Saturday, July 30, 2022
நடைதளர்ந்த வாழ்க்கை
நடைதளர்ந்த வாழ்க்கை!
புயற்காற்று வீசியது! காற்றென்னைத் தூக்கித்
தரையில் எறிந்தது! எங்கெங்கோ காயம்!
நிலைகுலைந்தேன்! உள்ளம் உடலுடன் சோர்ந்து
நடைதளர வாழ்கிறேன் இன்று.
மதுரை பாபாராஜ்
Friday, July 29, 2022
கரை தெரியுமா?
கரை தெரியுமா?
என்படகைச் சூழ்ந்துவந்த மற்ற படகுகள்
என்படகைத் தன்னந் தனியாக விட்டுவிட்டுச்
சென்றதெங்கே? நான்மட்டும் இங்கே நடுக்கடலில்!
கண்களுக் கெட்டிய தூரமெல்லாம் தண்ணீர்தான்!
என்றுகாண் பேனோ கரை?
மதுரை பாபாராஜ்
Thursday, July 28, 2022
Wednesday, July 27, 2022
எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி?
தேடுவார் நாடுவார் செல்வத்தை! செல்வங்கள்
சேர்ந்ததும் தேடுவார் நிம்மதியை! நிம்மதியை
ஓடியோடித் தேடினாலும் எங்கும் கிடைக்காது!
கூறுவார் தத்துவம்! பார்.
மதுரை பாபாராஜ்
நடைதளர்ந்த வாழ்க்கை
நடைதளர்ந்த வாழ்க்கை!
புயற்காற்று வீசியது! காற்றென்னைத் தூக்கித்
தரையில் எறிந்தது! எங்கெங்கோ காயம்!
நிலைகுலைந்தேன்! உள்ளம் உடலுடன் சோர்ந்து
நடைதளர வாழ்கிறேன் இன்று.
மதுரை பாபாராஜ்
சருகு
சருகு!
புலியின் நிழலில் படுத்துறங்கும் வாழ்வும்
பிழியும் உளைச்சல் நெருடுகின்ற வாழ்வும்
துடிக்கவைத்து நாளும் துவளவைத்துப் பார்க்கும்!
தகிப்பில் கருகும் சருகு.
மதுரை பாபாராஜ்
வேட்டை இதழுக்கு வாழ்த்து
வேட்டை இதழுக்கு வாழ்த்து!
அகவைத்திருநாள்: 27.08.2022
ஆண்டுகள் 6/7
நாட்டுக்கும் நாளும் உலகுக்கும் தொண்டாற்றும்
வேட்டை இதழிங்கே ஆறாண்டு தாண்டியே
ஏழா வதாண்டில் பீடுநடை போடுகின்ற
கோலத்தைக் காண்கிறோம் நாம்.
பன்முக ஆற்றலை பல்வேறு ஆளுமைகளை்
கண்ணெதிரே கொண்டுவந்து பார்க்கவைக்கும் தொண்டினை
நன்முறையில் செய்துவரும் வேட்டை இதழென்றும்
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
சோதனையின் கொம்பொடித்துச் சாதனை முத்திரை
சாதிக்கும் வேட்டை தலைநிமிர்ந்தே வீறுநடை
போடுவதைக் காண்கிறோம் நாம்.
அன்பர் முகம்மது காலிட் குழுவினர்
பம்பரமாய்ச் சுற்றி உழைக்கின்ற உள்ளத்தால்
தொய்வின்றி வேட்டை இதழிங்கே நூறாண்டு
வல்லமை யோடுவரும் இங்கு.
மதுரை பாபாராஜ்
Tuesday, July 26, 2022
Sunday, July 24, 2022
பட்டறிவு-- படிப்பறிவு
பட்டறிவு! படிப்பறிவு!
அரிய கருத்துகளைப் போகிற போக்கில்
கிராமத்தில் பட்டறிவால் சொல்வார்கள் மக்கள்!
நகரத்தில் வாழ்வோர் படிப்பறிவால் சொல்வார்!
படிப்பறிவை பட்டறிவைப் பார்.
மதுரை பாபாராஜ்
வீடு
வீடு!
வீட்டில் இருக்க முடியாத சூழ்நிலைகள்
வாட்டி வதைத்தால் உளைச்சல்கள் கூத்தாடும்!
ஆட்டிப் படைக்கும் அமளிகள் இல்லறத்தில்!
