Friday, July 26, 2019

ஒருதுளி போதும்!

ஒருகுடம் பாலில்   ஒருதுளி நஞ்சை
ஒருவர் கலந்தால் ஒருகுடம்பால் நஞ்சே!
பெரும்புள்ளி யானாலும் நல்லொழுக்கம் கெட்டால்
கரும்புள்ளி தானே கூறு.

மதுரை பாபாராஜ்

திருக்குறள்
வெண்பாப் பாங்கில்
 இன்பத்துப்பால்
---------------------- --------   
எனது முயற்சி எண் 10 முதல்பதிப்பு  ஆண்டு 2008
இரண்டாம் பதிப்பு 2010
வெளியீடு:ஆப்பிள் பப்ளிஷிங் இண்டர்நேஷனல் (பி) லிமிடெட். சென்னை
--------------------------------
கல்லூரியில் எனது தமிழாசான் பேராசிரியர் முனைவர் மகாகவி அர.சிங்கார வடிவேலன்.
கண்டனூர்:
கற்பித்தேன் செந்தமிழைக் கற்றார் இவர்திறன்
மெய்ப்பிக்கும் வெண்பா விளக்கவுரை;--முற்புலவர்
பத்தாம் உரைக்குள் பரிமேல் அழகுரைபோல்
எத்திசையும் போற்றும் இனி.
நண்பர் தவத்திரு.அ.வே.சாந்திகுமார சுவாமிகள்:
"அருமை, எளிமை, அழகு கொண்ட திருக்குறளுக்கு மரபின் தொடர்ச்சியும்,புதுமையின் வளர்ச்சியும் இணைந்தே புதிய பொருள்நலம் காட்டும் முயற்சியின் விளைவே இந்நூல். இம்முயற்சியில் பாபா வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் மிகையாகாது."
---------
குறள் 1114
காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
--------------
குவளை மலர்களால் காண முடிந்தால்
இவளது கண்களைப்போல் இங்கே--அழகிய
கண்கள் நமக்கில்லை என்றேதான் ஏங்கியே
மண்நோக்கி நிற்கும் தவித்து.

மதுரை பாபாராஜ்

அதிகாரங்கள்

அறிவுடைமை--- கள்ளுண்ணாமை

தெருவுக்குத் தெரு படிப்பகமில்லை!
குடிப்பகமிருக்கு!

மாணவர்கள் கலந்துரையாடலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
திரு.சீமான் ( காணொளி)

நாட்டிலே வீதிக்கு வீதி அறிவொளியை ஊட்டும் படிப்பக மில்லை! குடும்பத்தைச்
சீரழித்துப் பார்க்கும் குடிப்பகங்கள் ஏராளம்!
சீரழிக்கத் தூண்டுவதை மூடு.

மதுரை பாபாராஜ்

Wednesday, July 24, 2019

4 ஆண்டுகளுக்கு முன்

திருக்குறள்
வெண்பாப் பாங்கில்
 பொருட்பால்
---------------------- --------   
எனது முயற்சி எண் 10 முதல்பதிப்பு  ஆண்டு 2008
இரண்டாம் பதிப்பு 2010
வெளியீடு:ஆப்பிள் பப்ளிஷிங் இண்டர்நேஷனல் (பி) லிமிடெட். சென்னை
------------------------------------
பொதுமறைக்கு ஒரு புதுஉரை
--திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன்
"ஆலம் விதை போன்ற திருக்குறளுக்கு அவரை விதைபோன்று சற்று பெரிதான வெண்பாவிலேயே உரைப்பாட்டை வழங்கியுள்ள உன்னதம் அனைவராலும் பாராட்டப்படவேண்டிய ஒன்று!ஆகவே பாபாராஜின் முயற்சி நன்று! இது காலத்தை கடந்து நிற்கும் வென்று."

