Monday, January 31, 2022
நன்மை செய்தால் நன்மைதான்
நன்மை செய்தால் நன்மைதான்,!
அடுத்தவர் உடைமையைப் பறிக்காதே!
குடும்பத்தைக் கெடுத்து வாழாதே!
வக்கிர எண்ணம் வேண்டாமே!
சிக்கல் வலையில் சிக்காதே!
கண்ணீர் சிந்த வைக்காதே!
கண்ணீர் சுட்டுப் பொசுக்கிவிடும்!
ஒழுக்கம் கெட்டால் சீரழிவு!
துரோகம் செய்தால் பேரழிவு!
ஆணவம் கொண்டு துள்ளாதே!
ஆத்திரம் கொள்ளத் துணியாதே!
பழிக்குப் பழியோ எண்ணாதே!
அழிவுப் பாதையில் செல்லாதே!
பொய்மை கயமை வாழ்வானால்
உயர்வே இல்லை தாழ்வுண்டு!
அன்பு பணிவு அடக்கமுடன்
வாழ்ந்தால் நிம்மதி தேடிவரும்!
நேர்மை வாய்மை மனத்தூய்மை
போற்றி வாழ்ந்தால் உயர்வுண்டு!
நன்மை செய்தால் நன்மைதான்!
தீமை செய்தால் தீமைதான்!
மதுரை பாபாராஜ்
Sunday, January 30, 2022
வெறுங்கூடு
வெறுங்கூடு!
உள்ளீடே இல்லா வெறுங்கூடாய் என்னுடல்
சல்லடையாய் ஆனதுபோல் இங்கே உணர்கின்றேன்!
மெள்ள நடந்தாலும் கால்கள் வலுவிழந்தே
தள்ளாடிச் சாய்க்கிறதே சாற்று.
மதுரை பாபாராஜ்
Saturday, January 29, 2022
நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
குறள்மணிகள்
குறள்மணிகள்
காவ்யஸ்ரீ- கனிஷ்கா-
திவ்ய தர்சினிக்கு வாழ்த்து!
முக்கனி போலவும் முப்பால் குறள்போலவும்
முத்துக்கள் மூவரும் முத்தமிழ்போல் வாழ்கவே!
வெற்றிச் சிகரத்தில் சாதனை செய்தேதான்
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
[1/30, 10:54] VOVTHIRUKKURALPALANI: திருவள்ளுவர் கல்வி மன்றம் திருக்குறள் முற்றோதல் பயிற்றகம் , தையூர் கேளம்பாக்கம் , 603 103
இன்று (28/01/22)
தமிழ்நாடு , காஞ்சிபுரம்
தமிழ் வளர்ச்சி துறை
1330 அருங் குறட்பாக்கள் திறனாய்வு தேர்வு க்கு சென்ற திருக்குறள் குழந்தைகள்
திருக்குறள் நா.காவ்யஶ்ரீ
திருக்குறள் செ .கனிஷ்கா
திருக்குறள் க.ம.திவ்ய தர்சினி
மூண்று திருக்குறள் குழந்தைகள் தேர்வு ஆகி உள்ளனர் .
அனைவருக்கும் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
க.கோ.பழநி
நிறுவனர் & பயிற்றுநர்
மற்றவரைத் துன்புறுத்தாதே
மற்றவரைத் துன்புறுத்தாதே!
நம்கவலை நம்மைப் பொசுக்கட்டும்! மற்றவரைத்
துன்புறுத்த வேண்டாம்! நமக்குள் புதையட்டும்!
இன்பமாய் வாழ்கின்றோம் என்றே மற்றவர்கள்
இங்கே நினைக்கட்டும் நன்கு.
மதுரை பாபாராஜ்
நீறு பூத்த நெருப்பு
நீறுபூத்த நெருப்பு!
நீறுபூத்து நிற்கும் நெருப்பாக சிக்கல்கள்
மாறிமாறி நின்று குமுறினால் என்னசெய்வேன்?
ஊதி அணைக்கலாம் என்றால் முடியவில்லை!
வேடிக்கை பார்க்கின்றேன் நான்.
மதுரை பாபாராஜ்
நிம்மதியைக் கானலாக்கும்
நிம்மதி கானலாகும்!
