார்த்து
மகிழ்கின்ற குழந்தைகள்
விமானத்தைப் பார்த்தாலே
பயந்தோடிப் போகிறதே
கூட்டமாகப் போகின்றோம்
கூடிழந்து போகின்றோம்
வாட்டமாகப் போகின்றோம்
வாழ்விழந்து போகின்றோம்
மதுரை பாபாராஜ்
Kardirector: Nice baba naina ... When u wrote this
Madurai Babaraj: Just now
[7/21, 12:54 PM] Madurai Babaraj: Your inspiration
[7/21, 12:54 PM] Kardirector: Great... 🙏
அமைதியாக வாழ்ந்திருந்த சூழ்நிலைகள் எல்லாம்
அமளியாக மாறித்தான் போச்சு
உற்றாரும் உறவினரும்
பிரிஞ்சு போன
கோலமே உருவாச்சு
சொந்த நாட்டில் வீடில்லை
உறவில்லை உரிமையில்லை
காப்பாற்ற யாருமில்லை
எந்த நாடு நோக்கித்தான்
இவ்வுலகில் போவது
எத்தனை நாளிங்கே
போராடி சாவது
போகின்றோம் போகின்றோம்
நடந்தேதான் போகின்றோம்
எந்தநாடு வரவேற்கும்
எந்தநாடு புறக்கணிக்கும்
சொந்தநாடு விரட்டுதே
அந்தநாடு மிரட்டுதே
போட்டது போட்டபடி
கெளம்பிட்டோம் விதியநம்பி
குழந்தைகள் பசியடக்கவா
பெரியவர்கள் விழிதுடைக்கவா
நிழலிங்கே பகையாச்சு
நிம்மதியே போயாச்சு
போகின்றோம் போகின்றோம்
அகதிகளாய்
நாடுவிட்டு நாடுபோறோம்
நிர்க்கதியாய்
விமானத்தைப் பார்த்து
மகிழ்கின்ற குழந்தைகள்
விமானத்தைப் பார்த்தாலே
பயந்தோடிப் போகிறதே
கூட்டமாகப் போகின்றோம்
கூடிழந்து போகின்றோம்
வாட்டமாகப் போகின்றோம்
வாழ்விழந்து போகின்றோம்
மதுரை பாபாராஜ்
Kardirector: Nice baba naina ... When u wrote this
Madurai Babaraj: Just now
[7/21, 12:54 PM] Madurai Babaraj: Your inspiration
[7/21, 12:54 PM] Kardirector: Great... 🙏
Monday, July 20, 2020
பூங்கா போன்றதே வாழ்க்கை!
பூங்காவில் எண்ணற்ற வண்ணவண்ணப் பூவினங்கள்
காலைப் பொழுதில் மலர்ந்தே மணம்பரப்பும்!
ஆங்காங்கே ஓங்கி உயர்ந்த மரங்களில்
தேனிசை மீட்டும் பறவைகள் நின்றிருக்கும்!
மாலைப் பொழுதில். மலரினங்கள் வாடிநிற்கும்!
கூடுநோக்கிப் போகும் பறவை பறந்தேதான்!
கோலங்கள் மாறும் உணர்.
மழைபெய்தால் எல்லாம் நனையும்! வெய்யில்
அனல்பெய்தால் காய்ந்தே சருகாகும்!
எல்லாம்
புனல்தேடிப் புத்துணர்ச்சி காண்பதற்கே ஏங்கும்!
சுணங்கும் தழைக்கும் நிலை.
புயலடித்தால் சாயும் மரங்கள்! செடிகள்!
புயல்வெள்ளம் சூழ்ந்தால் நீரில் மூழ்கும்!
புயலடித்தே ஓய்ந்தால் மீண்டும் நிமிரும்!
கலக்கம் விலகும் தெளிந்து.
வசந்தகாலம் என்றால் மகிழ்ச்சிதான் எங்கும்!
இலையுதிர் காலமா கீழே உதிர்ந்த
இலைகள் சலசலக்கும்! காணும் மரங்கள்
இலையின்றி காட்சி தரும்.