மனமகிழ் வாழ்த்துரை:
செ.கோவிந்தம்மாள்
தமிழாசிரியை தஞ்சாவூர்
"வெண்பா வடிவில்,பொருட்பாலிலுள்ள அத்தனைப் பாக்களும் எளிமை-இனிமை-நீரோட்டமான நடை-தெளிவான கருத்தோட்டம்-சொல்லழகு-சொற்றொடர் அழகு-பொருளழகு யாவும் சுவைபட அமைந்துள்ளன".
391"கற்க கசடறக் கற்பவை......"
கற்பதை என்றும் முழுமையாகக் கற்கவேண்டும்!
கற்றபின் ஆக்கபூர்வமான நல்வழியில்---கற்றதை
வாழ்வில் கடைப்பிடித்து நாளும் நடக்கவேண்டும்!
வாழ்வாங்கு வாழ்தல் உறுதி.

மதுரை பாபாராஜ்
இன்பத்துப்பால் தொடரும்

தாத்தா இராமகளஞ்சியம் அவர்கள் சொன்னது

சிந்தும் பருக்கைகள் நட்சத்திரங்கள்!

தாத்தா இராமகளஞ்சியம் அவர்கள் சொன்னது:

குழந்தைகள் சாப்பிடும் நேரத்தில் சிந்தும்
அழகுப் பருக்கைகள் பார்ப்பதற்கு விண்ணில்
ஒளிர்கின்ற நட்சத் திரங்களைப் போல
உளதென்றார் தாத்தா ரசித்து.

மதுரை பாபாராஜ்

சந்திராயன்

சந்திராயன் 2 சாதனை!

சிவனார் மாங்கனிக் கதை

கற்பனை நகைச்சுவைக்காக!

சிவனார் உலகத்தைச் சுற்றிவிட்டு வானில்
நிலவுக்குப் போக அனுப்பிவிட்டார்! நானும்
நிலவின் நிலத்தில் பதிந்து நிலைத்து
களஆய்வை மேற்கொள்வேன்! வாழ்த்துவார் மக்கள்!
உலவும்  எனது பெருமையை  எண்ணி
சிலிர்ப்பாக  உள்ளதே! கீழேநான் பார்த்தால்
சிவனாரும் மற்ற அலுவலரும் சேர்ந்து
செயலுணர்வில்  கூட்டமாக உள்ளனர்! நானோ
உலவுகின்றேன் தன்னந் தனியாக விண்ணில்!
மயில்சாமி முன்னின்ற காரணத்தால் வெற்றிக்
களிப்பில் சிவனார் மயில்சாமி கையில்
அளித்தார் உவப்புடன் மாங்கனி தன்னை!
அளிப்பார் முயற்சி பல.

மதுரை பாபாராஜ்

Monday, July 22, 2019

ஒற்றைப் பனைமரம்!

சுற்றி உறவாடி நின்ற மரங்களை
வெட்டி அடுக்ககம் கட்டிவிட்டார்! யார்கேட்பார்!
நிற்கின்றேன் தன்னந் தனியாக ஏக்கமுடன்!
ஒற்றைப் பனைமரம் பார்.

மதுரை பாபாராஜ்


பெற்றோரைப் போற்று!

அம்மாவும் அப்பாவும் இவ்வுலகில் உள்ளவரை
அன்பாகப் பேசுங்கள்! அன்றாடம் பேசுங்கள்!
இந்தத் தரணிவிட்டுப் போய்விட்டால்  என்றுபேச?
பெற்றோரின் ஆசிகளை நாடு.

மதுரை பாபாராஜ்

[7/22, 3:26 PM] Madurai Babaraj: இந்தியாவுக்குப்  பெருமை!

சந்ரயான் விண்ணிலே  பாய்ந்து சென்றது!
சந்ரனை நோக்கிப் பயணத்தின் பாதையில்
முன்னேறிச் செல்கின்ற காட்சியில் இந்தியர்கள்
வென்றெடுத்தோம் சாதனை தான்.

நிலவிலே ஆய்வுகளை மேற்கொள்ள வாழ்த்து!
உலகத்தார் இங்கே மகிழ்ச்சியில் நாட்டின்
அளப்பரிய வெற்றியைக் கண்டு பெருமைக்
களத்திலே இந்தியத்தாய் காண்.

மதுரை பாபாராஜ்

 Vovbala:
ராக்கெட் வேகத்தில் பாபா கவிதை.
வாழ்த்துகள்💐💐

Sunday, July 21, 2019

சட்டிச் சோறு சுவையே சுவை!