நாற்றாய் வளரும் பருவத்துப் பிள்ளைகள்
ஏக்கத்தில் வாழ்ந்திருப்பார் சோர்ந்து.
மதுரை பாபாராஜ்
Saturday, July 23, 2022
Friday, July 22, 2022
Thursday, July 21, 2022
Wednesday, July 20, 2022
Tuesday, July 19, 2022
Monday, July 18, 2022
கொரோனா விதிகளை மதிப்போம்
கொரோனா விதிகளை மதிப்போம்!
கூட்டமாகக் கூடும் இடத்தில் கொரோனாவின்
தாக்கம் இருக்கலாம் என்றேதான் எச்சரித்தும்
காக்கும் முகக்கவசம் போடாமல் சுற்றுகின்றார்!
ஊக்கமுடன் எச்சரிக்கை ஏற்றால்தான் பாதுகாப்பு!
நேர்மறைச் சிந்தனையே காப்பு.
மதுரை பாபாராஜ்
புதிர்
புதிர்!
பிறந்த பொழுதில் கனவுகள் கோடி!
பிறந்து வளர்ந்த பொழுதிலே வாழ்க்கை
நிறைகள் குறைகள் ததும்பத் ததும்ப
நிகழ்வுக ளோடு பயணம் தொடர
உறவும் பகையும் உணர்ச்சியின் வேகம்
சிறைகளாய் மாறிட மாற்றங்கள் கோடி
முடிச்சுகள் போட கழற்றிக் கழற்றி
அவிழ்த்திடும் போது சிறகை விரிப்போம்!
தவிப்பில் இறப்பிலே மீளாத் துயில்தான்!
குவித்ததும் எங்கே? குவிந்ததும் எங்கே?
புவியிலே வாழ்க்கை புதிர்.
மதுரை பாபாராஜ்
Friday, July 15, 2022
சருகு
இதுவே உண்மை!
விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் எல்லாம்
அழகாய் அணிந்தேதான் வாழ்ந்தாலும் நோய்கள்
உருக்குலைக்கும் ஆட்டத்தை இங்கே தொடர்ந்தால்
சருகாகிச் சாய்வோம் சரிந்து.
மதுரை பாபாராஜ்
Thursday, July 14, 2022
Wednesday, July 13, 2022
Tuesday, July 12, 2022
Monday, July 11, 2022
Sunday, July 10, 2022
வருண் பயணம் 06.06.22
வருண் பயணம்!
காரைக்குடி/ தஞ்சாவூர்
வருண் குட்டி வர்ராரு
பாட்டி
வசந்தாவோட வர்ராரு
தஞ்சாவூரு போனாரு
சுத்தி சுத்தி பாத்தாரு
காரைக்குடி போனாரு
உணவகந்தான் போனாரு
நடனந்தான் பாத்தாரு
படகுத் துறை போனாரு
கொண்டாட்டம் போட்டாரு
குதியாட்டம் போட்டாரு
நான்சி கீர்த்தனா வருணும் கிருத்திக்கும்
ஊரெல்லாம பாத்தாங்க எல்லோரும்
சென்னைக்கு வந்தாரு
வீட்டுக்குத்தான் வந்தாரு
பாபா தாத்தா
06.06.22
TO BE OR NOT TO BE?
TO BE OR NOT TO BE?
இருப்பதா? இறப்பதா?
இருப்பதா? இல்லை இறப்பதா? என்ற
நெருடலே வாழ்வாக மாறி மனதை
உளைச்சல் நெருப்பிலே வாட்டி வதைத்துத்
துளைக்கிறதே வண்டாகத் தான்.
மதுரை பாபாராஜ்
Saturday, July 09, 2022
Friday, July 08, 2022
Thursday, July 07, 2022
Tuesday, July 05, 2022
Monday, July 04, 2022
Sunday, July 03, 2022
Saturday, July 02, 2022
நேர்மறைப் பண்பே உயர்வு
நேர்மறைப் பண்பே உயர்வு!
நேர்மறைப் பண்பும் எதிர்மறைப் பண்புகளும்
சேர்ந்த கலவையே மக்கள் சமுதாயம்!
நாளும் பகுத்தறிந்து நேர்மறைப் பண்புகளை
ஆர்வமுடன் பின்பற்றி வாழ்ந்தால் உயர்வுண்டு!
நாளும் எதிர்மறைப் பண்புகளைக்
கட்டவிழ்த்தால்
பாழாக்கிப் பார்த்திருக்கும் வாழ்வு.
மதுரை பாபாராஜ்