குழந்தைகள் வந்து விளையாடும் நேரம்
குழந்தையாய் நாமங்கே மாறி மகிழ்வோம்!
குழந்தை அடம்பிடிக்கும் கண்டிப்போம் ஆனால்
குழந்தைகள் வெற்றிகாணும் பார்.
ஆண்டு முழுவதிலும் மாறிமாறி ஏற்கின்ற
கோலங்கள் எல்லாம் சுழற்சி முறையில்தான்!
வாழ்க்கையும் பூங்காபோல் கோலங்கள் மாறிமாறிப்
பார்க்கவைத்தே பாடம் புகட்டிநிற்கும் நாள்தோறும்!
நாமோ நகர்கின்ற காய்.
மதுரை பாபாராஜ்
பூங்காவில் எண்ணற்ற வண்ணவண்ணப் பூவினங்கள்
காலைப் பொழுதில் மலர்ந்தே மணம்பரப்பும்!
ஆங்காங்கே ஓங்கி உயர்ந்த மரங்களில்
தேனிசை மீட்டும் பறவைகள் நின்றிருக்கும்!
மாலைப் பொழுதில். மலரினங்கள் வாடிநிற்கும்!
கூடுநோக்கிப் போகும் பறவை பறந்தேதான்!
கோலங்கள் மாறும் உணர்.
மழைபெய்தால் எல்லாம் நனையும்! வெய்யில்
அனல்பெய்தால் காய்ந்தே சருகாகும்!
எல்லாம்
புனல்தேடிப் புத்துணர்ச்சி காண்பதற்கே ஏங்கும்!
சுணங்கும் தழைக்கும் நிலை.
புயலடித்தால் சாயும் மரங்கள்! செடிகள்!
புயல்வெள்ளம் சூழ்ந்தால் நீரில் மூழ்கும்!
புயலடித்தே ஓய்ந்தால் மீண்டும் நிமிரும்!
கலக்கம் விலகும் தெளிந்து.
வசந்தகாலம் என்றால் மகிழ்ச்சிதான் எங்கும்!
இலையுதிர் காலமா கீழே உதிர்ந்த
இலைகள் சலசலக்கும்! காணும் மரங்கள்
இலையின்றி காட்சி தரும்.
குழந்தைகள் வந்து விளையாடும் நேரம்
குழந்தையாய் நாமங்கே மாறி மகிழ்வோம்!
குழந்தை அடம்பிடிக்கும் கண்டிப்போம் ஆனால்
குழந்தைகள் வெற்றிகாணும் பார்.
ஆண்டு முழுவதிலும் மாறிமாறி ஏற்கின்ற
கோலங்கள் எல்லாம் சுழற்சி முறையில்தான்!
வாழ்க்கையும் பூங்காபோல் கோலங்கள் மாறிமாறிப்
பார்க்கவைத்தே பாடம் புகட்டிநிற்கும் நாள்தோறும்!
நாமோ நகர்கின்ற காய்.
மதுரை பாபாராஜ்
நூறுபாக்கள் படைத்த பாவலர் பையூர் கோபாலகிருஷ்ணன் நூறாண்டு வாழ்க!
நூறு பாடல்கள் கோடியாகட்டும்!
ஆர்வம் சிறகசைக்க வாய்ப்பைப் பயன்படுத்தி
நேர்த்தியாய் நூறுபாக்கள் பையூரார் தந்துவிட்டார்!
ஆழ்மனச் சிந்தனையை நாளும் கவிதையில்
ஊற்றெடுக்கக் காணொளியாய் கண்முன் படைக்கின்றார்!
நூற்றுக் கணக்கிங்கே ஆயிரம் கோடியாக
பாவலர் வாழ்கநூ றாண்டு.
மதுரை பாபாராஜ்
நூறு பாடல்கள் கோடியாகட்டும்!
ஆர்வம் சிறகசைக்க வாய்ப்பைப் பயன்படுத்தி
நேர்த்தியாய் நூறுபாக்கள் பையூரார் தந்துவிட்டார்!
