Thursday, December 29, 2022

பா.வசந்தா


ஓய்வெடுக்கும் பாணியில் வசந்தா!


நாற்காலி தன்னிலே சாய்ந்தேதான் உட்கார்ந்து

மேலான பார்வையுடன் கைபேசி கொண்டேதான்

யாருடனோ பேசுகின்ற கோல அழகிலே

ஆர்வமுடன் ஆகா! வசந்தாதான் புன்னகைத்தாள்!

ஓய்வெடுக்கும் பாணியை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


 

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


மற்றவர்கள் வாழ்விலே உங்கள் இடமறிந்து

எப்போதும் நீங்கள் செயல்படுங்கள்! கர்வமல்ல!

தன்மான மாகும்! இருவகைப்  பண்பிற்கும்

நீங்களோ போராட வேண்டாம்! அவைகளோ

மெய்யான அன்பும் பழகுகின்ற நட்புறவும்!

என்றும் இயல்பாய் வரும்.


மதுரை பாபாராஜ்

 

ஓவியர் மணியன்செல்வன்


 சிற்பி அறக்கட்டளை வாழ்க!

பாராட்டு விழா நாயகர் ஓவியர் 

மணியன் செல்வன் அவர்களுக்கு வாழ்த்து!


ஓவியமா காவியமா என்றே வியக்கவைக்கும்

பாவியமாய் அற்புதமாய்ப் பேசுகின்ற சித்திரத்தைத்

தூரிகையால் தீட்டும் மணியம்செல் வன்மகிழ

பாராட்டும் சிற்பி அறக்கட் டளையாரை

வாழ்த்தி மகிழ்கிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

கடிதோச்சி மெல்ல எறிக

 கடிதோச்சி மெல்ல எறிக!


இடித்துரைத்தல் என்றுமே நல்லதே! ஆனால்

கடிதோச்சி மெல்ல எறிதல் விவேகம்!

துடிதுடிக்க வைக்கின்ற புண்படுத்தும் சொற்கள்

வெடிகுண்டைக் காட்டிலும் தீங்கு.


மதுரை பாபாராஜ்

Wednesday, December 28, 2022

மருமகன் ரவி



 மருமகன் ரவி அனுப்பி சொல்லோவியத்திற்குக் கவிதை!


உன்னுடைய சூழ்நிலையை கட்டுப் படுத்துவதோ 

என்றுமே ஏலாது! உன்னுடைய தேர்வுகளை 

இங்கேநீ கட்டுப் படுத்தலாம்! வாழ்க்கையில்

கண்முன் நடப்பதைக் கட்டுப் படுத்துவதோ

இங்கே எளிதல்ல! ஆனாலும் நீயிங்கே

அந்த நிலைதன்னை எப்படி சந்திக்க

என்பதைக் கட்டுப் படுத்தலாம் நாள்தோறும்!

என்றும் கவனம் சிறப்பு.



மதுரை பாபாராஜ்

நண்பர் வேணு


நண்பர் வேணு அனுப்பிய காணொளி!


யானையோ பார்த்து ரசிக்க சிறுமியோ

கானத்திற்  கேற்ப நடம்புரிய ஆற்றலைக்

காட்டும் விதத்தில் பயிற்சி கொடுத்துள்ளார்!

வேணுவை வாழ்த்துகிறேன் நான்.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, December 27, 2022

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


நேர மேலாண்மையைப் பழகு!


யாருமே நேரமின்றி வாழ்வில் பரபரப்பாய்

வாழ்வதில்லை! எல்லோர்க்கும்

நாள்தோறும் இங்கேயோ

நேரம் இருபத்து நான்குமணி

நேரந்தான்! 

நாம்கொள்ளும் முன்னுரிமை வைத்துதான் நேரமும்!

நேரமேலாண் மையைப் பழகு.


மதுரை பாபாராஜ்

Monday, December 26, 2022

மனிதத்தேனீ



 பண்பாளர் சொக்கலிங்கம் 

அன்பிற்கு நன்றி!


