Tuesday, June 30, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்.

அதிகாலை நேரத்தில் வெள்ளைப் பறவை
விடிந்ததைக் கூவி வணக்கத்தைக் கூறும்
குரலின் இனிமையில் மெய்மறந்தேன் இங்கு!
உளங்கனிந்த நட்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

இராணுவப் பொறியியல் துறை
நற்றமிழ் வித்தகர் செ.வ.இராமாநுசன் அவர்களுக்குப் பணிநிறைவு வாழ்த்துப்பா!

30.06.2020

நேரடியாய்ச் சேர்ந்து இராணுவத்தில் தொண்டாற்ற
வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால்
முயற்சித்தே
வாய்ப்பினைப் பெற்றார் இராணுவம்
சார்ந்திருக்கும்
வேலைகள் உள்ள அலுவலகந் தன்னிலே
நாள்தோறும் தொண்டாற்றத் தான்.

ஏற்ற பொறுப்பைத் திறம்படச் செய்தேதான்
ஆற்றிய தொண்டிற்குப் பாராட்டும் வாழ்த்துகளும்
ஏற்றார் மனமுவந்தே! முப்பத்தெட் டாண்டுகள்
நாற்றிசையும் சுற்றிச் சுழன்றேதான்
ஆற்றலைக்
காட்டிய தேனீ இராமா நுசனாரை
போற்றுகிறேன் வாழ்த்துகிறேன்  இன்று.

பொறியாளர் வள்ளுவத்தைப் போற்றும்
குறளின்
நெறியாளர் பல்துறை வித்தகர்! ஏந்தல்
அறிஞர்
அகநக நட்பை முகத்திலே காட்டும்
சிறப்பான பண்பாளர் செப்பு.

இப்பணி தன்னை நிறைவுசெய்து வந்தாலும்
நற்றமிழ்த் தொண்டில் முழுமூச்சாய் ஈடுபட்டு
முத்திரைச் சாதனைகள் பட்டியலில் மென்மேலும்
முத்துக்கள் சேர்ப்பார் மகுடத்தில்!அய்யமில்லை!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

Monday, June 29, 2020

இந்திய மாணவர் ஹர்ஷவர்த்தன்
அரிய கண்டுபிடிப்பு!

பார்போற்ற ஹர்க்ஷவர்த்தன் பல்லாண்டு வாழ்க!

போர்க்களத்தில் கண்ணி வெடிகள், வெடிகுண்டைப்
பார்த்தே அழிக்கின்ற ட்ரோனை வடிவமைத்துச்
சாதனை செய்துள்ளார் ஹர்ஷவர்த்தன்!
வாழ்த்துவோம்!
சாதித்த இந்த இளைஞர் பதினாறே
ஆண்டுகள் ஆனவர்! பார்புகழும் மாணவரை
போட்டிபோட்டு நாடுகள்  நாட்டிற் கழைத்தாலும்
தாய்நாடு இந்தியாவில் வாழ விரும்புகின்றார்!
தாய்நாட்டு வீரர் களைக்காக்க எண்ணுகின்றார்!
பார்போற்ற வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

அய்யா வணக்கம்.

கவிஞர் திருவை பாபு அவர்களுக்கு வாழ்த்து.

ஆழமாக சிந்திக்க வைக்கும் கவிதைகளை
வேழம்போல் இங்கே நிமிரவைத்துக் கேள்விகேட்கும்
பாவலர் பாபு வளர்தமிழ்போல் வாழியவே!
நாவலர் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்.

வாழ்க்கையை சாகசம் செய்யும் கலைபோல
நாளும் பலநிலையில்
நாமோ பயிலவேண்டும்!
வாழ்நாள் முழுதும் பயிற்சி முயற்சிதான்!
வாழ்வை வழிநடத்தும் பார்.

மதுரை பாபாராஜ்
வசந்தா

கோடரி அடித்துக் கொசு போகுமா?

கோடரியை வைத்துக் கொசுவை அடிப்பதும்
ஊரடங்கால் நாளும் கொரோனா
குறைப்பதும்
மாந்தரே ஒன்றுதான்! என்றே நிபுணர்கள்
ஊடகத்தின் முன்சொன்னார் இன்று.

மதுரை பாபாராஜ்

அருமை அய்யா வணக்கம்

அருட்கவி வீரபாண்டியத் தென்னவன் அவர்களுக்கு வாழ்த்து!

மூச்சுக்கு மூச்சு மரபுக் கவிதைகள்
ஊற்றெடுக்கும் பாவலர் தென்னவன்  வாழியவே!
ஆசுகவி மற்றும் அருட்கவி நற்றமிழ்போல்
நாடுபோற்ற வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

Sunday, June 28, 2020

திரைப்பட விதி!

விதி 1.

முதலில் அடிப்பவர் வில்லன்! இரத்தம்
சிதறுவதைப் பார்த்ததும் நாயகன்  துள்ளித்
துடித்தேதான் வில்லனைத் துவம்சம் புரிவார்!
அடிப்பதும் வாங்குவதும் எல்லாம் நடிப்பு!
துடிப்பார் ரசிகர்கள் பார்த்து.

