Sunday, May 31, 2020

இறுதிவரை???

தெரியாத ஒன்றைத் தெரிந்ததுபோல் வாழ்ந்து
புரியாத ஒன்றைப் புரிந்ததுபோல் வாழ்வோம்!
தெளிவாகும்  நேரம் முதுமைப் பருவ
விளிம்பிலே நிற்போம்!  தெளிந்ததாய் எண்ணிக்
கிளம்புவோம் இவ்வுலகை விட்டு.

மதுரை பாபாராஜ்


பட்டறிவே துணை!

பட்டப் படிப்புகள் எத்தனைதான்  எப்படித்தான்
கற்றுத் தெளிந்தாலும் வாழ்க்கைப் படகுக்குப் 
பட்டறிவே என்றும் துடுப்பாய்த் துணைநிற்கும்!
கற்கும் அனுபவமே வேர்.

மதுரை பாபாராஜ்

வெட்டுக்கிளிகள்!

மதவெறி சாதிவெறி கட்சிவெறி மூன்றும்
படையெடுக்கும் வெட்டுக் கிளிகள்போல் நாளும்
சமத்துவத்தின் வேரைச் சிதைக்கின்ற கோலம்!
சமத்துவம் தோன்றுமா? என்று?

மதுரை பாபாராஜ்

நண்பர் லிங்கராஜ் அனுப்பியது

மக்கள் வருவார்கள் போவார்கள் ஆனாலும்
எக்கறையும் இல்லாத நல்லவர்கள் என்றென்றும்
இத்தரணி போற்றவே வாழ்ந்திருப்பார் எந்நாளும்!
முத்திரைச் சாதனையே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்.

அழகிய தட்டில் இலைகளை வைத்தே
புலர்காலை நேரம் வணக்கத்தைக் கூறும்
உளத்திற்கு நன்றி, வணக்கத்தைக் கூறி
வளர்தமிழ்போல் வாழ்கவென்று வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

பச்சையும் மஞ்சளும் வெண்மையும் ஆடையாய்
இச்சையுடன் போட்டிருக்கும் வண்ணக்  கிளியேபார்!
சற்றும் துணியின்றி ஏழைக் குழந்தைகள்
எத்தனைபேர் வாழ்கின்றார்!
சற்றே துணிகொடுத்தால்
இச்சையுடன்
போட்டு மகிழ்ந்திருப்பார்! தாராயோ?
பச்சைக் கிளிசற்றே தா.

மதுரை பாபாராஜ்

https://youtu.be/yoFgIqwKFGA

மகள் ஆனந்தபகவதிக்கு வாழ்த்து!

முகமலர்ந்து நாங்கள் சிரிக்கவேண்டும் என்றே
மகளிட்ட கட்டளையை ஏற்றுச் சிரித்தோம்
அகங்குளிரத் தானே ஒளிப்படந் தன்னை
முகமலர தென்காசி தன்னில் எடுத்தார்!
மகளாம் பகவதிக்கு நன்றி நவின்றோம்
அகமும் முகமும் மலர்ந்து.

மதுரை பாபாராஜ்

குறளறிஞர் முனைவர் மோகனதாசு அய்யா அவர்களின் துணைவியார் நினைவேந்தல் 31.05.20

வாழ்வியல் எல்லாம் குறளியலாய் மாற்றியே
வாழ்நாள் முழுதும் அளப்பரிய சாதனைகள்
சாதித்த சாந்தியம்மாள்
மோகனதா சய்யாவின்
வாழ்க்கைத் துணைவி
குறளோ வியமென்றே
வாழ்த்தி வணங்கலாம் நாம்.

மதுரை பாபாராஜ்

Saturday, May 30, 2020

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

தாமரைப் பூவிலே நட்பை உள்ளடக்கி
காலை வணக்கத்தை நண்பர் இராமசாமி
ஆர்வமுடன் இன்றோ அனுப்பினார் அன்பாக!
வாழ்க தமிழ்போல் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

வேடம் கலைந்துவிடும !

குறள்களில் நுண்மாண் நுழைபுலம்  மிக்கோர்
குறள்நெறியைப் பின்பற்ற வேண்டும்
வாழ்வில்!
குறள்கூறும் பண்புகளை  மேற்கொள்ள வேண்டும்!
மறத்தல் குறளுக்( கு) இழுக்கு.

மேற்கோள் காட்டி குறளை அடுக்குவார்!
மேடை இறங்கியதும் அப்படியே மாறிடுவார்!
வேடமிட்டு வாழ்தல் முறையல்ல! எப்போதும்
வேடம் கலைந்துவிடும் சொல்.

மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பிய படம்

மகத்தானது நம்குறையை நாமே உணர்தல்!
மகத்தானது நாமே சரிசெய்து வாழ்தல்!
மகத்தானது நம்தவறை நாமொத்துக் கொள்தல்!
தவறைத் திருத்திவாழ்தல் பண்பு.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

வண்ணத்துப் பூச்சியை
பூவிதழ்கள் வைத்தேதான்
நன்கு வடிவமைத்துக் காலை வணக்கத்தை
நட்புடன் தந்தமைக்கு
நன்றி நவில்கின்றேன்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.

மேடையில் பாலா பொழிவினைக் காமராசர்
கேட்டேதான் பாராட்டித் தன்னுடன்
நாடறிய
காரிலே ஏற்றிப் பயணித்த நேரத்தில்
ஆற்றலை நீயேன் இந்த அரசியலில்
ஊற்றுகிறாய் இங்கே பலருள்ளார் நீபடித்து
ஏற்றமுடன் ஆட்சிப் பணிக்கு வரவேண்டும்
நாற்றை மனதிலே நட்டுவைத்தார்! பாலாவும்
ஏற்றே கனியவைத்தார் காமராசர் சொன்னதை!
போற்றுகின்றார் இன்றும் நினைந்து.