கடாயில் கறிகாயை நன்கு வறுத்து
கடாயிலே சோறைப் பிசைந்தே உருட்டி
அடடா அன்புடன் அம்மா கொடுப்பாள்!
மடமட வென்றே உருண்டையை உண்டால்
சிறப்புச் சுவையுடன் மெய்மறப்போம் நாமே!
உடலும் சிலிர்க்கும் உணர்ந்து.

மதுரை பாபாராஜ்

இயல்பெனக் கருது!

உறவினர் சூழ்நிலையால் அன்னியராய்
மாறி
நடக்கின்ற கோலம் நடைமுறை யானால்
படபடக்க வேண்டாம்!  இயல்பென்றே எண்ணிக்
கடக்கவேண்டும் நாமென்று சொல்.

மதுரை பாபாராஜ்


Friday, July 19, 2019



Wednesday, July 17, 2019

ஊன்றுகோல்!

வாழ்ந்த நிலைகளைக் காட்டிலும் இன்றிங்கே
வாழும் நிலை உயர்ந்திருந்தால்  அன்றிங்கே
வாழ்ந்திருந்த காலத்தை என்றும் நினைக்கவேண்டும்!
வாழ்க்கையின் ஊன்றுகோல்  அஃது.

மதுரை பாபாராஜ்
16.07.19

Sunday, July 14, 2019

வெறுப்பை வெறு!

வெறுப்பை வெறுப்பதற்குக் கற்றுக்கொள்! உன்னை
வெறுப்பு நெருக்கம் தவிர்த்தே விலகும்!
வெறுப்பு விலக்கும் நிலையில்  உள்ளம்
உறுத்தலின்றி வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

Saturday, July 13, 2019

தேவையா?

வள்ளுவத்தின் மீது வாதங்கள்!

இப்படித்தான் சொன்னாரு
அப்படித்தான் சொன்னாரு
எப்படித்தான்சொன்னாரு
வள்ளுவரு என்னநெனச்சு
இங்கேதான் சொன்னாரு
யாருக்கும் தெரியாது
ஒருவருக்கும் புரியாது
வள்ளுவரு எழுதிவச்சு
எப்பவோ போனாரு
அதவச்சு நாமெல்லாம்
நெனச்சதையே சொல்லிசொல்லி
சண்டைமட்டும் போடுறோம்!
சளைக்காம போடுறோம்!
அவங்கவங்க நெனச்சது
அவங்கவங்க சரின்றாங்க
அவர்சொன்னா இவருக்கில்ல
இவர்சொன்னாஅவர்க்கில்ல
அவங்கவங்க வீட்டுக்கு
அவரக்கா சோறுக்கு
போறதுக்கா வாதங்கள்?

மதுரை பாபாராஜ்

மலரும் நினைவு!

பல ஆண்டுகளுக்கு முன் அம்மா உருட்டித்தர
பிள்ளைகள் சாப்பிட்டோம்!

அம்மாவோ உட்கார்ந்தாள்! பிள்ளைகள் எல்லோரும்
அம்மாவின் முன்னால் அமர்ந்தனர்! முற்றத்தில்
வெண்ணிலா பார்த்தது! அம்மாவின் முன்னாலே
கிண்ணம் நிறைய சுவையாய்ப் பிசைந்தசோறு!
அம்மா உருட்டி உருட்டி உருண்டையாக்கி
அந்த நிலவொளியில் ஒவ்வொரு பிள்ளைக்கும்
அன்புடனே தந்தாள் வரிசையாக! இன்பமுடன்
புன்னகை பூக்க அவள்தந்தாள்! போட்டிபோட்டு
அன்னத்தைப் பிள்ளைகள் வாங்கித்தான் சாப்பிட்டோம்!
தந்தை உடனிருந்தார்! தாய்தந்த சோறுண்டார்.!
அன்புத்தாய் மிஞ்சி இருந்ததைச் சாப்பிட்டாள்!
என்னுள்ளம் ஏங்குதே அப்படிச் சாப்பிட!
அம்மா வருவாளா? வந்தே தருவாளா?
நெஞ்சில் மலர்ந்த நினைவு.

மதுரை பாபாராஜ்

Friday, July 12, 2019

பூனையும் எலியும்!