ஆழ்மனச் சிந்தனையை நாளும் கவிதையில்
ஊற்றெடுக்கக் காணொளியாய் கண்முன் படைக்கின்றார்!
நூற்றுக் கணக்கிங்கே ஆயிரம் கோடியாக
பாவலர் வாழ்கநூ றாண்டு.
மதுரை பாபாராஜ்
Sunday, July 19, 2020
மூளை/ சிகை எடை!
தலைக்குள்ளே மூளை எடையளவு கண்ணே
கிலோக்கணக்கில் ஒன்றரையாம் பார்த்தேன்! படித்தேன்!
சிகைதிருத்தம் இன்றி தலைக்கு வெளியே
சிகையெடையோ மூன்று கிலோவிருக்கும் போல!
கொரோனா கொடுமை! கடைகளோ இல்லை!
அகத்திற் கழகே அறிவு! நமது
முகத்திற் கழகே சிகை.
மதுரை பாபாராஜ்
தலைக்குள்ளே மூளை எடையளவு கண்ணே
கிலோக்கணக்கில் ஒன்றரையாம் பார்த்தேன்! படித்தேன்!
சிகைதிருத்தம் இன்றி தலைக்கு வெளியே
சிகையெடையோ மூன்று கிலோவிருக்கும் போல!
கொரோனா கொடுமை! கடைகளோ இல்லை!
அகத்திற் கழகே அறிவு! நமது
முகத்திற் கழகே சிகை.
மதுரை பாபாராஜ்
நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
அனைவருக்கும் வணக்கம்.
பறவைக் கூடும் மனிதர் வீடும்!
வண்ணப் பறவையே! சுற்றித் திரிகின்றாய்
எங்கெங்கோ செல்கின்றாய்!மாலையிலே கூடுநோக்கித்
தங்க வருகின்றாய்!
இங்கே மனிதர்கள் காலையில் சென்றிடுவார்!
எங்கெங்கோ சென்று பணிமுடித்தே வீடுநோக்கி
வந்திடுவார் மாலை, இரவினிலே!
உன்வாழ்வும்
எங்களது வாழ்க்கையும் ஒன்று.
மதுரை பாபாராஜ்
அனைவருக்கும் வணக்கம்.
பறவைக் கூடும் மனிதர் வீடும்!
வண்ணப் பறவையே! சுற்றித் திரிகின்றாய்
எங்கெங்கோ செல்கின்றாய்!மாலையிலே கூடுநோக்கித்
தங்க வருகின்றாய்!
இங்கே மனிதர்கள் காலையில் சென்றிடுவார்!
எங்கெங்கோ சென்று பணிமுடித்தே வீடுநோக்கி
வந்திடுவார் மாலை, இரவினிலே!
உன்வாழ்வும்
எங்களது வாழ்க்கையும் ஒன்று.
மதுரை பாபாராஜ்
நதிபோல் கொரோனா!
அமைதியாக ஓடும் நதிபோலத் தோன்றும்!
இமைக்கும் பொழுதில் எழுந்தேதான் சீறும்!
கரைதாண்டி வெள்ளம் மனைக்குள்ளே பாயும்!
நினைத்துச் சமாளிக்கும் முன்பே கலக்கம்
வளைக்கும் நிலைமை தலைகீழாய் மாறும்!
நிலைகுலைவார் மக்கள் அழுது.
உலகே அமைதியாய் வாழ்ந்தபோது இந்தக்
கொரோனா பரவிய வேகத்தில் மக்கள்
பரபரப்பை எல்லாம் முடக்கி முடங்கும்
ஒருநிலையை உண்டாக்கி இந்த உலகே
கரம்பிசைய வைத்துத் திகைத்திட வைத்துப்
பலரைப் பலிகொண்ட தே.
மதுரை பாபாராஜ்
அமைதியாக ஓடும் நதிபோலத் தோன்றும்!
இமைக்கும் பொழுதில் எழுந்தேதான் சீறும்!
கரைதாண்டி வெள்ளம் மனைக்குள்ளே பாயும்!