மதுரை பாபாராஜ்

பெயர்ச்சொல் வினைச்சொல்!

சாதி! பெயர்ச்சொல்லாய் உள்ளவரை வேற்றுமைதான்!
சாதி! வினைச்சொல்லாய் மாறினால்
ஒற்றுமைதான்!
சாதியை வைத்துச் சாதிக்குச் சாதியோ
சாதிக்கும் எண்ணம் இழிவு.

மதுரை பாபாராஜ்

வெற்றி இடமாக்கு!

வெற்றிடத்தில் வாழ்ந்தாலும் நாளும் உழைத்தேதான்
வெற்றி இடமாக்கி வாழும் துணிவுவேண்டும்!
அற்பமல்ல மானிடனே! அற்புதம் உன்னாற்றல்!
வெற்றியை உன்வச மாக்கு.

மதுரை பாபாராஜ்

Friday, May 29, 2020

கொரோனா பாதுகாப்புக் கவசம்!

(கந்தசட்டிக் கவசம் ராகம்)

களப்பணி யாற்றும் வீரர்க ளுக்கும்
கடமை ஆற்றும் காவலர் களுக்கும்
உயிரைக் காக்கும் மருத்துவர் களுக்கும்
உதவிகள் செய்யும் செவிலியர் களுக்கும்
வணக்கம் சொல்வோம் வணக்கம் சொல்வோம்
நன்றிகள்  சொல்வோம் நன்றிகள் சொல்வோம்!

விதிகளை மதித்தே நடப்பது கடமை
விதிகளை மீறி செல்வது மடமை
முகத்தில் கவசம் அணிந்திட வேண்டும்
கைகளில் உறைகள் அணிந்திட வேண்டும்
கைகளை நன்கு கழுவிட வேண்டும்
மூன்றடி தள்ளி நின்றிட வேண்டும்


தொட்டுப் பேசுதல் தவிர்த்திட வேண்டும்
அருகில் நிற்பதை தவிர்த்திடல் வேண்டும்
கைகளைக் கொடுப்பதை தவிர்த்திட வேண்டும்
வணக்கம் சொல்வதைப் பழகிட வேண்டும்

வாரம் ஒருமுறை பொருள்களை வாங்கு
அடிக்கடி வெளியே செல்வதைத் தவிர்ப்போம்
வெளியே சென்று திரும்பியே வந்தால்
ஆடையை நனைத்துத் துவைத்திட வேண்டும்
வெந்நீர் தன்னில் குளித்திட வேண்டும்
சுடச்சுட வெந்நீர் குடித்திட வேண்டும்

இப்படி வாழ்ந்தால் கொரோனா தொற்றாது
இல்லையேல் நம்மைக் கொரோனா
தொற்றுமே
அரசின் விதிகளை அனுதினம் மதிப்போம்
கொரோனா தொற்றை விலக்கியே வாழ்வோம்

மதுரை பாபாராஜ்

தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்,
பிறர்கை யறவு தான்நா ணுதலும்,
புறம் 157

சங்கச் சுரங்கம்

பிறர்க்கென முயலுநர்-- கவிஞர் பாலா

சங்கச் சுரங்கம் நிகழ்வில் பிறர்க்கென
என்றும் முயல்வோர் தலைப்பில் அற்புதமாய்த்
தந்த விளக்கங்கள் எல்லாம் அருமையே!
சங்கச் சுரங்கம் அரங்கத்தில் கொண்டுவந்த
சங்க இலக்கியம் சார்ந்த புறப்பாடல்
தன்னை எடுத்துரைத்த பாங்கிற்கு வாழ்த்துகள்!
பண்பாளர் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

நானோ மரக்கிளையில் தன்னந் தனியாக!
நீங்களோ வீட்டுக்குள் தன்னந் தனியாக!
ஆர்வமுடன்  எங்களைப் பார்க்கும் பறவையே!
கோலம் கொரோனாவால் தான்.

மதுரை பாபாராஜ்

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

மஞ்சள் நிறப்பூக்கள்
வெள்ளை நிறப்பூக்கள்
ஒன்றாய் இணைத்தே
மலர்க்கொத்தாய் நட்புடன்
தந்த வணக்கத்தால் உள்ளம் மகிழ்கிறது!
நண்பரை  நன்றியுடன் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

செல்வி சிரேயா மொகலீஸ்வரனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

வளைத்தடிப் பந்தாட்ட நாயகியே வாழ்க!
விளையாட்டில் நீயோ இருமுறை தங்கம்
பலமுறை வெள்ளிப் பதக்கங்கள் பெற்றே
வியத்தகு சாதனை இங்கே படைத்தாய்!
உலகம் புகழ  உயர்வுடன் வாழ்க!
வளர்தமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

அய்யா வணக்கம்.

கவிஞர் லலிதா சுந்தர் அவர்களுக்கு வாழ்த்து

சிங்கப்பூர் பேரழகைப் பாவால் படம்பிடித்துக்
கண்ணெதிரே காட்டிய ஆற்றல் அற்புதம்!
வண்டமிழ்ப் பேச்சாளர் பாவலர் என்றேதான்
பன்முக ஆற்றல் நிறைந்தவர் வாழியவே!
சிங்கை லலிதாசுந் தர்வாழ்க நாள்தோறும்!
சந்தத் தமிழ்போல் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி

படித்த ஆண்டுகள் 1961 -- 1965

சேதுபதி பள்ளியில் அக்கால மணிகள்!

