மதுரை பாபாராஜ்:
பாப்பாப் பாடல்
----------------------------------------------
எனது நூல்:தேனருவி—2014
------------------------------------------
ஏழின் மகத்துவம்
----------------------------------------------------
வான வில்லின் நிறங்கள் ஏழு!
வண்டமிழ்க் குறளின் சீர்கள் ஏழு!
வாரத்தின் மொத்த நாள்கள் ஏழு!
வளைவான திருப்பதி மலைகள் ஏழு!
மனிதன் வாழ்க்கைப் பிறவிகள் ஏழு!
உலகைச் சூழ்ந்த கடல்கள் ஏழு!
மனிதம் நிறைந்த வள்ளல்கள் ஏழு!
மனங்கவர் இசையின் பண்கள் ஏழு!
அவனியை ஈர்க்கும் அதிசயங்கள் ஏழு!
ஆண்களை ஆளும் பருவங்கள் ஏழு!
பெண்களின் இயற்கப் பருவங்கள் ஏழு!
சூரியன் இயக்கும் குதிரைகள் ஏழு!
உருவில் இயங்கும் கோள்கள் ஏழு!
ஆன்மிகக் கன்னித் தெய்வங்கள் ஏழு!
உயிரெ ழுத்தில் நெடில்கள் ஏழு!
மனித உடலின் சக்கரங்கள் ஏழு!
பாப்பா!பாப்பா! இவைதான் ஏழு!
ஆசான் அறிவுரை என்றும் கேளு!
மதுரை பாபாராஜ்
பெண்களின் ஏழு பருவங்கள்:
பேதை-பெதும்பை-மங்கை-மடந்தை-
அரிவை-தெரிவை-பேரிளம்பெண்
ஆண்களின் பருவங்கள்:
பாலன்-மீளி-மறவோன்-திறவோன்
காளி-விடலை-முதுமகன்
ஏழு கன்னிகள்
அபிராமி--மகேஸ்வரி--கௌமாரி--நாராயணீ
வாராகி--உருத்ராணி--காளி
உடலின் ஏழு சக்கரங்கள்
மூலாதாரம்--சுவாதித்தானம்--மணிப்பூரகம்--அனாகதம்
விசுத்தி--ஆணை--கமலம்
Drashraffnvk:
👏👏👌 அருமை பாபாஜி!
விவிலியத்தின் கொடிய பாவங்கள் ஏழு!
திருக்குரானின் பாடவேறுபாடுகள் ஏழு!
யோக வளர்ச்சியில் நிலைகள் ஏழு!