உண்மை வெளிப்படைத் தன்மை இவையிரண்டும்
என்றும் நிம்மதியைத் தந்தே மகிழ்விக்கும்!
பொய்மை எதிர்மறை எண்ணம்
இவையிரண்டும்
நிம்மதியைக் கானலாக்கும் பார்.
மதுரை பாபாராஜ்
Friday, January 28, 2022
இப்படித்தான் வாழ்வு
இப்படித்தான் வாழ்வு!
விழுங்கும் முதலைக்குத் தப்பித்தான் சென்றேன்!
கழுகின் விரல்பிடிக்கும் தப்பித்தான் சென்றேன்!
விழுந்தேன் சிறியகல் தட்டிவிட்டுத் தானே!
விழவேண்டும் என்றிருந்தால் எப்படியும் வீழ்வோம்!
எழுதல் விழுதலே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
Thursday, January 27, 2022
Wednesday, January 26, 2022
இன்றகய அன்றாட வாழ்க்கை
இன்றைய அன்றாட வாழ்க்கை!
ஊரிலே அங்கங்கே வாழ்ந்த குடும்பங்கள்
ஊர்விட்டே ஊர்வந்தார்! பல்வேறு நாடுசென்றார்!
சார்புடன் விட்டுக் கொடுத்திருந்த வாழ்க்கையில்
வேரோடிப் பார்த்தது விட்டுக் கொடுக்காத
கேள்விப் படாத பிடிவாத வாழ்க்கைதான்!
வாழ்க்கை திசைமாறிப் போச்சு.
அக்கறை பாதுகாப்பு சொந்தபந்த பாசமென்ற
முத்தான பண்புகள் காற்றில் பறந்தன!
ஒத்தாசை செய்தேதான் வாழ்ந்திருந்த வாழ்வெல்லாம்
எப்படியோ கானலாச்சு பார்.
உறவுகள் யாரென் றறியாமல் வாழும்
தலைமுறை கொண்ட வாழ்க்கைப் பயணம்!
அலைச்சல் உளைச்சல் எரிச்சலில் வாழ்வில்
சலிப்புடன் வாழ்கின்றார் சாற்று.
மதுரை பாபாராஜ்
Tuesday, January 25, 2022
தன்னால் பாதி நம்மால் பாதி
தன்னால் பாதி! நம்மால் பாதி!
என்ன வருமிங்கே? எப்படித் தான்வருமோ?
என்றே தெரியாத வாழ்க்கையில்-- தானாய்
வருவது பாதியென்றால் நாமோ இழுத்து
வருவது மீதியாகும் பார்.
மதுரை பாபாராஜ்
பெற்றோர்க்கு இலக்கணம்
பெற்றோர்க்கு இலக்கணம்!
பிள்ளைகள் வாழ்வதற்கே எந்தத் தியாகமும்
செய்பவரே பெற்றோர்! இதைமறந்தே தன்னலம்
கொள்பவர்கள் பெற்றோர் இலக்கணத்தின் எல்லைக்குள்
எப்படி வந்திடுவார் சொல்?
மதுரை பாபாராஜ்
பருவத்தில் பழகு
பருவத்தில் பழகு!
பழகும் பருவம் குழந்தைக ளோடு
பழகிடும் வாய்ப்பைத் தவிர்த்தால்-- விலகும்
வயதில் நெருங்கிப் பழகிடும் வாய்ப்பு
விலகிட ஏங்கும் மனது.
மதுரை பாபாராஜ்
தன்வினை தன்னைச் சுடும்
தன்வினை தன்னைச்சுடும்!
சொந்தவீட்டில் அந்நியமாய் வாழ்கின்ற சூழ்நிலைகள்!
தன்வினையால் தானாகத் தேடிய சூழ்நிலையே!
தன்வினை தன்னைச் சுடுமென்ற பொன்மொழி
உண்மைதான் நெஞ்சே! உணர்.
மதுரை பாபாராஜ்
வலியோ வலி
வலியோ வலி!
பல்வலியால் நொந்தேன்! படர்ந்தே தலைவலித்
தொல்லையாய் ஆக கிராம்பை ஒதுக்கினேன்!
பல்வலி மாத்திரை உட்கொண்டேன்! டைகர்பாம்
நெற்றியில் போட்டேன்! படுத்தேன் பொறுத்தேதான்!