பச்சை விசிறி, இரண்டு அழகான

கைத்துண்டு, காந்தி படம்போட்ட நாட்காட்டி,

கையடக்க சாவிக்கொத் தைதந்தார்  மற்றுமிங்கே

தந்தை நிறுவனர் எண்ணமலர் என்றேதான்

மஞ்சள் நிறப்பையில் வைத்தே அனுப்பினார்!

நன்றி நவில்கின்றேன் நான்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


கால சுழற்சியுடன் செல்வது நல்லதே!

ஆனாலும் சாதிக்க வேண்டுமெனில் மாற்றுவழி

காணவேண்டும்! அந்தவழி இங்கே கடினமாகும்!

சாதனை காட்டும் திறன்.


மதுரை பாபாராஜ்

 

Sunday, December 25, 2022

போதைப் பழக்கம் தவிர்

 போதைப் பழக்கம் தவிர்!


போதைக் கடிமையாய் மாறிவிட்டால் இல்லறம்

சீரழிந்து போகும்! குடும்பம் நடுத்தெருவில்

வேரிழந்தே நிற்கும்! நகைப்பிற்கே உள்ளாகும்!

போதைப் பழக்கம் தவிர்.


மதுரை பாபாராஜ்


பேச்சைத் தவிர்

 பேச்சைத் தவிர்!


பேசினால் வம்பு வருமென்றால் பேசாதே!

பேசாமல் வேடிக்கை பார்த்தால் வளராது!

பேசா மடந்தையாய் மாறப் பழகிவிடு!

வாடவைக்கும் வம்பில்லை சொல்.


மதுரை பாபாராஜ்

 

வாழ்வின் வடுக்கள்

 வாழ்வின் வடுக்கள்!


நிகழ்வுகள் ஆறா வடுக்களாக நெஞ்சில்

நிலைத்துவிட்டால் அந்த வடுக்கள்

நாளும்

உறுத்தும்! மறக்க இயலாது! ஆனால்

மறந்துவிட்டு வாழ்தலே நன்று.


மதுரை பாபாராஜ்

Wednesday, December 21, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நல்லநல்ல பண்புகளை நாளும் வளர்ப்பதற்கும்

நல்ல நெறிகளைக் கற்றுத் தருவதற்கும் 

உள்ளபடி ஒவ்வொரு வாழ்க்கை நிலையிலும்

எல்லோர்க்கும் தேவை இருக்கிறது!

அவ்வகைதான்

இங்கே அடுத்த தலைமுறை முன்னேற

நல்வாய்ப்பை ஏற்படுத்தும் நம்பு.


மதுரை பாபாராஜ்

 

புகழுரைகள் மேலோட்டமே!

 


புகழுரைகள் மேலோட்டமே!


மேடையிலே பேசும் புகழுரையைக் கேட்டுநம்பி

நாடறிய வாழ்ந்தோர் நலிவுற்ற போதிங்கே

தேடித்தான் செல்வார் புகழ்ந்தவரை நாடித்தான்!

கூசிக் குறுகித்தான் கேட்பார் பணஉதவி!

நாசூக்காய் வந்தே தருவார் குறுந்தொகை!

மேலுமென்னைத் தேடி வரவேண்டாம் என்றுசொல்வார்!

மேடைப் புகழுரையை நம்பவேண்டாம்! அப்புகழோ

ஆழ்மனம் சொல்வதல்ல செப்பு.


மதுரை பாபாராஜ்

எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை


எல்லாம் இயல்பாய் நடந்தேறும்! எப்போதும்

நல்வாய்ப்பால் மேம்படுத்த உங்கள். இருப்புடன்

பல்முனை ஆற்றலுடன் வாய்ப்பும் கிடைத்துவிடும்!

வெல்லவேண்னும் சாதித்து தான்.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, December 20, 2022

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!


கடந்தகாலம் காயப் படுத்தலாம்! ஆனால்

அதைநீங்கள் பார்க்கின்ற கோணத்தில், ஒன்று

அதைவிட்டே ஓடலாம்! அல்லது நீங்கள்

அதிலிருந்து பாடத்தைக் கற்கலாம் வாழ்வில்!

இதுதானே வாழ்க்கை உணர்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியம்!


