Tuesday, January 31, 2023
தெய்வத்திரு சுப்ரமணியன்
தெய்வத்திரு சுப்ரமணியன் அவர்களை என்றுகாண்போம்?
உண்மையில் நட்பில் நளினத்தைக் காட்டியவர்!
அன்பாய்ப் பழகியவர்! ஆசைப் படாதவர்!
கண்போல நேரந் தவறாமை காத்தவர்!
புன்னகை செய்வார்! பணிவே அவர்சொத்து!
பொங்கலன்று செங்கரும்பும் பொங்கல் பொருள்களும்
கொண்டுவந்து வைத்துவிட்டுச் சென்றார் வரவில்லை!
நண்பராய் வாழ்ந்தவர் இந்த உலகைவிட்டு
சென்றுவிட்ட செய்திதான் வந்தது! அய்யகோ!
என்றுகாண்போம் மீண்டுமிங்கே நாம்?
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
Monday, January 30, 2023
பொய் சரியும்
பொய் சரியும்!
பொய்யை மறைப்பதற்குப் பொய்களைச் சொல்லித்தான்
பொய்மேலே பொய்யாக
பொய்யடுக்கிக் கட்டுகின்றார்!
பொய்களை மெய்வந்தே வென்று நிமிர்ந்தவுடன்
பொய்கள் சரிந்துவிழும் இங்கு.
மதுரை பாபாராஜ்
Sunday, January 29, 2023
சிக்கலுக்குச் சிக்கலை உண்டாக்கு!
குறள் எண்:623
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
சிக்கலற்ற சூழ்நிலை என்றெண்ணி வாழ்ந்தபோது
சிக்கலை உண்டாக்கி சிக்கலுக்குள் சிக்கித்தான்
சிக்கலுடன் போராடி வேறுபட்டே வாழ்கின்றார்!
சிக்கல் நகைக்கிறது செப்பு.
சிக்கலுக்குச் சிக்கலை உண்டாக்கி வாழ்ந்திருந்தால்
சிக்கலின்றி வாழலாம் செப்பு.
மதுரை பாபாராஜ்
உடற்பயிற்சியின் பயன்கள்
உடற்பயிற்சியின் பயன்கள்!
உடற்பயிற்சி செய்தால் புலனடக்கம் தோன்றும்!
அடக்கம் பணிவென்னும் பண்புகள் ஊறும்!
நடைமுறை எல்லாம் எளிமையாய் மாறும்!
உடல்நலம் மற்றும் மனநலம் சேரும்!
படமெடுக்கும் சீற்றம் தீது.
மதுரை பாபாராஜ்
Saturday, January 28, 2023
Thursday, January 26, 2023
Wednesday, January 25, 2023
உளைச்சல்
உளைச்சலிலே நாங்கள்!
தலைநிமிர்ந்து வாழ்ந்த குடும்பங்கள் இன்று
தலைகுனிந்து வாழ்கின்ற சூழலைத் தந்தார்!
மலைக்கின்றோம் என்னசெய்வ தென்றேதான் நாங்கள்!
உளைச்சலில் எங்கள் மனம்.
மதுரை பாபாராஜ்
Tuesday, January 24, 2023
Saturday, January 21, 2023
Friday, January 20, 2023
Wednesday, January 18, 2023
Tuesday, January 17, 2023
உலக இயல்பு
உலக இயல்பு!
இவர்சென்றார் இன்று! அவர்செல்வார் நாளை!
எவர்சென்ற போதும் இயற்கை இயங்கும்!
அவரவர் வாழ்க்கை நிகழ்வும் நடக்கும்!
உலக இயல்பே இறப்பு.
மதுரை பாபாராஜ்
Monday, January 16, 2023
Saturday, January 14, 2023
ஒன்பதில் ஒன்றெங்கே?
ஒன்பதில் ஒன்றெங்கே?