தொடர்வண்டி செல்லும் இரும்புத் தகடை
மரத்திலே தொங்கவிட்டு பள்ளி வகுப்பு
ஒருமணி நேரம் கழிந்தால் அடிக்கும்
வழக்கம் ,இருந்தது! கொஞ்சநாள் செல்ல
பளபளக்கும் பித்தளை மணியோ வட்ட
உருவத்தில்  தொங்கவிட்டார்! பள்ளி வகுப்பு
கலைகின்ற நேரம் மணியடிப்பார் வந்து!
ஒலியோ அலையலையாய் வந்தேதான் கேட்கும்!
மணியடிக்கும் ஊழியர் நெற்றியில் பட்டை
மணங்கமழ குங்குமப் பொட்டுடன் பக்தி
மணக்க வருவார் விரைந்து.

மதுரை பாபாராஜ்






நண்பர்கள் இமயம் ,இசக்கிராஜன்

மதுரை பாபாராஜ்-- வசந்தா இணையர் 
ஆசிகள் பொழிகின்றோம்! 

மணநாள் 29.05.1975-29.05.2020=45

இல்லற முத்துக்கள்:
சுபாதேவி-- ரவி-- சுசாந்த் சிரிராம்
எழிலரசன்-- சத்யபாமா-- 
நிக்கில் அபிசேக்-- வருண் ஆதித்யா

நாற்பத்தைந் தாண்டுகள் இல்லறக் கேண்மையில்
ஆற்றலுடன் ஏற்றம் இறக்கத்தில் தோள்கொடுத்து
ஏற்ற துணையாகி நாமிருவர் ஒற்றுமையாய்
ஏற்றினோம் வெற்றிக் கொடி.

மகளும் மருமகனும் பேரனும் நாளும்
மகனும் மருமகளும் பேரன்க ளோடும்
அகங்குளிர வாழ்கின்றோம் சூழ்ந்திருக்கும் கூட்டில்
நிறைவுடன் ஆசிகளைத் தந்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா.

நண்பர் IG சேகர் வாழ்த்து
வணக்கம்...

வாழ்த்துகள்...

பாரதிதாசனின், குடும்பவிளக்கு நாயகர்கள் மணவழகனார் - தங்கம் அம்மையராய், முதியோர் காதலின் இலக்கணமாய் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்...


💐💐💐💐💐
Kavignarkamalkumar:
ஆழ்ந்த காதலில் ஆட்பட் டோராய்
வாழ்ந்த நாட்கள் வளமுறு பாக்கள்
பாக்களின் தொகுப்பைப் பாவலர் திகைக்கப்
பூக்கள் புணைந்தப் புதுமாலை ஆக்கி
தோள்களில் மாற்றித் தோழமை போற்றி
ஒருவர்க் கொருவர் உளமாறச் சூட்டும்
ஒப்பில் வாழ்வைத் துவங்கிய நாளில்
இப்புவி போற்ற இன்னும் பல்லாண்டு
இசைபெற வாழ்க இனிமை காண்கென
இன்தமிழ் கொண்டு இசைத்தேன் வாழ்க
பாபா இணையர் பல்லாண்டு வாழ்கவே !

மதுரை பாபாராஜ்:
அருமை அருமை கவிஞரின் வாழ்த்து
பெருமிதம் கொண்டோம் நன்றிகள் சொன்னோம்
கவிஞர் கமலக் குமாரிங்கே வாழ்க.
புவியிலே புகழுடன் பல்லாண்டு வாழ்க.

மதுரை பாபாராஜ்:
பாபாவுக்கு ஒரு வெண்பாவில் வாழ்த்துப்பா

புலவர்க்கு வெண்பா புலியென்ற பேச்சை
பலவெண்பா பாடி பழங்கதை யாக்கிய
மணநாள்வாழ்த் துப்பா மொழிவனே பாபா
குணத்தினது மேன்மை நினைந்து

பழனிமுத்து

கொஞ்சும் தமிழெடுத்துக் கோபால் பழனிமுத்து
வெண்பாவால் வாழ்த்தை இயற்றிய நட்பிற்கு
நன்றி நவில்கின்றேன்
வாழ்த்தி மகிழ்கின்றேன்!
நம்நட்பு வள்ளுவ நட்பு.

மதுரை பாபாராஜ்

A.C. DURAI:
🙏அய்யா வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்...👍💐💐💐

mohanarasu dr.k:
அருளுடையீர் வணக்கம்

தங்கள் திருமண நாள் வாழ்த்துகள்

-கு. மோகனராசு

Vovramanujan:
ஐயா, வணக்கம்!
     திருப்பங்களை நல்கிய திருமணம் நடந்த நாற்பத்தைந்தாம் ஆண்டில் தங்களிருவரிடமும் வாழ்த்துகளைச் சொல்லி, வாழ்த்துகளைப் பெறுவதில் அகமிக மகிழ்கின்றேன்.
     பல்லாண்டு வாழ்க!

VOVCR:
இல்லறம்.. 

என்ற ஒப்புயவற்ற அருமையான தமிழ்ச்சொல்லின் மாண்புக்கு ஏற்ப, அன்பைப் பண்பாகவும், அறத்தை பயனாகவும் கொண்டு வாழும் உங்களையும், குடும்பத்தினர் அனைவரையும், இந்த இனிய நாளில் வாழ்த்தி மகிழ்கின்றோம்...

பேரா இயற்கையின் பேரருள் தங்களது பயணத்தை வழிநடத்தட்டும்... 