சமநிலை எப்போதும் காண்ப தரிது!

நமது முயற்சியுடன் நாமோ அதையே

சிலநேரம் ஏற்கவேண்டும்! வேலைகள செய்து

உளங்கனிய சாதிக்க வேண்டும் முனைந்து!

சமநிலை என்றுமே நன்று.


மதுரை பாபாராஜ்

 

Monday, December 19, 2022

1330 குறள்கள் முற்றோதல் வாழ்த்து


ஆயிரத்து முந்நூற்று முப்பது பைந்தமிழ்த்

தேன்குறள்கள் தம்மை மழைபோல் பொழிந்தோரை

சான்றோர்கள் பாராட்டி வாழ்த்துகின்றார் ஆர்வமுடன்!

தீந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

சூழ்நிலையின் கைதி

 சூழ்நிலையின் கைதியாக மனைவி வசந்தா!


வசந்தா! உடல்நலமில்  லையென்றாலும்  இங்கே

கடமைகள் செய்யவேண்டும்! சூழ்நிலையின் கைதி!

நடமாட்டம் தள்ளாடும்! என்னசெய்வாள்? பாவம்!

பிறர்நலன் ஒன்றே அவளுக்கு மூச்சு!

குறையின்றி வாழ்கிறாள் இங்கு!


மதுரை பாபாராஜ்

Sunday, December 18, 2022

சிலம்பம் சாதனைக்கு வாழ்த்து


Fenmurugan: 

இன்று நடந்த சிலம்பம் போட்டியில் இரண்டாம் பரிசு

 செல்வி  வி.மு.நிருபாவுக்கு வாழ்த்து!

முருகன் இணையரின் இல்லற வாழ்வின்

இரண்டாம் மகளோ சிலம்பத்தில் வென்றார்

இரண்டாம் பரிசென்ற சாதனைக்கு வாழ்த்து!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

 

Saturday, December 17, 2022

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நதியைக் கடக்க படகுண்டு! வாழ்வில்

குடியிருக்க வீடுண்டு!சுற்றிலும் சோலை!

நெறியுடன் வாழ்தல் அறம்.


மதுரை பாபாராஜ்

 

Friday, December 16, 2022

ஐயா்துரைசாமி திருவாசகம்


: ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியம்!


பாரிலே வாழும் அனைவரும் நல்லவரே!

பாருக்குள் நல்லார் ஒருவரைக் காண்பதற்கோ

தோதில்லை என்றானால் அந்த ஒருவராய்

நீயிருக்க வேண்டும் உணர்.


மதுரை பாபாராஜ்

[12/17, 11:17] VOVDuraisamythiruvasagam:

 Fantastic. Your chaste poetic Tamil translation is more appealing than the original.

 

இளவல் ஹரிஹரன்


நண்பர் இளவல் ஹரிஹரனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத் திருநாள்:17.12.22


நண்பர் இளவல் ஹரிஹரன் பண்பாளர்

வண்டமிழ்ப் பாக்கள் கனிந்துவரும் பாவலர்!

இன்பமுடன் புன்னகைத்து வாழ்க வளமுடன்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தனின் ஆங்கிலச் சொல்லோவியம்!


நமைச்சுற்றி உள்ளதில் உற்சாகம் ஊக்கம்

நமக்களிக்கும் அம்சம் உலகில் இருக்கும்!

அடையாளம் கண்டே அனுபவித்து நாளும்

அதனைநாம் ஏற்கவேண்டும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, December 14, 2022

செல்லப் பேரன் சுசாந்த் சிரிராம்



செல்லப் பேரன் சுசாந்த் சிரிராமுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத் திருநாள் 15.12.22


பெற்றோர் :

C..ரவி - R.சுபாதேவி


அகவை இருபதை வாழ்விலே கண்டு

அகவை இருபத்து ஒன்றினைக் காணும்

மகிழ்ச்சியில் உள்ளம் திளைக்கின்ற பேரன்

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


பட்டப் படிப்பை நிறைவுசெய்து மேல்படிப்பில்

பட்டங்கள் பெற்றேதான் பன்முக ஆற்றலுடன்

வெற்றிமேல் வெற்றிபெற்று வாழ்க வளமுடன்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


செல்லப் பேரன் சுசாந்த் சிரிராமுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத் திருநாள் 15.12.22


பெற்றோர் :

C..ரவி - R.சுபாதேவி


பெற்றோரின் ஆசி வழிநடத்த நாள்தோறும்

உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்திசைக்க

நற்றமிழ்த் தேன்குறளைப் பின்பற்றி வாழியவே!