எலியைப் பூனை பிடித்ததும் அந்த
எலியை நழுவவிட்டு ஓடவிட்டுப் பாயும்!
எலியைப் பிடித்து மறுபடியும் விட்டே
கிலிகொள்ள வைத்துப் பிடிக்குமாம் உண்ண!
எலியாக ஓடவைத்த  நிலையில் இங்கே
கிலிகொள்ள வைக்கிறதே சூழ்நிலைச்  சொற்கள்!
பலியானால் நிம்மதி தான்.

மதுரை பாபாராஜ்

முயலுக்கு மூன்று கால்கள்!

தன்கருத்தை விட்டோ விலகமாட்டார்! மற்றவர்
சொன்ன கருத்தையும் ஏற்கமாட்டார்! தான்பிடித்த
எண்ண  முயலுக்கோ மூன்றுகால்கள் தானென்பார்!
வம்புகளும் வாதமும் ஏன்?

மதுரை பாபாராஜ்

ஆடித் தள்ளுபடி!

ஆடிமாதம் வந்துவிட்டால் போதுமடா சாமியோவ்!
தேடிவரும் தள்ளுபடி கோடிகோடி யாகத்தான்!
வாடிக்கை யாளர்கள் கூட்டமாக கூடித்தான்
ஓடிவந்து நிற்பார் கடைகளுக்கு முன்னாலே!
ஈடில்லா விற்பனைத் தந்திரந்தான் என்றறிந்தும்
மேதினியில் வாழ்விதுதான் பார்.

மதுரை பாபாராஜ்



Thursday, July 11, 2019

துரோகம்!

இங்கே துரோகத்தைச் செய்து மறைத்தேதான்
என்றும்போல் வாழும் நிலையெடுத்தால் காலமோ
உன்றன் மனசாட்சி தன்னை உசுப்பிவிட்டே
என்றும் உறுத்தத் தொடங்கித் துடிக்கவைக்கும்!
நம்பிக்கை மோசம் கொலைக்கு நிகராகும்!
அன்பில் களங்கம் தவிர்.

மதுரை பாபாராஜ்

உடைக்காதே!

சிதறிவிட்ட  முத்துகள் மாலையாகக் கூடும்!
உதறிவிட்ட தேன்துளிகள் ஒன்றுசேரக் கூடும்!
சிதைந்துவிட்ட கோலங்கள் சீராகக் கூடும்!
உடைந்துபோன உள்ளம் உடைந்துபோன பானை!
உடைந்தால் உடைந்தது தான்.

கடைக்குக் கடையோ கவர்ச்சியான பொம்மை!
கிடைத்ததில் நிம்மதி காணாமல் இங்கே
கிடைக்காத ஒன்றிற்கே ஏங்குகின்ற வாழ்க்கை!
கிடைக்காத  பொம்மை கிடைக்கவைக்க  அம்மா!
கிடைத்ததைப் போட்டுடைப்ப தேன்?


மதுரை பாபாராஜ்

கூட்டில் முடக்கம்!

காலத்தால் கட்டுண்டோம் கட்டுண்ட காரணத்தால்
கோலங்கள் ஏற்றே பயணத்தை மேற்கொண்டோம்!
காலக் கரங்கள் உருட்டிவிட்டு வேடிக்கை
காட்டி அலையவிட்டே வாழ்வின் இறுதியில்
காட்சிப் பருவம் முதுமைத் தனிமையை
ஏற்பதற்குக் கட்டளை இட்டதையும் ஏற்றதால்
கூட்டில் முடங்கினோம் கூறு.

மதுரை பாபாராஜ்

Wednesday, July 10, 2019

 நீ எங்கே?

என்னைக் கரம்பிடித்து வந்தவளோ விட்டுவிட்டாள்!
தன்னந் தனியாகத் தள்ளாடிக் காரிருளில்
ஒன்றும் தெரியாமல் தட்டுத்  தடுமாறி
என்னவளைத் தேடுகின்றேன் எங்கோ சிரிக்கின்றாள்!
அந்தச் சிரிப்பொலி எந்தன் செவிகளில்
வந்து தழுவி வருடி நழுவுதே!
கண்ணீர்த் திவலைகள் பட்டுத் தெறிக்கிறதே!
கன்னங்கள் சூட்டை உணர்கிறதே! என்னவளே!
எங்கேநீ சென்றாய்? தனியாய்த் தவிக்கவிட்டு!
என்ன தவறுசெய்தேன்? சொல்.