அன்புடன் 
மலர் - சி. இரா குடும்பத்தினர்

Chinnaiya Namasivayam:
மதுரை பாபாராஜ் தம்பதியினர் மென்மேலும் அகமும் புறமும் சிறந்து வாழ இன்றைய 45வது திருமண நாளில் வாழ்த்தி வணங்குகிறேன்🙏

Ayya Durai M:
Wishing you a wonderful Anniversary. 
Many more happy returns of the day .
மனமார்ந்த வாழ்த்துகள்.☘🌹💐🍀🙏

VovSeenivaradharajan:
உலகத் தம்பதியர் தினத்தில் 
உங்கள் திருமண நாள். 

ஆகா! என்ன பொருத்தம் உங்களுக்குள் இந்தப் பொருத்தம் ஆகா! ..

🌹🌹🌹பொன்னான திருமண நன்னாள் வாழ்த்துகள். 🌹🌹🌹

- சீனி வரதராஜன் 
& மோகனா வரதராஜன்

VovAnandhabagavathi:
💐💐💐💐💐💐💐💐
👏👏👏👏👏👏👏👏

Gopal Palanimuthu:
மணநாள் வாழ்த்துகள் 🎊❤️💐

நெஞ்சம் நிறைந்த மணநாள் வாழ்த்துகள்
வாழ்விணையர் வெண்பாக்கவிஞர் பாபா - அம்மா வசந்தா!💐💐💐💐💐

இணையில்லா இணையர் பாபாராஜ் வசந்தா.
நாளும் நலமே விளையட்டும்.

மனிதத் தேனீ சொக்கலிங்கம்

பாபா - வசந்தா இணையருக்கு
இதயம் நிறைந்த மணநாள்
வாழ்த்து!💐💐

வண்ணம் பொலிந்த வசந்தங்கள் பற்பல
இன்னும் கடந்து எழிலோடு என்றுமே
காலங்கள் வென்றுக் கனிந்தே இதமுடன்
ஞாலம் புகழ வாழ்க!

மெய்ஞானி

அன்புத் தம்பதி எனும் சொல்லினுக்கு 
அருஞ்சொற் பொருளாய் விளங்கும் பாபா- வசந்தா அம்மையார் தம்பதியருக்கு
பணிவான வணக்கமும் 
 வாழ்த்துகளும்...🙏🙏🙏💐💐💐

பாலகிருஷ்ணன் கோவை

இல்லற முத்துக்களின் படம் அருமை அருமை 45வது மணநாள் வாழ்த்துக்கள்

வெங்கட் வீ ஓ வி


பொருளில்லார்க்கு?

பொருளில்லார்க்(கு) இவ்வுலகம் இல்லையே  என்று
திருக்குறள் சொன்ன தொலைநோக்குப் பார்வை
கொரோனாவின் தாக்கத்தில் மக்கள் உணரும்
ஒருநிலை வந்ததே சொல்.

மதுரை பாபாராஜ்

Thursday, May 28, 2020

அய்யா வணக்கம்.

கவிஞர் ஆரிசன் அவர்களுக்கு வாழ்த்து.

பன்முக ஆற்றல் கவிஞராம் ஆரிசன்
வண்டமிழ்ப் பாக்கள் புலம்பெயர்ந்த மாந்தரின்
நெஞ்சுருக வைக்கின்ற வேதனையைக் காட்டின!
தன்னாற்றல் சாதனைக்கு இங்கே விருதுகள்
தந்தனர் பாத்திறமை கண்டேதான் முன்வந்து!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

மணநாள்வாழ்த்து
தெய்வத்திரு.ஜோதிபாவா-- தங்கை.திருமதி.ராஜபாக்யம்
இணையர்!

மணநாள்: 29.05.1975-- 29.05.2020=45

இல்லற முத்துக்கள்:
பத்மா-  பிரபாகர்- பிரியா- தர்சன்
நாராயணன்- ரம்யா-- திவ்யஸ்ரீ
கோவிந்தன்- ஆர்த்தி- தியான்

நாற்பத்தைந் தாண்டுகள் இல்லறத்தில்
நல்லறத்தைப்
போற்றித்தான் ஆற்றலுடன் ஏற்றம் இறக்கத்தில்
ஏற்ற துணையாகி பாவாவும் தங்கையும்
ஏற்றினார் வெற்றிக் கொடி.

ஜோதிபாவா ஆசிகள் எல்லோர்க்கும்  எப்போதும்
ஈடின்றி உண்டிங்கே! நம்முடன் இல்லைதான்!
பாடுபட்டு வாழ்ந்தவர் பாசம் பொழிந்தவர்!
நீடுவாழ்வார் என்றும் வணங்கு.


மகளும் மருமகனும் பேரனுடன் பேத்தி
மகன்கள் மருமகள்கள் பேத்தியுடன் பேரன்
அகங்குளிர வாழ்கின்றார் அன்புடன் வாழும்
நிறைவுடன் ஆசிகளைத் தந்து.

ஆசியுடன்
ராஜபாக்யம்

நண்பர் விசாகை மொகலீஸ்வரன் அனுப்பிய படம்

சிட்டுக் குருவிகள் கூட்டினைக் கட்டித்தான்
சற்றுமே அஞ்சாமல் நண்பர் மொகலியின்
கட்டிடத்தில் வாழ்கிறது!
அன்பும் கருணையும்
ஒட்டி உறவாடும் அன்பரை நம்பித்தான்
கூடுகட்டி வாழும் விழைந்து.

மதுரை பாபாராஜ்

[5/28, 7:36 PM] VovMogaleeswarannew: மிகவும் அருமை சார்.
உடனடியாக நமது தாய் தமிழ் வரிகள் கவிதை மழையாய் பொழியும் தனித்திறன் பெருமிதம் கொள்கிறோம். 🙏🙏

பறவைகளின் ஆறுதல்!

