Friday, February 28, 2025
Thursday, February 27, 2025
நண்பர் சோம வீரப்பன்
நண்பர் சோம வீரப்பன் அவர்களின் தொண்டுள்ளம் வாழ்க!
விண்முட்டும் கோபுரம் தண்ணிழலில் மக்களோ
உட்கார அங்கே படர்ந்த மரமொன்று!
கண்கவரும் நீர்த்ததும்பும் நல்ல குளமொன்றும்
பண்பட்ட கோட்டூர் அழகுடன் வெண்தாடி
நண்பர் உலவும் அழகும் அருமைதான்!
பண்பாளர் சோமவீ ரப்பரையே வாழ்த்துவோம்!
தொண்டுள்ளம் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
Wednesday, February 26, 2025
Tuesday, February 25, 2025
Monday, February 24, 2025
Sunday, February 23, 2025
சொன்னால் என்னாகும்?
சொன்னால் என்னாகும்?
சொல்ல முடியவில்லை! மெல்ல முடியவில்லை!
சொல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை!
சொல்வதா? வேண்டாமா? என்றும் தெரியவில்லை!
சொல்லிவிட்டால் என்னாகும்? சொல்.
மதுரை பாபாராஜ்
Saturday, February 22, 2025
தொல்லை கொடுக்காதே!
தொல்லையின்றி இரு!
அவரவர் வேலைப் பரபரப்பில் மூழ்கி
அவரவர் காலைப் பொழுதில் இருப்பார்!
எவரான போதும் அறிந்தேதான் சென்றால்
எவருக்கும் தொல்லையில்லை சொல்.
மதுரை பாபாராஜ்
Friday, February 21, 2025
Thursday, February 20, 2025
Wednesday, February 19, 2025
நொந்தேன்!
நொந்தேன்!
கடன்வாங்கி வாழ்ந்தேன்! தலைநிமிர்ந்து வாழ்ந்தேன்!
கடனின்றி வாழ்ந்தும் தலைகுனிந்து வாழும்
நடைமுறை வாழ்வில் இறுதிப் பகுதி!
அகத்திலே வாட்டம் முகத்தில் தெரிய
அவமானந் தன்னில் குமுறிக் குமுறி
புவியிலே வாழ்கிறேன் நொந்து.
மதுரை பாபாராஜ்
சினம்
சினம்!
சினத்தின் சிகரத்தில் ஆளும் பதற்றம்
கணைபோல சொற்களோ தாறுமாறாய்ப் பாய
அணையுடைத்த வெள்ளம்போல் ஆணவத்தின் கூத்து
அரங்கேற மட்டு மரியாதை எல்லாம்
பறந்திருக்கும் அங்கே! வயதும் பொருட்டோ?
சிறகிழந்தே கைபிசைவார் கேட்டு.
மதுரை பாபாராஜ்
Tuesday, February 18, 2025
CR BALA VISIT
இயல்விருதாளர் பாலா
எங்கள் வீட்டிற்கு வருகைதந்தார்!
நாள் 18.02.25
குறள்நெறி போற்றும் குரிசில்ரா ஜேந்ரன்
இயல்விரு தாளர் கவிஞர்பா லாவும்
அகம்மலர எங்களது உள்ளம் மகிழ
அகத்திற்கு வந்தனர் பேசி மகிழ்ந்தோம்!
எனது மனைவி உடல்நலம் கேட்டார்!
மனதிற் கிதமாக ஆறுதல் சொன்னார்!
வணங்கி மகிழ்ந்தோம் திளைத்து.
மதுரை பாபாராஜ்
Sunday, February 16, 2025
ஐயா துரைசாமி திருவாசகம்
ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!
வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையும் என்றென்றும்
வாழ்வில் நிரந்தர மல்ல! எனவேநீ
சூழ்நிலை நன்றாய் இருந்தால் மகிழ்ச்சியாய்
ஏற்றே அனுபவி! நன்றாக இல்லையா?
சூழ்ந்திடும் துன்பம் நிரந்தரமே இல்லையென்றும்
நல்லவை நாடிவரும் வாழ்விலே எப்படியும்
என்றேதான் நம்பவேண்டும் இங்கு.
மதுரை பாபாராஜ்
Saturday, February 15, 2025
தமிழே சொல்வாயா?
ஐயா,
Friday, February 14, 2025
செ.வ.இராமாநுசன்
வணக்கம்! நேற்று 14-02-2025 வெள்ளிக்கிழமை மாலையில் ஆற்றலுக்கும் போற்றுதலுக்கும் உரிய, 'வள்ளுவர் குரல் குடும்ப'ப் பண்பாளரும் 'குறள்மணம்' விருதாளருமான, மாண்புடைப் பாவலர் - மதுரை பாபாராஜ் அவர்களை, அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தேன். அகமிக மகிழ்ந்தோம்.
இயற்கைக் கனிகளை அன்புடன் வழங்கி மகிழ்ந்தேன். அளவளாவி விட்டு புறப்படும் போது, 'குறள்களுக்கு குறள் வடிவில் விளக்கம்' என்ற புதிய நூல் தனை அடியேனுக்கு வழங்கினார். இந்நூல் அண்மையில் ஐயா அவர்களால் எழுதி வெளியிடப்பெற்ற சிறந்த நூலாகும்.
தமிழ் அன்னையின் மக்களாகப் பிறந்த நாம் அனைவரும், வலிமையும் வளமும் படைத்தவர்களே! இயன்றவரை பிறமொழிக் கலப்புதனைத் தவிர்ப்போம்! இனிமைமிகு தமிழ்மொழியைச் சுவைப்போம்! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வெற்றி நமதே! -
செ.வ.இராமாநுசன்.
மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா!
தங்களின் அன்பான வரவேற்பும் அண்ணியாருடன் அமர்ந்து பேசியதும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
தங்கள் வீட்டு பெண்ணாக உடனிருந்து பார்த்துக் கொள்ளும் பிரியா அவர்களின் உதவிக்கு வாழ்த்துகள்!
வணக்கம் ஐயா!
செ வ இராமாநுசம்
14.02.25
Thursday, February 13, 2025
நண்பர் BSNL இராமசாமி
நண்பர் BSNL இராமசாமி அவர்களுக்கு வாழ்த்து!
சின்னவீடு! வீட்டுக்கு முன்னால் மரக்கிளையில்
சின்னப் பறவை இரண்டோ அழகாக
உட்கார்ந்து பார்த்திருக்க வண்ணத்துப் பூச்சியோ
பற்றுடன் அங்கே பறக்க வணக்கத்தை
நண்பர் இராமசாமி இங்கே அனுப்பினார்!
தந்தவரை வாழ்த்துகிறேன் நான்.
மதுரை பாபாராஜ்
[14/02, 11:04] vovRamasamy:
பாரதி கூடு விட்டுப் பாய்ந்தாரோ பாபாராஜ் ஐயாவுக்குள்! அருமை ஐயா.
🙂👍🙏
[14/02, 11:12] Madurai Babaraj:
பாரதி மலை!
பாபாராஜ் மடு!
அம்மா நினைவுநாள்
அம்மா தெய்வத்திருமதி தேவகி முத்து சுப்பு நினைவு நாள்!
நாள்:14.02.25
இயற்கை எய்திய ஆண்டு:1984
அம்மா! எனநான் கனிவுடன் யாரைநான்
இங்கழைப்பேன்? இந்த உலகைவிட்டே சென்றேதான்
இன்றுடன் நாற்பதாண்டு சென்றதே! உங்களை
என்றுகாண்பேன்? வாழ்விலே உங்களுடன் வாழ்ந்திருந்த
எண்ணற்ற காட்சிகள் உள்ளத்தில் ஓடுதம்மா!
அந்த நினைவுடனே நான்.
எல்லாம் இருக்கிறது! எல்லோரும் இருக்கின்றோம்!
ஆனால் நீ? இல்லையே எங்களுடன்!
காலக் கொடுமை!
என்றும் உங்கள் நினைவுடன்
பாபாராஜ்-- வசந்தா
மற்றும் குடும்பத்தார்
நண்பர் தீத்தாரப்பன்
தென்காசி திருவள்ளுவர் மன்றத்தின் செயலாளர் நண்பர் தீத்தாரப்பன் அவர்களுக்கு வாழ்த்து!
தென்காசி வள்ளுவர் மன்றச் செயலாளர்
நண்பராம் தீத்தாரப் பன்னென்ற நல்லவர்
பண்பார்ந்த மன்றச் செயல்பாட்டை வாழ்த்துகிறேன்!
தன்கருத்தை ஆணித் தரமாகச் சொல்பவராம்!
அன்பர் திருக்குறளை மேற்கோள் தருவதில்
வல்லவராம்! வாழ்க வளர்ந்து.
மதுரை பாபாராஜ்
மனிதத்தேனீ பாடல்
மனிதத்தேனீ பாடல் அ முதல் ஔ நிறைவாக!
பண்பாளர் இரா.சொக்கலிங்கம் அவர்களுக்கு:
அன்பால் அணைப்பவர் மனிதத் தேனீ
ஆற்றல் படைத்தவர் மனிதத் தேனீ
இரக்கம் உள்ளவர் மனிதத் தேனீ
ஈகை நிறைந்தவர் மனிதத் தேனீ
உழைப்பால் உயர்பவர் மனிதத் தேனீ
ஊக்கம் கொடுப்பவர் மனிதத் தேனீ
எளிமையின் சின்னம் மனிதத் தேனீ
ஏணியைப் போன்றவர் மனிதத் தேனீ
ஐயந் திரிபரக் கற்றவர் மனிதத் தேனீ
ஒற்றுமை போற்றுவார் மனிதத் தேனீ
ஓங்குபுகழ் கொண்டவர் மனிதத் தேனீ
ஔவைத் தமிழை வளர்ப்பவர் மனிதத் தேனீ
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!
என்றும் நன்றியுடன்
மதுரை பாபாராஜ்
மனிதத்தேனீ பாடல் அ முதல் ஔ நிறைவாக!
பிறந்தநாள் வாழ்த்து!
அகவைத்திருநாள்
13.02.25
அன்பால் அணைப்பவர் மனிதத் தேனீ!
ஆற்றல் படைத்தவர் மனிதத் தேனீ
இரக்கம் உள்ளவர் மனிதத் தேனீ
ஈகை நிறைந்தவர் மனிதத் தேனீ
உழைப்பால் உயர்பவர் மனிதத் தேனீ
ஊக்கம் கொடுப்பவர் மனிதத் தேனீ
எளிமையின் சின்னம் மனிதத் தேனீ
ஏணியைப் போன்றவர் மனிதத் தேனீ
ஐயந் திரிபரக் கற்றவராம்
ஐந்தும்தெரிந்த வல்லவராம்
ஒற்றுமை போற்றும் நல்லவராம்
ஓங்கு புகழைக் கொண்டவராம்
ஔவைத் தமிழை வளர்ப்பவராம்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!வாழ்க!
பைந்தமிழ் போல வாழ்க! வாழ்க!
என்றும் நன்றியுடன்
மதுரை பாபாராஜ்