விதி 2

அடிகளை  வாங்குவார் நாயகன்! சோர்ந்து
பிடிமானம் இன்றி விழுவார்! எழுந்தே
அடிகொடுங்கள்! நாயகி சொன்னதும்  வீரம்
வெடிக்க நிலைகுலைந்த நாயகன் அங்கே
மலைபோல் எழுந்து விளாசி எறிவார்!
கலையுலகம் ஏற்கும் விதி.

மதுரை பாபாராஜ்




ஊடக நேரம் வீண்!

கூட்டம் நடக்குமுன்பே பேசுவதை யூகிக்க
ஊடகம் வாதமேடை போட்டு நடத்துவது
நேரத்தை வீணடிக்கும் வேலைதான்!
கூட்டத்தின்
தீர்மானம் வந்தபின் சாதக பாதகங்கள்
வாதப் பொருளானால் நன்று.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

நண்பருக்கு வணக்கம்!

மரங்கொத்தி- மனங்கொத்தி!

மரங்களைக் கொத்துவாய் என்றுணர்ந்தும் உன்னை
வரவேற்கும் இந்த மரங்களைப் போல
மனங்கொத்தி வாழும் மனிதருக்கும் வாழ்க்கை
தினமும் இடமளிக்கும் செப்பு.

மதுரை பாபாராஜ்

வள்ளுவர் படத்துடன் தம்பி கஜராஜ்

மருந்து அதிகாரம் தந்தவர் அய்யன்!
மருந்துகளை விற்பனை செய்கின்ற தம்பி
திருவள் ளுவர்நூலைக் காட்டித்தான் பார்க்கும்
பொருத்தம் மிகநன்று பார்.

மதுரை பாபாராஜ்

Saturday, June 27, 2020

பாலாவைப்போல் யாருண்டு?

பாலாவுக்கென்ன?

பாலாவுக் கென்ன உடனே எழுதுகின்றார்!
ஆரவார மின்றிக் கருத்தை விதைக்கின்றார்!
ஆயிரம் வேலைப் பரபரப்பில் எப்படித்தான்
பாலா எழுதுகின்றார்? சொல்.

மதுரை பாபாராஜ்

3-133-1330

மூன்று கடல்களில் மூழ்கித் திளைத்தவர்!
நூற்றுக் கணக்கில் அதிகாரம் கொண்டவர்!
ஆயிரம் முத்துகளை வாரி வழங்கியவர்!
வான்புகழ் வள்ளுவர் தான்.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்!

என்றும் தனிமையில் வாழ்ந்து பழகிவிட்டாய்!
அன்றுசொன்னார் கூடிவாழ்ந்தல் கோடிநன்மை என்றுதான்!
இன்று கொரோனாவால் கூடாமல் வாழென்றார்!
என்றும் தனிமைதான் உன்னைப்போல் எங்களுக்கும்!
கொஞ்சம் சொல்லிக் கொடு.

மதுரை பாபாராஜ்

ஆர்வமும் ஆற்றலும்!

வாய்ப்புகள் உள்ளன! ஆற்றல் இருக்கிறது!
ஆர்வமே இல்லையென்றால் யாரைக் குறைகூற?
வாய்ப்பைப் பயன்படுத்தி ஆற்றலைக்
காட்டித்தான்
ஆர்வமுடன் நாளும் உழைத்தால் உயரலாம்!
ஆர்வமே சாதனையின்  வேர்.

மதுரை பாபாராஜ்

அய்யா வணக்கம்.

தெய்வத்திரு கவிஞர் கவியழகன் அவர்களை வணங்குகிறேன்.

எண்ணற்ற சிந்தனையை எண்சீர் விருத்தத்தில்
மன்பதைத் தோட்டத்தில் நாளும் விதைத்தவரை
அம்மா! இயற்கை பறித்ததேன் தேடிவந்து?
அன்பரை என்றும் வணங்கு.

மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பிய படம்

உங்களை மற்றவரின் உள்ள விருப்பமாக
இங்கே அனுமதிக்கும் போது உங்களின்
முன்னுரிமை யாகத்தான் யாரோ ஒருவரை
என்றும் அனுமதிக்க வேண்டாம் உணருங்கள்!
உன்னையே நீதான் உணர்.

மதுரை பாபாராஜ்

நண்பர் மொகலீஸ்வர் வீட்டு மாடித் தோட்டம்

தோட்டம் தரையில் இருந்தேதான் மாடிக்கு
மாறியது! நண்பர் மொகலீஸ்வர் ஆர்வமுடன்
நாளும் உழைக்கும் உழைப்பு தெரிகிறது!
காலமாற்றம் கோலமாற்றந் தான்.

மதுரை பாபாராஜ்

அய்யா வணக்கம்.

கவிஞர் கு.வேலு அவர்களுக்கு வாழ்த்து.

சுற்றுப் புறச்சூழல், எப்படிப் பாதுகாப்பாய்ச்
சுற்றவேண்டும் வேலைக் களத்திலே என்றெல்லாம்
அக்கறையாய்ப் பாக்களை அள்ளித் தெளிக்கின்ற
நற்றமிழ்ப் பாவலர் வேலு தமிழ்க்கடல்தான்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

Friday, June 26, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

உருவுகண்டு எள்ளாமை வேண்டுமென்றார் அய்யன்!
உருவில் பெரிதான எங்களுக்கோ உன்போல்
சிறகில்லை எண்ணும் இடத்திற்குச் செல்ல!
அடங்கிவிட்டோம் வீட்டிற்குள் இந்தக் கொரோனா
அடங்கினால்தான் எங்களுக்கு வாழ்வு.

மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பிய படம்

இயற்கை பொருட்களைக் கையாள் வதைப்பார்!
உடைந்துவிட்ட மேகம் மழைபொழியும் நாட்டில்!
உடைந்துவிட்ட மண்ணோ வயலாகும் நாட்டில்!
உடைத்த பயிரோ
விதைகளைத் தூவும்!
உடைந்த விதைகள் புதிய பயிருக்கு
உயிர்தரும்! நீங்கள் மனமுடைந்து போனால்
இயற்கை மகத்தான வாழ்வளிக்க வாய்ப்பை
வழங்கிடத்தான் என்றுநீ நம்பு.

மதுரை பாபாராஜ்

சங்கச் சுரங்கம் பாலாவுக்கு வாழ்த்து.

26.06.20

மேலோட்ட மாகத்தான் பேசாமல் ஆர்வமுடன்
ஆழமாக பல்வேறு சங்க இலக்கிய
நூல்களில் மேற்கோள்கள் காட்டிய ஆற்றலை
வாழ்த்தி வணங்குகிறேன் இங்கு.

நடைமுறை வாழ்க்கையைக் கொண்டுவந்து கண்முன்
படம்பிடித்துக் காட்டிய காரணங்கள் நன்று!
முதுமை வறுமை தனிமை உணர்வுகளை
எடுத்தாண்டு பல்வேறு சூழ்நிலைகள் வாழ்வில்
படுத்துவதைச் சொன்னதெல்லாம் மெய்.

மதுரை பாபாராஜ்

Thursday, June 25, 2020

முத்தொள்ளாயிரம் பாடல் 34

“புலவி புறக்கொடுப்பன் புல்லிடின் நாண்நிற்பன்
கலவி களிமயங்கிக் காணேன்;---நிலவியசீர்
மண்ணாளுஞ் செங்கோல் வளவனை  யானிதன்றோ
கண்ணாரக் கண்டறியா வாறு”

வந்தார்! அணைத்தேனா? இல்லை திரும்பிநின்றேன்!
பொங்கிய ஊடலால் நின்றேன் முதுகுகாட்டி!
என்னை அணைத்தபோது அந்தமுகம் பார்த்தேனா?
என்புலன்கள் அய்யோ! மயங்கின பார்க்கவில்லை!
என்னவனைக் கண்ட அழகிதுதான் பாருங்கள்!
எங்கே அவனைத்தான் காணவில்லை?
வந்ததெல்லாம்
கண்ட கனவிலா? சே.

மதுரை பாபாராஜ்


ஹைக்கூ
திரும்பி ஊடல்கொண்டேன்;அணைத்தார் தலைகுனிந்தேன்;
விரும்பிய கூடலில் விழியிழந்தேன்; வளவன்
திருமுகத்தை நான் கண்ட அழகடியோ தோழி!

கே ஜி ராஜேந்திரபாபு



சிறுபாணாற்றுப்படை!

26.06.20 மாலை 7.30 மணி

கவிஞர் பாலா இ.ஆ.ப.

அவர்களுக்கு வாழ்த்து!

முதுவோர்க்கு முகிழ்த்த கை!

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்,
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்,
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்,
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்,
நீசில மொழியா அளவை.
( அடிகள் 231-235)

சிறுபாணாற் றுப்படைப் பாடல் வரிகள்
நறுந்தமிழ்ப் பாயும் தலைப்பாக பாலா
தொடுக்கும் சிறப்பில் தமிழ்த்தாய் மகிழ்வாள்!
கொடுக்கும் தமிழ்விருந்தோ கேட்போர் செவிக்கு
நறுந்தேன் சுவைதான் இங்கு.

சீறியாழ் ஏந்தும் பாணனே! செம்பாலை
தொடுத்தேதான் பாடுக! பாடுகின்ற நேரம்
எடுத்தெடுத்தே ஐந்து பெருங்குரவர் வாழ
கொடுத்துச் சிவந்த குவித்த கைகள்
உடையவனாம் , ஏரினால் வாழ்வோர் துயரை
நிழலாய் இருந்தேதான் நீக்குகின்ற செங்கோல்
அரசுடைய வேந்தனாம்! நல்லியக் கோடன்
பெருமையைப்  பாடு புகழ்ந்தென்றே கூறும்
அருமை வரிகள் இது.

மதுரை பாபாராஜ்

Vovemayavaramban:

வாழ்த்த சொற்கள் தடுமாறும் இந்நிலையில்
கவிதையின் சிறப்பை
கவிஞரே என் சொல்வேன்!
வாழ்த்துகள் பாவாணரே!
👏👏👏👏👏👏👏👏
: 🙏
இமயம்போல் வாழ்வில் உயர்வான எண்ணம்
இதயம் பொழிவதால் வாழ்த்து மழையில்
இமயம்போல் நானும் நனைகின்றேன்! யார்தான்
இமய வரம்பனுக் கீடு?

மதுரை பாபாராஜ்






நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

கூட்டுப் பறவை இணையரின் ஒற்றுமையை
வீட்டுப் பறவை இணையர் கடைப்பிடித்தால்
வீட்டுக்கு வீடு மகிழ்ச்சிதான் நாட்டில்!
வேற்றுமைக் கில்லை இடம்.