எப்படிப் போகுமோ? சொல்.
மதுரை பாபாராஜ்
Monday, January 24, 2022
செல்வன் ச.அசோக்குமார்
செல்வன் ச.அசோக் குமார் பிறந்தநாள் வாழ்த்து
அகவைத்திருநாள்: 25.01.22
பெற்றோர்
அப்பா.ர.சண்முகம்
அம்மா : ச.முனியம்மாள்
சகோதரி: ச.நந்தினி
இன்று உனக்குப் பிறந்தநாள்!
இன்பம் பொங்கும் சிறந்தநாள்!
அன்னை தந்தை ஆசானை
வணங்கி வாழ்ந்தால் நல்லது!
நன்றாய் வாழ்வில் முன்னேறு
நாளும் உழைத்தே முன்னேறு!
திறமை உனது செல்வந்தான்
அதனை வளர்த்து முன்னேறு!
நண்பர்கள் சூழ்ந்தே வாழ்த்துகின்றோம்!
உறவினர் சூழ்ந்து வாழ்த்துகின்றோம்!.
என்ன மொழிகள் படித்தாலும்
தமிழில் உணர்வு பெறுவாயே!
குறளைப் போற்றி வாழ்கவே!
குவலயம் போற்ற வாழ்கவே!
தாத்தா பாட்டி எல்லோரும்
வாழ்த்துப் பாதான் பாடுகின்றோம்!
வாழ்க வாழ்க பல்லாண்டு.
தமிழ்போல் வாழ்க பல்லாண்டு
வாழ்த்தும் இதயங்கள்:
மதுரை பாபாராஜ்-- பா.வசந்தா
மற்றும் குடும்பத்தார்
நெஞ்சிலே முள்
நெச்சிலே முள்!
உடலில் எங்கெங்கோ குத்தினாலும் முள்ளை
உடனே எடுத்திடலாம்! நெஞ்சிலே குத்தி்ப்
படுத்துகின்ற முள்ளினை எவ்வாறு நீக்க?
உறுத்தல் துடிக்கவைக்கும் சொல்
மதுரை பாபாராஜ்
Sunday, January 23, 2022
வாழ்ந்தேதான் காட்டுவோம்
வாழ்ந்தேதான் காட்டுவோம்!
ஞாயிறு! ஞானம் மலரட்டும் மாசுநீங்க!
ஞாயிறுபோய் திங்கள் திருப்புமுனை யாகட்டும்!
ஞாயிறின் மூன்றுதான் செவ்வாய் செழிக்கட்டும்!
ஞாயிறின் நான்கே புதனாம்! புகழ்வரட்டும்!
ஞாயிறின் ஐந்தே வியாழன்! ஒளிரட்டும்!
ஞாயிறின் ஆறே சனிக்கிழமை சாதிப்போம்!
வாரத்திலே ஏழுநாள்கள் வாழ்ந்தேதான் காட்டுவோம்!
ஏழுசீர் தேன்குறளைப் போற்று!
மதுரை பாபாராஜ்
அஷ்ரப்அவர்களுக்கு வாழ்த்து
நண்பர் அஷ்ரப் அவர்களுக்கு வாழ்த்து.
பார்க்கும் விழிகளுக்கும் கேட்கும் செவிகளுக்கும்
ஆர்வத்தைத் தூண்டும் உரைவிருந்தைத் தந்துவிட்டார்!
நேர்த்தியாக அஷ்ரப் அளித்த அணுகுமுறை
ஊர்வலத்தை வாழ்த்துகிறேன் நான்.
மதுரை பாபாராஜ்
இன்று மாலை (23, ஞாயிறு) 6.00 மணிக்கு:
குறிப்பிட்ட பறவையை, விலங்கை, பூவை, பழத்தை, மரத்தை மற்றும் பூச்சியை தமிழகத்தின் உயிரினங்களாக தேர்ந்தெடுத்ததற்குக் காரணங்கள் ஏதாவது உள்ளனவா, அவைகளைப் பற்றி சங்க இலக்கியம் என்ன சொல்லுகிறது என்பதை ஆய்வதே இந்த சொற்பொழிவின் நோக்கம்.
குறித்துக்கொள்ளவும் தவறாமல் இணையவும் வேண்டுகிறேன்.