மதுரை பாபாராஜ்

Saturday, July 06, 2019

தேடி வந்தவளை வாழ்த்து!

தேடிவந்தாள்!பார்த்ததும் நாடிவந்தாள்! ஓடிவந்தாள்!
பாடிவந்தாள் !ஆடிவந்தாள்! பொய்க்கோபம் சாடிவந்தாள்!
ஊடிவந்தாள்! மாடி அறைக்கதவின்
தாழ்திறந்தாள்!
தேடிவந்த தென்றலை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

என் சிறகு எங்கே?

எந்தன் சிறகில் ஒருசிறகைப் பிடுங்கிவிட்டார்!
அந்தச் சிறகின்றித் தட்டுத் தடுமாறி
அம்மா! தவிக்கின்றேன்!  தத்தளித்தே வாழ்கின்றேன்!
என்னையேன் ஊனமாக்கிப் பார்த்தே ரசிக்கின்றார்?
பொங்கிவரும் கண்ணீரே! சொல்.

மதுரை பாபாராஜ்

குழந்தைகளே உற்சாகம்!

சோலையில் பூத்திருக்கும்  வண்ணவண்ண பூக்களைப்போல்
காலையில் பள்ளிக் குழந்தைகள் வண்வண்ணக்
கோலத்தில் சீருடை போட்டுத்தான் துள்ளிவரும்
காட்சிகள் உற்சாகம் தான்.

தாத்தாக்கள் பாட்டிகள் அம்மாக்கள் அப்பாக்கள்
போட்டிபோட்டு நாளும் பரபரப்பாய்ப்
பிள்ளைகளைப்
பள்ளியின் வண்டிகளில் ஏற்றி அனுப்புகின்ற
உள்ளமெல்லாம் உற்சாகந் தான்.

மாலைப் பொழுதிலே பள்ளியின் வண்டிகள்
நேரத்தில் வந்துநிற்க காத்திருப்போர் கூட்டமோ
ஆரவாரம் செய்தே கைபிடித்தே  வீட்டுக்கு
ஈரமனம் கொண்டேதான்  பையைச் சுமந்துகொண்டு
வீரநடை போடுவார் காண்.

மதுரை பாபாராஜ்

Friday, July 05, 2019

இயல்பாகப் பழகு!

சூழ்நிலைகள் சந்தேகத் தீப்பொறியைத் தூண்டிவிட்டால்
வாழ்க்கை இருளாகும்! உள்ளம் உளைச்சலின்
தேள்கடியில் நாளும் துடிதுடித்தே
வாடிவிடும்!
சூழ்நிலையை என்றும் தவிர்.

இயல்பான சூழ்நிலையில் சந்தேகம் இல்லை!
இயல்புக்கு மாறாய்ப் பழகுவதைக் கண்டால்
புயலுக்குள் சிக்கும் துரும்பாகும் உள்ளம் !
இயல்பாக என்றும் பழகு.

மதுரை பாபாராஜ்

Wednesday, July 03, 2019


நூற்றுக் கணக்கான நண்பர்கள் அற்புதமல்ல!
நூற்றுக் கணக்கானோர் இங்கே எதிர்த்தேதான்
வாட்டுகின்ற நேரம் ஒருவரிங்கே
ஆதரவாய்
காட்டுகின்ற அற்புதமே நட்பு.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்

மேடைத் தயக்கம் வேண்டாம்!

காந்தி முதலாய் நெடுஞ்செழியன் எல்லோரும்
தேங்கித் தயங்கி நடுங்கித்தான் மேடையிலே
பேசினார்கள்! பேச முயன்ற முயற்சியிலே
கூசாமல் பேசி சரளமாக பேசினார்கள்!
ஆகா! மடைதிறந்த வெள்ளம்போல் பேசியதை
நாடே ரசித்தது பார்.

மதுரை பாபாராஜ்

பேசாதே!

வழவழப் பேச்சு முகஞ்சுழிக்க வைக்கும்!
பரபரப்புப் பேச்சு முணுமுணுக்க வைக்கும்!
பொருளற்ற பேச்சு எரிச்சலைக் கூட்டும்!
கருத்தின்றி பேசாதே நீ.