மதுரை பாபாராஜ்

முன்னோடிகள்!

யானைவரும் பின்னே மணியோசை தான்வரும்
யானைக்கு முன்னே! இதுபோல் குடும்பத்தில்
சாதனை செய்பவர் முன்னோடி யாகிடுவார்!
சாதிக்கும் இந்த மணியோசை முன்கேட்கும்!
சாதனையைப் பார்த்து மலைபோன்ற யானைபோல்
சாதிப்பார் பின்வந்தோர்! வந்ததும் முன்னோடி
வேடிக்கை பார்த்திருப்பார் யானை கடந்துபோகும்!
பாடிவந்த அந்த மணியோசை கேட்டதால்
ஆடிவந்த யானைக்குக் கைதட்டு தந்தார்கள்!
வேடிக்கை பார்த்த மணி.

மதுரை பாபாராஜ்

தம்மின் தம் மக்கள் அறிவுடைமை....

ஆள்வினையும்
ஆன்ற அறிவும்
எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி

சி ஆர்

ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்.

பனிமூட்டம் சூழ்ந்த காட்டு மரங்கள்,
மணக்கும் மலர்கள்,செடிகள் அசைய
மனங்கவர் காலை வணக்கத்தைக் கூறும்
இணையிலா நட்பினை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Wednesday, June 24, 2020

அனைவருக்கும் வணக்கம்.

என்னதான் பார்த்தாலும் சாலையிலும் சோலையிலும்
அன்றுபோல் கூட்டம் பரபரப்போ இன்றில்லை!
இன்றோ கொரோனாவின் தாக்கம் தவிர்ப்பதற்கே
எங்களை நாங்களே வீட்டில் முடக்குகின்றோம்!
வண்ணப் பறவையே நீதான் கொடுத்துவைத்தாய்!
அஞ்சாமல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

குறள்கள்-- தும்மல் -- கொரோனா!

தும்மலைக் காதலுக்குக் காரணமாய் வள்ளுவர்
என்ன அழகாகக் கையாண்டார் அக்காலம்!
தும்மல் கொரோனாவின் காரணமாய் மாறியதால்
அஞ்சுகிறோம் தும்மலைக் கேட்டு.

மதுரை பாபாராஜ்

அய்யா வணக்கம்.

கவிஞர் பாரதி பத்மாவதி அவர்களுக்கு வாழ்த்து.

அனல்பறக்கும் சொற்களைப் பாக்களாய் மாற்றி
மனக்குமுறல் தன்னைத் தெளிவாகச் சொல்லும்
சமுதாயப் பாவலர்
வாழ்க மகிழ்ந்து!
தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

நண்பர் துபாய் வெங்கடேஷ் அனுப்பிய படம்.

தென்னை மரங்கள் உயர்வான கோபுரங்கள்
தண்ணீர் நிறைந்திருக்கும் தெப்பக் குளநடுவில்
மண்டபம் பார்த்து ரசிக்க
அழகுதான்!
அன்புடன் வாழ்த்து, வணங்கு.

மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பிய படம்

🙏வணக்கம்

நம்பிக்கை என்பது மற்றவரைக் காட்டிலும்
உன்னைச் சிறப்பாக எண்ணிக் களிப்பதல்ல!
உன்னைநீ மற்றவருடன் ஒப்பிடக் காரணமே
இங்கில்லை என்றுணரும் பக்குவப் பண்புதான்
உன்னை மனிதனாக்கும் சொல்.

மதுரை பாபாராஜ்

திருமதி.ரம்யா நாராயணன் அனுப்பிய படம்


ஒருகால் தரையிலே ஊன்றி மறுகால்
சுவரினைத் தாண்டித்தான்  செல்லத் துணியும்
மலைபோன்ற யானை முயற்சியைப் பார்த்தேன்!
மலைத்தேன் வியந்தேன் சிலிர்த்து.

மதுரை பாபாராஜ்

கவிதை 2 e pass not necessary

யானையின் நினைப்பு!

மாவட்டம் விட்டேதான் மாவட்டம் செல்வதற்கு
மாவட்ட ஆட்சி அனுமதி வேண்டுமே!
தாவித்தான் சென்றுவிட்டால்  வந்துவிடும்  மாவட்டம்!
யாருடைய  நேயம், அனுமதி தேவையில்லை!
ஊருக்குள் சென்றிடுவேன் நான்.

மதுரை பாபாராஜ்

கணவன்

கணவன்

மனையறம் காக்கும் கடமைப் பொறுப்பில்
மனைவிக் குரிய மதிப்பை அளித்தே
இணக்கமுடன் வாழ்தல் கணவன் சிறப்பு!
இணக்கமே இல்லறத்தின் வேர்.

மதுரை பாபாராஜ்

பலாப்பழம் பறித்த யானை!

தொலைக்காட்சியில் கண்டேன்!

காட்டுயானை ஒன்று பலாமரத்தைப் பார்த்தேதான்
வேட்கை யுடனே பலாவைப் பறித்தெடுக்க
கால்களை அந்த மரத்திலே வைத்தேதான்
நீட்டியது தும்பிக்கை யைத்தான் பழம்நோக்கி!
ஆட்டியதும் அந்தப் பழங்கள் விழுந்தன!
காட்டுயானை தன்பசியைத் தீர்த்த முறைகண்டேன்!
காட்சியைக் கண்டேன் வியந்து.