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/89032525613?pwd=ZitnMlVlTVZvMzFQUVl1cXlGVnpMdz09
Meeting ID: 890 3252 5613
Passcode: sangam
Saturday, January 22, 2022
நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
நண்பர் IG சேகர் அனுப்பிய படம்.
வணக்கத்தைக் கூறும் பறவையே! கொஞ்சம்
இணக்கமுடன் என்கவிதை கேள்.
ஊரடங்கில் சேவை!
வாடிக்கை யாளர் கடைதேடிப் போனதுபோய்
வாடிக்கை யாளரைத் தேடிக்
கடையாள்கள்
ஓடிவந்தே நாடும் பொருள்களை விற்கின்றார்!
ஊரடங்கில் கூட்டம் தவிர்ப்பதற்கே அங்காடி
சேவையிலே இப்படித்தான் இன்று.
புலனஎண்ணைச் சொல்கின்றார்! நாமும் பொருளைப்
புலனத்தில் பட்டியலாய் இங்கே அனுப்ப
கடைக்காரர் வீடுதேடி வந்தே பொருளைக்
கொடுக்கின்றார்! வாசலில் நின்று.
மதுரை பாபாராஜ்
Friday, January 21, 2022
Thursday, January 20, 2022
Wednesday, January 19, 2022
தோற்றப் பிழை!
தோற்றப் பிழை!
உள்ளிருந்து சாளரத்தில் பார்த்தால் வெளியிலே
உள்ளோர் சிறையிலே உள்ளதுபோல் தோன்றுவார்!
உள்ளே இருப்போரை நாளும் வெளியிலே
உள்ளவர்கள் பார்த்தால் சிறையிலே உள்ளதுபோல்
உள்ளிருப்போர் தோன்றுவார் சொல்.
மதுரை பாபாராஜ்
வட்டத்தில் தீர்வில்லை
வட்டத்தில் தீர்வில்லை!
வட்டத்தில் ஓடினால் சந்திப்ப தெவ்வாறு?
சிக்கல் சுழலும், தொடரும் முடிவின்றி!
எப்படியும் சந்தித்துப் பேசினால்தான் தீர்வுண்டு!
வட்டத்தை விட்டே வெளியிலே வந்துவிடு!
சந்தித்துப் பேசினால்தான் தீர்வு.
மதுரை பாபாராஜ்
Tuesday, January 18, 2022
Youtube
வலையொளி பேச்சுகள்!
YOUTUBE ATTRACTIONS!
இரண்டு மணித்துளி செய்தியைச் சொல்ல
வளவள வென்றேதான் பேசித் தலைப்பில்
நுழைவதற்குள் அப்பாடா என்றுசொல்ல வைப்பார்!
வலையொளி இப்படித் தான்.
மதுரை பாபாராஜ்
Monday, January 17, 2022
HELPLESS!
Helpless!
We are helpless and mute spectators
Our hands are tied and lips are clipped
We have to control our
Uncontrollable feelings and emotions!
Tears burst and trickle down our cheeks
Stains are there as lines and
We sob and sob and sob!
What to do? We are at a loss!
We are prisoners of circumstances!
All the beings of Nature walk
And feel free without any obstacles!
But we ? Our gait? Reasonableness?
Stagger! Stagger! Dwindle! Dwindle!
Babaraj
பெற்றோர்க்கு இலக்கணம்
பெற்றோர்க்கு இலக்கணம்!
பிள்ளைகள் வாழ்வதற்கே எந்தத் தியாகமும்
செய்பவரே பெற்றோர்! இதைமறந்தே தன்னலம்
கொள்பவர்கள் பெற்றோர் இலக்கணத்தின் எல்லைக்குள்
எப்படி வந்திடுவார் சொல்?
மதுரை பாபாராஜ்
அகத்தின் உளைச்சல் முகத்தில்
அகத்தின் உளைச்சல் முகத்தில் தெரியும்!
பணக்கவலை என்றால் கடன்வாங்கித் தீர்ப்போம்!
நலக்கவலை என்றால் மருந்துகளால் தீர்ப்போம்!
மனக்கவலை என்றால் உளைச்சலே
மிஞ்சும்!
மனத்தளர்வைக் காட்டும் முகம்.