நினைத்துச் சமாளிக்கும் முன்பே கலக்கம்
வளைக்கும் நிலைமை தலைகீழாய் மாறும்!
நிலைகுலைவார் மக்கள் அழுது.
உலகே அமைதியாய் வாழ்ந்தபோது இந்தக்
கொரோனா பரவிய வேகத்தில் மக்கள்
பரபரப்பை எல்லாம் முடக்கி முடங்கும்
ஒருநிலையை உண்டாக்கி இந்த உலகே
கரம்பிசைய வைத்துத் திகைத்திட வைத்துப்
பலரைப் பலிகொண்ட தே.
மதுரை பாபாராஜ்
Saturday, July 18, 2020
Friday, July 17, 2020
பாலாவின் சங்கச் சுரங்கம்!
ஒன்பது!
17.07.20
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ!
மகுடம்-- தலை!
மகுடம் தலையாக இருப்போர் சிலரே!
தலையே மகுடமாய் உள்ளோர் சிலரே!இலக்கணம் சொன்னார் நற்புக ழுக்கே!
சுரங்கத்தில் பாலாவின் முத்து.
சங்க இலக்கியம் கூறும் நிலையாமை
இங்கே துறவறம் ஏற்பதற் கல்லவே!
மண்ணக வாழ்வின் ஒழுக்கத்தின் மாண்பாகும்!
என்றுரைத்த பாலாவை வாழ்த்து.
வாழ்க்கையின் வகை!
பத்தாம் உரையிலே பத்துவகை வாழ்க்கையை
முத்தாய்ப்பாய்க் காட்டி விளங்கவைத்த பாங்கினை
முத்தமிழால் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்!
சத்தான சங்கத் தமிழ்.
நம்பி நெடுஞ்செழியன்!
இல்லத் தரசியின் தோளைத் தழுவினான்!
உள்ளங் கவர்ந்திடும் சோலை மலரணிந்தான்!
சந்தனம் பூசினான்! வெம்பகையைச் சந்தித்தான்!
என்றும் பணிந்ததில்லை! தற்புகழ்ச்சி என்றுமில்லை!
நண்பரை வாழ்த்தினான்! தாவென்று கேட்டதில்லை!
தந்தே உயர்ந்தவன்! வேந்தர் அவையிலே
தன்புகழ் நாட்டியவன்! இப்படிப் பட்டவனை
என்னமோ செய்யுங்கள் இங்கு.
சாம்ராட் அசோகனா? இல்லை! இவனிங்கே
சாமான்யன்! நம்பி! குறுநில மன்னனே!
வாழ்ந்து முடிந்தான் இயற்கையும் எய்தினான்!
பாண்டியனை இங்கே எரித்தல், புதைத்தலைச்
சூழ்ந்திருந்து பேசித்தான் ஏங்குகின்றார்
ஊர்ப்பெரியோர்!
வாழ்வின் நிலையாமை பார்.
தலைசாய்த்த நம்பி நெடுஞ்செழியன்!
*கலித்தொகை :
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச *
தன்னைப் புகழ்கின்ற போதுநாம் நாணத்தால்
மண்பார்த்து நம்தலை சாய்ந்திருக்கும் கோலம்போல்
மன்னன் தலைசாய்த்து மாண்டு கிடக்கின்றான்!
கண்முன் கலித்தொகை காட்சி உவமையைக்
கொண்டுவந்த பாலாவை வாழ்த்து.
ஓவியர் ட்ராட்ஸ்கி மருது!
பாலாவின் எண்ணத்தை வண்ணத்தில் ஓவியமாய்
ஞாலமே போற்றுமாறு தீட்டுகின்ற ஆற்றலின்
வேழமாய் ட்ராட்ஸ்கி மருது திகழ்கின்றார்!
வாழ்வாங்கு வாழ்கபல் லாண்டு.
மதுரையில் பத்து ரூபாய்க்கு சாப்பாடு
ராமு தாத்தாவுக்கு காணிக்கை!
ஆண்டாண்டு காலமாக மக்களிடம் பத்துரூபாய்
வாங்கி தரமாய் உணவளித்த ராமுதாத்தா
ஏங்கவிட்டு மாண்டார் மதுரை நகரிலே!