மதுரை பாபாராஜ்



தந்தை!

பிள்ளைகள் போக்குவரத்தின் வேகம்
விவேகமாய்ச்
செல்வதற்கு வேகத் தடையாக மாறுவார்!
இல்லறத்தை ஏற்கும் சுமைதாங்கிக் கல்லாவார்!
பிள்ளைகள் ஏற்றம் இலக்கு.

மதுரை பாபாராஜ்



மனைவி

மனைவி!

பாத்திரத்திற் கேற்றவண்ணம் தண்ணீர் அனுசரிக்கும்!
வாழ்க்கையில் இல்லறச் சூழ்நிலைக் கேற்பத்தான்
வாழப் பழகுபவள் தாரமாகி  தாயாகி
நாளும் வழிகாட்டும் தோழியாகி வாழ்க்கையில்
தோளோடு தோள்நிற்பாள் என்றும் மனைவிதான்!
காலம் கொடுக்கும் கொடை.

மதுரை பாபாராஜ்

Tuesday, June 23, 2020

நிகரற்றவள் தாய்!

நாடித்தான் சென்றால் மரங்கள் நிழலளிக்கும்!
தேடித்தான் சென்றால்  அருவி அரவணைக்கும்!
தேடாமல் நாடிவந்தே நம்மை அரவணைத்தே
நாளும் நிழலளிப்பாள் தாய்.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

எப்படி இந்தக் கொரோனா முடியுமென்றே
ஒற்றைப் பறவையே உற்றுத்தான் பார்க்கின்றாய்!
முற்றுப் பெறுமா? தொடருமா? யாரறிவார்?
இக்கேள்விக் கென்ன பதில்?

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

ஓடி உழைத்து வருவோர்கள் வீட்டிற்குள்
நாடி அமர்வது நாற்காலி மீதுதான்!
ஈடற்ற அன்பின் அடையாளம் காட்டித்தான்
வேடமற்ற காலை வணக்கத்தைக் கூறுகின்ற
ஊடகத்தை வாழ்த்தி வணங்கு.

மதுரை பாபாராஜ்
வசந்தா

Monday, June 22, 2020

திருமிகு.ராபி நத்தேனியல் காணொளிக்கு எழுதிய கவிதை!

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைப்போம்!
கொரோனா வருவதற்கு முன்பிருந்த வாழ்க்கை
இயற்கை மலைகள் மலைத்திடும் வண்ணம்
பயணம் பயணமென்றே சாகசத்தை நாடிப்
பலமலைகளை வென்றேன் ரசித்தேன் சிலிர்த்தேன்!
கொரோனாவின் காலமாக ஊரடங்கு வந்து
அடக்கியதே! ஆனால் கலையார்வம் கொண்டேன்!
திறமையைக் காட்டி பலவண்ணம் தீட்டி
கடக்கின்றேன் என்பொழுதை நேர்மறை யாக!
அடடா! அற்புதமே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

அய்யா வணக்கம்!

கவிஞர்  முனைவர் வே.ஸ்ரீலதா அவர்களுக்கு வாழ்த்து.

 கூரிய சொற்களால்  பாக்கள்
படைக்கின்ற
வாழ்வியல்  பாவலர் பண்பாளர் ஸ்ரீலதா
ஆர்வமும் பன்முக ஆற்றலும் ஊற்றெடுக்க
வாழ்க தமிழ்போல் வளர்ந்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

🙏நண்பருக்கு வணக்கம்.

பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் பிள்ளையை
எப்படிப் பாதுகாக்கும் என்றே உணர்த்துகின்ற
இப்படம்  காலை வணக்கத்தை அன்புடன்
நட்புடன் கூறுவதை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

 Ravidubai:
🌹Good Morning 🌹

The importance of Good People in our Life is just like the Importance of Heartbeats....
It is not Visible, but silently Supports our Life....

Have a nice day🙏

நம்முடைய வாழ்க்கையில் நல்லோரின் முக்கியம்
என்றும் இதயத் துடிப்புகளின் முக்கியம்போல்
கண்களுக் கிங்கே தெரியாது! ஆனாலும்
அன்பாய் அமைதியாய் ஆதரவை நம்முடைய
மண்ணக வாழ்வில்
வழங்கி வருவார்கள்!
பண்பாளர் பண்பாளர் தான்.

மதுரை பாபாராஜ்

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

செடியிலே பூத்த மலரோ வளைந்தே
நதிநீரைத் தொட்டுத்தான்
நன்றியைச் சொல்லும்
அதிகாலை அன்பு வணக்கப் படத்தை
மகிழ்ச்சியுடன் அனுப்பினார் இராமசாமி இன்று!
அகத்தால் வணங்குகிறேன் நான்.

மதுரை பாபாராஜ்

Sunday, June 21, 2020



குறள் 448
குடித்துவிட்டுச் செல்வான் குடிசைக்குள் சண்டை!
அடிதடி ஓசை குழந்தை அலறும்!
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடுமென்றார் அய்யன்!
இடித்துரைத்தாள் இல்லாள் கணவனை நோக்கி
அடிவாங்கி நின்றாள் அழுது.
மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

நண்பருக்கு வணக்கம்.