முத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

பாபா தாத்தா

வசந்தா அவ்வா


பாபா தாத்தா

வசந்தா அவ்வா

 

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


நிகழ்காலந் தன்னைப் புரிந்துகொண்டு நாமும்

நிகழ்காலப் பின்னணியில் ஆற்றல் புரியும்

மகத்தான சாதனை யாளராக வேண்டும்!

எதிர்காலந் தன்னை நினைப்பதோ இன்று

நிகழ்காலந் தன்னை நழுவவிட்டே நாமோ

இலக்கை இழப்போம் உணர்.


மதுரை பாபாராஜ்

Tuesday, December 13, 2022

தடுமாறாதே

 தடுமாறாதே!


சிலந்தியே கூடுகட்டி கூட்டுக்குள் அந்தச்

சிலந்தியே சிக்கித் தவிப்பதுபோல் வாழ்வில்

கலங்கித்தான் வாழ்கின்றார் சிக்கலுக்குள் சிக்கி!

நிலைகுலைந்தால் இப்படித்தான் வாழ்வு.


மதுரை பாபாராஜ்


Dont say fate

 Dont say fate!


Crores and crores of Temples are there

Crores and crores of Gods and goddesses are there

Crores and crores of miseries are there 

People wander in search of peace

No God shows path to trod and give solace!

Every life ends up with pain and sorrow

From children to Adults 

Suffering suffering endlessly!

Good are suffering bad are comfortable!

Why theses contradictions

Dont say  fate! Dont say fate!


Babaraj

Monday, December 12, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நேர்மறைப் பண்புள்ளோர்  மற்றுமிங்கே சிந்தனைகள்

சேர்ந்திருக்கும் மாந்தரைச் சுற்றிப் பழகுங்கள்!

வாழ்க்கையை வெற்றி கரமாக்கி நாள்தோறும்

உள்ளம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உட்பொருள்

அள்ளி வழங்குவார் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

Sunday, December 11, 2022

நண்பர் பன்னீர் செல்வம்


நண்பர் பன்னீ்ர்செல்வம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


குட்டிக் குட்டிப் பூனைகள்

வெள்ளை நிறப் பூனைகள்

தலையில் குல்லாய்ப் பேட்டேதான்

தலையைச் சாய்த்துப் பாவமாய்ப்

பார்க்கும் குட்டிப் பூனைகள்

குல்லாய் மேலே பூக்கள்தான்

சூட்டி மகிழும் பூனைகள்!


மதுரை பாபாராஜ்

 

நண்பர் பாலு நடராஜன் அன்பளிப்பு





 திருக்குறள் குழந்தைப்பாடல்!


வாழ்த்தினார் நண்பர் பாலு!


கவியரசு காமராசன் எண்ணம் வடித்த

குயிலின்போர்ப்  பாட்டென்னும்

பாநூலை பாலு

அளித்தார் பரிசாக ! பாலாவின் கையால்

களிப்புடன் தந்தார் எனக்கு! மகிழ்ந்தேன்!

குவித்தேன்நான் நன்றிமலர் இங்கு.


எதிர்பார்க்க வில்லை! வியப்பளித்தார்

நூலால்!

வரவேற்பில் கூடி இருந்தநேரம் இந்தப்

பரிசைக் குறள்குடும்ப ராசேந்ரன் வாழ்த்த

வழங்கினார் பாலு உறுப்பினர்கள் பார்க்க!

உளங்கனிந்த நன்றிசொன்னேன் நான்.


குறளதி காரத்தை நானும் இங்கே

குழந்தைப்பா டல்களாக நாளும் பதிவைத்

தவழவிட்டேன்! பாலு படித்தார் மகிழ்ந்தார்!

