Monday, April 07, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


தனிமனித ஒழுக்கம்;
தலைநிமிர வைக்கும்!

உங்கள் மகிழ்ச்சியைக் கட்டமைக்க நம்மிடையே
தன்னொழுக்கம் முக்கியமாம்! பேராசை தோன்றாமல்
கட்டுப் படுத்தும்! கவனத்தை ஈர்த்திருக்கும்!
மேலும் இலக்கை அடைய நெறிப்படுத்தும்!
வாழ ஒழுக்கமே வேர்

மதுரை பாபாராஜ்

Sunday, April 06, 2025

ஒப்பீடு வேண்டாம்

 ஒப்பீடு வேண்டாம்!


இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணித்தான்

இல்லாத ஒன்றின்மேல் பற்றுவைத்தே வாழ்கின்றார்!

ஒப்பீடு செய்யாமல் அந்தப் படைப்புகளைக்

கற்றுத் தெளிவதே நன்று.


மதுரை பாபாராஜ்


Saturday, April 05, 2025

முனைவர் கஸ்தூரி அவர்களுக்குப் பணிநிறைவு வாழ்த்து!


 [06/04, 08:05] PremaVijaya Priya: 

Good morning Sir.

Pls do me a favour.can you pls write a tamil poem for retirement party....

[06/04, 08:13] PremaVijaya Priya: 

Home Science...manaiiyyal ..26 years of service

[06/04, 09:07] Madurai Babaraj:

 முனைவர் திருமிகு கஸ்தூரி அவர்களுக்குப் பணிநிறைவு வாழ்த்து!

மனையியல் பாடத் துறையிலே ஆற்றல்

துலங்க  இருபத்தா றாண்டுகள் நன்கு

பணியாற்றி கற்றதை மாணவிகள் கற்க

அணிசெய்தே இங்கே பணிநிறைவைக் காணும்

முனைவரை வாழ்த்துவோம் சூழ்ந்து.


ஒளிப்படம் காணொளி ஆற்றல் மிளிர

வகைவகையாய் உண்ண உணவு சமைத்தே

அகங்குளிர தந்துவக்கும் பண்பான நட்பின்

வரமென்றால் உண்மைதான் சாற்று.


நகைகள் அணியவைத்தே பார்த்து ரசித்துப்

படமெடுக்கும் பண்பாளர்!

மற்றவர் உள்ளம்

மகிழ்வதைப் பார்ப்பார் மகிழ்ந்து.


செடிகொடிகள் நட்டே இயற்கை அழகை

ரசிக்கும் இயற்கையின் ஆர்வலரை வாழ்த்து!

அகங்குளிரும் நட்பின் நிழல்.


கருத்தாய்க் குழுப்பாடல் தன்னை இயற்றி 

ஒருங்கிணைத்தே மாணவிகள் பாடுகின்ற ஆர்வம்

பெருகிவர வைத்திட்ட பாவலர்  வாழ்க!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தும் இதயம்

திருமதி நிலமங்கை துரைசாமி


 அம்மாவின் ஓவியத்திற்கு வாழ்த்து!

திருமதி நிலமங்கை துரைசாமி!


கொத்து பலூனைப் பிடித்தே மகிழ்ந்திடும்

அட்டகாச மாக சிறுமி குதிக்கின்றாள்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வருண் -- நிக்கில்


 நிக்கில்-- வருண் IPL கிரிக்கெட் போட்டி பார்க்கச் செல்கின்றனர்!


நாள்: 05.04.25


அண்ணனும் தம்பியும் சேர்ந்தே கிரிக்கெட்டின்

கண்கவர் போட்டியைக் காண்பதற்குச் செல்கின்றார்!

அன்புடன் வாழ்த்துகிறேன் இன்று.


மதுரை பாபாராஜ்

நேர்மறை மாற்றத்தை ஏற்போம்


 நண்பர் தென்காசி கிருஷ்ணனுக்கு வாழ்த்து!

எண்ணத்தைப் பாவாக்கித் தந்தால் கிருஷ்ணனோ

கண்கவரும் வண்ணமய மாக்கி மணித்துளியில்

தந்திடுவார்! ஆற்றலை வாழ்த்து

மதுரை பாபாராஜ்

மதுரைபா பாராஜ் அவர்கள் கவிதை

மதுரமாய்த் தித்திக்கு மே

தென்.கி.

Friday, April 04, 2025

நண்பர் பென்னர் மாரிசாமி


 நண்பர் பென்னர் மாரிசாமி அனுப்பியதற்குக் கவிதை!


வாழ்க்கையோ தேநீர் தயாரிப்ப தைப்போல!

ஆணவத்தை நாளும் கொதிக்க விடவேண்டும்!

ஆவியாக விட்டே  கவலைகளைப் போக்கவேண்டும்!

நீர்த்துப்போ கச்செய்க துன்பத்தை நாள்தோறும்!

பாழ்படுத்தும் தப்புகளை நாளும் வடிகட்டி

வாழ்வை மகிழ்ச்சி சுவையாக்கி வாழுங்கள்!

வாழ்க்கையை வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

முயற்சிகளை எல்லாம் முதலீடு செய்தும்
முயற்சியால் நேர்மறை யாக எதுவும்
புலப்பட வில்லையென் றாலுமே இன்னோர்
முறையும் முயல்வதே மாற்று வழியாம்!
சிறப்பாய் அமையுமென்று நம்பு.

மதுரை பாபாராஜ்

Thursday, April 03, 2025

ஆற்றலால் முன்னேறு


 

நிம்மதிக்குத் தூது


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


பலவேலை என்றும் முதன்முறை தன்னில்
களவெற்றி காணாது! நேரம் எடுக்கும்!
சரியாய் வருமென்றே நம்பவேண்டும்! அந்தப்
பணியும் சரியான வெற்றிகாணும் இங்கே!
பொறுமையும் நம்பிக்கை மட்டுமே என்றும்
உறுதுணை யாகும் உணர்.

மதுரை பாபாராஜ்

உளைச்சலே இல்லை!


 

Wednesday, April 02, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சாதிக்க ஏலாத ஒன்றுமற்ற தோல்வியுற்ற
போதிலும்  இந்தப் பணிகளை நாமிங்கே
சாதித்துக் காட்டலாம்! நாமோ விடாமுயற்சி
யோடே இலக்குநோக்கிச் சென்றால் முடியுமே!
ஆமாம்! விடாமுயற்சி கொள்.

மதுரை பாபாராஜ்