சிறகை விரித்தால் பறப்பாய் உலகில்!
கவிஞன் சிறகின்றிப்
புவியில் பறப்பான்!
அவனியில்  எல்லை
அவனுக்கோ இல்லை!
கவிஞனின் ஆற்றலுக்கு முன்னேநீ தோற்பாய்!
செருக்கின்றிச் சென்றுவா நீ.


  • மதுரை பாபாராஜ்

பேரனின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

விரல்களில் வண்ணம் செயற்கையாய்ப் பூசி
இயற்கை மலர்களைக் கைகளிலே அள்ளி
வழங்கியே காலை வணக்கத்தைக் கூறும்
அழகை ரசிக்கின்றோம் ஏற்று.

மதுரை பாபாராஜ்
வசந்தா

நண்பர் வீரமணி போல யாருளார்,?

தந்தையைப் பார்க்க வரும்போது   வாங்கபாபா
என்றே வரவேற்பார்! பாக்கள் எழுதிய
வெண்தாளை ஆர்வமுடன் அங்கே பிரித்தேதான்
செந்தமிழ்த் துள்ளும் கவிதைகளை வாசிக்கும்
அந்த அழகே அழகு.

காணொளியைக் கண்டேன்! மலரும் நினைவுகள்
ஏக்கப் பிடியிலே தள்ளியது! வெள்ளந்திப்
பேச்சும் களங்கமற்ற புன்சிரிப்பும் பண்பாளர்
வீரமணி பேர்சொல்லும்! அத்தகைய நண்பர்கள்
யாருளார் என்தமிழே? சொல்.

மதுரை பாபாராஜ்
21.06.20

Saturday, June 20, 2020

கதிரவ மறைப்பு!
SOLAR ECLIPSE
21.06.20

அடுத்த நிகழ்வு 2031!

கதிரவன்  மற்றும்  உலகுக் கிடையே
நிலவு கதிரை மறைக்கும் நிகழ்வே
கதிரவனை முற்றும் மறைக்கும் நிகழ்வு!
இதை வெறுங்கண்ணால் பார்த்தாலோ பார்வை
பறிபோக நேரும்! அறிவியல் உண்மை!
நெறிமுறையைப் போற்றுதல் நன்று.

மதுரை பாபாராஜ்

வள்ளலாரை வணங்குகிறேன்!

வள்ளலார் அள்ளி வழங்கிய பண்பட்ட
உள்ளக் கருத்துகள் சீர்திருத்தப் பெட்டகமாம்!
வெள்ளை உடையுடுத்தி உள்ளதை உள்ளவாறே
சொல்லிய வள்ளலாரைப் போற்றி வணங்குவோம்!
சன்மார்க்கம் வெல்க தழைத்து.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

விடியல் பொழுதில் கதிரவன் வானில்
வெளிவர அவ்வொளி நீரில் தெரிய
தெளிந்த கடற்கரையில் செம்மலர்கள் காலை
வணக்கத்தைக் கூற
மகிழ்ந்தோம் ரசித்து!
வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் இன்று.

மதுரை பாபாராஜ்
வசந்தா

சிலப்பதிகாரம் நிறைவு!

கவிஞர் கமல்குமாருக்கு வாழ்த்து!

கற்புக் கடம்பூண்ட கண்ணகியின் காப்பியத்தை
அற்புதச் சந்தத்தில் பாவியமாய் ஆக்கிவிட்டார்!
சொற்சுவை மற்றும் பொருட்சுவை ஏந்திவர
அப்படியே தந்த கவிஞர் கமல்குமார்
நற்றமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

சோழநாட்டில் இல்லறத்தில் கோவலனை ஏற்றவள்
வாழ்க்கையின் சூழ்நிலையால்
பாண்டிநாட்டில்  சென்றவளோ
கோவலனைத் தானிழந்தாள் கள்வன் பழிசுமந்தே!
கோவலனைக் கள்வனல்ல என்றே நிரூபித்தாள்!
மாமதுரை தன்னை எரித்தாள்! முடிந்ததும்
சேரநாடு சென்று மலையேறி கோவலன்
தேரேறி சென்றாள் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

இலக்கியக் காட்சி!

முத்தொள்ளாயிரம் பாடல் 45

தானைகொண்டோடுவ தாயின்றன் செங்கோன்மை
சேனை அறியக் கிளவேனோ—யானை
பிடிவீசும் வண்டடக்கை பெய்தண்டார்க் கிள்ளி
நெடுவீதி நேர்பட்ட போது.

தானை=ஆடை:  வண்தடக்கை= வழங்கும் நீண்ட கை;  தண்டார்=

கொடைமடம் உள்ளவன் கிள்ளிதான்! ஆமாம்
கொடுக்கும் கரங்கொண்டோன் என்றபோதும் நானோ
படைமுன்னே கேட்பேன் செங்கோலன்  நீயா?
நடைபோடும் தோழியே என்னசெய்தான்  என்பாய்?
கொடுக்கும் அவனைநான் பார்த்ததும் ஆடை
நழுவியதே அப்படிச் செய்துவிட்டுச் சென்றான்,!
அடுக்குமா சொல்வாயா தோழியைக் கேட்டாள்!
படுத்துகின்ற பாட்டிலே மாது.