மதுரை பாபாராஜ்

பேச்சின் இலக்கணம்!

அளவாகப் பேசு! இனிமையாகப் பேசு!
தரமாகப் பேசு! வரம்புக்குள் பேசு!
சுருக்கமாகப் பேசு! பொருளுக்குள்  பேசு!
அரங்கம் கவனிக்கப் பேசு.

மதுரை பாபாராஜ்

Tuesday, July 02, 2019

 சுழல்!

வாழ்வின் பிரிவுகள்! ஏக்கப் பிழிவுகள்!
ஊழ்வினையா? சூழ்நிலையா? கோள்நிலை மாற்றமா?
வாழ்வின் இயல்பிற்கோ ஏதேதோ காரணங்கள்!
ஆழ்மனத்தில் ஏக்கச் சுழல்.

மதுரை பாபாராஜ்

எல்லைக்குள் பழகு!

எல்லைக்குள் நாளும் பழகினால் இன்பந்தான்!
எல்லையை மீறினால் என்றுமே துன்பந்தான்!
எல்லா உறவுக்கும் இந்த நிலையுண்டு!
எல்லைக்குள் என்றும் பழகு.

மதுரை பாபாராஜ்

Monday, July 01, 2019

அய்யா மோகன ராசு அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும்!

நதிகளை ஆழி வரவேற்ப தைப்போல்
மதித்துப் பிறர்கருத்தை உள்வாங்கும் நீங்கள்
மகிழ்ச்சியுடன்  வாழ்க வளமுடன் வாழ்க!
அகங்குளிர வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

அன்பு வானில் களங்கம்!

சூழ்நிலைகள் வறுத்தெடுத்தால்!

என்னன்பு நீலவானம்  எந்தக் களங்கமும்
இன்றித்தான் வாழ்வில் இருக்குமென்றே
எண்ணினேன்!
என்னை வதைத்தெடுக்கும் வண்ணம் களங்கத்தை
இங்கே அனுமதித்த தேன்?

சூழ்நிலைகள் வாழ்க்கையில் தீப்பொறியைத் தூண்டிவிட்டுப்
பாழ்மனத்தில் நாளும் உளைச்சலை ஏற்படுத்திப்
பார்க்கின்ற  கோலத்தில் தூக்கம் இழந்தேதான்
ஏழையாய் ஏங்குகிறேன் இங்கு.

என்னென்ன சூழ்நிலைகள்! அப்பப்பா! போதுமே!
கண்முன் திரைப்படம்போல் ஓடுகின்ற காட்சிகள்!
அன்பின் உருவத்தை ஏனோ சிதைத்தேதான்
இன்பமுறும் வக்கிரத்தைப் பார்.

மதுரை பாபாராஜ்




உதிரும் மலர்

செடியிலே பூத்தமலர் மாலைப் பொழுதில்
வடிவிழந்து வாடி உதிர்வதுபோல் உள்ளம்
அடிவிழுந்த கோலத்தை நாள்தோறும் எண்ணித்
துடித்தே துவள்வதேன்?  சொல்.

மதுரை பாபாராஜ்

காலம் நகர்த்தும் காய்கள்!

எங்கோ பிறந்தவர்கள் எங்கெங்கோ வாழ்கின்றோம்!
இன்றிங்கே! நாளையெங்கே? யாரறிவார்? யார்சொல்வார்?
இன்றோ உயரத்தில் ! நாளையோ தாழ்விலே!
என்றிங்கே யார்யாரோ எப்படியோ என்றேதான்
நம்மால் கணிக்க முடியாது மானிடரே!
கண்மணியே! காலம் நகர்த்துகின்ற காய்கள்தான்
மண்ணக வாழ்வென் றுணர்.

மதுரை பாபாராஜ்

அக்கா குருவி!

அக்கோய் எனக்கூவி ஒலியெழுப்பும் புள்ளினத்தின்
ஒற்றை ஒலிகேட்டேன் ஏக்கம் பிழிந்தெடுக்க
சற்றும் அயராமல் நித்தமும் கூவுதம்மா!
அக்காவைக் காணாமல் தேடுகின்றாய்! தங்கையே!
அக்கா வருவாள் விரைந்து.

மதுரை பாபாராஜ்