ஒன்பதில் ஒன்றாய் இருந்தவர் ஒன்பதில்
ஒன்றாக இல்லாமல் சென்றுவிட்டார்
தானாக!
என்று வருவாரோ? ஒன்பதில் ஒன்றாகும்
பொன்னாள் மீண்டும் தருவாரோ? காத்திருப்போம்!
வந்துவிட்டால் எல்லோர்க்கும் நன்று.
மதுரை பாபாராஜ்
15.01.23
குரோவ் வளாகப் பூனை
குரோவ் வளாகத்தில் விடியல்பொழுது நடந்தபோது பூனை!
15.01.23
புலர்ந்தும் புலராத காலைப் பொழுதில்
நடந்துவந்தேன் எங்கள் வளாகத்துள் இன்று!
நடக்கும் பொழுதிலே கால்களுக்குள் பூனை
இடைமறித்து இங்கே குறுக்கு நெடுக்காய்
கடந்துசென்ற கோலம் ரசித்தேன் வியந்து!
நடக்க விடவில்லை கூடவந்த பூனை!
நடந்தேன்நான் மின்தூக்கி உள்ளேதான்! பூனை
அடைந்ததே ஏமாற்றம் நின்று.
மதுரை பாபாராஜ்
Sail with the wind
SAIL WITH THE WIND!
Breeze becomes Storm!
Challenge all! Life becomes target!
Sail with the wind
No other go! Can't change
The direction of the wind!
Wind is mightier than humans!
Humans can't go against wind!
Wind tosses humans
Can stop the journey
Make everything stand still!
Can make topsy turvy changes!
Uproot everything!
Then disappear abruptly!
When will disappear?
Where will go?
Nobody knows!
Wind will change!
Change will come!
Storm becomes breeze!
Madurai Babaraj
Friday, January 13, 2023
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!
தேர்ந்தெடுக்கும் பாதையை சிந்தித்துத் தேர்ந்தெடு!
தேர்ந்தெடுத்த பின்பு முயற்சியை ஆர்வமுடன்
ஆழ்ந்து முழுமனத் தோடு முதலீடு
செய்யவேண்டும்! தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில் எதிர்காலம்
மட்டுமல்ல வாழ்க்கைப் பயணமிங்கே என்றென்றும்
வெற்றியுடன் செல்வதையும் தீர்மானம் செய்கிறது
வெற்றிக்குத் தேர்வுசெய்தல் கண்.
மதுரை பாபாராஜ்
Thursday, January 12, 2023
Wednesday, January 11, 2023
புண்படும் உள்ளம்
புண்படும் உள்ளம்!
கண்முன் குடும்பம் சிதைகின்ற கோலங்கள்
என்னுள் உளைச்சலைத் தூண்டித் துடிக்கவைக்கும்!
என்ன தவறுசெய்தேன் என்றே புரியவில்லை!
எங்கு தடுமாற்றம்! என்றும் தெரியவில்லை!
புண்படும் உள்ளமுடன் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
Tuesday, January 10, 2023
ஐயா சண்முகசாரதி அவர்களுக்கு வாழ்த்து!
ஐயா சண்முகசாரதி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
சண்முக சாரதி தேன்குறள் சாரதியாய்
அன்புடன் நற்கருத்தை நாளும் பகிர்ந்தளிக்கும்
பண்பிற்கு நன்றி நவில்கின்றேன்! வாழ்த்துகிறேன்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
Monday, January 09, 2023
பாடலால் கலக்கம் நீங்கும்!
பாடலால் கலக்கம் நீங்கும்!
கவலைகள் தேள்களாய்க் கொட்டுகின்ற நேரம்
இரக்கம் கருணை மணக்க இசையில்
தவழ்கின்ற உள்ளத்தில் உற்சாகம் பொங்கி
உலகை மறக்கவைக்கும் தத்துவப் பாடல்!
கலக்கமே சற்றுநேரம் நீங்கு.
மதுரை பாபாராஜ்