பூங்கா முழுதும் வெறிச்சோடி இருக்கிறது!
ஆங்காங்கே உள்ள மரத்தில் பறவைகள்
பாடும் குரல்களோ மாந்தரைக்  கூப்பிட்டு
நாடிவரும் பிஞ்சுக் குழந்தைகள் கூட்டமெங்கே?
காலை நடைப்பயிற்சி செய்கின்ற மக்களெங்கே?
காரணம் தேடி அலைகின்றோம் யார்சொல்வார்?
யாரோதான் பேசுகின்றார் ஏதோ கொரோனாவாம்!
தாரணியே இங்கே முடங்கியதாம்! சொல்கின்றார்!
ஆறுதலாய்ப் பாடுகிறோம்  சேர்ந்து.

மதுரை பாபாராஜ்




மருத்துவர் கு.மோ.பாவேந்தன்-- சுதா இணையரின் மகள்
முனைவர் மோகனராசு அய்யா பெயர்த்தி
கலா பாரதி கயல்விழிக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

நாள்: 28.05.20

நாட்டியம்  ஓவியம் என்றே கலைகளில்
நாட்டிய சாதனைக்குப் பட்டம் பதக்கங்கள்
ஈட்டிய செல்வி கயல்விழி வாழியவே!
பாத்தமிழ்போல் வாழ்க சிறந்து.

முப்பால் குறள்கள் அனைத்தையும் நாட்டியமாய்
சுற்றிச் சுழன்றாடி சாதித்த ஆற்றலுக்கு
கின்னஸ் பதிவேட்டில் சாதனை ஏற்றியுள்ளார்!
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.

குறளறிஞர் மோகன ராசின் பெயர்த்தி
சிறப்புகள் பெற்றேதான் பல்லாண்டு வாழ்க!
அகங்குளிர பெற்றோரின் தாத்தாவின் ஆசி
உடனிருக்க வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா




Wednesday, May 27, 2020

நண்பர் சிரிதரன் அனுப்பிய படம்

நண்பர் சிரிதரனுக்கு வணக்கமும் வாழ்த்தும்!

மலைச்சரிவில் மேகம் தவழ்ந்துவர பூக்கள்
அழகாய்ப் பரந்திருக்க
காலை வணக்கம்
உளங்கனிய நண்பர் சிரிதரன் தந்தார்!
வளர்தமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

நீலமலர் மொட்டுடனும் பச்சை இலையுடனும்
காலை வணக்கத்தைக் கூறும் அழகினை
ராமசாமி நட்புடன் இன்றே அனுப்பிவைத்தார்!
தேனமுத நட்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் ராஜேந்திர பாபு அனுப்பிய படம்

ஆதவனைக் கண்டு மலர்ந்த மலர்களுடன்
தூதனுப்பும் காலை வணக்கத்தின் நட்புதனை
பாசமுடன் ஏற்றேதான் நன்றியுடன் வாழ்த்துகிறேன்!
ராசேந்ர பாபுவை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

உனக்கேன் கொரோனா தனிமை?

குடும்பமாய்த் தொட்டுப் பழகியே வாழ்ந்தோம்!
தடுப்புச் சுவரெழுப்பித் தன்னந் தனியாய்த்
தனித்திருக்கும் கோலம் கொரோனாவால்  இன்று!
மனமிருக்கு வாய்ப்பில்லை! வாய்ப்பிருந்தும் நீயேன்
தனிமையை நாடினாய் கூறு?

மதுரை பாபாராஜ்

திசைமாறும் வாதங்கள்!

சொல்பவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும் என்றேதான்
உள்ளவர்கள் விட்டுவிட்டால் உள்ளங்கள் புண்படாது!
சொல்லுக்குச் சொல்லிங்கே சொற்களத்தைப் போர்க்களமாய்த்
துள்ளவிட்டால் வெற்றுளைச்சல் தான்.

மதுரை பாபாராஜ்

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

வண்ணத்துப் பூச்சி மலர்த்தேனை உட்கொள்ளும்
கண்கவர் காட்சிமூலம்  காலை வணக்கத்தை
நண்பர் இராமசாமி அன்புடன்  தூதுவிட்டார்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

Tuesday, May 26, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய பறவை படம்

எங்களைப்பார்!

விண்ணை அளக்கலாம் மண்ணை அளக்கலாம்
எங்கே நினைத்தாலும் செல்வாய்நீ அச்சமின்றி!
எந்தக் கவசமும் வேண்டாம் உனக்கென்றும்!
எங்களைப்பார் பாதுகாப்பு வேடமிட்டுச் செல்கின்றோம்!
என்று முடியுமோ இந்தக் கொரோனாதான்?
என்றே தெரியாத வாழ்வு.

மதுரை பாபாராஜ்

அய்யா வணக்கம்.

கவிஞர் தியாக இரமேஷ் அவர்களுக்கு வாழ்த்து!

நல்லூர் இவரூராம் சிங்கப்பூர் வாழ்வூராம்!
வெல்லும் தமிழெடுத்து மன்பதைப் போக்கினைத்
துள்ளும் கவிச்சொல்லால் சாடுகின்ற பாவலராம்!
தெள்ளுதமிழ்
போல்வாழ்க சிறந்து.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

கிடைத்த மரத்தில் படரும் கொடிபோல்
கிடைத்திருக்கும் வாழ்வைப் பயன்படுத்தி
வாழும்
நடைமுறையை ஏற்றால்
திருப்தி கிடைக்கும்!
முறையாக வாழ்வோம் உழைத்து.