அகங்குளிர வாழ்த்தினார் பார்.


மதுரை பாபாராஜ்







Friday, December 09, 2022

புயல் இரண்டு வகைகள்

 வீட்டுப் புயலும் நாட்டுப் புயலும்!


        இரண்டு வகைகள்!


வீட்டில் புயலடித்தால் கூட்டுக் குடும்பத்தில்

ஊற்றெடுக்கும் உட்பகை எப்போதும் சீரழிக்கும்!

நாட்டில் புயலடித்தால் நாலுநாள் சேதங்கள்

காட்டி வலுவிழக்கும் அடுத்த பருவமட்டும்

நாட்டில் அமைதியே வாழ்வு.


வீட்டுப் புயலெனினும் நாட்டுப் புயலெனினும்

ஆற்றல் வலுவிழந்தால் நாசமின்றிப் போய்விடும்!

மாற்றாக நாளும் வலுப்பெற்றால் 

வீட்டையும்

நாட்டையும் சீரழிக்கும் செப்பு.



மதுரை பாபாராஜ்

Thursday, December 08, 2022

நன்றி உணர்வு

 நன்றி உணர்வு!


நன்றி உணர்வுடன் வாழ்வோம்! அதற்காக

என்றும் அடிமையாய் வாழ்வது கூடாது!

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


மதுரை பாபாராஜ்

தடம்

 தடம்!


தடம்பார்த்து நாளும் நடப்போர் மனிதர்!

தடம்பதித்து வாழ்வோ ரெல்லாம் மகான்கள்!

தடம்புரண்டு வாழ்வோர் உலகிலே அற்பர்!

தடைக்கல்லைத் தாண்டுவதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

வேற்றுமையில் ஒற்றுமை

 வேற்றுமையில் ஒற்றுமை!


தட்டிலே கீறல் விழுந்தால் சரிப்படுத்தித்

தட்டைப் பயன்படுத்தி வாழலாம்!-- மட்கலம்

கீழே விழுந்தால் உடைந்துபோகும் சேராது!

வாழ்விலே வேறுபாட்டைத் தட்டிலே கீறலாக

மாற்றவேண்டும்! மட்கலம்போல் போட்டுடைத்தல் நல்லதல்ல!

வேற்றுமையில் ஒற்றுமையே வாழ்வு.


மதுரை பாபாராஜ்




நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

ஆற்றிலே கொக்கு பொறுமையுடன் காத்திருக்கும்!

ஆற்றுநீரில் சின்னஞ் சிறுமீன்கள் போகவிட்டு

பாயும் பெரியமீன் வந்தேதான் சிக்குமட்டும்

பார்த்து கவனமுடன் நின்றிருக்கும்! அப்படி

நாமும் பொறுமையுடன் காத்திருந்து மாபெரும்

சாதனையை நாட்டவேண்டும் சாற்று.

மதுரை பாபாராஜ்

குறள் 490:


கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து

மு.வ உரை:

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன்ஃ சொல்லோவியத்திற்குக் கவிதை!


கிடைக்கின்ற வாய்ப்பினை ஏற்கவில்லை என்றால்

முறையாக வாய்ப்பைப் பயன்படுத்தா விட்டால்

தடைகள் பெருக்கெடுத்தே சாதனைப் பாதை

அடைபடும் என்றே உணர்.


மதுரை பாபாராஜ்

 

ஆன்லைன் சூதாட்டம் தடைக்கு எங்கள் கருத்து!

 நாங்கள் மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம்:



homesec@tn.gov.in


ஆன்லைன் சூதாட்டம் தடைக்கு எங்கள் கருத்து!

குறள் 932:

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்

நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

என்று வள்ளுவர் அறவுரை கூறுகிறார்.

உடனடியாகத் தடைசெய்ய வேண்டும்!