மதுரை பாபாராஜ்
பாருக்குள் புள்ளி
பாருக்குள் புள்ளி!
யாரென்ன ஆனாலும் என்னதான் நேர்ந்தாலும்
ஊரும் உலகும் இயக்கத்தை மேற்கொள்ளும்!
பாருக்குள் வாழ்வோரோ புள்ளிகளே!
புள்ளிகளைச்
சார்ந்தில்லை இந்தப் புவி.
மதுரை பாபாராஜ்
Sunday, January 16, 2022
நண்பர் அன்பு அனுப்பிய காணொளி
நண்பர் அன்பு அனுப்பிய காணொளி
முயற்சி திருவினையாக்கும்!
சக்கரம் கழன்றது! வண்டி உடைந்தது!
தட்டிவிடும் நண்பர் விழுந்துவிட்டார்! ஊக்குவிக்கும்
அக்கறைச் சாட்டையும் இல்லை! நுகத்தடி
முற்றும் பிரித்துவிட மாடுகளோ தங்களைப்
பற்றுடன் வாழ்வித்த அந்த மனிதனுக்காய்
சற்றும் சளைக்காமல் ஓடியே சாதனை
வெற்றியை ஈட்டிய காட்சியில் மெய்மறந்தேன்!
முற்றும் இழந்தாலும் சற்றும் தளராமல்
அக்கறை மற்றும் முயற்சியுடன் நம்மிலக்கை
எட்டலாம் என்றுணர்த்தும் பார்.
மதுரை பாபாராஜ்
நண்பர் அன்பு அவர்களின் வாழ்த்து:
[1/17, 10:34] VOV C.ANBU: superb..👏👏
[1/17, 10:36] VOV C.ANBU: mutrum, patrum , satrum,
very beautiful and instant thinking.👏👏👏👏👏
நடந்தே கடக்கும்
நடந்தே கடக்கும்!
அடுத்த மணித்துளியில் என்ன நடக்கும்?
எதுநடக்கும்? என்றே தெரியாத வாழ்க்கை!
மெதுவாய் நடக்கும்! விரைந்தும் நடக்கும்!
நடந்தே கடக்கும் உணர்.
மதுரை பாபாராஜ்
உளி
உளி!
அடிக்க அடிக்க உயர்ந்திருக்கும் பந்து!
எதிர்ப்பு, அவமானம் ஆட்டுவித்த போதும்
எதற்கும் கலங்காமல் பந்தாய் எழுந்தே
கடமைகளைச் செய்துநாம் முன்னேற வேண்டும்!
முயற்சி! செதுக்கும் உளி.
மதுரை பாபாராஜ்
Saturday, January 15, 2022
மகிழ்வும் வெறுப்பும்
மகிழ்வும் வெறுப்பும்
கைபேசி தன்னில் அழைப்பதைக் கேட்டாலே
மெய்நடுங்கும்! என்னவரும்? ஏதுவரும் என்றேதான்
உள்ளம் பதறும்! துடிக்கும் விரைவாக!
நல்லசெய்தி என்றால் மகிழ்ச்சி உள்ளத்தில்!
இல்லையெனில் இந்தப் பிறவியே நீர்க்குமிழி!
கைபேசி மீதே வெறுப்பு.
மதுரை பாபாராஜ்
வாழவைக்கும்
வாழ்வாங்கு வாழவைக்கும்!
வாழ்த்தி மகிழ்வதும் வாழ்த்தைப் பெறுவதும்
வாழ்வாங்கு வாழவைக்கும்! நாளும்
நலம்சேர்க்கும்!
நேர்மறை எண்ணங்கள் தோன்ற வழிவகுக்கும்!
நேர்வழியில் வாழவைக்கும் நம்பு.
மதுரை பாபாராஜ்
Friday, January 14, 2022
பெருமூச்சு
பெருமூச்சு!
துன்பமான நேரத்தில் இன்ப மயமாகச்
சென்றுவிட்ட நாள்கள்தாம் மீண்டும் வரவேண்டும்
என்றேதான் ஏங்கும் தவிக்கும் மனமிங்கே!
அந்தநாள் மீண்டும் வராது! பெருமூச்சால்
நொந்துபோகும் உள்ளம்! உணர்.