மதுரை பாபாராஜ்

மூப்பு!

கழுத்தில் தொடங்கி கணுக்கால் முடிய
அழுத்தும் வலியில் நகருது வாழ்க்கை!
வலியின் பிடியில் வதைபடும் மேனி
நலிவதே மூப்பினால் சொல்.

மதுரை பாபாராஜ்

Monday, May 25, 2020

திருமதி ரம்யா நாராயணன் அனுப்பிய காணொளி

கண்ணீரில் தத்தளிக்க வைக்கின்ற வெங்காயம்
தண்ணீரில் ஒட்டாத தாமரைப் பூவாக
கண்கவர கத்தி நறுக்கியே மாற்றியது!
அம்மம்மா ஆற்றலை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நணபர் இராமசாமி அனுப்பிய படம்

உயரத்திற் கேற்றவாறு கண்கள் கவர
மலர்களை அடுக்கி நிறுத்தியே அன்பைக்
கலந்தேதான் காலை வணக்கத்தைக் கூறும்
உளத்தினை வாழ்த்தி வணங்கு.

மதுரை பாபாராஜ்

Kavignarkamalkumar:
தென்றலுக்கு மூச்சுத் திணறல் ஏன்?

மங்கையின் நினைவில் மன்னவன் ஆழ்ந்து
அகமும் முகமும் ஆகமும் குளிர்ந்து
இன்னோரு உலகில் இருப்பவன் போலே
தன்னை மறந்து தன்னை உணராத்
தன்மை கண்டுத் தென்றல் சினந்து
மேலும் மேலும் மிகவும் வேகமாய்
வீசிய தாலே மூச்சும் திணறுமோ

கமல்
26.05.2020


பாட்டுக்குப் பாட்டு!

இருவர்க் கிடையே நுழையும் முயற்சி
இருவரும் தென்றல் நுழைவை வெறுக்க
செருக்குடன் தென்றல் முயலவே தோற்ற
நிலையிலே தென்றலுக்கு மூச்சுத் திணற
கலைந்தது சென்றதே காண்.

மதுரை பாபாராஜ்

நண்பர் ராஜேந்திர பாபு அனுப்பிய காணொளி

நீர்க்குவளை தன்னை அழுத்தினால் மேலெழுந்து
நீர்வழிய பூக்களுடன் காலை வணக்கத்தை
ஆர்வமுடன் சொல்கின்ற நட்பை வணங்குகிறேன்!
வாழ்த்துகிறேன் நன்றி நவின்று.

மதுரை பாபாராஜ்

அய்யா வணக்கம்

மின்கவி சண்முக சுந்தரம் அவர்களுக்கு வாழ்த்து!

மின்கவி சண்முக சுந்தரம்  பாச்சுரங்கம்!
வண்டமிழ்ப் பாக்களின்  மேற்கோள் அனைத்துமே
சிந்தனை வீச்சின் புதிய திருப்புமுனை!
பன்முக ஆற்றல் மிளிர்கின்ற மின்கவி
செந்தமிழ்போல் வாழ்க சிறந்து.

மதுரை பாபாராஜ்

கிழக்கு வெளுக்கிறது கீழடியில்!

50 ஆம் நாள் நிகழ்வு!

உரைவீச்சு: கவிஞர் பாலா
சிந்துவெளி ஆய்வாளர்
மதிப்புறு ஆலோசகர் ஒடிசா அரசு

தமிழியலன் அய்யா குழுவினர் கூட்டம்
இமைக்காமல் ஏற்பாடு செய்யும்  நிகழ்வோ
மிளிர்கின்ற பொன்விழா நாளாகும் இன்று!
தழைக்கட்டும் ஆயிரத்தைக் கண்டு.

கிழக்கு வெளுக்கிறது கீழடியில் என்ற
தலைப்பில் சிறந்த  உரைதந்தார் பாலா!
தரவுகளின் சான்றே தலையாய சான்றாய்க்
கரங்கொடுக்கும்  எனச்சொன்ன ஆய்வின் நிலையைப்
புரியவைத்த பேச்சுக்கு வாழ்த்து.

சங்க இலக்கியம் சொல்லும் பகடைக்காய்
இங்கே அகழாய்வில் கீழடி தந்திருக்கும்
இந்தப் பகடைக்காய் ஒன்றென அற்புதமாய்த்
தந்த விளக்கத்தை மெய்மறந்து கேட்டிருந்தேன்!
செந்தமிழ்போல் வாழியவே நீடு.

மதுரை பாபாராஜ்


Sunday, May 24, 2020

மனிதத்தேனீ சொக்கலிங்கம் 



அனுப்பிய படம்


விழிகளும் இமைகளும்!

பார்க்கும் விழிகளோ பார்ப்பதைத்தான் பார்க்கவேண்டும்!
பார்க்கவே கூடாத காட்சிகளை நாமிங்கே
பார்க்காமல் செல்வதற்கே மூடும் இமைகளும்
சேர்ந்தேதான் உள்ளன! நாமும் சரியான
நேரத்தில் இந்த இரண்டைப் பயன்படுத்தும்
நேர்த்தியைக் கற்றால் மதிப்பு.

மதுரை பாபாராஜ்

அய்யா வணக்கம்.

உளவியல் கவிஞர் சிவகுமார் அவர்களுக்கு வாழ்த்து

மின்வா ரியத்தின் கவிஞர் சிவகுமார்
நம்பிக்கை நாற்றுகளைப் பாக்களில் நட்டுவைக்கும்
அன்பர், உளவியல் பாவலரை வாழ்த்துவோம்!
செந்தமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

கொரோனா ஆத்திச்சூடி!