தூங்கா நகரில் பசிப்பிணி யாற்றிய
மாமனிதர் ராமுவுக்கு பாலாவின் காணிக்கை
ஆக்கினார் சங்கச் சுரங்க நிகழ்வினை!
பாலாவின் பண்பினை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
ஒன்பது!
17.07.20
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ!
மகுடம்-- தலை!
மகுடம் தலையாக இருப்போர் சிலரே!
தலையே மகுடமாய் உள்ளோர் சிலரே!இலக்கணம் சொன்னார் நற்புக ழுக்கே!
சுரங்கத்தில் பாலாவின் முத்து.
சங்க இலக்கியம் கூறும் நிலையாமை
இங்கே துறவறம் ஏற்பதற் கல்லவே!
மண்ணக வாழ்வின் ஒழுக்கத்தின் மாண்பாகும்!
என்றுரைத்த பாலாவை வாழ்த்து.
வாழ்க்கையின் வகை!
பத்தாம் உரையிலே பத்துவகை வாழ்க்கையை
முத்தாய்ப்பாய்க் காட்டி விளங்கவைத்த பாங்கினை
முத்தமிழால் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்!
சத்தான சங்கத் தமிழ்.
நம்பி நெடுஞ்செழியன்!
இல்லத் தரசியின் தோளைத் தழுவினான்!
உள்ளங் கவர்ந்திடும் சோலை மலரணிந்தான்!
சந்தனம் பூசினான்! வெம்பகையைச் சந்தித்தான்!
என்றும் பணிந்ததில்லை! தற்புகழ்ச்சி என்றுமில்லை!
நண்பரை வாழ்த்தினான்! தாவென்று கேட்டதில்லை!
தந்தே உயர்ந்தவன்! வேந்தர் அவையிலே
தன்புகழ் நாட்டியவன்! இப்படிப் பட்டவனை
என்னமோ செய்யுங்கள் இங்கு.
சாம்ராட் அசோகனா? இல்லை! இவனிங்கே
சாமான்யன்! நம்பி! குறுநில மன்னனே!
வாழ்ந்து முடிந்தான் இயற்கையும் எய்தினான்!
பாண்டியனை இங்கே எரித்தல், புதைத்தலைச்
சூழ்ந்திருந்து பேசித்தான் ஏங்குகின்றார்
ஊர்ப்பெரியோர்!
வாழ்வின் நிலையாமை பார்.
தலைசாய்த்த நம்பி நெடுஞ்செழியன்!
*கலித்தொகை :
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச *
தன்னைப் புகழ்கின்ற போதுநாம் நாணத்தால்
மண்பார்த்து நம்தலை சாய்ந்திருக்கும் கோலம்போல்
மன்னன் தலைசாய்த்து மாண்டு கிடக்கின்றான்!
கண்முன் கலித்தொகை காட்சி உவமையைக்
கொண்டுவந்த பாலாவை வாழ்த்து.
ஓவியர் ட்ராட்ஸ்கி மருது!
பாலாவின் எண்ணத்தை வண்ணத்தில் ஓவியமாய்
ஞாலமே போற்றுமாறு தீட்டுகின்ற ஆற்றலின்
வேழமாய் ட்ராட்ஸ்கி மருது திகழ்கின்றார்!
வாழ்வாங்கு வாழ்கபல் லாண்டு.
மதுரையில் பத்து ரூபாய்க்கு சாப்பாடு
ராமு தாத்தாவுக்கு காணிக்கை!
ஆண்டாண்டு காலமாக மக்களிடம் பத்துரூபாய்
வாங்கி தரமாய் உணவளித்த ராமுதாத்தா
ஏங்கவிட்டு மாண்டார் மதுரை நகரிலே!
தூங்கா நகரில் பசிப்பிணி யாற்றிய
மாமனிதர் ராமுவுக்கு பாலாவின் காணிக்கை
ஆக்கினார் சங்கச் சுரங்க நிகழ்வினை!
பாலாவின் பண்பினை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்