மதுரை பாபாராஜ்

ஹைக்கூ
களிறு பிடிகளை வழங்கும் வளவனை
வெளிவீதியில் படைகள்முன் வினவுவேன்;நீ
அளிமிக்கோன் எனில் ஏன் கவர்ந்தாய் என் ஆடையை

கே ஜி ராஜேந்திர பாபு

Friday, June 19, 2020

முறத்திலே நெல்மணிகள் போட்டுதான் மங்கை
திறம்படக் கல்லையும் நெல்லையும் பார்த்துச்
சிறப்பாய்ப் பிரித்தெடுப்பாள்! வாய்ப்புக் கிடைத்தால்
முறத்தால் புலியையும் ஓட விரட்டும்
திறமையைக் காட்டுவாள் பெண்.

மதுரை பாபாராஜ்

நண்பர் கவிஞர் ராஜேந்திர பாபு அனுப்பிய படம்

கோப்பைக் குளம்பியும் தட்டிலே ரொட்டியும்
பூக்களோ அங்கங்கே வாழ்த்திசைக்க நட்புடனே
வாழ்த்தி வணக்கத்தைக் கூறுவதை நன்றியுடன்
வாழ்த்தி மகிழ்கிறேன் பாபு.

மதுரை பாபாராஜ்

கோப்பைகள் குளம்பிக்கு
யாப்புடனே
பாப்புனைந்த
பாபாராஜுக்கு
பாபுவின் வாழ்த்துக்கள்

அய்யா வணக்கம்.

கவிஞர் அமுதா.
பாலகிருஷ்ணன்  அவர்களுக்கு வாழ்த்து.

நேர்மறைச் சிந்தனைகள் பாக்களின் சொற்களாக
ஊர்வலம் செல்லவைத்தே உள்ளத்தில்
ஊன்றவைப்பார்!
ஆர்த்தெழும் நம்பிக்கை
வாழ்க்கையில் வேரூன்றும்!
பாவலர் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

சொற்கள் எல்லாம் தேன்போல
ஆன்மா வுக்கு இனிமைதான்
மேனிக் கென்றும் நலந்தானே!
பூக்கள் கூறும் வணக்கத்தால்
நட்பை விளக்கும் நண்பருக்கு
வாழ்த்தைக் கூறி வணங்குகிறேன்.

மதுரை பாபாராஜ்

தனித்தமிழ் வித்தகர் இராமாநுசன் அவர்களுக்கு மணிவிழா வாழ்த்து!

20.06.20

தனித்தமிழ் வித்தகர் நற்றமிழின் தூதர்!
கவிஞர் இராமா நுசனார் தமிழ்போல்
புவியில் மனைவி குழந்தைகள் சுற்றம்
மகிழ்வுடன் சூழ்ந்திருக்கப் பல்லாண்டு வாழ்க!
அகங்குளிர வாழ்க மகிழ்ந்து.

மணிவிழா காணும் இராமா நுசனார்
பணிவுடன் அன்பும் அடக்கமும் கொண்டு
தனிமனித நல்லொழுக்கம்  போற்றும் சீலர்!
உலகப் பொதுமுறை வள்ளுவத்தை வாழ்வின்
தளமாக்கி வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார.

பாலாவின் சங்கச் சுரங்கத்திற்கு வாழ்த்து!

19.06.20

தலைப்பு:கல்லா இளைஞர்!

ஆற்றுப் படுத்தும் இலக்கிய நூல்வரிகள்
சாற்றுகின்ற கல்லா இளைஞர் தலைப்பிலே
பாலாவின் சங்கச் சுரங்கம் மலர்கிறது!
ஞாலமே கேட்கும் விழைந்து.

சங்கச் சுரங்கம் அரங்கத்தில் எண்ணற்ற
சங்க இலக்கிய வானில் பறந்துசென்று
கண்முன்னே காட்சிகளைக் கொண்டுவந்து பேசுகின்ற
பன்முக ஆற்றலை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

அறியாமை என்னும். கறுப்பு மறைந்து
நெறியாக இங்கே பொதுவுடைமை தோன்றும்
முறையில் சிவப்பாக மாறுமென்றே எண்ணிக்
கழகக் கொடிகண்டார் என்றுரைப்பார் புள்ளே!
அழகாய்ப் பறைசாற்றும் அக்கருத்தை ஏந்தி
இருவண்ணம் கொண்டே மரக்கிளையில் கண்டேன்
புலர்காலை நல்வணக்கம் ஏற்று.

மதுரை பாபாராஜ்

தலைமுறை இடைவெளி!

உலகமோ வேறு! நடைமுறையில் காணும்
உலகமோ வேறு! மனத்திரையில் காணும்
கனவுலகும், வாழ்வில் கனவுகளோடு நாளும்
திணறும் உலகமும் வேறு!

மதுரை பாபாராஜ்

Thursday, June 18, 2020

இலக்கியக் காட்சி

முத்தொள்ளாயிரம் பாடல்..38

என்னெஞ்சு நாணும் நலனும் இவையெல்லாம்
மன்னன் புனனாடன் வௌவினான்—என்னே
அரவகல் அல்குலாய் ஆறிலொன் றன்றோ
புரவலர் கொள்ளும் பொருள்

வௌவினான்=பறித்துக் கொண்டான்: புரவலர்=அரசர்; கொடையாளி

விளைச்சலில் ஆறிலொரு பங்கு
வரியாய்
வழங்கவேண்டும் என்றால் நியாயந்தான்! சோழன்
வரம்புகளை மீறியே நெஞ்சைப் பறித்தான்!
அழகெல்லாம் கொள்ளையடித்தான்! நால்வகைப் பண்பை
அபகரித்தான் தோழி! நியாயமா? சொல்லேன்!
அரசர்க் கழகுதானா? சொல்.