ன்பைக் காட்ட தழுவாதே

றடி தள்ளி விழித்திரு

ல்லத் திற்குள் தனித்திரு

வதைத் தொடாமல் கொடுத்திடு

லவா தேநீ ஊருக்குள்

ர டங்கைப் பின்பற்று

ச்சில் பழக்கம் கைவிடு

ழையின் பசியைப் போக்கிடு

வ ரோடு நிற்காதே

ருவரை யொருவர் தொடாதே

ய்வை எண்ணிக் கலங்காதே

டதம் தவிர்ப்பது தீதாகும்

கைப் போல உறுதிகொள்.
கொரோனா தொற்றைத் தவிர்த்திடலாம்!

மதுரை பாபாராஜ்


மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியம்

இன்றொருநாள் வாழ்க்கையில் உங்களுக்குச் சேர்ந்தது!
உங்களுக்குத் தேவையது என்பதற்கு என்றல்ல!
இன்னொரு வர்க்குநீங்கள் தேவைப் படலாமே!
என்பதற் கென்றே உணர்.

மதுரை பாபாராஜ்


Mr.K.P.Kannan family

நண்பர் கண்ணனுக்கு நன்றி!

கணினித் துறையிலே வல்லவர் கண்ணன்
இனிமையாய்ப் பேசிப் பழகுகின்ற நண்பர்!
பணியோ அரேபியா நாட்டிலென் றாலும்
கனிவுடன் காணொளி மூலமாய்ப் பேசி
மனதைக் கவர்ந்தாரே இன்று.

மதுரை பாபாராஜ்
24.05.20

Saturday, May 23, 2020

அய்யா வணக்கம்.

பாவலர் செ.மன்னர்மன்னன் வாழ்க!

நந்தனையும் நாவல் பழங்களையும் பாடுபொருளாய்ச்
செந்தமிழ்ப் பாக்களால்
பாடியவர்! பாவலர்!
பன்முக ஆற்றல் படைத்தவர்! மன்னருக்கு
மன்னரான  மன்னரிவர்
பல்லாண்டு  வாழியவே!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் ஆனெட் அனுப்பிய படம்

காலமும் நற்பண்பு நண்பர்கள் இவ்விரண்டும்
வாழ்வில் முதுமைப் பருவம் நெருங்கிவரும்
நேரத்தில்  நாளும் மதிப்புள்ள தாகிவிடும்!
வேராகும் இத்துணை யே.

மதுரை பாபாராஜ்

புகாரும் புகாரும்!

புகாரில் தொடங்கி மதுரையில் பொய்ப்
புகாரிலே சிக்கிக் கொலையுண்டு, இல்லாள்
புகாரையே பொய்யெனக் காட்டி நகரைப்
புகையாக்கிச் சேரநாடு சென்று மலையில்
புகைந்தேதான் நின்றாளே சேர்ந்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் காரைக்குடி தம்பாவுக்கு வாழ்த்து!

மஞ்சள் மலரனுப்பிக் காலை வணக்கத்தை
அன்புடன் தூதுசொல்லும் நண்பராம் தம்பாவின்
பண்பிற்கும் நட்பிற்கும்
ஈடுண்டோ இவ்வுலகில்?
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

நன்றி: திண்டுக்கல் மாவட்ட காவல் துறை

கொரோனாவுக்கு முன்!( கொ.மு.)

பார்த்ததும் கைகொடு! பக்கத்தில் சென்றேதான்
ஆர்வமுடன் செல்லமாய்த் தோள்தட்டு! கூடவே
போய்தான் அமர்ந்தேதான் பேசு! விலகாமல்
நாளும் விளையாடப் போ.

கொரோனாவுக்குப் பின்!( கொ.பி.)

பார்த்ததும் கைகூப்பு! பக்கத்தில் போகாதே!
ஆர்வமுடன் செல்லமாய்த் தட்டாதே! கூடவே
போய்நீயும் உட்கார்ந்து பேசாதே! தூரமாக
பார்த்தே விலகித்தான் நில்லு! பழகாதே!
தாழ்போட்டு வீட்டுக்குள் வா.

மதுரை பாபாராஜ்










Friday, May 22, 2020

பசிப்பிணி மருத்துவன்!

சங்கச் சுரங்கப் பயணத்தில் உங்களுடன்
வந்தோம்! அறிந்தோம் ! வியந்தோம்! இலக்கியத்தில்
பொங்கிப் பெருகிவரும் செய்திகளில் மூழ்கினோம்!
பண்பாளர் பாலாவே பாண்டிநாட்டு முத்தென்பேன்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

என்றும் நட்புடன்
மதுரை பாபாராஜ்

அடச்சே!

அந்த அறையில் இருந்தே அலறினான்!
என்னமோ வென்று பதறித்தான் ஓடினேன்!
அந்த அறையத் திறந்தே நுழைந்துகேட்டேன்!
அந்த இளைஞனோ  கைகளில் கைபேசி பற்றித்தான்
நண்பர்கள் மூவருடன் பேசி இணையத்தில்
ஒன்றி விளையாடும் உற்சாக கத்தலென்றான்!
என்சொல்வேன்? சே!என்றேன் நான்.

மதுரை பாபாராஜ்

Thursday, May 21, 2020

குறள்நெறிக் குரிசில் சி ஆர் வாழ்க.

சிறப்பான பட்டங்கள் மென்மேலும் பெற்றுக்
குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச
அறம்பொருள் இன்பம் வளங்கள் பெருக
சிறப்புடன் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

ஏற்று குறள்விளக்கை!

அதிகாரத் தேடல்!

