கவனம்சிதறாதே
இப்படிப் பேசுங்கள்!
அன்பாகப் பேசுங்கள்! வம்பிழுத்துப் பேசவேண்டாம்!
இன்சொற்கள் பேசுங்கள்! வன்சொற்கள் பேசவேண்டாம்!
பண்படுத்திப் பேசுங்கள்! புண்படுத்திப் பேசவேண்டாம்!
புன்னகைத்துப் பேசப் பழகு.
மதுரை பாபாராஜ்
கோபி பாவா நினைவு!
மதுரை சகாயமாதா தெரு வீடு!
கோபி மிதிவண்டி தன்னில் வருவார்கள்!
வேப்ப மரத்தடியில் நிற்கவைத்து வீட்டுக்குள்
பாசமுடன் வந்திடுவார்! அப்பாவைப் பார்த்தேதான்
நேசமுடன் புன்னகைத்து அம்மா இருக்கின்ற
கூடத்தில் வந்திடுவார் அங்கு.
அடுக்களையில் நாங்களெல்லாம் சேர்ந்தேதான் கூடி
அரட்டை அடித்திருப்போம் எல்லோரும் சேர்ந்து !
இரண்டுவீடாய் உள்ளதால் அப்பக்கம் அப்பா
இருப்பார்கள்! இப்பக்கம் நாங்கள் கோபி
அரட்டை அடிப்போம் மகிழ்ந்து.
அக்காலம் மீண்டு வருமோதான்? ஏங்குகிறோம்!
பொற்காலம் என்றுரைப்பேன் நான்.
மதுரை பாபாராஜ்
இருக்கும் போதே பேசு!
இருக்கின்ற மட்டுந்தான் பேச முடியும்!
இருப்பவர்கள் இங்கே இருந்தவ ரானால்
இருப்பவர்கள் என்றும் இருந்தவ ரோடு
உரையாடக் கூடுமா? சொல்.
மதுரை பாபாராஜ்
வளைந்துகொடு!
பணிவாக வாழலாம்! கோழைமனம் வேண்டாம்!
நிமிரலாம் ஆனாலும் ஆணவம் வேண்டாம்!
வளைந்து கொடுத்தால் சிறப்பான வாழ்க்கை!
வளைய மறுத்தால் இழிவு.
மதுரை பாபாராஜ்
யார்பெற்ற பிள்ளையோ?
தூக்க முடியாமல் மூட்டை தலையிலே!
மாற்றி உடுத்தத் துணியில்லை வாழ்விலே!
ஊற்றெடுக்கும் ஏழ்மை! அலைச்சல் தெருத்தெருவாய்!
யார்பெற்ற பிள்ளை இவள்?
கண்ணே கனியே பவளமே என்றெல்லாம்
என்னென்ன சொல்லி வளர்த்திருப்பார் பெற்றோர்தான்!
மண்ணக வாழ்க்கைப் பயணம் தடம்மாற
என்னபாவம் செய்தாள் இவள்?
மதுரை பாபாராஜ்
இன்றைய சூழல்!
பெற்றோர் பணிக்களம் செல்வதால் இல்லறத்தில்
பெற்றோர் அரவணைப்பும் கண்டிப்பும் இல்லாமல்
உற்றார் உறவினர் சுற்றத்தார் ஆயாக்கள்
என்றேதான் அங்கங்கே உள்ளோர் அரவணைப்பில்
இங்கே குழந்தைகள் வாழ்கின்றார்
நாள்தோறும்!
இன்றைய சூழல் இது.
மதுரை பாபாராஜ்
எவரும் பொறுப்பல்ல!
அவரவர்கள் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்!
தவறவிட்டு நாளும் புலம்புதல் வேண்டாம்!
எவரெனினும் முன்னேற்றம் ஆற்றலால்தான் உண்டு!
அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்!
எவரும் பொறுப்பல்ல! சொல்.
மதுரை பாபாராஜ்
வளைந்து கொடு!
நடப்பதும் நாளும் கடப்பதும் வாழ்வின்
நடைமுறை யாகும்! புரிந்துகொண்டு வாழ்ந்தால்
உலகில் இயல்பாக வாழலாம்! நாமோ
வளைக்க நினைத்தாலோ வாழ்வே ஒடியும்!
வளைந்து கொடுக்கப் பழகு.
மதுரை பாபாராஜ்
திருமண வாழ்த்துப்பா!
நாள் 5/6.4.2022
மணமகள்: கிருத்திகா
மணமகன்: சதானந்த் விஸ்வநாத்
குறள்நெறி போற்றும் குரிசில் குடும்பம்
இறைநெறி போற்றும் அருமைக் குடும்பம்!
மலர்க்கொடி ராசேந்ரன் செல்வ மகளாம்
கிருத்திகா கைத்தலம் பற்றுகின்ற அன்பர்
சதானந்த் விஸ்வநாத் இல்லறம் ஏற்றார்!
நறுந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச
திறமை மிளிர குடும்பத்தார் சூழ
சிறப்புடன் வாழ்க! வளமுடன் வாழ்க!
நிறைவுடன் வாழ்கபல் லாண்டு.
வாழ்த்தும் இதயங்கள்
வள்ளுவர் குறள் குடும்பம்
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
திருமண வாழ்த்துப்பா!
நாள் 5/6.4.2022
மணமகள்: கிருத்திகா
மணமகன்: சதானந்த் விஸ்வநாத்
குறள்நெறி போற்றும் குரிசில் குடும்பம்
இறைநெறி போற்றும் அருமைக் குடும்பம்!
மலர்க்கொடி ராசேந்ரன் செல்வ மகளாம்
கிருத்திகா கைத்தலம் பற்றுகின்ற அன்பர்
சதானந்த் விஸ்வநாத் இல்லறம் ஏற்றார்!
நறுந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச
திறமை மிளிர குடும்பத்தார் சூழ
சிறப்புடன் வாழ்க! வளமுடன் வாழ்க!
நிறைவுடன் வாழ்கபல் லாண்டு.
வாழ்த்தும் இதயங்கள்
வள்ளுவர் குறள் குடும்பம்
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
மனக்கவலை மாற்றல் அரிது!
கவலையே இல்லாத மாந்தரைத் தேடி
அவரிடம் சென்று விசாரித்தேன்! ஆனால்
அவர்கதையைக் கேட்டதும் ஓடினேன் நான்தான்!
இவரென்ன செல்கின்றார் என்றேநான் போனேன்
இவர்கவலை அம்மா! கடலளவு! பார்த்தேன்!
கவலையே இல்லாமல் யாருமில்லை இந்த
உலகத்தில் என்றறிந்தேன் நான்.
வகைவகையாய் இங்கே கவலையை ஏந்தும்
மனிதர்கள் வாழ்கின்றார்! இக்கரைக்குப் பச்சை
நினைக்கின்றார் அக்கரையைப் பார்த்தேதான் மாந்தர்!
மனக்கவலை மாற்றல் அரிது.
மதுரை பாபாராஜ்