பொதுவாகவே கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிடுகின்றனர் சூதாட்டம் நடத்துவோர். இந்த கவர்ச்சிகரமான ஆசையைத் தூண்டுகின்ற விளம்பரங்கள் என்னும் விளக்குகளில் விட்டில் பூச்சிகளாக விழுகின்றனர் சலனமனங் கொண்டவர்கள். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இதற்கு விதிவிலக்கல்ல. ஏமாற்றத்திற்கு உள்ளாகும் போது விரக்தி மனப்பான்மை தலை தூக்குகிறது. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கின்றனர். இது குடும்பத்தை நடுத்தெருவில் நிற்கவைத்துப் புண்படுத்தச் செய்கிறது.


எனவே ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்யவேண்டும்!


இவண்

மதுரை பாபாராஜ்

வசந்தா

9003260981

மனிதநேய விருது நடிகர் சௌந்தர்ராசா


உறவுகளுக்கு வணக்கம் 🙏


மலேசியாவில் Take Care International foundation என்ற அமைப்பு இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது 2022  என்ற விருதை எனக்கு கொடுத்து ஊக்கப்படுத்தி இருக்கிறது . இந்த செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 

----------------------------------------------------------------

 சிறந்த மனிதநேய விருதாளர்

நடிகர் நண்பர் சௌந்தர்ராஜா அவர்களுக்கு வாழ்த்து!


ஆண்டு 2022


சிறந்த மனிதநேயப் பண்பாளர் சௌந்தர்

சிறப்புகளைப் பாராட்டி இந்த விருதை

மலேசியாவில் உள்ள அமைப்பு வழங்கி

உயர்வளித்த பாங்கினை வாழ்த்துகிறேன் இன்று!

பலவிருது பெற்றேதான் சௌந்தர் வளர்க!

வளர்தமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

 

பருவங்கள்


VOVCR:

வணக்கம் பாபா 

இன்று காலை இதே சிந்தனை ஓடியது


எனவே,

 அன்றறிவாம் என்னாது அறம் செய்க 😁

தெ.கி

மதுரை பாபாராஜ்:

You are a great person CR

VOVCR:

சரி.. உங்க கிட்ட ஏன் வம்பு.. Great persons think alike😁


Vovkaniankrishnan:

சுவர் இருந்தால்தானே

சித்திரம் வரைய முடியும்

என்பது பழமொழி

தெ.கி

VovsubramanianThane:

We were well immersed in three seasons

We forgot to count there is fourth season

It's time ... to embrace old age

Although the impetuous soul wills

Will the 'Bony skin wrapped body' cooperate?


மதுரை பாபாராஜ்:

Beautiful friend


Vovkaniankrishnan:

எங்களால் செயல்பட முடியவில்லை என்கிறீர்கள்.

நாங்கள் உங்கள் அறிவை

போற்றுகிறோம்.எங்களது

ஆற்றலுக்கு தங்களது

அறிவு வேண்டியதாகிறது.

தெ.கி

 

நட்டாற்றில் விடாதே

 நட்டாற்றில் விடாதே!


துன்பத்தில் வாழ்கின்ற நேரம் துணைநிற்போர்

நண்பர்க ளாவார்! தவிக்கவிட்டுப் பார்ப்பவர்கள்

நம்பியோரை நட்டாற்றில் விட்டுவிட்டுச் செல்கின்ற

தன்மை படைத்தோர்! உணர்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


எத்தகைய சூழ்நிலை சுற்றி வளைத்தாலும்

நம்கடமை தன்னையோ நேரத்தில் செய்யவேண்டும்!

என்றும் கவனம் சிதறாமல் பார்க்கவேண்டும்!

நம்முழைப்பே நம்கவனம் ! சொல்.


மதுரை பாபாராஜ்

 

என்றும் அழகு!

 என்றும் அழகு!


மெழுகுச் சிலைபோல் திருமண நாளில்

இருந்தோம் அழகாக! ஆண்டுகள் செல்ல

உருகி உருகி உருக்குலைந்து போனோம்!

உருவிழந்த பொம்மையாய் மாற்றியது காலம்!

உருக்குலைந்த போதும் அழகு!


மதுரை பாபாராஜ்

Wednesday, December 07, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


ஏற்று நடத்த, புரிந்துகொள்ள, திட்டமிட

ஆற்றல் மிளிர செயல்பட சாதிக்க

நோக்கு இலக்கை! நடைபோ(டு) அதைப்பார்த்து!