நாட்டில் அதிகாரத் தேடல் பதவியாசை!
வீட்டில் அதிகாரத் தேடல் பொருளாசை!
ஆர்வமுடன் அஷ்ரப் பதிவிடும் காட்சியில்
ஆர்வமுடன் தேடும் அதிகாரத் தேடலோ
நாளும் குழுவினர் காட்டும் குறளாசை !
நாட்டிலும் வீட்டிலும் தன்னலத் தேடலே!
போற்றும் குழுவோ பொதுநலத் தேடலாம்!
ஏற்று குறள்விளக்கைத் தான்.

மதுரை பாபாராஜ்

அய்யா வணக்கம்.

திரைப்பாடல் வாத்தியார்  ராமையா தாசின்
புகழ்மணக்கும் பாடல்கள் நாடகம் என்றே
மகத்தான தொண்டுகளை இன்று விளக்கிப்
படம்பிடித்த ஆற்றலுக்கு வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

மஞ்சள் மலர்களும் பச்சை இலைகளும்
கொண்டுவந்த காலை வணக்கத்தில் நண்பரின்
அன்புடன் நட்பு மிளிர்கிறது நாள்தோறும்!
நன்றியுடன் சொல்கின்றேன் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

முகநூலில் திருமதி MAGI பதிவிட்ட படம்

வெற்று மரக்கிளையில் வெண்மேகக் கூட்டங்கள்
கொத்து மலர்போல காணக் கிடைக்காத
அற்புதக் காட்சியில்
மெய்மறந்தேன் பார்த்தேதான்,!
நற்றமிழால் போற்றுகிறேன் நான்.

மதுரை பாபாராஜ்

எழுத்துப் பிழை தவிர்ப்போம்!

ரெண்டுசுழி மூன்றுசுழி பழகு!

றன்னகரம் முன்னாலே ன்தானே வருமென்போம்!
டண்ணகரம் முன்னாலே  ண்தானே வருமென்போம்!
தந்நகரம் முன்னாலே ந்தானே
வருமென்போம்!
இந்தப் பிழைநீக்கி நாளும் எழுதினால்
உந்தன் மதிப்புயரும் இங்கு.

(எ.கா) சென்று. செண்டு. பந்து

மதுரை பாபாராஜ்

எழு!

உலகம் உரைக்கும் விடியல் பொழுதை!
உலகின் விடியல் உனது கையில்!
கலக்கம் தவிர்த்தே உழைத்திடு நீயே!
உழைப்பால் விளையும் புதிய உலகம்!
உலகைப் படைக்க எழு.

மதுரை பாபாராஜ்

என்மகளின் நட்புத்தோழி ராபியின் கைவண்ணம்!

இந்திய நாட்டுப் பறவை மயில்தன்னை
இந்திய மங்கை கரங்களால் பற்றுகின்றாள்!
வண்ணப் படத்தின் ஓவிய ஆற்றலில்
என்னை மறந்தேன்நான் பார்த்து.

மதுரை பாபாராஜ்

செருக்கை விலக்கு!

ஞானச் செருக்கினை ஞாலம் வெறுத்திடும்!
தானச் செருக்கைத்  தலைக்கனம் என்றொதுக்கும்!
ஈனச் செருக்கோ தலைக்குனிவை உண்டாக்கும்!
மானே! செருக்கின்றி வாழ்வதற்குக் கற்றுக்கொள்!
தூணும் துரும்பாகும் சொல்.

மதுரை பாபாராஜ்

முன்னணிக்குப் பின்னணி!

ஆண்களின் சாதனை முன்னணிக்குப் பின்னணியில்
தூண்டுகோலாய்ப்  பெண்கள் இருப்பதைப் போலவே
ஆண்களும் பெண்களின் சாதனை முன்னணிக்குத்
தூண்டும்  துணையானார் சொல்

மதுரை பாபாராஜ்

மாண்புமிகு ராஜீவ் காந்தி நினைவுநாள்!

21.05.20

இந்திய நாட்டின் தலைமை அமைச்சராய்த்
தொண்டாற்றி இங்கே தகவல் தொழில்நுட்பம்
முன்னணியில் நின்று தழைக்க வலம்வந்தார்!
இந்தியர்கள் செம்மாந்து வாழ வழிசெய்தார்!
வண்டமிழ்போல் வாழ்க புகழ்.

மதுரை பாபாராஜ்

நானே முரண்!

மூளைக்குள் முரணணுக்கள்!

தாவ ரவியலிலே பட்டம்! கணக்கியல்
வேலை! கவிதை  இயலிலே மூச்செல்லாம்!
மூளைக்குள் எந்தன் முரணணுக்கள் உள்நகைக்க
நாளும் நகர்கிறது வாழ்வு.

மதுரை பாபாராஜ்

Wednesday, May 20, 2020

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்


ஐம்புலனை வெல்வோம்!

ஐம்புலனை வென்றால் நிமிரலாம் கோப்பைபோல்!
ஐம்புலன்கள் கட்டவிழ்ந்தால் வீழ்ந்த  மலரைப்போல்
தன்னிலை தாழ்ந்து தலைகுனிவோம் என்றேதான்
இங்கே விளக்குவதை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்.

சிறகை விரித்து விருட்டென்று வானில்
பறக்கும் பறவையே! உன்னைத்தான் பார்த்தே
பறக்கும் விமானத்தை ஆல்பர்ட்டும்  வில்பர்ட்
உடன்பிறப்பும்  கண்டார்!
பறக்கின்றோம் நாங்கள்!
சிறப்பினைப் பெற்றாயே நீ.

மதுரை பாபாராஜ்