மதுரை பாபாராஜ்
தமிழ் எங்கே?
வணக்கம் ஐயா. நலமா?
தமிழ் எங்கே?
கடையின் பெயர்கள், நிறுவன வண்டி,
விளம்பரங்கள் என்றுநாம் பார்ப்பதில் எல்லாம்
மொழியோ தமிழிலில்லை! ஆங்கிலத்தில் மட்டும்
எழுதுகின்றார்! தாய்த்தமிழைத் தேடவேண்டும் இங்கு!
இதுதான் தமிழ்நாடா? சொல்.
மதுரை பாபாராஜ்
ஐயா...தமிழகத்தில்...எந்தப் பள்ளியிலும்...வகுப்பிலும் சென்று குழந்தைகள் பெயரை கேளுங்கள்.. தமிழ் இல்லை என்பது நெற்றிப் பொட்டில் அடித்தார் போல இருக்கும்..
VOV சேனாபதி
Wednesday, January 12, 2022
அயலகத் தமிழர் நாள் 12.01.22
அயலகத் தமிழர் நாள்!
12.01.22
தமிழே எங்கள் தாய்மொழி யாகும்
தமிழே எங்கள் உயிர்மூச் சாகும்!
உலகில் எங்கே வாழ்ந்திருந் தாலும்
தமிழால் இணைவோம் தமிழர்கள் என்போம்!
அறம்பொருள் இன்பம் வழிமுறை யாகும்!
குறள்நெறி தானே பொதுமுறை யாகும்!
அயலகத் தமிழர் அகத்தால் ஒன்று!
எங்கிருந் தாலும் இனத்தால் ஒன்று!
கீழடி எங்கள் பெருமையைச் சொல்லும்!
பழம்பெரும் இனத்தின் வாழ்க்கையைச் சொல்லும்!
சங்க இலக்கியம் மாண்பினைச் சொல்லும்!
என்றும் புகழை நிலைபெற வைக்கும்!
அயலகத் தமிழர் திருநாள் இன்று!
நிமிர்ந்தே வாழ்வோம் தமிழர் என்று!
மதுரை பாபாராஜ்
9003260981
Tuesday, January 11, 2022
முன்னேறு
முன்னேறு!
சூழ்நிலைகள் சுற்றி வளைத்தாலும்
ஆழ்மனத்தில்
நாளும் துணிவை முயற்சியை முன்னெடுத்து
வாழ்க்கையில் முன்னேறு! கல்வியைக் கற்றேதான்
சூழ்நிலையை வென்று நிமிர்.
மதுரை பாபாராஜ்
நடைபோடு நிமிர்ந்து
நடைபோடு நிமிர்ந்து!
நடக்கவே கூடாத காட்சி நடக்கும்!
நடந்ததை எண்ணிக் கலங்காதே! வாழும்
நடைமுறையை எண்ணிச் செயல்படு! எல்லாத்
தடைகளையும் தாண்டு! தவிடுபொடி யாக்கு!
நடைபோடு நெஞ்சம் நமிர்ந்து.
மதுரை பாபாராஜ்
Monday, January 10, 2022
Sunday, January 09, 2022
நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
வணக்கம்
நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
பறவைகளே! இன்றைய கவிதை!
இதுதான் திரைப்படம்
அன்றிருந்து இன்றுவரை!
வானில் பறந்துசென்று கீழே விழுந்திடுவார்!
காயம் சிறிதுமின்றி ஓடிவந்து தாக்குவார்!
பாய்ந்து ஒருவரே பத்துபேரைத் தாக்குவார்!
காணக்கண் கோடிவேண்டும் இங்கு.
அருவாளும் கம்புகளும் பந்தாடிப் பார்க்கும்!
தெறித்து விழுவார் பொருள்களின் மீது!
உடனே எழுந்துவந்து சண்டைபோடும் ஆற்றல்
நடைமுறையில் உண்டா உரை?
சிறுகல் தடுக்கி விழுந்தாலே ரத்தம்
பெருக்கெடுத்தே ஓட மருந்தகம் நோக்கி
விரைகின்ற கோலம் மனிதருக்கு! அங்கே
எரிமலைக்குள் சென்றாலும் காயமே இன்றி
வருகின்றார் மீண்டும் எழுந்து.