ஊக்கம்  முயற்சி உயிர்.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, December 06, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


என்னசெய்ய எண்ணுகின்றாய் என்னசெய்ய வேண்டுமென்று

பின்பற்ற வில்லையெனில்  இவ்வுலக நீள்பரப்பில்

எங்கேயோ காணாமல் போவதற்கு வாய்ப்புண்டு!

உன்னிப்பாய்ப் பார்ப்பது நன்று.


மதுரை பாபாராஜ்

 

Monday, December 05, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


விளக்கத்தைப் பார்ப்பது தேவையே! ஆனால்

விளக்கத்தைப் பார்க்க அதிகமாய்ப் பார்த்தல்

செயல்திறனைப் பாதிக்கும்! எந்த அளவு

விளங்குதல் என்பதைத் தீர்மானம் செய்தால்

செயல்திறன் மேம்படும் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோ


உங்கள் மனதை அமைதி இணக்கமாக

பண்படுத்தி வைப்பது நீங்கள் நினைப்பதுபோல்

ஒன்றும் கடினமல்ல! தேவையற்ற எண்ணங்கள்

தங்க இடங்கொடுத்தால் தொந்தரவு செய்திருக்கும்!

பண்படுத்தி வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

Sunday, December 04, 2022

காட்சிப்பிழை

 காட்சிப் பிழை!


என்ன நடக்குமோ? எப்படித் தான்நடக்கும்?

என்றே கணிக்க முடியாத வாழ்க்கையில்

அன்றாடம் ஆணவக் கொம்பேறித் துள்ளுகின்றார்!

கண்ணெதிரே காட்சிப் பிழை.


மதுரை பாபாராஜ்

தொல்காப்பியச் செம்மல்


ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ் படைத்த

தொல்காப்பியச் செம்மல்

புலவர் ஆ.காளியப்பன் அவர்களுக்கு வாழ்த்து!


அறப்பணி மற்றும் அருந்தமிழ்த் தொண்டைச்

சிறப்பாக செய்துவரும் காளியப்பன் வாழ்க!

நிறைவுடன் தொல்காப் பியந்தன்னை மக்கள்

முறையாக கற்று முனைப்புடன்  வாழ்வில்

நடைபோட வைக்கும் புவரய்யா வாழ்க!

தடைவென்று வாழ்ந்துவரும் பண்பாளர் வாழ்க!

மகத்தாக வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் இராமசாமிக்கு வாழ்த்து


நண்பர் BSNL இராமசாமி அவர்களுக்கு வாழ்த்து!


மணிப்பொறியில் வானியலைக் காட்டி வணக்கம்

அளித்தநண்பர் ராமசாமி வாழ்க மகிழ்ந்து!

நலமுடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

Friday, December 02, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன். சொல்லோவியம்!


அறைகூவல் மற்றுமுள்ள சூழலின் சிக்கல்

இதையுமே மீறி கவனமுடன் நாளும்

கடமைகளைச் செய்யவேண்டும்! இப்படிச் செய்தால்

செயல்திறனை மேம்படுத்தக் கூடும்! உணர்வோம்!

கவனமே ஆற்றலின் கண்.


மதுரை பாபாராஜ்

 

பதர்!

 பதர்!


உரமாய்ப் பிறந்தால் விளைச்சல் தருவேன்!

மரமாக நின்றால் நிழலைத் தருவேன்!

நிலவாய்த் தவழ்ந்தால் குளிர்ச்சி தருவேன்!

நிலத்தில் மனிதனாய் நான்பிறந்தேன்! வீண்!

பயன்களே இல்லா பதர்!


மதுரை பாபாராஜ்

Thursday, December 01, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நம்முடைய நேரத்தைக் கொள்ளை யடிக்கின்ற

தொந்தரவை மேற்பார்வை செய்தல் கடமையாகும்,!

நம்மனம் மற்றும் செயல்விட்டுத் தள்ளிவைத்தல்

என்றுமே நல்லது! நாளும் செயல்திறன்

தொந்தர வின்றிசெல்லும் காண்.


மதுரை பாபாராஜ்