மதுரை பாபாராஜ்

ஹைக்கூ
நெறியான வரியோ ஆறில் ஒருபங்கு தானே?
செறிந்தநீர் பொன்னிநாடன் செய்ததென்ன?மொத்தமாய்ப்
பறித்தானே என் அகத்தை நாணத்தை மெய்யழகை!

கே ஜி ராஜேந்திர பாபு

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

பெற்றெடுத்த குஞ்சுகளைக் காப்பாற்ற வாத்துகள்
அக்கறையாய் முன்னொன்றும் பின்னொன்றும்
 சென்றிருக்க
அச்சமின்றி குஞ்சுகளோ நீந்துகின்ற காட்சியுடன்
இக்காலை நேர வணக்கத்தை நட்புடனே
தந்தநண்பர் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

கத்தரிக்கோல் நூலால்
உதிரி மலர்களைக்
கொத்துகளாய்க் கட்டியே சுற்றிவைத்துக் கோப்பையில்
நட்புடன்  நீட்டும் குளம்பி
மணங்கமழ
தந்தது காலை வணக்கத்தை! நன்றியைச்
சொன்னோம் மகிழ்ச்சி யுடன்.

மதுரை பாபாராஜ்
வசந்தா

நண்பர் துபாய் வெங்கடேஷ் அனுப்பிய படம்

[6/19, 8:02 AM] Venkdubai:

இன்றைய கோபுர தரிசனம்...
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
நங்கநல்லூர்.

[6/19, 8:06 AM] Madurai Babaraj:

அரபுநாட்டில் வாழ்க்கை! தமிழ்நாட்டுக் கோயில்
இயல்பாக ஏந்தும் அழகைத் தினமும்
வழங்கி வணக்கத்தைக் கூறுகின்ற நண்பர்
செழுந்தமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

முத்தொள்ளாயிர மோகனம்…37

மந்தரம் காம்பா: மணிவிசும்(பு) ஓலையாத்:
திங்கள் அதற்கோர் திலதமா—எங்கணும்
முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே
கொற்றப்போர்க் கிள்ளி குடை.

மாமலை மந்தரம் காம்பாக, விண்பரப்பு
மேற்பரப்பாய் மாற நிலவோ கலசமாக
ஊற்றெடுக்கும் முத்திசை நீரைக் குளிர்விக்கும்
கொற்றக் குடையாக கிள்ளியின் ஆட்சியிங்கே
அற்புதந்தான் மக்களுக்கு! பார்.

மதுரை பாபாராஜ்

ஹைக்கூ
மந்தரமலை காம்பாய் வானமே  மேற்பரப்பாய்
சந்திர வட்டம்  பொற்கலசமாய் விளங்குமே
எந்த போரிலும் வாகைசூடும்  கிள்ளியின் குடை
                                                                         
கே ஜி ராஜேந்திர பாபு


முத்தொள்ளாயிர மோகனம்…36

கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்துநீர் தண்ணுஞ்சை தான்மிதியாப்-பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமேநங்
கோழியர்கோக் கிள்ளி களிறு.

உறையூர்த் தலைவனாம் கிள்ளியின் யானை
மறைநகர் காஞ்சியி லோர்க்காலும் பாக்கள்
மணக்கின்ற உச்சயினி தன்னிலோர்க் காலும்
முனைப்புடன் ஈழத்தி லோர்க்காலும் வைத்தே
தனதூராம் யானையைச் சீறியே கோழி
எதிர்த்த உறையூரி லோர்க்காலும் ஊன்றி
வியக்கவைக்கும் காட்சியைக் காட்டுகின்ற பாடல்!
சிலிர்க்கவைக்கும் காட்சிதான் காண்.

மதுரை பாபாராஜ்.

ஹைக்கூ
கச்சியில் ஒருகால்;உச்சயினியில் ஒருகால்
மிச்சமுள்ள ஒருகால் ஈழத்தில் வைத்து வந்ததே
அச்சமூட்டும்  உறையூர் கிள்ளியின் யுத்தக் களிறு

கே ஜி ராஜேந்திர பாபு

Wednesday, June 17, 2020




அய்யா வணக்கம்.

நண்பர் கவிஞர் ஹைக்கூ இரா.ரவி அவர்களுக்கு வாழ்த்து.

குறும்பா படைக்கின்ற வித்தக நண்பர்!
குறும்பாக்கள் எல்லாம் பெரும்பொருளை ஏந்தித்
தெறிக்கின்ற  ஆற்றல்
தெளிவாக உண்டு!
சிறப்புடன் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

குறள் 490:

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

எண்ணற்ற மீன்கள் கடலிலே வந்தாலும்
உன்னிரையைக் காண பொறுமையுடன் நின்றேதான்
உன்னிரையைக் கண்டவுடன் பாய்ந்தே பிடிக்கின்றாய்!
காலம் வரும்வரைக் காத்திருந்து வாய்ப்புவரும்
நேரத்தில் வாழ்வில் செயல்பட்டால் வெற்றிதான்!
கோலங்கள் மாறும் பொறு.
மதுரை பாபாராஜ்