எல்லா மொழிப்படமும் இப்படித்தான் காட்டுகின்றார்!
நம்பும் படியாக காட்டினால் நல்லதுதான்!
இல்லையென்றால் நாட்டிலே மக்கள் நகைத்திருப்பார்!
எள்ளிநகை யாடுவார் சொல்.
மதுரை பாபாராஜ்
Saturday, January 08, 2022
சிலுவை
சிலுவை
நம்சுமையே நம்சிலுவை! நாம்தான் சுமக்கவேண்டும்!
என்னதான் வாழ்க்கையில் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
அந்த நிலைகளைச் சந்தித்து வாழவேண்டும்!
நம்மைச் செதுக்கும் சுமை.
மதுரை பாபாராஜ்
29.10.21
எச்சரிக்கை போட்டுக் குடிக்கின்றார்!
எச்சரிக்கை போட்டுக் குடிக்கின்றார்!
குடிப்பழக்கம் கேடென்று எச்சரிக்கை போட்டுக்
குடிக்கின்ற காட்சியைக் காட்டும் தொடர்கள்!
நடிப்புத் துறையில் திரைப்படம் காட்டும்!
குடித்துவிட்டுப் பண்பாடு பேசலாமா? இங்கே?
மதிகெட்ட கொச்சை வசனங்கள் சொல்வார்!
மதுக்கடையில் எச்சரிக்கை! அமோகமான விற்பனை!
இதனால்தான் சீரழியும் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
Friday, January 07, 2022
விழாக்களில் அர்த்தமில்லை
விழாக்களில் அர்த்தமில்லை!
இந்தவிழா அந்தவிழா என்றேதான். எந்தவிழா
வந்தபோதும் ஆண்டுதோறும் கொண்டாடி வாழ்கின்றோம்!
இங்கே வறுமை ஒழியவில்லை! வர்க்கபேதம்
கொஞ்சமும் மாறவில்லை! வக்கிரங்கள் ஓயவில்லை!
வன்முறைத் தாண்டவம் அங்கங்கே பார்க்கிறோம்!
என்றிது மாறுமோ அன்றுதான் நல்லது!
மற்றபடி எல்லாம் சடங்கு.
மதுரை பாபாராஜ்
ஏகலைவன்
ஏகலைவனானேன்!
கட்டை விரலை இழந்துவிட்டான் ஏகலைவன்!
வில்வித்தை கற்றான்! துரோணர் பறித்துவிட்டான்!
பெற்ற கவியாற்றல் விட்டுவிட வேண்டுமாம்!
நற்றமிழே விட்டுவிட்டேன் ஏகலைவ னாகிவிட்டேன்!
சொட்டாது பாத்துளிகள் சொல்.
மதுரை பாபாராஜ்
தன்னை வியந்தான்
தன்னை வியந்தான்!
தன்னலம் கொண்டேதான் தன்னை வியந்துகொண்டால்
தற்பெருமை என்றுரைப்போம்!
தன்னடக்கம் கொண்டேதான்
மற்றவரைப் பார்த்தே வியந்தால் பெருந்தன்மை
கொண்டவர் என்போம் மதித்து.
மதுரை பாபாராஜ்
Thursday, January 06, 2022
மீறவேண்டாம்
மீறவேண்டாம்!
நிழலுக்கு நிழலிங்கே துரோகம்செய்ய லாமா?
விழுதுக்கு விழுதிங்கே பகைவளர்க்க லாமா?
நீரோடு நீரிணைய மனம்வெறுக்க லாமா?
தேரசைய அச்சாணி மனந்தளர லாமா?
மழைநீரை ஏற்க நதிமறுக்க லாமா
மலையோடு அருவிவர முரண்பட லாமா?
சோலைமலர் செங்கதிரைத் துரத்திவிட லாமா?
மாலைமலர் வெண்மதியை ஒதுக்கிவிட லாமா?
நதிகலக்க கடலிங்கே தாழ்போட லாமா?
விதிகளுக்கு மாறுபட்டால் இயக்கமில்லை சொல்லு!
இதுபோல்தான் எல்லாமே மறந்துவிட வேண்டாம்!
விதிமீறிப் போய்விட்டால் நிம்மதிதான் போகும்!
மதுரை பாபாராஜ்